சட்னி உருளைக்கிழங்கு பக்கோடா
தேவையானவை: உருளைக்கிழங்கு & கால் கிலோ (வேக வைத்து தோல் உரித்தது), புதினா & கால் கப், கொத்தமல்லி & கால் கப், பூண்டு & 4 பல், பச்சை மிளகாய் & 2, எலுமிச்சை சாறு & 2 டீஸ்பூன், சர்க்கரை & ஒரு டீஸ்பூன், மைதா மாவு, சோளமாவு -& தலா ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா & ஒரு சிட்டிகை, உப்பு & தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு, சர்க்கரை அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறை கலந்து வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்து எடுத்த உருளைக்கிழங்கை நீளவாக்கில் கீறி, அதன் நடுவில் கொத்தமல்லி விழுதை ஒரு டீஸ்பூன் தடவவும். மைதா, சோளமாவு, சமையல் சோடா சேர்த்து சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். இந்தக் கரைசலில் உருளைக்கிழங்கை தோய்த்து எடுத்து, கிரில் மோடில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
0 comments:
Post a Comment