Ads Header

Pages


26 April 2012

குளுகுளு மேனி.. ஜிலுஜிலு டிப்ஸ்!

‘எனக்கு முடி நல்லா கறுகறுனு இருக்கும். அதுக்குக் காரணம், எங்கம்மா சின்ன வயசுல சொல்லிக் கொடுத்த வைத்தியம்...

ஒரு குழிக் கரண்டி நல்லெண்ணெயை சுட வைச்சு, அதுல ரெண்டு மிளகு, ரெண்டு அரிசி போட்டு, மிளகு வெடிச்சதும் எடுத்திருவேன். அப்புறம் கை பொறுக்கிற சூட்டுல எண்ணெயை எடுத்து, உச்சந்தலையில வைச்சு, கையால எண்ணெய் தலையில படுற மாதிரி நல்லா மசாஜ் பண்ணிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சுத் தலைக்குக் குளிச்சிடுவேன். செவ்வாயும் வெள்ளியும் இந்த எண்ணெய் குளியல் கண்டிப்பா உண்டு.

‘‘கண்கள் பொங்கி... தினமும், காலையில் கண்களை திறக்கவே கஷ்டப்படுகிறேன். தோலும் வறட்சியாக இருக்கிறது. உடலை குளுமையாக்க வழி சொல்லுங்கள்...’’

‘‘நீங்கள் சொல்லியிருப்பது, உடல் சூட்டினால் ஏற்படுகிற பிரச்னைகள்தான். தினமும் இரண்டு வேளை குளிப்பது சூட்டை தணிக்க ஒரு எளிய வழி. மற்ற வழிகளையும் சொல்கிறேன்...

ஆலீவ் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் என ஒவ்வொரு நாள் ஒவ்வொரு எண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்றாக தடவுங்கள். ஒரு மணி நேரம் கழித்து, மிதமான சுடுநீரில் குளியுங்கள். முடிக்கும் முன்பு, சந்தன பவுடர், சிவப்பு சந்தன பவுடர் இரண்டையும் சம அளவு கலந்து உடம்பில் தேய்த்து அலசி விடுங்கள்.

இப்படி குளிப்பதால், உடல் சூடு தணிவதுடன், சருமமும் வறண்டு போகாமல், பளபளவென மின்னும். குற்றாலத்தில் இருப்பதுபோல் உடம்பு குளுகுளுவென்றும் இருக்கும்.

கோடை காலத்துக்கேற்ற ஒரு குளியல் பொடியைச் சொல்கிறேன்...

பயத்தம் பருப்பு & கால் கிலோ, வெள்ளரி விதை & 25 கிராம், கிச்சலிக்காய் & 50 கிராம்... இவற்றை அரைத்துக் கொள்ளுங்கள். இதில் கலக்கும் அளவுக்கு இழைத்த சந்தனத்தைச் சேர்த்து, உடம்பில் தேய்த்துக் குளியுங்கள். இது, தோலுக்குப் பாதுகாப்பையும் குளிர்ச்சியையும் கொடுக்கும். வாசனை யாகவும் இருக்கும்.

எலுமிச்சைத் தோலை சிறு துண்டு களாக்கி, வெயிலில் உலர்த்தி, மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து, பாலில் கரைத்து, உடம்பு முழுவதும் தேய்த்துக் குளியுங்கள். வெயிலின் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்கும், இந்த பேஸ்ட் குளியல்!’’

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner