Ads Header

Pages


16 April 2012

மாதவிடாய் கோளாறுக்கு அருமையான நாட்டு வைத்தியம்!

மாதவிடாய் கோளாறால ரத்தப் போக்கு அதிகமா வந்தாலும் ஆபத்து.. வராம போனாலும் விபரீதம்தான். இதுக்கு மூலிகை வைத்தியத்துல முழுமையான நிவாரணம் இருக்கு.. கேட்டுக்கிடுங்க..

ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய..

அம்பது கிராம் கருஞ்சீரகத்தைப் பொன் நிறமா வறுத்துப் பொடிச்சி.. அதோடகூட அம்பது கிராம் பனைவெல்லத்தைக் கலந்து வச்சிக்கணும். இதுல நெல்லிக்காய் அளவு எடுத்து, கால, மால ரெண்டு வேளைக்கு வாயில போட்டு தண்ணி குடிச்சிட்டு வந்தா ரத்தப்போக்கு சீராயிரும்.

100 கிராம் சதக்குப்பையை (நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும்) பொன் நிறமா வறுத்து.. அதோடகூட 100 கிராம் பனை வெல்லத்தைக் கலந்து வச்சிக்கணும். இதையும் முன்னால சொன்ன மாதிரி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு, தண்ணி குடிச்சி வந்தா மாதவிடாய்க் கோளாறு சரியாயிரும்.

மாதவிடாய்க் கோளாறோட வயித்துவலி, வயித்துப் புண் வந்து இம்சைப்படுத்தும். இதுக்கு, ரெண்டு கைப்பிடி குப்பைமேனிக் கீரையை எடுத்து வேக வச்சி கடைஞ்சி சாப்பிட்டு வந்தா வயித்துவலி, வயித்துப் புண்ணெல்லாம் விருட்டுனு ஓடிப் போயிரும்.


அதிக ரத்தப்போக்கை நிறுத்துறதுக்கு..

ரத்தப்போக்கால அவதிப்படுறவுங்களுக்கு அருமையான வைத்தியம் இது.

காடு மேடுல அங்கங்க வெளைஞ்சி கெடக்குற நாயுருவி இலையை எடுத்துக்கணும். இதை நல்லா இடிச்சி 100 மில்லி அளவுக்கு சாறு எடுக்கணும். பிறகு, இதோட ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 3 நாளைக்குக் காலை ஒரு வேளை மட்டும் வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா ரத்தப்போக்கு உடனே சரியாயிரும். இதைக் குடிச்ச பிறகு ஒன்னரை மணி நேரம் கழிச்சித்தான் எதுவுமே சாப்பிடணும்.

வெள்ளைப்படுதல் நிற்க..

வெள்ளைப்படுதல் இருந்தா பொண் ணுங்களுக்கு பெரும் அவஸ்தைதான். 10 கிராம் வால்மிளகை எடுத்து பொடி பண்ணி வச்சிக்கணும். அதோடகூட 5 டீஸ்பூன் தேன் கலந்து தெனமும் ரெண்டு வேளை அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தாப் போதும். வெள்ளைப்படுதல் முழுமையா குணமா கிடும்.

இதேபோல.. காய்ஞ்ச அசோகப்பட்டையை எடுத்து நல்லா இடிச்சிக்கணும். இந்தத் தூளை 10 கிராம் எடுத்து 200 மில்லி தண்ணியில போட்டு, 100 மில்லி ஆகுற அளவு கொதிக்க வச்சி இறக்கணும். இதுல 25 மில்லி எடுத்து தெனமும் ரெண்டு வேளை குடிச்சிட்டு வந்தா வெள்ளைப்படுதல் பூரணமா குணமாகிடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner