


தேவையானவை: புழுங்கல் அரிசி - 2 கப், பச்சரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை கப், உருளைக்கிழங்கு - கால் கிலோ, கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்.
காரச் சட்னிக்கு: பூண்டு - 5 பல், தேங்காய் - அரை மூடி, காய்ந்த மிளகாய் - 5, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு. (எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து 2 சிட்டிகை சர்க்கரை கலந்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்).
உருளைக்கிழங்கு மசாலா: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து மஞ்சள்தூள் தூவிப் பிசைந்து உருளைக்கிழங்கைப் போட்டுக் கலக்கவும்.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை முந்தின நாளே தண்ணீரில் ஊறவைத்து சிறு குருணையாக அரைத்து உப்புப் போட்டு கரைத் துக் கொள்ளவும். மறுநாள் காலையில் 4 டீஸ்பூன் சர்க்கரை போட்டுக் கலக்கவும். தோசைக் கல் காய்ந்ததும் மாவை தோசையாக ஊற்றவும். வெந்து பொன்நிறமாக வந்ததும் ஒரு டீஸ்பூன் காரச் சட்னியைத் தடவி, உருளைக்கிழங்கு மசாலாவை சிறிது வைத்து மடித்து மொறுமொறுப்பாக பரிமாறவும்.
பெங்களூர் மசாலா தோசை: மசாலா சேர்க்க விரும்பாதவர்கள் தோசை மாவில் பொடியாக வெங்காயத்தை நறுக்கி கலந்து செய்யலாம்.
--------------------------------------------------------------------------------


செய்முறை: ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூள், கருப்பட்டித்தூள், தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இது பாதியாக வற்றியதும் இறக்கி தேங்காய்ப் பாலை விட்டுக் கலந்து பரிமாறவும்.
இதை 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால் சளித் தொல்லை போய் விடும். தேங்காய்ப் பாலுக்குச் சளியைப் போக்கும் தன்மை உண்டு. அதனுடன் மிளகும் சேர்வதால் உடம்புக்கும் நல்லது.
மிளகு தேங்காய்ப் பால்: மிளகுக் காரம் வேண்டாமென்றால் மிளகைப் பொடிக்காமல் நன்றாக வறுத்து, அதில் தண்ணீர், கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். பாதியாகக் குறுக்கிய தும் வடிகட்டி, தேங்காய்ப் பாலுடன் கலந்து பருகலாம்.
--------------------------------------------------------------------------------


செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்துக் கொள்ளவும். கசகசாவை 5 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூளைப் போட்டு தாளிக்கவும். இதில், வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, கசகசா விழுதைக் கலந்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
வெறும் சாதத்துடன் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
பெங்காலி கொத்சு: கசகசாவுடன் 2 முந்திரியை சேர்த்து அரைத்துச் செய்தால், சுவை அபாரமாக இருக்கும்.
0 comments:
Post a Comment