Ads Header

Pages


16 April 2012

பல்வலியா? வாய் நாற்றமா? பல்லீறுகளில் இரத்தமா?

ஒருவர் ஈறு இரத்தக்கசிவினால் அவதிப்படுகிறார். பல் வைத்தியரிடம் சென்றால் அடிக்கடி பற்களைச் சுத்தம் செய்வதால் பற்களும் பலவீனமாகி பணமும் செலவழிகிறதே தவிர, பூரண குணம் கிடையாது. இதற்குத் தீர்வு

பல் ஈறுகள் பலவீனப் படுவதனால்தான் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. பெரிய
நெல்லிக்காயைப் பற்களினால் மெல்ல மெல்ல மென்று
தின்றால் நல்லது.

பல் ஈறு வீக்கம் குறைய ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை (வெறும்
வயிற்றில்) வாயில் வைத்துக் கொப்பளித்துத் துப்பவும்.

கிராம்பு, துளசிச் சாறுடன் கற்பூரம் சேர்த்துக் குழைத்து ஈறுகளில் தடவினால் வீக்கம் குறையும். மிகச் சிறந்த வைத்தியம் கடுக்காய்ப் பொடியைச் சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொப்பளிப்பதுதான்.

வாய்ப்புண் அடிக்கடி வருகிறது. அதற்கு ஒரு நல்ல மருந்தாகக் கூறுங்களேன். மாத்திரைக்கெல்லாம் கேட்கவில்லை.

வாய்ப்புண் என்பது வயிற்றில் ஏற்படும் அழலையின் வெளிப்பாடு தான். சமயசஞ்சீவியாக உதவுவது மணத்தக்காளிக் கீரையும், அகத்திக் கீரையும்தான். பொரியலாகச் செய்து தேங்காய்ப் பருப்பு சேர்த்துச் சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகும். திப்பிலித் தூள், நெல்லிச்சாறு, தேன் மூன்றையும் குழைத்து நாக்கில் தடவவும். விளாம்பழப் பச்சடி உடனடி பயன் தரும்.

வாய் நாற்றமா? பல்வலியா? பல்லீறுகளில் இரத்தமா?

செய்முறை : 1

கீழாநெல்லிக்கீரையை மென்று பல்விளக்கி வர தீராத வாய்நாற்றம், பல்வலி தீரும்.

குறிப்புகள் :

1, தினமும் ஏராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. உணவு உண்டபின் நன்றாக பல் துலக்க வேண்டும்.
3. இரவு அதிக நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

செய்முறை : 2

அதிமதுரம் - 50கிராம்
நன்னாரி - 50கிராம்
சந்தனம் - 20கிராம்
திரிபலைத்தோடு - 10கிராம்
ஏலம் - 5கிராம்

இவற்றை நன்றாக தூள் செய்து ஒரு கரண்டி வீதம் எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து, காலையில் வெறும் வயிற்றிலும், இரவு சாப்பாட்டிற்கு பின்னரும் சாப்பிட்டு வந்தால் கீழ்கண்ட நோய்கள் தீரும்.

1. வாய் நாற்றம்
2. குடல் புண்
3. வயிற்றுப்புண்
4. வயிற்றுவலி
5. குமட்டல்
6. வாந்தி
7. பித்தம்
8. பசியின்மை, ருசியின்மை

இது சிறுநீரக கற்கள், கல்லீரல் கற்கள் தோன்றாமல் தடுக்கும். மிகச்சிறந்த மருந்து, தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner