Ads Header

Pages


26 April 2012

ஹலோ டாக்டர்! சர்க்கரை நோய்க்கு என்னென்ன சோதனைகள் தேவை?

லோ டாக்டர்

என்னென்ன சோதனைகள் தேவை?

பாஸ்டிங் ப்ளட் ஷுகர்: எட்டு முதல் 12 மணி நேரம், சாப்பிடாமல் இருந்து விட்டு, காலையில் எழுந்தவுடன் எடுக்கும் டெஸ்ட். 70 110 மில்லிகிராமுக்குள் ரத்த ஷுகர் இருந்தால் நார்மல். அதை தாண்டினால், உஷார்.

போஸ்ட் ப்ராண்டியல் ப்ளட் ஷுகர்: சாப்பிட்ட ஒன்று, இரண்டு மணி நேரத்தில் எடுக்கப்படும் டெஸ்ட். 100 140 மில்லிகிராம் இருப்பது நார்மல். மீறினால், டயபடீஸ் இருக்கு என்று அர்த்தம்.

ரேண்டம் ப்ளட் ஷுகர்: எப்போதும் எடுக்கும் டெஸ்ட். 70 140 க்குள் இருக்கும். அதைத் தாண்டி, 200 க்கு மேல் இருக்கிறது என்றாலே, அடுத்த டெஸ்ட்களைச் செய்து, டயபடீஸ் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஓரல் க்ளூக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்: க்ளூக்கோஸ் சொல்யூஷன் தந்து எடுக்கப்படும் டெஸ்ட். இதில், இரண்டு மணி நேரத்துக்குப் பின், நார்மலான ஷுகர் என்று தெரிந்தால் சரி, அதிக ஷுகர் இருந்தால், சிகிச்சை ஆரம்பிப்பது முக்கியம்.

க்ளைகேட்டட் ஹெமோக்ளோபின்: ஆரம் பக்கட்டத்தில் இந்த டெஸ்ட் தேவையில்லை. சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தில் எடுக்கப்படும் டெஸ்ட் இது

01. டயபட்டீஸ்...!

"உங்களுக்கு ஷுகர் இருக்குதா...அப்படின்னா ரொம்ப மாத்திரை சாப்பிடணுமே, கண் பார்வை பாதிக்குதா, பார்த்துக்கங்க, ஜாக்கிரதை...' என்று சொல்வோர் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படி சொல்பவர்களுக்கு, சர்க்கரை நோய் பற்றி தெரியவில்லை என்றுதான் பொருள்.
சர்க்கரை நோய் பற்றி பயப்படுவோருக்கும், தனக்கும் அந்த கோளாறு இருக்கிறது என்றே தெரியாது; முப்பது வயதைத் தாண்டிய யாருக்கும் இருக்கும் அது, எப்போது தன் "வேலையை' காட்டும் என்று சொல்ல முடியாது.

உங்களுக்கு சர்க்கரை நோய் இல்லாமல் இருக்கலாம்; இருந்தும் தெரியாமல் இருக்கலாம். இதோ, சில கேள்விகள், சில தீர்வுகள்:

அதென்ன டைப் 1 டைப் 2 டயபடீஸ்?

டைப் 1 டயபடீஸ் என்பது, உடலில் இன்சுலின் உற்பத்தியாகாமல் இருப்பதால் ஏற்படுவது. டைப் 2 வில்: உடலில் போதிய அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகமாக சுரப்பதால் ஏற்படுவது.

எதற்கு இன்சுலின் தேவை?

உடலில் எனர்ஜி என்பது எல்லா இயக்கத்துக்கும் தேவை; அதற்கு க்ளூக்கோஸ் தேவை. அது உடலில் தானாகவே உற்பத்தியாகிறது. அதை பயன்படுத்த இன்சுலின் தேவை. ரத்த செல்களுக்கு எனர்ஜியைத் தருவதே க்ளூக்கோஸ்தான். இப்படி ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுவதால், இதில் க்ளூக்கோஸ் பங்கு முக்கியம். அதில் குறைபாடோ, அதிக வரத்தோ இருந்தால், எனர்ஜி பாதிப்பு வரும்.

க்ளூக்கோஸ் அளவு அதிகரித்தால், கண், சிறுநீரகம், நரம்புகள், இருதயம் பாதிக்கும்.

ஷுகர் என்பதால் டயபடீஸ் வருதா?

இது பலருக்கும் தெரியாது; உண்மையில், உடலில் ஷுகர் இருக்கிறது என்றால், அதுவே சர்க்கரை நோய் அல்ல. ஷுகர் என்பது ஒரு கோளாறு தான். எனர்ஜியை உருவாக்க, உடலில் ஷுகர் எனப்படும் இன்சுலின் இல்லாதவர்களுக்கு, அது ஒரு கோளாறு மட்டுமே. டயபடீஸ் நோயாளிகள் என்றால், அவர்களுக்கு உடலில் இன்சுலின் இல்லாமல் இருப்பது, இன்சுலின் இருந்தும் பயன்படாமல் இருப்பது என்றுதான் அர்த்தம்.

"பிளட் ஷுகர்' எனப்படுவதை, சர்க்கரை நோயாக மாற்றாமல் இன்சுலின் எப்படி தடுக்கிறது?

டைப் 1 டயபடீஸ் உள்ளவர்கள், உடலில் இன்சுலின் இல்லாமல் இருப்பவர்கள் என்பதால், அவர்கள் வெளியில் இருந்து இன்சுலின் பெற வேண்டியிருக்கிறது. டைப் 2 வில், இன்சுலின் இருந்தும் பயன்படாமல் இருப்பதால், அதற்கு மருந்துகள் சாப்பிட்டுதான் இன்சுலினை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

ரத்தத்தில் உள்ள "ஷுகர்' அதிகமானால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோயாகிவிடுகிறது. அதனால், ரத்தத்தில் அதிக ஷுகர் சேராமல், ரத்த செல்களில் கலக்காமல் செய்வதுதான் இன்சுலின் பணி.

டைப் 1 டயபடீஸ் யாருக்கு வரும்?

டைப் 1 டயபடீஸ் என்பது, பெரும்பாலும் குழந்தைகளுக்குதான் வரும். அதனால்தான் இதை "ஜுவனைல் டயபடீஸ், சைல்டுஹுட் டபயடீஸ்' என்பர். உடலில் இன்சுலின் சுரக்க முடியாத அளவுக்கு "இம்யூன் சிஸ்டம்' எனப்படும் இயக்கம் பாதிக்கப்படும். அதனால், கணையத்தில் இன்சுலின் சுரப்பி வேலை செய்யாது. இன்சுலின் கிடைக்காததால், ரத்தத்தில் ஷுகர் ஏறிவிடும்.

டைப் 2 பெரியவர்களுக்கு மட்டும் தானா?

ஆம், உடலில் இன்சுலின் சுரந்தும், பயன்படுத்த முடியாத நிலை வரும் போது, அதற்கு மருந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. பெற்றோரில் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு 80 சதவீதம் வரை சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு.

ரத்த ஷுகரை கட்டுப்படுத்த மருந்து முக்கியமா, உணவா?

முதலில் உணவுக்கட்டுப்பாடு; அதே சமயம், சரியான நேரத்தில், சரியான உணவு சாப்பிடுவது மிக முக்கியம். உணவு, மருந்து விஷயத்தில் சரியாக இருந்துவிட்டால், நார்மல் வாழ்க்கைக்கு பாதிப்பே வராது.

இந்த இரண்டு வகையுடன் இன்னொரு வகை என்ன?

அதுதான் ஜெஸ்டேஷனல் டயபடீஸ். நோயாளிக்கு நோயாளி இது மாறுபடும். அடிக்கடி பசி எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் எடை குறைவது, சிறுநீர், தோல் போன்றவற்றில் "இன்பெக்ஷன்' ஏற்படுவது போன்றவற்றால் வரும்.

இன்சுலின் இன்ஜெக்ஷன் போட்டுக்கொள்ள மறந்தால் என்னவாகும்?

டைப் 1 அல்லது இன்சுலின் தேவைப்படும் நோயாளிகளுக்கு, இன்சுலின் இன்ஜெக்ஷன் போட மறந்தால் ஏற்படும் அறிகுறிகள்: பலவீனம், சோர்வு, தலைசுற்றல், தலைவலி, பார்ப்பதெல்லாம் இரண்டு இரண்டாக தெரிவது, மயக்க நிலை.

சர்க்கரை நோயாளிகள், காலை ஏன் கவனிக்க வேண்டும்?

கால்களில் பெரியதும், சிறியதுமாக ரத்தக் குழாய்கள் உள்ளன. ஏதாவது சிறிய அடி என்றாலும், அந்த காயத்தை சரி செய்ய, எதிர்ப்பு சக்தி தேவை. அந்த சக்தி, சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்திற்கு இருக்காது. அதனால், காயம் ஆறாது. அதனால், சர்க்கரை நோயாளிகள், கால்களைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

யாருக்கு வரும் இந்த இரண்டு டயபடீசும்?

டைப் 2: வயது, உடல் எடை கூடுவது, பரம்பரையில் யாருக்காவது இருந்தால் வரக்கூடியது. டைப் 1: பெற்றோரில் யாருக்காவது இருந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பால், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தால்.

உடல் எடையைக் குறைத்தால் டயபடீஸ் தீர நல்லதா?

கண்டிப்பாக! ரத்த சர்க்கரை அளவை சீராக்க, இன்சுலினை வேலை செய்ய வைக்கிறது. ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பையும் குறைக்கிறது.

"ப்ரீ டயபடீஸ்' எப்படி கண்டுபிடிப்பது?

உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதுதான் "ப்ரீ டயபடீஸ்.' அது வந்த பத்தாவது ஆண்டில் டயபடீஸ் வரும் என்பதுதான் உண்மை. ப்ளாஸ்மா டெஸ்ட், ஓரல் டெஸ்ட் என்று டெஸ்ட்கள் உள்ளன.

டயபடீஸ் உள்ளவர்கள் என்ன உடல் பயிற்சி செய்ய முடியும்?

வாக்கிங், மாடிப்படி ஏறுவது, ஏரோபைக்ஸ், நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, ஸ்கேட்டிங், ஸ்கையிங், டென்னிஸ், கூடைப்பந்து, வாலிபால் போன்ற விளையாட்டுக்களையும் விளையாட முடியும். ஆனால், டாக்டரின் ஆலோசனை இதில் முக்கியம். எல்லாரும் எல்லாவற்றையும் செய்யமுடியாது; அவசியமும் இல்லை.

சர்க்கரை நோய், பற்களை பாதிக்குமா?

பற்கள், ஈறுகளை பாதிக்க வழி உண்டு. பல் தேய்க்கும்போது, ரத்தம் வருவதுதான் அதன் அறிகுறி. வாயையும் பாதிக்கும். பெரும்பாலும், சிகரெட் பிடிப்பவர்களுக்குதான் வரும்.

உறுப்பு மாற்று சிகிச்சையே இல்லையா? ஏன் இல்லை?

கணையத்தை மாற்றலாம்; இன்சுலின் உற்பத்தி செய்யும் ஐலேட் செல் மாற்று சிகிச்சை உள்ளது. செயற்கை கணையம் பொருத்தலாம். ஆனால், எல்லாம் சவால் நிறைந்தது. உடல் ஏற்றுக்கொள்ளாது. அதனால் சிக்கல்தான். அதனால்தான் மருந்துகள், உணவு கட்டுப்பாடு தேவைப்படுகிறது.

மலட்டுத்தன்மை வர காரணம்...?

டைப் 2 சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு, உடல் எடையும் அதிகமாக இருந்தால், கருத்தரிப்பு பாதிக்கப்படும். அதனால், கருத்தரிக்கும் முன் மூன்று மாதங்கள், ரத்த ஷுகர் கட்டுப்பாடு மிக அவசியமாகிறது. அப்போதுதான் கருத்தரிக்க முடியும்.

ஷுகருக்காக, யார் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்?

முப்பது வயதுக்கு மேல் ஆகி விட்டால்.
உடல் எடை அதிகமாக இருந்தால்.
பரம்பரையாக சர்க்கரை நோய் தொடர்ந்தால்.
லைப் ஸ்டைல் மாறியிருக்கிறது என்று நினைத்தால்.
ரத்த அழுத்தம் இருந்தால்.

ஐம்பது வயசாயிடுச்சி, இனி வருமா?

இதுதான் தவறான கணிப்பு. "முழு உடல் பரிசோதனை' செய்து கொள்ளுங்கள்; அதில் எது இருந்தாலும், தெரிந்துவிடும்

வயிறா கேட்குது; வாயை கட்டுங்க!

எதை எல்லாம் சாப்பிடக்கூடாது என்பதுதான் டயபடீஸ் நோயாளிகளுக்கு மிக முக்கியம்.
சர்க்கரை, தேன், வெல்லம், இனிப்புகள் கண்டிப்பாக, பார்க்கக்கூட கூடாது.

மைதா சம்பந்தப்பட்ட உணவுகள் கூடாது. டின்களில் அடைக்கப்பட்ட உணவு அறவே கூடாது.
தானியங்கள், சோயாபீன்ஸ், சாலட் போன்றவை சாப்பிட்டு வரலாம்.

ப்ரோட்டீன் சார்ந்த காய்கறி வகைகள் சாப்பிடுவது முக்கியம். மீன், சாதாரண மாமிசம் கொழுப்பு நீக்கிய பால் பரவாயில்லை. ஆனால், டாக்டர் ஆலோசனை முக்கியம்.

இனிப்பு இல்லாத சில வகை பழங்கள் சாப்பிடலாம்.

கேழ்வரகு, ஓட்ஸ் நல்லது. நார்ச்சத்துள்ள உணவுகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
உப்பு, ஊறுகாய், அப்பளம், சட்னி, உப்பு சார்ந்த உணவுகள் எல்லாம் மிக மிக குறைவாகவே சாப்பிடலாம். ஆனால், முடிந்தவரை விடுவது நல்லதே.

செயற்கை இனிப்புகள்...

டயபடீஸ் வந்துவிட்டால், கண்டிப்பாக வாயைக் கட்டித்தான் ஆக வேண்டும். ஆனால், செயற்கை இனிப்பு சாப்பிடலாமே என்றெல்லாம் வாயைக் கட்டாமல் இருப்பது சரியல்ல.
அதிலும் கர்ப்பிணிகள், செயற்கை இனிப்புகளைத் தவிர்ப்பது மிக நல்லது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner