கோடை காலம் மட்டுமல்ல... எல்லா காலங்களிலும் அதிகமாக நீர்க்கடுப்பு ஏற்படும். அதாவது அடிக்கடி சிறுநீர் வரும்போது தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு கடுப்புத் தன்மை இருக்கும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் சூட்டின் காரண மாக நீர்க்கடுப்பு அடிக்கடி வரும்.
இதற்கு உடனடி நாட்டுவைத்தியம் இருக்கிறது. வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப் பிட்டால், நீர்க்கடுப்பு சிறிது நேரத்தில் மறைந்து விடும்.
கடுமையாக உழைப்பவர்களுக்கும், பயணம் செய்தவர்களுக்கும் உடல் வலி, கைகால் அசதி இருக்கும்.
இவர்கள் முருங்கை ஈர்க்கை ரசம் வைத்து சாப்பிட்டால் வலி நீங்கி புத்துணர்ச்சி கிடைக் கும். வெள்ளரிக்காய் விதையை அரைத்து, அதனுடன் நீர் சேர்த்து வடிகட்டவும். அதனை தொடர்ந்து அருந்தி வந்தால் கல்லடைப்பு மறையும்.
கையில் கிடைக்கிற எந்த உணவையும் யோசிக்காமல் வாய்க்குள் போடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? கண்டிப்பாக உங்களுக்கு அஜீரண கோளாறு இருக்கும்! நீங்கள் அடிக்கடி இஞ்சி, பப்பாளி, அன்னாசி, வெள்ளரி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் நல்லது.
அதேபோல், கோடை காலத்தில் வயிற்று பிரச்சினை களும் அடிக்கடி ஏற்படும். அதிலும் புளியேப்பம் வந்தால் எரிச்சலாக இருக்கும். கொஞ்சம் நெல்லிக்காய் லேகியத்தை சாப்பிட்டுவிட்டு பால் சாப்பிட்டால் புளியேப்பம் சரியாகும்.
முடிந்த அளவு ஆப்பிளை சாப்பிட்டு வாருங்கள்! மூளை, கல்லீரல், மலக்குடல் ஆகியவற்றில் வரும் நோய்களை நீக்கும் சக்தி ஆப்பிளுக்கு உண்டு!
வெங்காயத்தை தனியாக சாப்பிட்டாலும் சரி, உணவோடு சேர்த்து சாப்பிட்டாலும் சரி! தினமும் வெங்காயம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால், சைனஸ், மாரடைப்பு, வயிறு மற்றும் மலக்குடல் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும்!
சிலருக்கு ஒற்றைத் தலைவலி வந்து உயிரை வாங்கும். மாத்திரை சாப்பிட்டாலும் முழுமையாக தீராது! எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்!
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள், ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அன்னாசி பழச்சாறு அருந்துவது நல்லது. வயிற்றில் புழு, பூச்சிகள் இருப்பதால் அவதிப்படுகிறீர்களா? வேப்பங்கொழுந்தை அரைத்து, சாப்பிட்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி விடும்!
தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள உஷ்ணம் வெளியேறும். பித்தத்தின் பாதிப்பு குறையும்! தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சிறுநீரகத்தைத் தூண்டி, உடல் நஞ்சை வெளியேற்றும். புற்றுநோயை எதிர்க்கும் லைகோபின் மருந்தும் தக்காளியில் உள்ளது!
வெந்தயக் கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இதனால், காசநோய், இடுப்புவலி, செரிமானக் கோளாறுகள் போன்றவை மறையும். சோம்பலைத் தவிர்த்து, சுறு சுறுப்பைத் தரக்கூடியது வெந்தயக்கீரை!
தினமும் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், சீதபேதி, ரத்த பேதி, சளி, தும்மல் போன் றவை குணமாகும். நெல்லிக்காய் சாறுடன் எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வந்தால் குடலில் உள்ள பூச்சிகள் அழியும்!
வெங்காயத்தை சாறு எடுத்து, தினமும் ஒரு அவுன்ஸ் வீதம் நான்கு வேளை சாப்பிட்டு வந்தால், புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் கோளாறு தீரும்.
வெங்காயத்தை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம், உஷ்ணப்பகுதி, தலைவலி, விடாத தும்மல் ஆகியவை மறையும்! கோடை காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு மேற்கண்ட முறைகளை செயல்படுத்தி கோடையை சமாளியுங்கள்.

0 comments:
Post a Comment