டிலைட் சுகியன்
தேவையானவை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 6, கடுகு - 1 டீஸ்பூன், வெங் காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவை யான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கடுகு தாளித்து அதில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் இது!
டிலைட் சுகியன்: சிறிது மைதா மாவை சேர்த்து செய்தால் மிருது வாக இருப்பதுடன் சுவையும் தூக்கலாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
கலக்கல் ருசியில் கதம்ப தொக்கு!
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தக்காளி - 4, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 6, வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, லேசாக வதக்கவும். இதனுடன் தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, வெல்லம் சேர்த்து வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகை போட்டு தாளிக்கவும். அதில் வெந்தயத்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, அரைத்த விழுதைக் கொட்டி சுருளக் கிளறி இறக்க வும்.
தயிர் சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்!
கதம்ப தொக்கு: நான்கு சின்ன வெங்காயத்தை வதக்கி அரைத்துச் சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

வெரைட்டி உருண்டை
தேவையானவை: சம்பா கோதுமை, ரவை, பச்சைப்பயறு, பொட்டுக்கடலை - தலா அரை கப், சர்க்கரை - ஒன்றரை கப், முந்திரி - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: சம்பா கோதுமை, ரவை, பச்சைப்பயறு, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியே கடாயில் சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். கடாயில் நெய்யை சூடாக்கி, அரைத்த மாவு, சர்க்கரையை அதில் கொட்டிக் கிளறவும். கீழே இறக்கி வைத்து முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
புரதச்சத்து நிறைந்த உருண்டை இது!
வெரைட்டி உருண்டை: முந்திரியை தனியாக சேர்ப்பதைவிட, பொடி செய்து சேர்த்தால், வாசனை ஊரைக் கூட்டும்.

0 comments:
Post a Comment