Ads Header

Pages

31 October 2012

மாதவிலக்கு வலி குறைய...

மாதவிலக்கு வலி குறைய

முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து 'சூப்' போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும். முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும். முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்.
Read more

ர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்.

ய‌ற்கை வைத்தியம்
ர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

த‌க்கா‌ளி‌ச்சாறு, எலு‌மி‌ச்சை சாறு, தே‌ன் இவை மூ‌ன்றையு‌ம் சம அளவு கல‌ந்து காலை, மாலை இரு வேளையு‌ம் 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர ர‌த்த‌ம் பெருகு‌ம், இ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தா‌ல் இதய‌ம் வலுவடையு‌ம். க‌ல்ல‌ீர‌ல் பல‌ம் பெறு‌ம். இது காசநோயா‌ளிகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. த‌க்கா‌ளியை ‌தினமு‌ம் ப‌ச்சையாக உ‌ட்கொ‌ண்டு வர ‌சிறு வய‌திலேயே ஏ‌ற்படு‌ம் முக‌ச் சுரு‌க்க‌ங்க‌ள் குணமாகு‌ம், சொ‌ரி, ‌சிர‌ங்குகளு‌ம் ‌தீரு‌ம். த‌க்கா‌ளியை ப‌ச்சையாகவோ, சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌த்தை சம‌ப்படு‌த்து‌ம். மல‌ச்‌சி‌க்கலை‌ப் போ‌க்கு‌ம்.. த‌க்கா‌ளியை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உ‌ள் உறு‌ப்புக‌ள் பல‌ம் பெறு‌ம்
Read more

பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம் ?

பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்?

இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது.

இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது.
*
ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்கார்ந்து சாப்பிடுபவன் யாரோ என்று நம் கதை வராமல் பார்ப்பது நம் கையில்த்தான் உள்ளது.
***
பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்!

1. நமது கடவுச்சொல் திருட்டு போவது நமது கையில் தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்? எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .
*
2. இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.
*
3. அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம்.
*
4. ஸ்பைவேர், மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு. எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை.
*
5. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.
*
6. முடிந்தவரை ஜிமெயில், யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள்.
*
7. அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- ! . , * - + `~ @ # $ % ^ & ( ) _ = : ; / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.
Read more

பளபளக்கும் தேகத்துக்கு பப்பாளி!

ழகிய பொருள்... அழகிய முகம்!

பளபளக்கும் தேகத்துக்கு பப்பாளி!

பளீர் பளபளப்பையும், சூரியனும் கொஞ்சம் வெட்கப்படக் கூடிய நிறத்தையும் அள்ளி அள்ளித் தருவதில் ஒரு வள்ளல் பப்பாளி. வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி மருத்துவத்தை செய்து பாருங்களேன்... பலே பப்பாளி தரும் பளீர் பளபளப்பில் சொக்கிப் போவீர்கள்!

எப்போது பார்த்தாலும் எண்ணெய் வழிந்து டல்லாக இருக்கிறோமே என்று கவலைப்படுகிறவர் களுக்காகவே இந்த பப்பாளி கூழ் மசாஜ்...

பப்பாளி பழ தோலை சீவி கூழாக்குங்கள். இந்த கூழ் & ஒரு டீஸ்பூனுடன், முல்தானி மட்டி | அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்தில் பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் ‘பளிச்’ என்று பிரகாசிக்கும். அதோடு, மேனியை சிவப்பாக்கும் மந்திரமும் இருக்கிறது இந்த மசாஜில்!

ஆண்களின் முகம் போல் சொரசொரப்பாக இருக்கும் சிலரின் முகம். அவர்களுக்கான சிறப்பு மருந்து இருக்கிறது, பப்பாளியின் தோலில்.

பப்பாளி தோலை வேகவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கூழை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால், தொடத் தொட மிருதுவான சருமம் கிடைக்கும்.

கண்ணுக்குக் கீழ் கருவளையம், கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை ஆக்கிரமித்த பகுதிகளை நார்மல் நிறத்துக்குக் கொண்டு வருவதில் பப்பாளி ஒரு நிபுணர்.

சோற்றுக் கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன், பப்பாளி கூழ் & 1 டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை கழுத்திலிருந்து மேல்நோக்கி முகம் முழுவதும் நன்றாகத் தேய்த்து, இது நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வாரம் இருமுறை இந்த சிகிச்சை செய்தாலே கருப்பெல்லாம் காணாமல் போய்விடும்.

(நார்மல் சருமம் கொண்டவர்களும் இதை ஒரு ‘ஃபேஸ் பேக்’ ஆக உபயோகிக்கலாம்!)

இளமையையும் நிறத்தையும் அள்ளிக் கொடுக்கும் இந்த பப்பாளி பேஸ்ட் குளியல்...

பப்பாளி பழக் கூழ், மஞ்சள் வாழைப்பழக் கூழ், சந்தனப்பொடி, பயத்தமாவு பொடி... நான்கை யும் ஒரே அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி, பேஸ்ட் ஆக்குங்கள்.

முகம் முதல் பாதம் வரை இதைப் பூசி, பத்து நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி குளியுங்கள். 10 நாளைக்கு ஒரு முறை இப்படி குளித்து வந்தால், இறந்த செல் புதுப்பிக்கப்பட்டு, அழகும் இளமையும் அள்ளிப் போகும்.

முகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு பலரும் பாதத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஒட்டுமொத்த உடம்பையும் தாங்கிப் பிடிக்கும் பாதத்தில் சுருக்கமும், கருமையும் படர்ந்து கரடு முரடாகிவிடும். இதற்கு பப்பாளி தரும் டிப்ஸ் இதோ...

பப்பாளி கூழ் & 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், விளக்கெண்ணெய் & கால் டீஸ்பூன் மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி, காய்ந்ததும் கழுவுங்கள். கருமையும் சுருக்கமும் காணாமல் போவதுடன் மெத்மெத்தென்ற பாதங்கள் கிடைக்கும்.

சிவந்த மேனியை விரும்புகிறவர்களுக்கான ஸ்பெஷல் பேக் இது...

உலர்ந்த திராட்சை & 10, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் & 1, இவற்றை முந்தைய நாளே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பப்பாளி கூழ் & அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 15 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி வர, சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களில் வரும் பெண்கள் போன்ற மந்திர மாற்றத்துடன் ஜொலிப்பீர்கள்.
‘‘உறுத்தும் முடி நீக்க உதவுங்கள் ப்ளீஸ்...’’

‘‘என் முகத்திலும், கை, கால்களிலும் அதிகமாக முடி முளைத்திருந்தது. இதற்காக பியூட்டி பார்லர் போய் வாக்ஸிங்கும் த்ரெடிங்கும் செய்யத் தொடங்கினேன். இப்போது பார்த்தால் அந்த இடங்களில் முன்பைவிட அதிகமாகவும் தடிமனாகவும் முடி வளருகிறது. பார்லர் போகாமல் இருக்கவே முடியவில்லை. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட, உதவுங்கள் ப்ளீஸ்...’’

‘‘பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங் களும் பழக்கவழக்கங்களும்தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்ற வற்றைச் செய்யும்போது முடி அடர்த்தியாவதுடன், அதிகமாக வளரவும் தொடங்கும்.

முகத்தில் இருக்கும் மீசை, தாடியையும், கைகளில் புசுபுசுவென வளர்ந்த முடிகளையும் நிரந்தரமாக அகற்ற இயலாது. ஆனால், முடியின் கருமையையும், வளர்ச்சியையும் தடுத்து, வலுவிழக்கச் செய்வதுடன், முடிகளை உதிர வைக்கவும், மேற்கொண்டு முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன.

சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரிமஞ்சள் பவுடர்... இந்த நான்கையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி, அழகைக் கொடுக்கும் அசத்தல் மிக்ஸ் இது! மஞ்சள் பூசிக் குளிப்பதுபோல் இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து குளியுங்கள். புருவத்தில் இந்த பவுடர் படுவதால் முடி உதிர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். வாரம் இருமுறை குளித்து வந்தாலே முகம், உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் நிறம் மாறி, பின் உதிர்ந்துவிடும்.

மிருதுவான ப்யூமிக்ஸ்டோனை (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) வாங்குங்கள். கலந்து வைத்திருக்கும் மிக்ஸை குழைத்து ப்யூமிக்ஸ்டோனில் தடவி, முடி இருக்கிற பகுதிகளில் லேசாகத் தேயுங்கள். இதை தினமும் செய்து வந்தாலும் முடி உதிரும். மேற்கொண்டு முடி வளராது.

த்ரெடிங், வாக்ஸிங் என்று அடிக்கடி பியூட்டி பார்லர் பக்கம் போகிறவர்கள், தினமும் முகம், கை, கால்களை கழுவும்போதெல்லாம் சோப்புக்கு பதிலாக இந்த மிக்ஸை பயன்படுத்தலாம். இதனால், முடியை அகற்றியதால் ஏற்பட்ட கருமையும் புள்ளிகளும் மறைவதுடன் சருமமும் மிருதுவாகும்.’’
Read more

முகப் பராமாரிப்பு...

முகப் பராமாரிப்பு...


முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்...

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின்
மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்
Read more

30 October 2012

மரம் வளர்ப்போம் வாருங்கள்!!!

மரம் வளர்ப்போம் !!!

மரம் வளர்ப்போம் வாருங்கள்


மாமழை பெறுவோம் வாருங்கள்

யாகம் வளர்த்தால் மழை வரும் என்ற


மடமையைப் போக்குவோம் வாருங்கள்!

யாகம் வளர்ப்பது மூடத்தனம்


மரம் வளர்ப்பது மூலதனம்

செடி கொடி வளர்த்துப் பாருங்கள்


வெம்மை நீங்கி வாழலாம்!


மக்கள் தொகை பெருக்கத்தால்


காட்டு வளங்கள் அழிகின்றன


காட்டு வளங்கள் அழிவதால்


கானல் வெப்பம் அதிகரிக்கும்!


வெப்பம் உலகில் அதிகரித்தால்


வேண்டா விளைவுகள் ஏற்படுமே


மழை நீர் மறைந்து போகும்


மனித இனம் அழிந்து போகும்!

வனவிலங்குகள் மாண்டு போகும்

புல் பூண்டுகள் தொலைந்து போகும்


பூமிப் பந்து நெருப்பாகும்

வேண்டாம் இந்த விபரீதம்!


புவியின் வெப்பம் தணிக்கவே

பூமியெங்கும் மரம் நடுவோம்


மழை வளம் காக்கவும்

மனித வளம் காக்கவும்


மரம் வளர்ப்போம் வாருங்கள்!
Read more

28 October 2012

மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!!

மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!!

"விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. "புவி வெப்பமயமாதல்" (Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என அறிவியலாளர்கள் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் சராசரி மனிதனோ இதைப் பற்றிய எந்த கவலையும், விழிப்புணர்வும் இன்றி சொந்த வீடான பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான்.

குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசுபடுத்துவதில் மனிதனுக்கு நிகர் யாரும் இல்லை.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் இடையறாது உமிழப்பட்டுக் கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடு போன்ற விஷ வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு விண்வெளிக்குச் சென்று காற்று மண்டலத்தில் கலக்கும்.

இது ஒரு போர்வை போல் பூமியைச் சுற்றி மூடிக் கொண்டு மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது. பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்குத் தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. நாம் மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதால் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மரங்களின் அவசியம் தற்போது, உலகை உலுக்கி வரும் பிரச்சினைகளில் சுற்றுப்புற சூழல் மாசடைதல் என்பது மிக முக்கியமானது. இதன் காரணமாகவே பூமி வெப்பமடைகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, நெடுங்காலத் தீர்வாக மரங்கள் நடவேண்டும் என்பதை அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம்.

இருக்கின்ற மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக, வெட்டிச்சாய்த்து வருகிறோம். ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக ஐந்து மரங்களையாவது நட வேண்டும். ஒரு சின்ன இலை வளர அந்த மரம் எடுக்கும் முயற்சி மிக அசாதாரணமானது.
நம்முடைய வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், குளிர்சாதனப் பயன்பாடு மிகவும் குறையும். மின்கட்டணம் குறையும். குளுமையான வேப்பமரத்துக் காற்று யாருக்குத்தான் பிடிக்காது?

மரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும், கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை பெரிய அளவில் குறைக்கின்றன.
மரங்களால் மழை பெய்யும், நீர்வளம் பெருகும், நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும். புவி வெப்ப அளவு உயர்வால் ஏற்படும் விளைவுகள் புவி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இதய நோய் சுவாச நோய்கள் மேலும் தீவிரமடைகிறது. அதிக வெப்பம் காரணம் பலரும் வெப்பத் தாக்குதலுக்குள்ளாகி மடிவதைக் காண்கிறோம்.

காற்று மண்டலத்தின் தாழ்வடுக்குகளில் ஓசோன் செறிவு அதிகரிக்கச் செய்கிறது. இது சுவாசப் பாதிப்பையும், நுரையீரல் பாதிப்பையும் உருவாக்குகிறது. ஆஸ்த்துமா நோயை மேலும் தீவிரமடைய செய்கின்றது. அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடும், அதிக வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது. அதற்குப் போட்டியாக மனிதனே விவசாய நிலங்களை கான்கிரீட் போட்டு மூடி விடுகிறான். இந்த பூமியின் மேற்பரப்பு எங்கும் ஏற்படும் வெப்ப உயர்வால் நீண்ட வறட்சியும் தண்ணீர் பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படும். பாலங்கள், ரோடுகள் போன்ற கட்டுமானங்கள் வெப்பத் தாக்குதல்களால் வலுவிழந்து அதன் பராமரிப்பு செலவு அதிகமாகி விடும். கடல் மட்டம் உயரும். பெரும்பாலான பெரிய வியாபார நகரங்கள் எல்லாம் கடற்கரையிலே உள்ளன. கடல் மட்டம் உயர்வதால் பல பெரும் நகரங்கள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. வான் மழை பொய்க்கும். துருவங்களின் பெரும் பனிக்கட்டிகள் உருகி மிகப்பெரும் வெள்ளச் சேதங்களையும், புவியியல் பாதிப்புகளையும் உருவாக்கும்.

அப்படி ஒரு அபாயம் இப்போது நம் தலைக்கு மேல் கத்தியாக இருக்கிறது.
இன்றைய தலைமுறையினரின் கடமை இன்றைய தலைமுறை இப்போது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். செடிகொடிகள் வளர்ப்பதிலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று முயற்சிப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தற்போது வளர்ந்து இருக்கும் மரங்களை பாதுகாப்பதிலும் நம்மைவிட இன்றைய தலைமுறையினர் துடிப்புடன் இருக்கிறார்கள்.
மலைப் பிரதேசங்களில், மரங்களை வெட்டிச் சாய்த்து அடுக்கு மாடி குடியிருப்புகள், உல்லாசக் குடியிருப்பு போன்றவற்றை கட்டுவதன் மூலம், அங்கே நிலத்தின் பிடிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இது கண்டிப்பாய் தடுக்கப்பட வேண்டும்.

சென்ற மழையின் போது, ஊட்டியில் நடந்த நிலச்சரிவு பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான இடங்கள் கூட இப்போது வெப்பமடைந்து வருகின்றன. ஊருக்கே குளிர்சாதன வசதி செய்தது போல் இருந்த இடங்களில் இப்போது குளிர்சாதன வசதியுடன் தங்குமிடங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன விஷயம்... குளிர்சாதனங்கள் குளிரூட்டுவதற்காக வேலை செய்யும் போது வெளிவிடும் நச்சு வாயு, சுற்றுப்புறச் சூழலை வெப்பமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைப் போன்ற சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உறைகளால் நிகழும் சுற்றுப்புறச் சீர்கேட்டையும் இளையோர்கள் கண்டிப்பாய் தடுத்திடல் வேண்டும்.
மழை நீர் சேமிப்பு தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும், கனமழை. ஆனால் இந்த மழை நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவற்றைத் தேக்கி வைக்கும் ஏரிகள் இன்று தூர்ந்து போய்விட்டன. அல்லது வீட்டுமனைகளாகவும், போக்குவரத்துப் பணிமனைகளாகவும், புதிய பேருந்து நிலையங்களாகவும் மாறிவிட்டன. ஏரிகளுக்கு மழை நீரை கொண்டு வரும் வாய்க்கால்கள் சரியாக பராமரிக்கப் படாமல் இருப்பதால் ஏரிகள் நிரம்புவதில்லை. இதனால் விலைமதிப்பற்ற மழை நீர் வீணாகிறது. மழை நீர் கடலில் சேர்ந்தால் யாருக்கு நன்மை?

அதை மண்ணுக்குள் சேர்த்தால் நம் அனைவருக்கும் நன்மை. இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து வேளாண் உற்பத்தி பெருகும். நம் குடிநீர் பஞ்சமும் தீரும்
மழை நீர் சேமிப்பால் கீழ்க்காணும் நன்மைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. நீர் பற்றாகுறை குறைகிறது. நீரின் கார அமில (PH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.

விவசாய நிலங்களில் மண்அரிப்பைத் தடுக்கிறது.
நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் செலவு குறைகிறது. மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெற உதவுகிறது. மழைநீர் சேமிப்பு பகுதியின் அருகிலுள்ள மரங்கள் மிக விரைவில் வளர்கின்றன. நகர்ப் புறங்களில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் காத்து சாலை போக்குவரத்தை தடையின்றி நடைபெற உதவுகிறது. நகர்ப் புறங்களில் நிறைய இடங்களில் நீர் தேங்குவதை தடுத்து நோய்கள் பரவுவதை தடுக்கின்றது.

சென்னை மாநகரில், 1,800 சதுர அடி கட்டட மேற்பரப்பு (அல்லது மொட்டைமாடி) உள்ள வீட்டில் மழைநீர்த் தொட்டியைப் பெரியதாகத் தரைக்குக் கீழே அமைக்க முடிந்தால், தற்போது பெய்யும் மழையளவுப்படி 58 நாளில் 1,00,800 லிட்டர் மழை நீரைச் சேமிக்க முடியும். இந்த நீர் தூய்மையானது. 6 நபர்கள் உள்ள ஒரு குடும்பம், இந்த நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். தற்போது சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 2 லிட்டர் நீரின் விலை குறைந்தபட்சம் இருபத்தி ஐந்து ரூபாய். அப்படியானால் இந்த மழை நீரில் பாதியைச் சேமிக்க முடிந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் பல லட்சம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும்.


பசுமை இல்லா பூமி பாலைவனம் மழை பெய்யவில்லை, ஆகவே விவசாயம் செய்ய முடியவில்லை என்றஅங்கலாய்ப்பையும் நிறையவே கேட்டு வருகிறோம். இதற்கு காரணம் நாம்தான். மரங்கள் வெட்டப்பட்டு விளை நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிது புதிதாக பல நகர்கள் இரவோடு இரவாக முளைத்து வருகின்றன. நீர்நிலையுள்ள இடங்களில் கூட இது பரவி வருவது பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டால், உணவுக்கு... வீடுகளின் மொட்டைமாடிகளில் காய்கறி செடிகள், பூஞ்செடிகளை பயிரிட வேண்டிய நிலை ஏற்படும். நம்முடைய சந்ததியினருக்கு எத்தகைய உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம்? எல்லா இயற்கைச் செல்வங்களையும் சுரண்டிய பின்னர், அவர்களுக்கென்று என்ன மீதம் விட்டு வைக்கப் போகிறோம்?

பசுமையைப் பறிகொடுத்து விட்டுப் பாலைவனமாய் நிற்கும் பூமியைத்தான் மீதம் வைக்க முடியும்.
மரம் தரும் பலன்கள் மலர்கள், காய், கனிகள் தருகிறது. நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது. காற்றை சுத்தப்படுத்துகிறது. நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது. மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

1. ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.


2. ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.

3. ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.


4. ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.


ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.


மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும்.

அந்த பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.

ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.
மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்" என்கிறது குறள். "பெருந்தன்மை உள்ளவனிடத்தில் உள்ள செல்வம்; அனைத்து பாகங்களையும் மருந்தாய் தரும் மரத்திற்கு ஒப்பாகும்" என்று மரத்திற்கு பெருமை சேர்க்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்!

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கில் முதலிடமும், புங்க மரம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆற்றலும் காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் ஆற்றலும், அத்துடன் காற்றில் கலந்துள்ள Anthro cyanine என்னும் நச்சு வாயுவை ஈர்த்துக்கொள்ளும் (கொல்லும்) ஆற்றலும் உள்ளடக்கிய மரமான வேம்பு
தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும் நெல்லி உடலுக்கு முறுக்கு தந்திடும் முருங்கை காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளித்து, விஷத்தை முறித்து, வாய் புண்ணை ஆற்றும் எலுமிச்சை நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தி விடும் கடுக்காய் சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படும் வில்வம். கண் பார்வைக் கோளாறுகளுக்கும், எலும்புகள் பலமடையவும், புண்கள் விரைவில் ஆறவும் உதவும் கருவேப்பிலை குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையான பழத்தினை தரும் நாவல் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கும் அத்தி பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படும் ஆலமரம் உடலில் இருக்கும் தேவையற்ற ரசாயன நஞ்சை நீக்கும் நல்ல மருந்து அகத்தி மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டதும் . .

18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றுள்ள மரமான அவுரி
என்று எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டு மனித சமுதாயம் நோயற்று வாழ்வதற்கு ஒருதாயைப்போல ஏராளமான மரங்கள் உதவுகின்றன. மரங்கள், காய்களாகவும், கனிகளாகவும், கீரை வகைகள் என்றும் மனிதனுக்கு பலவழிகளில் உணவைத் தருகின்றன. இவைகள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடையாக விளங்குகின்றன. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான சுவைமிகுந்த உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.

வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். அந்த நேரத்தை பயனுள்ளதாக்க வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.


மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.


மரங்களே மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.
மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும் போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. கோடையில் வெப்பக் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.
உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக - எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரங்களை பேணுவோம்! மனிதராய் மாறுவோம்!
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் வளத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இயற்கை நமக்கு கொடையாக வழங்கியுள்ள மரம் செடிகளை நிறைய வளர்க்க வேண்டும். மரம் செடிகள் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனால் சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தாவரங்களின் சேவை நமக்கு தேவைப்படுகிறது. நமக்கு சொந்த வீடோ, வாடகை வீடோ இருக்கட்டும், நம் வீட்டை சுற்றி நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவோம். சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு பங்காற்றிட உறுதி கொள்வோம்!
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! வளம் அடைவோம்!
Read more

மிக்ஸி பராமரிப்பு - சமையல் சந்தேகங்கள் - கேள்வி - பதில்

மிக்ஸி பராமரிப்பு
1. லோவோல்டேஜ் ஆக இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.

2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும்.

3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப்படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடும்.


4. ஜாரில் போட்டு அரைத்ததும் உடன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத்திரம் கழுவும் போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்துப் போடக் கூடாது.


5. மிக்ஸி பிளேடுகளை சாணை வைக்ககவே கூடாது. மிக்ஸி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தைப் பொறுத்தே நைசாக அரைக்கும்.

6. மிக்ஸின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் ஓட்டவும். பிளேடுகல் கூர்மையாகிவிடும்.

7. ஜார்களில் அடிப்பகுதி ரிப்பேர் ஆகி அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடன் ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.


8. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது.

9. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.

10. மிக்ஸி ஓடும் போது மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ள வேண்டும்.

11. அரைக்கும் போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டைட்டு செய்து கொள்ள வேண்டும்.

12. மிக்ஸியில் ஜாரின் அடிப்பாகத்தில் ரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற்கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதாகிவிடும்.


13. அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரலாம்.


14. மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது.

15. இட்லிக்கு மிக்ஸியில் புழுங்கல் அரிசி அரைக்கும் போது இரவே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்.
Read more

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) கைவைத்தியம்.

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) கைவைத்தியம்:

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:

மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.

பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும்.

இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:

வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.
Read more

27 October 2012

அல்சருக்கு மருந்து தேன்.

ல்சருக்கு மருந்து தேன்

வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம். ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.

இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரைப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.
Read more

பல் வலியைத் தீர்க்க புங்கம் பட்டை.

ல் வலியைத் தீர்க்க:

பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.

அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.

பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.
கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.
இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.
பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.
Read more

17 October 2012

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு விளக்கெண்ணெய்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு:

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.

அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.

பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.
Read more

ரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை!

ரத்த மூலத்திற்கு பிரண்டை:

பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.
பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது.
இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.
இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.
இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
Read more

தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய...

தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி தீரும். இதை தொடர்ந்து பூசி வர தேமல் மற்றும் தோல் கரும்புள்ளிகள் மறைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகம் நல்ல மலர்ச்சியடையும். கீழாநெல்லி இலை மற்றும் கொத்துமல்லி இலையை உள்ளுக்கும் சாப்பிட இன்னும் முகத்தை மெருகேற்றலாம்.
Read more

பித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை.

பித்த வெடிப்பு

பித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை, மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணையில் கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும். பித்த வெடிப்பு உள்ளவர்கள் கண்ட மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். ஏனென்றால் அவை மேலும் புண்ணாகிவிடும்.
Read more

விஷம் முறிய கருவேலம்.

விஷம் முறிய கருவேலம்

விஷம் முறிய கருவேலம் மரத்தின் கொழுந்தை மைபோல் அரைத்து கொட்டை பக்கு அளவு எடுத்து ஒரு டம்ளர் நீருடன் கலந்து உள்ளுக்கு கொடுத்து விட்டால் விஷம் முறிந்துவிடும். கருவேல மரம் குச்சி பல்துலக்க மிகமிக அருமையானது.
Read more

முடி உதிர்வதை தடுக்க முடி வளர - பாட்டிவைத்தியம்

முடி உதிர்வதை தடுக்க-பாட்டிவைத்தியம்

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
Read more

தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால்?

தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.

உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.

ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.
Read more

15 October 2012

பி‌த்த‌ உடலு‌க்கு இ‌ஞ்‌சி ந‌ல்லது.

ய‌ற்கை வைத்தியம்
‌பி‌த்த‌ உடலு‌க்கு இ‌ஞ்‌சி ந‌ல்லது


இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து, தினமும் ஒரிரு துண்டுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்தம் தணியும். வயிறு சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும். இஞ்சியுடன் துளசி இலையை, சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கி, நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் குணமாகும். இஞ்சி, ஏலக்காய் உள்ளிருக்கின்ற அரிசி, வெல்லம் - இவற்றை சம அளவு எடுத்து தூளாக்கி, பாலில் கலந்து குடித்து வர அடங்காத தாகம் அடங்கும். இஞ்சிச் சாறு, சங்குப்பூ இலைச் சாறு, தேன் சம அளவு கலந்து குடித்து வர இரவு நேரத்தில் உண்டாகின்ற மிகுதியான வியர்வை தணியும். சிறிதளவு இஞ்சியை வாயில் இட்டு மென்று உமிழ்நீரை துப்பி விட குரல் கம்மல், தொண்டைப்புண் குணமாகும். செரியாமையினால் உண்டாகும் கழிச்சலுக்கு, இஞ்சி சாற்றினை தொப்புளைச் சுற்றித் தடவி வரலாம். இதனுடன் நெல்லிக்காய் பருப்பை சேர்த்து அரைத்து தடவலாம்.
Read more

இ‌ஞ்‌சி செ‌ரிமான‌த்‌தி‌ற்கு மரு‌ந்தாகு‌ம்.

ய‌ற்கை வைத்தியம்
செ‌ரிமான‌த்‌தி‌ற்கு மரு‌ந்தாகு‌ம் இ‌ஞ்‌சி


இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, கிராம்பு - இவற்றை சூரணமாக்கி துளசிச்சாறு விட்டு அரைத்து, அதை மிளகளவு மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதை இருவேளை உட்கொண்டு வர செரியாமையை நீக்கி நல்ல பசியை உண்டாக்கும். சிறிதளவு இஞ்சியை தட்டி வெயிலில் காய வைத்து, அதை வெந்நீரில் போட்டு அரை மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் நீங்கும். 10 கிராம் அளவு இஞ்சியுடன் 6 மிளகு, 3 வெள்ளெருக்கம் பூ இவற்றை சிதைத்து சேர்த்து, பின் நீர்ல் இட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்துவர ஆஸ்துமா, இருமல்,சளி குணமாகும். இஞ்சியை இடித்து சாறு பிழிந்து அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து தடவி வர பருக்கள் குணமாகும். இஞ்சிச் சாற்றுடன் வெங்காய சாறும், தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்.
Read more

07 October 2012

வ‌யி‌ற்று‌க்கு வைரமாகு‌ம் இ‌ஞ்‌சி சாறு

ய‌ற்கை வைத்தியம்
வ‌யி‌ற்று‌க்கு வைரமாகு‌ம் இ‌ஞ்‌சி சாறு


இஞ்சிச் சாற்றுடன் சமளவு எலுமிச்சை சாறு, புதினா சாறு, தேன் சேர்த்து தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டு வர செரியாமை, வாந்தி, வயிற்று உப்புசம், மஞ்சள் காமாலை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும். இஞ்சியை இடித்து சாறெடுத்து சற்று சூடாக்கி, தலையில் பற்றுப் போட தலைவலி, நீரேற்றம் குணமாகும். வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாறும், தேனும் கலந்து குடித்துவர இருமல், சளி, குணமாகும். இஞ்சிச் சாற்றுடன், மாதுளம் பழச்சாறு சம அளவு கூட்டி, பாதியளவு தேனும் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும். தண்ணீரில் இஞ்சி,சீரகம்,கருவேப்பிலை மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர செரியாமை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
Read more

உடலு‌க்கு ந‌ன்மை தரு‌ம் இ‌ஞ்‌சி!

ய‌ற்கை வைத்தியம்
உடலு‌க்கு ந‌ன்மை தரு‌ம் இ‌ஞ்‌சி


சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பது முதுமொழி. இந்த சுக்கின் முந்தைய நிலையே இஞ்சியாகும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி, ஒக்காளம், சுரம், வாத நோய்கள், பேதி முதலியன குணமாகும். நன்கு பசியெடுக்கும். இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தலைசுற்றல், வாந்தி குணமாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் மிகுந்த பசி உண்டாகும். எனவே, 3-5 நாட்கள் இதை அருந்தினால் போதுமானது.
Read more

முரு‌ங்கை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம் - இய‌ற்கை வைத்தியம்

ய‌ற்கை வைத்தியம்
முரு‌ங்கை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்


முருங்கைப்பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப் படுத்தி, அதை 250 மில்லி பசும்பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் கற்கண்டு கூட்டி, ஒரு மண்டலம் குடித்து வர ஆண்மை பெருகும். முருங்கை வேரை நீர் விடாமல் நன்கு அரைத்து, பசும்பாலில் கலந்து காய்ச்சி, 2 வேளை குடித்து வரவும் அவ்வாறு செய்துவர 4 நாட்களில் ‘ஹிஸ்டிரியா’ எனப்படும் மனச்சிதைவு நோய் கட்டுப்படும். முருங்கைப் பூவுடன் சமளவு துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து பகலில் சாப்பிட்டு வர, உடலில் வலு ஏற்படும். ரத்தம் அதிகரிக்கும். பெருப்பாடு குணமாகும். முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ,பி, சி, புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள்ளது. ‘வெந்து கெட்டது முருங்கை’ என்பது பழமொழி. எனவே இதை அதிகம் வேகவிடாமல், பக்குவத்துடன் சமைக்க வேண்டும்.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner