Ads Header

Pages


28 April 2012

வி.ஐ.பி. ஹெல்த்! எளிய உடற்பயிற்சிகள் சில...

ஹாய். எப்படி இருக்கீங்க? இப்படிப் பார்த்து நம்ம மனசு தினமும் கேக்கணும். இப்படிக் கேக்குறதுக்கு பழக்கப்படுத்திட்டீங்கன்னா உங்க உடம்பு மட்டுமல்ல சுத்தி இருக்கிற எல்லாமும் நலமா இருக்கும்.

1. பயிற்சி எல்லாம் முடிஞ்சதும் அவசர வாழ்க்கைக்குத் திரும்பிடாதீங்க. இப்படி தியானம் பண்ணப் பழகிக்குங்க. முதல்ல மனசு கேக்காது. அடக்கி ஆளுங்க. இந்த அமைதியான தியானத்தால் நீங்க முன்னாடி செஞ்ச எல்லா பயிற்சியின் பலமும் உங்கள் உடல் முழுதும் பரவி புது தெம்பைக் கொடுக்கும்







2. ரொம்ப நாளா இந்தச் சுவரை தள்ளலாம்னு பார்க்கிறேன் முடியல. சும்மா ஜோக்குக்குதான் சொன்னேன். இரண்டு சாண் கை இடைவெளி விட்டுக்குங்க. கால் இரண்டும் மடக்காம நேரா இருக்கணும். முன்னுக்கும் பின்னுக்கும் நெஞ்சைக் கொண்டு போங்க. 15 தடவை மூச்சை இழுத்து விட்டு செய்யுங்க. ‘முன்னழகுப் பேரழகி’ பிறகு நீங்கதான்.



3. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம். மீன் மாதிரி நழுவுற பளபளப்புப் பெற இப்படி மீன் பயிற்சி செய்ங்க. பிறகு நீங்கதான் விலாங்கு மீன்.


4 இந்தப் பயிற்சி கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா சிரமம் பார்க்காம தினமும் செஞ்சா அடி வயிறு ஒட்டி அழகா இருப்பீங்க. தினமும் 25 தடவை செஞ்சிப் பாருங்க.

5. அடிவயிற்றுக்கும் இடுப்புக்கும் சேர்த்து டூ இன் ஒன் பயிற்சி இது. பூவோட சேர்ந்து நாரும் மணக்கும் என்பாங்க. இந்தப் பயிற்சியும் அப்படித்தான்.



6. அசையாம செய்யப் பாருங்க. இரத்த ஓட்டம் முழுசும் உங்க முகத்துக்குப் போகும். இதனால் உங்க முக அழகு பொலிவுறும்




7. வில்லு அம்பு ... அம்பு வில்லு ... இரண்டும் ஒண்ணுதானுங்க. கையைக் காலை ஆட்டாம இத செஞ்சிப் பாருங்க. அடுத்த ‘இஞ்சி இடுப்பழகி’ நீங்கதானுங்க.



8. காலும் கையும் ஒரே அளவு இருக்குற மாதிரி பார்த்துக்குங்க. மாறி மாறி இரண்டு பக்கமும் செஞ்சிப் பாருங்க. தொடை, கை, இரும்பு மாதிரி ஆகிடும்.

9. கால் பக்கத்துல கையை கரெக்ட்டா வச்சிக்குங்க. பிறகு இடுப்ப சீராக வளைச்சிக்குங்க. ரொம்ப பென்டாகாம வளையுங்க. ஒண்ணுல இருந்து பதினஞ்சு வரைக்கும் எண்ணுன பிறகு மெதுவா நிமிருங்க. முழு உடம்பும் சும்மா கன்னுன்னு இருக்கும் பாருங்க.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner