Ads Header

Pages


16 April 2012

வயிறே ரிலாக்ஸ் ப்ளீஸ்! நாட்டு வைத்தியம் !

வயிறே ரிலாக்ஸ் ப்ளீஸ்!


அசீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமிழ் நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும்.

முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி நீங்கும்.

வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்த மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அசீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்.

குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும்.

வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.

சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி ந>ங்கும்.

வயிற்றுக்கு மசாஜ் செய்வோம்

இருதயம், சுவாசகோசம், வயிறு ஆகிய உறுப்புகளைச் சூழ்ந்துள்ள தசைகள் தன்னிச்சையாக இயங்குபவை. மசாஜ் செய்வதால் அவற்றின் உடனடிப்பலன் எதுவும் ஏற்படாதது போலத் தோன்றலாம். உண்மையில் இதனால் நல்ல பலன்களே விளைகின்றன.

வயிற்றில் மசாஜ் செய்வது ஜீரணத்துக்கு உதவுகிறது. ஜீரண உறுப்புகளின் நரம்புகளில் தாராளமாக ரத்த ஓட்டம் ஏற்படச் செய்து, அழிந்து போன திசுக்களையும் ஜீரணமாகாத உணவுச் சக்கைகளையும் வெளியேற்ற உதவுகிறது. உணவிலிருந்து கிரகிக்கப்பட்ட சத்துக்கள் எல்லா உறுப்புக்களையும் சென்றடைவதை விரைவு படுத்துகிறது.

உணவுச் சத்துகள் உடலுறுப்புகளுக்குப் பயன்படுத்துவதற்காகவே பலவிதமான உணவுகளை உண்கிறோம். சத்துக்கள் உடலுறுப்புகளுக்கு முழுமையாக பயன்பட மசாஜ் உதவுகிறது.

உழைக்கும் போது ஏற்படும் கழிவுப் பொருள்கள் ஓரளவு மீண்டும் சர்க்கரைச் சத்தாக மாற்றப்படுவதும் உண்டு. அப்படி மாற்றப்படாதவை உடலின் நிணநீர் அமைப்பிலுள்ள வடிகட்டும் நுட்பமான முறையினால் வெளியேற்றப்பட வேண்டும்.

சுரக்கும் நிணநீர் பால்போல வெண்மையாக இருக்கும். கழிவுகள் இதில் வந்து போகும் போது, அதிலுள்ள தீங்கிழைக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதற்காக வெள்ளை அணுக்கள் உண்டாக்கப்படுகின்றன. அதனாலேயே இவ்வாறு வெள்ளை நிறமாகத் தோன்றுகிறது.

நிணநீர்க் குழாய்கள் உடல் முழுவதும் அமைந்துள்ளன. ஒரு நாளில் உடல் முழுவதும் இரண்டு லிட்டர் நிணநீரை இது சுற்றி வரச் செய்கிறது. இதைச் சுற்றி வரச் செய்வது சுருங்கி விரியும் தசைகள்தான். மசாஜ் செய்யும் போது இப்படி எளிதாகவும் விரைவாகவும் செய்யப்படுகிறது.

நிணநீர்க் கேந்திரங்கள் உடலில் முக்கியமாக ஐந்து இடங்களில் உள்ளன. இரண்டு கைகளிலும், இரண்டு கால்களிலும், மார்பிலும் அவை உள்ளன. முழங்கால்கள், முழங்கைகள், கழுத்தில் சிறிய கேந்திரங்கள் உள்ளன. மார்பு, வயிறு, கை, கால்களை மசாஜ் செய்யும் போது இக்கேந்திரங்களும் விரைந்து செயல்பட தூண்டப்படுகின்றன. நிணநீர் எளிதாகப் பரவி, கழிவுகள் வேகமாக வெளியேற்றப்பட இது உதவுகிறது.

உள்ளங் கையைப் பதித்து வட்டமாகச சுழற்றித் தேய்ப்பதன் மூலமும், தட்டுவதன் மூலமும் தசை அதிகமாகவுள்ள இடங்களில் மெல்லப் பிசைந்து விடுவதன் மூலமும் நிணநீர் செய்யும் வேலையை வேகப்படுத்தலாம். இயல்பாக அது தனது பணியைச் செய்து கொண்டுதான் இருக்கும் என்றாலும் மசாஜ் செய்வதால் அது மேலும் தூண்டப்பட்டு அதன் பணி விரைவு படுத்தப்படுகிறது.

எலுமிச்சை குணமாக்கும் நோய்கள்

பாதாம் கொட்டையின் தோலை உடைத்தெடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை மைபோல அரைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அரைக்கப்பட்ட விழுதில் எலுமிச்சம்பழ சாற்றை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

இந்த விழுதைக் கொண்டு அன்றாடம் பல் தேய்த்து வந்தால் பற்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தூய்மையான வெண்மை நிறத்துடன் காணப்படும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner