Ads Header

Pages

26 May 2012

கணினியில் வேலை செய்கிறீர்களா? டிப்ஸ்!

டிப்ஸ்:கணினியில் வேலை செய்கிறீர்களா?

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர்

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்­ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

* உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.
Read more

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்! டிப்ஸ்!

டிப்ஸ்:இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்-உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
Read more

பட்டுப் புடவை, நகை பராமரிப்பு!! டிப்ஸ்!

டிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு!

அதிக விலை கொடுத்து வாங்கப்படும் பொருட்களுக்கு கொஞ்சம் கவனமும் அதிகம் தேவைப்படுகிறது. பட்டுச் சேலைகளை வாங்குவதில் காட்டும் அக்கறையை காட்டிலும் அதை பராமரிப்பதில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது!

அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்துத் துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.

விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுச் சேலையை களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது.

நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி 5, 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும்.

பட்டுப்புடவைகளை வருடக் கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.

பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப் பையில் வைக்கலாம்.
Read more

21 May 2012

பொடுகில்லாத கூந்தலைப் பெற..... அழகு குறிப்புகள்!

ழகு குறிப்புகள்:பொடுகில்லாத கூந்தலைப் பெற......

கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர். இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது.

பொடுகு என்றால் என்ன?

கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதைப் பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளைப் பயன்படுத்தி சிலர் மேலும் முடிகளை இழக்கின்றனர்.

முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால்தான் அநேக பேருக்கு முடி உதிர்கிறது. தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துக் கொள்ளலாம்.

பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.

சிலருக்கு இந்நோயின் தாக்கம் புருவத்திலும் ஏற்படுவதுண்டு. தலையை சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கும் இந்நோய் பரவும் (குறிப்பாக காதில் பரவும்) இது உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். இந்தப் பொடுகை தடுக்காவிட்டால் தலைமுடி அனைத்தும் உதிர ஆரம்பிக்கும்.

பொடுகு எல்லாக் காலங்களிலும் இருக்குமென்றாலும் மழை மற்றும் பனிக்காலங்களில் தான் அதிகம் காணப்படும். இந்த காலகட்டத்தில் பொடுகை அடியோடு ஒழித்துக்கட்ட இங்கே நிறைய வழிமுறைகள் தரப்பட்டுள்ளது. அதில் தங்களுடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் முறைகளைப் பின்பற்றி பயனடையுங்கள்.

பொடுகு வராமல் தடுக்க:

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

சோற்றுக்கற்றாழை தேய்த்தும் குளிக்கலாம்.

நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.

பொடுகினை அழிக்க:

பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.

வேப்பிலை - 2 கைப்பிடி
நல்ல மிளகு - 15-20

இரண்டையும் அரைத்துத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது.

அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வந்தால் தலையில் உண்டான அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் தேய்த்து வரலாம்.

வெள்ளை மிளகு - 4 டீ ஸ்பூன்
வெந்தயம் - 2 டீ ஸ்பூன்

இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்துத் தலைக்கு பேக் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு நீங்கி தலைமுடி நீண்டு வளரும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

தேங்காய் பால் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 4 டீ ஸ்பூன்
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது

இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.

பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.

4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.

இத்தனைக் குறிப்புகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.
Read more

வீட்டுக்குறிப்புக்கள், டிப்ஸ்


Read more

எக்சர்சைஸ் பண்ணுங்க. அழகா இருங்க.

நேரா நின்று கொள்ளுங்கள்.. அட சரியா நில்லுங்க.. இப்ப என்ன பண்றீங்கன்னா, நன்றாக வளைந்து காலைத் தொடுங்க. என்ன இடுப்பு வலி உயிர் போகுதா? என்ன வலி? 25 வரை எண்ணிக்கங்க. எண்ணிட்டிங்களா? இப்ப நிமிறுங்க. சிறிது ஓய்வுக்குப் பின் மறுபடி பழையபடி செய்யுங்க.. கொஞ்ச கஷ்டமாதான் இருக்கும். ஆனால், பலன் அதிகம்.

1. சைக்ளிங்
இது மாதிரி செஞ்சா அடி வயிறு தொப்பை குறையும். தொடைப்பகுதி வலுவாகும். குறைஞ்சது 20 முதல் 30 தடவை ஒரு செட்டுக்கு செய்யுங்க.2. இடுப்புக்கு:

தரையில் படுத்துக்குங்க. படுத்தாச்சா? கரெக்டா ஒரு காலை 90 டிகிரி இருக்குற மாதிரி தூக்குங்க. பின்பு சீராக இறக்குங்க. இப்படி செய்றப்ப ஒரு கையைத் தலைக்கு பேலன்சுக்கு வச்சுக்குங்க.

இப்படி ஒரு கால் மாற்றி ஒரு கால் செய்றதால இடுப்பு பகுதியில இருக்கிற சதை கரைஞ்சி ஓடிடும்.

3. காலுக்கு.... தொடை:

நேரா படுத்துக்குங்க. தலைக்கு பேலன்ஸ் வச்சுக்குங்க. காலை மடக்கி மடக்கி செய்யுங்க. இதனால தொடை உறுதியாகும். ஆனா ஒரு தடவைக்குக் குறைஞ்சது 30 முறையாவது இப்படிச் செஞ்சாத்தான் பலனுண்டு.


4. கால் மாற்று:

கால் மாற்றி கால் பிடிச்சுக்குங்க. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். செய்யப் பழ கிட்டிங்கன்னா, பிறகு ஈஸியா இருக்கும். இதைச் செய்றதால நாளடைவில் கால் பகுதி வலுவாகும்.

5. அந்தரம்:

அந்தரத்தில் அட்டகாசமாக மேலே போங்க. மேலே போகப்போக உடம்பு நம் சொற்படி கேட்கும். உடம்பை வில்போல வளைக்கணும். இப்படி 5 முதல் 10 செகண்ட் செஞ்சு பாருங்க. இளமை இதோ இதோன்னு உங்கள் வசம் இளமை ஊஞ்சலாடும்.அட்வைஸ்:

எக்சர்சைஸ் செய்றது பெரிய விஷயமே இல்லை. மனசுதான் தேவை. அதிலும் மனசு லேசா இருந்திட்டா எல்லாம் முடியும். மனசு லேசா இருந்தா முகத்துல புன்னகை நிரந்தரம். புன்னகை நிரந்தரமாக இருந்தா நிம்மதி நிச்சயம். இதெல்லாம் கைகூடணும்னா அன்பு அவசியம். அன்பு வேறெங்கேயும் இல்லை. நம்மகிட்டதான் இருக்கு. அன்பு இருந்தா அழகுதானா அடைக்கலமாகிவிடும். எக்சர்சைஸ் பண்ணுங்க. அழகா இருங்க.
Read more

நொச்சி மூலிகையின் பயன்கள்! மூலிகை மருத்துவம்!

மூலிகை மருத்துவம்

பூமியிலுள்ள அனைத்து தாவரங்களும் ஒவ்வொரு வகையில் நமக்குப் பயன்களை அளிக்கின்றன.இவைகள் நமது வாழ்வோடு ஒன்றிவிட்டன. இவைகளின் பயன்களை அறிந்து முறையாகப் பயன்படுத்தினால், நமது நோய்களைக் குணப்படுத்தி ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ளலாம். நொச்சி என்பது, ஒரு சிறந்த மூலிகைச் செடியாகும். இங்கு இந்த மூலிகையின் பயன்கள் பற்றிக் காணலாம்.

நொச்சியானது இந்தியா முழுவதும் பரவலாக வளரக்கூடிய ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகும். வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனமூவகை நொச்சிகளை மருத்துவ நூல் உரைக்கிறது. அதிகமாகக் காணப்படுவது வெண்நொச்சியாகும். நீர் நிலைகளுக்கு அருகில் முக்கியமாக ஆற்றங்கரையோரம் நீர்நொச்சி வளர்கிறது. கருநொச்சி அதிகமாகக் காணப்படுவதில்லை. இங்கு வெண்நொச்சி பற்றிக் காணலாம்.

பல்வேறு மொழிப் பெயர்கள்
ஆங்கிலம் பைன் லீவ்ட் சேஸ் ட்ரீ
இந்தி _ நிசிந்தா
தெலுங்கு _ வவிலி
மியான்மர் _ கியான்_பான்பின்
மலையாளம் _ இந்த்ராணி
சமஸ்கிருதம் _ சேபாலிகா
கன்னடம்_ பைல்_நெக்கி
மகாராஷ்டிரம் _ நீர்குண்டா
பஞ்சாப் _ மார்வான்
வங்காளம் _ சாமாலு
பெர்சியன்_பஜன்குசட்
பிரெஞ்சு _ கட்டிலியர் இன்சிஸ்
குஜராத் _ நகோடா

இதன் தாவரவியல் பெயர் ‘‘விட்டக்ஸ் நெகுண்டா’’ என்பதாகும். இது ‘வெர்பபோசியே’ என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?

இவைகளைப் பிழிந்து சாறு எடுத்துப் பயன்படுத்தலாம். இலைகளை நீரிலிட்டு கஷாயமாகப் பயன்படுத்தலாம். பூக்களை கஷாயமாக்கலாம். வேர்களைக் குடிநீராக்கி பயன்படுத்தலாம்.

குணங்கள்

கோழையகற்றி, புழுவகற்றி, உடல்தேற்றி, வலிநீக்கி, வியர்வை உண்டாக்கி சுரம் நீக்கி.

மருத்துவப் பயன்கள்

நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.

நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.

நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.

நொச்சி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, மிளகுத்தூள் 1 கிராம், சிறிது நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்து, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். (இச்சா பத்தியத்துடன், பாகற்காய், அகத்தி, மீன், கருவாடு நீக்கி உணவு உட்கொண்டு தீவிர ஆசையைத் தவிர்க்க வேண்டும்).

நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.

நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.

நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.

நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.

இவைகளை பிழிந்து சாறு எடுத்து அரை அவுன்சு சாறில். ஒரு ஸ்பூன் நெய் கலந்து நான்கு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து மூட்டுவலி, இடுப்பு வலியில் பூசிட வலி மாறும்.

இலைகளை அரைத்து மூட்டுவலி மேல் கட்டிவர, மூட்டுவலி வீக்கம் மறையும்.

வேர்களை நீரிலிட்டுக் காய்த்து வெறும் வயிற்றில் ஒரு அவுன்சு அருந்த வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.

இலைகளை நெருப்பில் வதக்கி வீக்கம் மேல் கட்ட, வலி தீரும். வீக்கம் வடியும்.

கைப்பிடி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு சேர்த்தரைத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி மாறும்.

சுடுநீரில் இலைகளைப் போட்டு ஆவிபிடிக்க காய்ச்சல், தலைபாரம், சளிக்கட்டு மாறும்.

இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும்.

வேர்ப்பட்டையை உலர வைத்து இடித்து பொடியாக்கி சிட்டிகை பொடியை தேனில் குழைத்து வாரம் இருமுறை காலையில் தின்றுவர நரம்புவலி வாதப்பிடிப்பு குணமாகும்.

வேப்பெண்ணெயை சட்டியில் ஊற்றி சூடாகியபின் கைப்பிடி இலைகளை இட்டு வதக்கி, வீக்கத்தின் மேல் வைத்துக் கட்ட வீக்கம் குறையும்.

பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும்.

நீரில் இலைகளையும், பூக்களையும் இட்டு சூடாக்கி, குளித்துவர தலைநீர், தலைபாரம், தலைவலி, ஜலதோஷம், உடல்வலி மாறும்.

இலைகள், பூக்களை மணலில் இட்டு வறுத்து, லேசான சூட்டில் கழுத்துப் பிடரி வலி ஏற்படும் போது ஒற்றடம் கொடுக்க வலி மாறும்.

சமஅளவு நொச்சி இலைச்சாறு, நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து குளித்துவர கழுத்தில் ஏற்படும் வீக்கம், நெறிக்கட்டு குணமாகும்.

நொச்சி இலைகளை ஒரு துணியில் தலையணை போல் அடைத்து தலைக்கு வைத்துத் தூங்கி வர, தலைவலி, நரம்புவலி, கழுத்து வலி, தலைநீர், தலைபாரம் இவைகள் குணமாகும்.
Read more

கால்களை கவனியுங்கள்!

பெண்களுக்கு முக அழகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு கால் அழகும், பாதங்களின் அழகும் முக்கியம். ஆனால், துரதிருஷ்டவசமாக பெண்கள் முகத்திற்குத் தரும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பாதங்களுக்குத் தருவதில்லை. இதை சில திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தால் ராஜகுமாரி ஆனால் பாதத்தைப் பார்த்தால் வேலைக்காரி என்று மற்றவர் கேலிசெய்யும் அளவிற்கு இருக்கக்கூடாது.

நமது உடலின் நரம்புகள் முடிவடையும் இடம் பாதங்கள்தாம். எனவே, கால்களை நன்கு பராமரிப்பது வெறும் அழகுக்காக மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்காகவும்தான் என்பதை உணர்ந்து, பெண்கள் கால்கள் பராமரிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் பெண், ஆயிரக்கணக்கான ரூபாய் விலையுள்ள பட்டுப்புடவையைக் கட்டியிருக்கும் பெண்களின் பாதங்கள் அழகில்லாமலும், வெடிப்புக்களோடும் இருப்பதை நாம் பலபேரிடம் பார்க்க முடிகிறது. பாதங்களின் மீதும் பெண்கள் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கால்களை கவனியுங்கள்

கால்கள் பல இடங்களுக்கும் செல்கின்றன, சேற்றிலும், தண்ணீரிலும், சூடான இடத்திலும், குளிர்ந்த இடத்திலும் நடக்கின்றன. எனவே ஏராளமான அழுக்குகள், கறைகள் பாதங்களில் படிவதைத் தவிர்க்க முடியாது. கோயிலுக்குச் சென்று வந்தவுடன் பாதங்களைப் பாருங்கள், அழுக்கும், எண்ணெய்ப் பசையும் கவ்விக் கொண்டிருப்பதைக் காணலாம். மேலும் பாதங்களில் கால் ஆணி, பித்தவெடிப்பு, வறண்ட தோற்றம் என்று ஏராளமான பிரச்சினைகள் தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே கால்களை, மற்றும் பாதங்களை நன்றாகப் பராமரிப்பது மிகவும் அவசியம். நாள் முழுவதும் கண்ணாடி முன்னால் நின்று ஒப்பனையில் ஈடுபடும் பெண்கள், வாரத்தில் ஒருமணி நேரமாவது கால்களை கவனிப்பதில் செலவழிப்பது நல்லது.

அழகான பாதங்களைப் பெற எளிய வழி

அகலமான பிளாஸ்டிக் டப்பில் இளஞ்சூடான நீரை எடுத்துக் கொண்டு, அதில் சில சொட்டுக்கள் திரவ சோப்பைக் கலந்து கொள்ளவும், பிறகு இரண்டு பாதங்களையும் நீரில் மூழ்கி இருக்கும்படியாகச் செய்து, பத்து நிமிடங்கள் வரையில் இருக்கவும், கால்கள் இறந்து போன செல்களினால் வறண்டு போய் காணப்படும். இவ்வாறு சோப்புத் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலமாக மேல் தோலில் உள்ள இறந்த செல்கள் அப்புறப்படுத்த எளிதாக மாறிவிடும். பத்து நிமிடம் பாதங்கள் ஊறிய பிறகு, பல்தேய்க்கும் பிரஷ் கொண்டு பாதங்களை, விரல் இடுக்குகளை மெதுவாக தேய்த்து விடுங்கள். இதனால் கால்களில் படிந்திருக்கும் அழுக்கு, தூசு, இறந்த செல்கள், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் ஆகியவை வெளியேறும். பாதங்கள் பளபளப்பாகவும், அழகாகவும் தோற்றம் அளிக்கும், நோய்க் கிருமிகளும் தொலைந்து போகும்.

பாதுகாப்பும் பயிற்சிகளும்

வாரத்தில் ஒரு முறையாவது பாதங்களை கழுவித் துடைத்தும், நகங்களை வெட்டியும், பாதுகாப்பது அவசியம். இது நம்மை நாள் முழுவதும் தாங்கிக் கொண்டிருக்கும் பாதங்களுக்கு நன்றிக்கடனாக அமைவதோடு, அவைகளை புத்துணர்ச்சி கொள்ளவும், வேலை செய்வதற்குத் தயாராக்கவும் பெரிதும் உதவும்.

1. பெரிய பிளாஸ்டிக் டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு சொட்டு ஏதாவது மனதிற்குப் பிடித்த மூலிகை எண்ணெயைக் கலந்து, அந்தத் தண்ணீரில் பாதங்களை பத்து நிமிடத்திற்கு மூழ்கும்படியாக வைத்திருக்கவும். இவ்வாறு செய்தால் பாதங்கள் மிருதுவாகும்.

2. பாதங்கள் நன்றாக உலர்ந்த பிறகு, விரல் நகங்களை மென்மையாக ராவி விடவும்.

3. பாதங்களை பியூமைஸ் கல்லைக் கொண்டு நன்றாகத் தேய்த்து விடவும். இதனால் மேல் தோலில் படிந்திருக்கும் இறந்த செல்கள் அகன்று, பாதங்கள் பளிச்சிடும். இளமையாகத் தோன்றும்.

4. பாதங்களுக்கு குளிர்ச்சியைத் தருகின்ற எண்ணெயை கையில் எடுத்துக் கொண்டு, பாதங்களை நன்றாக மசாஜ் செய்யவும், விரல்களில் இருந்து ஆரம்பித்து, சக்கரவட்டமாக எண்ணெயை பாதங்களில் தேய்த்துக் கொண்டே வந்து, குதிகாலில் முடிக்கவும்.

5. முன் பாதத்தை விரல்களோடு சேர்த்து உள்ளங்கையில் பிடித்துக் கொண்டு, லேசாக வலதுபுறம் நான்கு முறையும், அவ்வாறே இடதுபுறம் நான்கு முறையும் திரும்பவும். இவ்வாறு செய்வது, பாதங்களில் அக்கு பிரஷர் மையங்களைத் தூண்டிவிட்டு, இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்.

6. தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு, கால்களை தலையை விட உயரமாக இருக்கும் விதத்தில் தலையணியின் மீது வைத்துக் கொள்ளவும். இவ்வாறு செய்வது வலியைக் குறைக்கும், கால்களின் தசை இறுக்கத்தை நீக்கும்.

பராமரிப்பு

பாதத்தில் வெடிப்புக்கள் இருந்தால் துணி துவைக்கும் கல்லிலோ அல்லது வேறு ஏதாவது சிறிய கல்லிலோ பாதங்களை மெதுவாக தேய்த்துக் கொள்வது நல்லது. கல் இல்லாதவர்கள் துணிதுவைக்கும் பிரஷ் கொண்டு தேய்த்துக் கொள்ளலாம். தற்போது கடைகளில் புயூமைஸ் ஸ்டோன் (ஜீuனீவீநீமீ stஷீஸீமீ) என்று விற்கப்படும் கல்லை வாங்கி பயன்படுத்தலாம்.

குளிக்கும் போது சிறிது நல்லெண்ணெயை உள்ளங்காலில் வைத்து, சூடுபரக்க தேய்த்து விட்டுக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறியபிறகு சீயக்காய் பொடி அல்லது பயத்தமாவைக் கொண்டு கழுவிவிட வேண்டும். பாதத்திற்கு எண்ணெய் தேய்ப்பதைப்போலவே கால்விரல்களுக்கும் தடவிக் கொள்வது நல்லது. இதனால் கால்விரல்களின் சருமம் பளபளப்பாகும்.

பாத எரிச்சல் நீங்க

சிலருக்கு உடல்சூடு அதிகமாகும் போது பாத எரிச்சல் உண்டாகும். அந்த சமயங்களில் மருதாணி இலையை அரைத்து படுக்கப்போகும் நேரத்தில் உள்ளங்காலில் தடவிக் கொண்டு படுப்பது உடல் சூட்டைத் தணிக்கும். எரிச்சலை அடக்கும். பாதங்களில் ஏற்பட்ட உஷ்ணம் குறைக்கும். உடல் குளிர்ச்சி அடையும். இதேபோலவே பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களிலும் மருதாணியைத் தடவிக் கொள்ளலாம்.

பாத எரிச்சல் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை மைபோல அரைத்து, அரிசிமாவுடன் கலந்து, தேவையான உப்பு போட்டு, தோசைவார்த்துச் சாப்பிட, எரிச்சல் நீங்கும்.
Read more

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்... மருத்துவ டிப்ஸ்!

மூலிகை மருத்துவம்

ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே!

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க... அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு...

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.
Read more

இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? மருத்துவ டிப்ஸ்

ஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இஞ்சி இடுப்பழகிகள் என்றெல்லாம் சொல்கிறார்களே அது ஏன்?

சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறார் மூலிகைமணி

‘‘காலையில் தோல் சீவிய இஞ்சியை நசுக்கி ஒரு குவளைத் தண்ணீரில் போட்டு இரண்டு ஏலக்காயும் சேர்த்து நன்றாகக் காய்ச்சி, பின் வடிகட்டி. சிறிது பாலும் தேனும் கலந்து பருகவேண்டும். மதியம் ஒரு ஸ்பூன் உலர்ந்த இஞ்சித் துண்டுடன் இரண்டு பிடி சாதம், கொஞ்சம் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும்.

மாலையில் கடுக்காய்ப் பொடி அரை ஸ்பூன் பாலுடன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி நாற்பது வயதுக்குமேல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டால் 100 வயதிலும் ராஜநடை போடலாம். நம்ப முடியவில்லையா? இப்படியே ஒருவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்த மருத்துவ வல்லுனர் தேரையர்தான் அவர். மூப்பின் அடையாளம் கொஞ்சமும் தெரியாமல் கடைசிவரை வாழ்ந்திருக்கிறார்.

இன்றைய வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால், பெண்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்: தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் சிம்ரன், த்ரிஷா, ஸ்ரேயா மாதிரி நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.’’

எது வசதியோ அதைச் செய்து என்றும் இளமையாக இருங்கள். காசு, பணத்தைக் காப்பாற்றாவிட்டால்கூட கடைசி காலத்தில் பெரிதாக வருத்தப்பட வேண்டியிருக்காது. ஆனால் இளமையைத் தவறவிட்டால் அதை ஈடு செய்யவே முடியாது.
Read more

18 May 2012

ஏழைகளின் ஆப்பிள் பப்பாளி பழம்!

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் பப்பாளிப் பால்!

ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்....

யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

* பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

* பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

* பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

* நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

* பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

* பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

* பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

* பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

* பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

* பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
Read more

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்!

கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே.

காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும்.

வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும்.

தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும்.

பேரீச்சம் பழத்தை வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து கிடைக்கும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் தோலின் நிறத்தைப் பாதுகாக்க தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வரவும்.

குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது கிருமி நாசினியாகவும் திகழ்கிறது.

கண்கள் குளிர்ச்சி அடைய முருங்கைப் பூவை சமைத்து சாப்பிடலாம். ஒரு துணியில் முருங்கைப் பூவை இடித்துக் கட்டி கண்களின் மேல் 10 நிமிடம் வைக்கலாம். கண்கள் புத்துணர்ச்சியுடன் திகழும்.

நாள்தோறும் கேரட்டை பாலோடு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஜுஸ் செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தெளிவடையும். உடலில் தசைப்பற்று உண்டாகும்.

பதநீர் குடித்தால் பற்களில் ஏற்படும் ஸ்கர்வி நோய் குணமாகும்.

பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அதைப் போக்க மருதாணி, எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவவேண்டும்.

பாலில் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் சர்க்கரையையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். எடை கூடும். சருமம் பளபளக்கும்.

கோடை காலத்தின்போது முகத்தில் வெண்புள்ளிகள் தோன்றுவது சகஜம். இதைப் போக்க தினமும் வெள்ளை கரிசலாங்கண்ணி இலைகள் ஐந்தைப் பறித்து அதனுடன் துளசி இலைகள் மூன்றைச் சேர்த்து மென்று காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். தினமும் உணவில் மிளகு, வல்லாரை, சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

சம்பா அரிசியை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் தோலின் தன்மை மென்மையாக மாறுவதுடன் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

கண்களில் குளிர்ச்சியை உண்டாக்க தாமரைப் பூவை கண்களில் சிறிது நேரம் வைத்துக் கொண்டால் போதும்.

இளநீரை தினமும் குடித்து வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும். உடல் சோர்வு அகலும்.

அதிகமாக உழைக்கும் மனித உறுப்புகளில் கண்களுக்கு பெரும் பங்கு உண்டு. கண்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் முதலில் அதற்கு ஓய்வு தேவை. எப்போதும் ஓய்வுக்குப் பின் புத்துணர்வு கிடைக்கும். கண்களின் வளமைக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடவேண்டும். மாதம் ஒரு முறை மெல்லிய மசாஜ் செய்யவேண்டும்.

பெண்கள் பேரீச்சம் பழத்தை வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பகங்கள் வளமை பெறும்.

இளநீருடன் சந்தனத்தை சேர்த்து உடலில் தடவி குளித்தால் உடல் குளர்ச்சி ஏற்படும். கழிவு நீர் வெளியேறி விடும்.

தினமும் ஏதாவதொரு பழ ஜுஸ் அருந்தி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சியும் வலிமையும் கிடைக்கும்.

பிளம்ஸ் பழமும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

எலுமிச்சை சாறு தடவி ஊறிய பின் குளித்து வந்தால் சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
Read more

பாதங்கள் வழுவழுப்பாக என்ன செய்யலாம்? மருத்துவ டிப்ஸ்!

காலில் பித்த வெடிப்பு இல்லை. ஆனால், பாதங்கள் சொர சொரப்பாக இருக்கிறது. ஹைஹீல்ஸ் அணிந்து வெளியே செல்லும்போது கால்கள் அவ்வளவு லுக்காக இருப்பதில்லை. பாதங்கள் வழுவழுப்பாக என்ன செய்யலாம்?

டோன்ட் வொர்ரி. இரவு படுக்கப் போவதற்கு முன்பாக, வெதுவெதுப்பான நீரை, ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் ஷாம்பூ அல்லது லிக்விட் சோப்பு போட்டு, அதில், பாதங்களை மூழ்கும்படி வைத்து, ஒரு அரைமணி நேரம் ஊற வையுங்கள். பிறகு, கடைகளில் கிடைக்கும் ‘ப்யூமிஸ்’ ஸ்டோனை வாங்கி அதில் சிறிது லிக்விட் சோப்பு போட்டுக் கொண்டு, பாதங்களில் சொர சொரப்பாக உள்ள இடங்களில் நன்கு தேய்த்தால், இறந்த செல்கள் உதிர்ந்து விடும். இப்போது ப்யூமிஸ் ஸ்டோனுடன் ‘பெடிக்கியூர் சோப்பு’ என்ற ஒன்றும் கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி பாதங்களின் ஓரங்கள் மற்றும் சொர சொரப்பான இடங்களில் தேய்த்தால், இறந்த செல்கள் நீங்கி, பாதங்கள் வழுவழுப்பாகும். இதைத் தினமும் இரவு படுக்கைக்குப் போகும் முன்பாகச் செய்யலாம்.
Read more

பழங்களின் பயன்கள்! இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம்.

ழவகைகளில் சீதாப்பழத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. இப்பழத்தின் தாகம் தென் அமெரிக்கா ஆகும். சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று பெயர். இதன் தாவர வியல் பெயர், ‘அனோனா ஸ்குவா மோசா.’ ஆங்கிலத்தில் ‘சுகர் ஆப்பிள்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இந்தியாவில் அசாம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திராவில் சாகுபடி ஆகிறது.

வகைகள்

சீதாப்பழத்தில் பல வகைகள் உள்ளன. அதிக அளவில் சாகுபடியிலுள்ள சீதாப்பழவகைகள், பாலநாகர், சிவப்பு சீதா, மேம்மத்பார்படாஸ், ஐலேண்டர், இளஞ்சிவப்பு சீதா, கபூல், டர்கிஸ் வெள்ளை, வாஷிங்டன், பிரிட்டிஷ்கினி, ஆகிய பத்து வகைகள் ஆகும்.

சத்துப் பொருட்கள்

நூறுகிராம் சீதாப்பழத்தில் அடங்கி உள்ள பொருட்கள் கீழ்கண்டவாறு இருக்கின்றன. புரதம் 1.6 கிராம், நார்ப்பொருள் 3.1 கிராம், மாவுப் பொருள் 23.5 கிராம், கொழுப்புச் சத்து 0.3 கிராம், கால்சியம் 17 மில்லிகிராம், பாஸ்பரஸ் 47 மி.கி., இரும்புச் சத்து 1.5 மி.கி., மெக்னீசியம் 48 மி.கி., பொட்டாசியம் 34 மி.கி., தாமிரம் 0.52 மி.கி., குளோரின் 3.7 மி.கி., தயாமின் 0.07மி.கி., ரைபோஃபிளோவின் 0.20 மி.கி., நியாசின் 1.3 மி.கி., வைட்டமின் ‘சி’ 37 மி.கி., ஆக்சாலிக் அமிலம் 30 மி.கி., சக்தி 104 கலோரிகள்.

எப்படி சாப்பிடலாம்

சீதாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. நன்கு பழுத்த பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு சதைப்பகுதியை அப்படியே சாப்பிடலாம். பழச்சாறு, சாஸ், செரப் காண்டி, கீர் முதலியன தயாரித்து உண்ணலாம். பழச்சாறுடன் எலுமிச்சம்பழச்சாறு, தேன் கலந்து மிக்சட் பானம் தயாரித்தும் சாப்பிடலாம். பழத்தின் சதைப் பாகத்தைத் தனியாக எடுத்து சாப்பிடுவதுதான் அதிகமாக வழக்கத்தில் உள்ளது. பலவகை இனிப்புகளும் செய்து உண்ணலாம்.

பொதுப் பயன்கள்

சீதாப்பழச்சாறில் பல வகை பண்டங்கள் பானங்கள் தயாரிக்கப்படுகிறது. காண்டி, சாக்லெட், மிட்டாய், கேக், பிஸ்கெட்கள் செய்ய உதவுகிறது. சீதாப்பழத்துடன், பால் சேர்த்து கீர் தயாரித்தால் சுவை சூப்பராக இருக்கும். இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம். காசநோயைக் குணப்படுத்தும். குளிர்ச்சியூட்டி, நீர்ப் பெருக்கி, மலமிளக்கி, குடல் புண்ணைக் குணப்படுத்தும் சோர்வை நீக்கும். பித்தம் அகற்றி, இரத்தத்தை விருத்தி செய்யும். நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கம் தூண்டி சருமத்தை நன்கு இயல்பு நிலையில் பராமரிக்கும்.

மருத்துவப் பயன்கள்

= சீதாப் பழத்தி லுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சீதாப்பழத்தைத் தின்போம். இதயத்தைக் காப்போம்.

= ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள், இப்பழத்தைத் தின்று வர, நோய் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.

= சீதாப்பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் கொடும் தாகம் தணியும். உடல் குளிர்ச்சி பெறும். கோடை உபாதைகள் எட்டிப் பார்க்காது.

= தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால், ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால், உடனே வாந்தி, குமட்டல் நிற்கும்.

= அறுவை சிகிச்சைக்குப் பின், சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும்.

= மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாய்ந்து விடும்.

= சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, குடற்புண் விரைவில் குணமாகும்.

= சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.

= உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர, ஊளைச்சதை கணிசமாக குறையும்.

= சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும்.

= இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

= நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு என ஜெர்மன் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருகிறது.

= உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.

= சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும்.

= ஆரம்பநிலை, மனநோயாளிகளும், சீதாப்பழத்தை தினம் தொடர்ந்து தின்று வர 41 நாட்களில் நல்ல குணமடைவர்.

= இரவில் படுக்கப் போகும் முன் ஒரு சீதாப்பழத்துடன் இரண்டு பேரீச்சம் பழமும் தின்றால், நன்கு தூக்கம் வரும். தூக்கம் வராது அவதிப்படுபவர்களுக்கு, இது ஒரு நல்ல எளிய இயற்கை மருந்து.

= அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள், சீதாப்பழம் தின்று வர, தசைகளை சீராக இயங்கச் செய்யும்.

= சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.

= சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளி பிடிக்காது தடுக்கும் தன்மையை உண்டாக்கும். சளிப் பிடித்தவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நன்கு சளி குணமாகி நலன் கிட்டும்.

= சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்டிரால் சேராது காக்கும்.

= சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

= சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யமாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும்.

=சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.
Read more

17 May 2012

மருத்துவ டிப்ஸ், நான்தான் இருமல் பேசுகிறேன்.

  நான்தான் இருமல் பேசுகிறேன். என்னைப் பற்றி சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கேளுங்கள்.

என்னை தமிழில் இருமல் என்றும் ஆங்கிலத்தில் காஃப் (நீஷீuரீலீ) என்றும், வடமொழியில் காசம் என்றும், மலையாளத்தில் சொமா என்றும் அழைத்து வருகின்றனர்.

காசம் என்றால் தொண்டையிலிருந்து மணி ஓசைபோல வாய் வழியாக ஒரு வித சப்தம் போன்று வெளிவருவதால் எனக்கு காசம் எனப் பெயர் கொடுத்துள்ளார்கள்.

நான் உங்களைத் தொந்தரவு செய்வதற்கான காரணங்கள், ஒவ்வாத உணவுப் பதார்த்தங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவதாலும், அசுத்தமான புகை மற்றும் தூசுகளை நீங்கள் சுவாசிப்பதாலும், மிகவும் வறட்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும், சிறுநீர், மலம், தும்மல் போன்ற இயற்கையான வேகங்களை கட்டுப்படுத்துவதாலும்தான் நான் உங்களை தொந்தரவு செய்கிறேன்.

நான் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு முன் சில அறிகுறிகளை உங்கள் உடம்பில் ஏற்படுத்துவேன். அவற்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.

உங்கள் தொண்டையில் முள் குத்துவது போன்று ஒருவித எண்ணம் தோன்றும், தொண்டையில் அரிப்பு, உணவை விழுங்க முடியாமை போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிப்பேன்.

சிலர் இருமுவதற்கு வெட்கப்பட்டு, கட்டுப்படுத்த முயல்வார்கள். அப்படி முயன்றால் எனக்குக் கோபம் ஏற்பட்டு, எனது வேகத்தை அதிகப்படுத்தி விடுவேன். அதுமட்டுமல்லாமல் மூச்சிறைப்பு, ருசியின்மை, இருதய நோய், விக்கல் போன்ற நோய்களை ஏற்படுத்தி விடுவேன். ஐ£க்கிரதை!

எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து நபர்கள். அதாவது நான் உங்களை ஐந்து வகையில் தொந்தரவுபடுத்துவேன். அவை, வாதத்தினாலும், பித்தத்தினாலும், கபத்தினாலும், அடிபடுவதாலும் மற்றும் உடல் இளைப்பாலும் நான் உங்கள் உடம்பில் தோன்றி துன்புறுத்துவேன். சரி, என் குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறேன். கேளுங்கள்.

1. வாத இருமல்

நான் உங்களை வாதம் அதிகமாவதால் தொந்தரவுபடுத்துவேன். நெஞ்சு வலி, வயிற்றுவலி, தலைவலி, வறண்ட இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவேன்.

2. பித்த இருமல்

நெஞ்சு எரிச்சல், காய்ச்சல், வாயில் கசப்புச் சுவை, தண்ணீர்த் தாகம் போன்ற அறிகுறிகளை பித்தம் அதிகமாவதால் ஏற்படுத்துவேன்.

3. இருமல்

கனமான கோழை, உடல்பருமன், ருசியின்மை போன்ற அறிகுறிகளை கபம் அதிகமாவதால் ஏற்படுத்துவேன்.

4. க்ஷதக்க்ஷினம்

அடிபடுவதால் நான் இருமலை உற்பத்தி செய்வேன். எனது அறிகுறிகள் கோழையுடன் இரத்தம் கலந்து வெளிவரும். நெஞ்சில் ஊசி வைத்துக் குத்துவது போன்ற வலியை ஏற்படுத்துவேன். மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமும்போது பறவையின் குரல் போன்ற சப்தம்.

5. க்ஷய இருமல்

உடல் இளைப்பால் இவ்வகை இருமலை ஏற்படுத்துவேன். (சரிவர சாப்பிடாமல் இருப்பது, அளவுக்கு அதிகமான உடலுறவு ஆகிய காரணங்களால் உடல் இளைப்பு ஏற்படுகிறது.) சலம் போன்று இரத்தம் கலந்த கோழை, உடல் இளைப்பு, உடல் எரிச்சல், உடல் எங்கும் வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவேன்.

இதில் நான் கூறியுள்ள முதல் மூன்று நபர்களையும் நீங்கள் எளிதில் போக்கிவிடலாம். கடைசியில் உள்ள இரண்டு நபர்கள் மிகவும் பொல்லாதவர்கள். அவர்களை நீங்கள் எளிதில் அழிக்க முடியாது.

இதில் வயதானவர்களுக்கு வரும் இருமல், இருமலுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.

என்னை நீங்கள் எதிர்க்க மருந்துகள் சாப்பிடாமல் அலட்சியப்படுத்தினால் மூச்சுத் திணறல். உடல் இளைப்பு, வாந்தி, குரல் அடைப்பு போன்ற அறிகுறிகளையும், எலும்புருக்கி நோய் என்னும் காசநோய் கூட ஏற்பட வாய்ப்புண்டு. என் குடும்பத்தினருடைய எதிரிகளைக் கூறுகிறேன் கேளுங்கள்.

= கண்டங்கத்திரி என்ற மூலிகைதான் என் குடும்பத்தின் முதல் எதிரி.

= கண்டங்கத்திரியை கஷாயம் வைத்து திப்பிலிப் பொடியை சேர்த்துச் சாப்பிட்டால் நாங்கள் அழிந்து போய்விடுவோம்.

= பத்து மிளகையும், ஒரு கடுக்காயையும் பொடி செய்து சுடு தண்ணீருடன் இரவில் சாப்பிட்டால் எங்களை நீங்கள் எளிதில் துரத்தி விடலாம். அல்லது மிளகை மட்டும் பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டீர்கள் என்றாலே போதும்.

= திப்பிலி பொடியில் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்களைத் தொந்தரவு படுத்தும் இருமலாகிய நாங்கள் போய்விடுவோம். அதுமட்டுமில்லாமல் இந்த பிரயோகம் மற்றும் சில நோய்களையும் குணப்படுத்தும். அதையும் சொல்கிறேன் கேளுங்கள், மூச்சுத் திணறல், தொண்டை நோய், விக்கல், மண்ணீரல் நோய் போன்றவைகளை குணமாக்கும். இது குழந்தைகளுக்கு மிக நல்லது. ஆனால் தாய்மார்களே குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்போது, மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவில் கொடுக்க வேண்டும்.

= திப்பிலி பொடியும், இந்துப்பும் சேர்த்து சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டாலும் எங்கள் தொந்தரவு நீங்கும்.

= சிலருக்கு ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதால் ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற உபத்திரவங்கள் ஏற்படும். இதில் எங்களுடைய பங்கும் உண்டு. இதற்கு நீங்கள் மஞ்சளை அரைத்து அரிசி கழுவிய தண்ணீருடன் கலந்து சாப்பிட்டாலே போதும், இடம் விட்டு இடம் பெயர்வதால் ஏற்படும் தொந்தரவுகளுடன், நாங்களும் போய் விடுவோம்.

= ஆடாதொடைச் சாற்றுடன், திரிகடுகுப்பொடி, தேன் இவைகளைக் கலந்து சாப்பிட்டால் எல்லாவித இருமலும் குணமாகும்.

= மோர், சர்க்கரை, திப்பிலிப்பொடி இவைகளை ஒன்றாகக் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

= இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டீர்களானால் இருமலாகிய நான் அழிந்து போவதோடு மட்டுமல்லாமல் காய்ச்சல், ஜலதோஷம், மூச்சுத் திணறல் போன்ற என் நண்பர்களும் அழிந்து போவார்கள்.

= துளசி என்கிற செடி எங்களுக்கு மிக முக்கியமான எதிரி. இந்தச் செடியை இடித்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் போதும் நாங்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுவோம்.

= இன்னும் எங்களுக்குச் சில, பல எதிரிகள் எல்லாம் இருக்கிறார்கள். சிலர் எங்கள் எதிரிகளைத் தயாரித்து விற்பனையே செய்கிறார்கள். உதாரணத்திற்கு, வியாக்ரியாதி கஷாயம், தசமூலக்கடுத்ரயம் கஷாயம், வாஸாரிஷ்டம். தாளீசபத்ராதி சூர்ணம், சிதோபலாதி சூர்ணம், கண்டங்கத்திரி லேகியம் போன்ற மருந்துகள் ஆயுர்வேத, சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் நீங்கள் இவற்றை யெல்லாம் ஒரு ஆயுர் வேத மருத்துவர் அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். அப்போது தான் நாங்கள் அழிவோம்.

= முடிவாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் உங்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. நீங்கள் வாழ்க்கை நெறிமுறைகளைத் தவறாக பின்பற்றுவதனால்தான் இருமலாகிய நானும் மற்றும் என்னைப் போன்ற நண்பர்களும் உங்களைத் துன்புறுத்துகிறோம். அதனால் வாழ்க்கையில் உணவுப் பழக்கவழக்கங்கள் முதலான நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி வந்தால் நான் மட்டுமின்றி எந்தவித நோயும் அணுகாது வாழலாம்.
Read more

கிச்’ டிப்ஸ் பளிங்கு பொருட்கள் பளிச்சிட!

கிச்’ டிப்ஸ்

பளிங்கு பொருட்கள் பளிச்சிட!

பிளவர் வாஷ், தேனீர் கோப்பை, தண்ணீர் டம்ளர் போன்ற கண்ணாடி மற்றும் பளிங்கினால் ஆன பொருட்களை பயன் படுத்தினால் அதன் அழகே தனிதான். ஆனால் அந்த பளிங்கு பொருட்களை தொடர்ந்து பளபளப்பாக வைத்திருப்பது என்பது கடினமான விஷயம். அவற்றை பராமரிப்பதற்கான சில டிப்ஸ் இதோ!

* கண்ணாடி பொருட்களை அலம்பிய பின், கடைசியாக கழுவும் தண்ணீரில் சிறிது வினிகர் மற்றும் போராக்ஸ் பவுடர் கலந்து கழுவ வேண்டும். அப்படி செய்தால் அவை எப்போதும் பளபளப்பாக இருக்கும்.

* கண்ணாடி பொருட்களை கழுவும் போது, கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை கழட்டி வைத்து விட்டால், கண்ணாடி பொருட்களில் உராய்ந்து கீறல் விழுவதை தவிர்க்கலாம்.

* பளிங்கு மற்றும் கண்ணாடி பாத்திரங்களை, ஷெல்புகளில் நியூஸ் பேப்பரின் மேல் வைப்பதை தவிர்ப்பது நல்லது. நியூஸ் பேப்பர் இங்க்களில் காணப்படும் ரசாயனம், நாளடைவில் பளிங்கு பொருட்களின் பளபளப்பை மங்கச் செய்து விடும்.

* ஷெல்புகளில் பீங்கான் தட்டுக்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைப்பதால் உராய்ந்து கீறல் விழுகிறதா? அடுக்கி வைக்கும் போது, ஒவ்வொரு தட்டை அடுக்கிய பின்னும், ஒரு துணியை போட்டு பின் அதன் மேல் மற்றொரு தட்டு என அடுக்கலாம். இவ்வாறு செய்வதால் இரு தட்டுக்களுக்கு இடையே உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

* கண்ணாடி ஜன்னல்கள் மீது பெயின்ட் கறை படிந்து விட்டால், சிறிது வினிகரை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி, ஒரு துணியில் நனைத்து, பெயின்ட் கறை மீது தேய்த்தால் கறை காணாமல் போய்விடும்.

* கண்ணாடி பாட்டில்களில் துர்நாற்றம் அடிக்கிறதா? கவலையே வேண்டாம். அந்த பாட்டிலில் சிறிது கடுகைபோட்டு, வெந்நீர் ஊற்றி, சிறிது நேரம் வையுங்கள். பின், வெந்நீரை கீழே ஊற்றி விட்டு துடைத்து காய வைத்தால் துர் நாற்றம் காணாமல் போய்விடும். கடுகுக்குப் பதிலாக உப்பை போட்டு ஊற வைத்தும் கழுவலாம்.

* கண்ணாடி மற்றும் பீங்கானாலான பவுல்கள், டம்ளர்கள் போன்றவற்றில் காணப்படும் கறைகளை அகற்ற, எலுமிச்சம்பழச்சாறு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கறையுள்ள இடத்தில் தேய்த்து கழுவினால் கறை அகன்று விடும்.

* வாஷ் பேசினில் மஞ்சள் கறை படிந்திருந்தால், அவற்றின் மீது வினிகரை தெளித்து, சிறிது நேரம் தண்ணீர் ஊற்றி தேய்த்து கழுவினால் கறை காணாமல் போய்விடும்.

* வெள்ளை நிறத்தாலான வாஷ் பேசினை சுத்தம் செய்த பின், அதில் சிறிதளவு துணிகளுக்கு பயன்படுத்தப்படும் நீலம் கலந்த தண்ணீரை ஊற்றி கழுவினால் மிகவும் பளபளப்பாக இருக்கும்.

* கண்ணாடியாலான பிளவர் வாஷ்கள், எண்ணெய் ஊற்றி வைக்கும் ஜாடி, தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் அதிக நாட்கள் எண்ணெய் மற்றும் தண்ணீர் வைத்திருப்பதால் கறை ஏற்படும். அதை போக்க அதில் சிறிது வினிகரை ஊற்றி, கறையின் தன்மையை பொறுத்து 30 நிமிடங்கள் முதல் ஒரு நாள் இரவு வரை ஊற விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் அலச வேண்டும்
Read more

சீரகம்...உணவே மருந்து!

சீரகம்


தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
Read more

இயற்கைச் சருமத்திற்கு வெள்ளரிக் கலவை..எளிய அழகு குறிப்பு!

யற்கைச் சருமத்திற்கு வெள்ளரிக் கலவை

முகம் `பளபள' என மின்னவும் வேண்டாம். அதற்காக சாதாரண அழகையும் இழக்க வேண்டாம் என்பவர்களுக்கான டிப்ஸ் இது. வெள்ளரிக்காயை எடுத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக் கருவையும், ஒரு தேக்கரண்டி பால் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முகம் மிக மென்மையாக, தனது இயற்கையான பொலிவுடன் இருக்கும்.
Read more

அரிய மூலிகை - அம்மான் பச்சரிசி...

ரிய மூலிகை - அம்மான் பச்சரிசி...

அரிய மூலிகைகளின் அற்புத மருத்துவக் குணங்களை ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.
அம்மான் பச்சரிசி

ஒரு அடி வரை வளரும் செடியினம். மெல்லியத் தண்டுப் பகுதியில், வரிசையாக எதிரும் புதிருமாக இலைகள் அமைந்திருக்கும். ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். எதிர் அடுக்கில் கூர் நுணிப் பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளுடையது. இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வளர்கின்றது.

வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், உடல் சூடு தணியவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயல்படும்.

இதன் வகைகள்: பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்யைம்மான் பச்சரிசி, வயலம்மான் பச்சரிசி.

மருத்துவக் குணங்கள்
வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .

மரு நீங்க

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.

இதன் இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.

இதன் இலையுடன் அதேயளவு தூதுவளை இலையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, உடல் பலப்படும்.

இதன் இலையுடன் கீழாநெல்லியிலையையும் சம அளவாகச் சேர்த்து எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு 1 டம்ளர் எருமைத் தயிரில் சாப்பிட்டு வர, உடல் எரிச்சல், நமைச்சல், மேக இரணம், தாது இழப்பு நீங்கும்.

இதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.

இதன் இலையை கிள்ளினால் பால் வரும். அதைத் தடவி வர, நகச்சுற்று, முகப்பரு, பால் மரு, கால் ஆணி வலி குறையும்.

இதன் இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.

இதன் இலை 15 எடுத்து அரைத்து, 1 டம்ளர் பசும் மோரில் கலந்து காலை, மாலை குடித்து வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு, வெள்ளைச் சொட்டு குணமாகும். (உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும். சாதத்தில் பசும்பால் சேர்க்கலாம். டி, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்).
Read more

கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை...!

ரு பக்கம் அலோபதி மருத்துவம் நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வருகிறது. இன்னொரு பக்கம் மாற்று மருத்துவமும் அதிகளவு முன்னேறி வருகிறது. அதில் மூலிகை மருத்துவம் முதலிடத்தில் உள்ளது. சில மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து கொண்டால் எந்தச் சூழலிலும் நமக்கு அவை உதவக்கூடும்.

கற்ப மூலிகை
மரண மாற்று
மூலிகை ஆடாதோடை...

நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய 15 அடி வரை வளரக் கூடிய குறுஞ்செடி.

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.

இந்த வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.

இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.

ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

மருத்துவக் குணங்கள்!

ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.

மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.

இதன் இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும். இது அளவில் குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக கொடுத்தால் போதும்.

இதன் இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் 1 டம்ளரில் கலந்து 2 வேளை குடித்து வர, சீத பேதி, இரத்த பேதி குணமாகும்.

இதன் இலை 10 எடுத்து லு லிட்டர் நீரில் போட்டு ரு லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம் (ஜி.ஙி.) இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி நீங்கும்.

இதன் வேருடன், கண்டங்கத்திரி வேர் சமஅளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து தேனில் கலந்து, 2 வேளையாக தொடர்ந்து சாப்பிட்டு வர, நரம்பு இழுப்பு, சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளிக் காய்ச்சல், என்புருக்கி, குடைச்சல் வலி குணமாகும்.

இதன் இலையையும், காய்கள் இலைகளையும் வகைக்கு 1 கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகக் குடித்து வர, கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி குணமாகும்.

உலர்ந்த இலையை பொடிசெய்து ஊமத்தை இலையில் சுருட்டு புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும்.

இதன் இலை, கோரைக் கிழங்கு, பற்பாடகம், விஷ்ணு காந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங் கோரை, சீந்தில் வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு லு லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 4 வேளை 50 மில்லியளவு குடித்து வர, எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.

இதன் வேரை 50 கிராம் எடுத்து லு லிட்டர் நீரில் போட்டு, 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாக கடைசி மாதத்தில் கர்ப்பிணிப் பெண்கள் குடித்து வர, சுகப் பிரசவம் ஆகும்.

இதன் இலை, துளசி, குப்பைமேனி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து லு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க விஷம் முறியும்.

இதன் இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.

இதன் இலையுடன் வேப்ப மர இலை, அரிவாள்மனைப் பூண்டு இலை, சிறியா நங்கை இலை சம அளவாக எடுத்து அரைத்து, புண்கள் மீது பற்றுப் போட, புண் ஆறி தழும்பும் மறையும்.

இதன் இலையுடன் குப்பை மேனியிலையும் சம அளவாக எடுத்துச் சேர்த்து அரைத்து, பாவாடையின் நாடாப் புண் உள்ளவர்கள் இடுப்பைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, புண் ஆறி கறுப்புத் தழும்பும் மறையும்.


ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம்பெறும். மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.

ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புகைச்சல் குணமாகும்.

ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், சுவாச காச நோய்கள் நீங்கும். ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம்கிடைக்கும். ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால், நெஞ்சுச்சளி அறவே நீங்கும்.

ஆடாதோடை இலை - 2, வெற்றிலை - 2, மிளகு - 5, சுக்கு - 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்.

இண்டு, இசங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், ஈளை, இழுப்பு, இருமல், சுவாசகாசம், போன்றவை குணமாகும்.

காயவைத்த ஆடாதோடையிலை - 5, அதிமதுரம்-2 கிராம், திப்பிலி-1 கிராம், தாளிச பத்திரி - 1 கிராம், சிற்றரத்தை 1/4 கிராம் எடுத்து இடித்து பொடியாக்கி அதனை 500 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து அது 200 மி.லி.யாக வரும்போது இறக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி நீங்கும். கோழை வெளியேறும். இரைப்பு நீங்கும்.

கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன் வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் கிளி பொட்டலமாகக் கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.

ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை நீங்கும். இந்த பொடியை தேனில் கலந்துகூட அருந்தலாம்.
Read more

என்றும் இளமையாய் வாழ முருங்கைக் கீரை!

ந்த இயந்திரத்தனமான உலகில் ஏதோ சமைத்து அவசர அவசரமாக உள்ளே தள்ளிவிட்டு வேலைக்குச் செல்லும் பழக்கம்தான் நம்மில் அநேகருக்கு...! என்ன செய்வது, வீட்டில் வேலையும் பார்த்து, அலுவலகமும் செல்ல வேண்டும் என்றால் கஷ்டமாக இருக்காதா?... என்று நம் வீட்டு அம்மணிகள் முணுமுணுப்பது புரிகிறது... உங்கள் கஷ்டம் புரியாமல் இல்லை, அதற்காக நம் சமையலில் ஆரோக்கியத்தை தவற விடலாமா?

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொண்டால், நம் உடல் நலத்தைப் பேண வேண்டியிருக்காது. ஆனால், பரபரப்பு நிறைந்த வாழ்க்கை சுழற்சியில் கீரைகளை பொறுமையாக வாங்கி சுத்தம் செய்து சமையல் செய்வதற்கு நேரம் ஏது...? தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கீரைகளை ‘என்றோ ஒரு நாள்’ என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நம்மிடையே உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி எல்லாம் குறைந்து சீர்குலைகிறது...

சாதாரண தலைவலி, ஜலதோஷம் போன்ற நோய்களைக்கூட, நம் உடல் எதிர்த்துப் போராட முடியாமல் சோர்ந்து விடுகின்றது... பிறகென்ன, மருத்துவரின் உதவியை நாடிச் செல்கிறோம்... இந்நிலை மாற வேண்டும்... அதற்கு என்ன பண்ணுவது...? ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டாலே போதும், நம் ஆரோக்கியம் மேன்மையடையும்... ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். அத்துடன், நம் ‘ஆரோக்கியம் கீரைகளின் கையில்’ என்ற புதுமொழியையும் கருத்தில் கொண்டு கீரைகளைச் சாப்பிடுங்கள்... உயிர்ச் சத்துக்களை எல்லாக் கீரைகளும் தன்னகத்தே கொண்டுள்ளன. அந்த வகையில் எல்லாக் காலமும் எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கைக் கீரை பல உயிர்ச்சத்துக்களை கொண்டதாகவும், மருந்தாகவும் நம் ஆரோக்கியத்தைப் பேணுவதில் உயிர்க்காப்பானாக செயல்படுகின்றன...

முருங்கைக் கீரையிலுள்ள உணவுச் சத்துக்கள்

தண்ணீர் : 63.8%
புரதம் : 6.1%
கொழுப்பு : 10%
தாதுஉப்புக்கள் : 4%
நார்ச்சத்து : 6.4%
மாவுச்சத்து : 18.7%

முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் நிரம்பப் பெற்றிருக்கின்றன... முருங்கைக் கீரை 108 கலோரி சக்தியை நமக்குக் கொடுக்கின்றது...

இக்கீரையில்,
வைட்டமின் ஏ : 11300/IU
(அனைத்துலக அலகு)
வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம்
(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு)
சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம்
குளோரின் : 423 மில்லி கிராம்
இரும்புச் சத்து : 259 மில்லி கிராம்
ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம்
கந்தகச் சத்து : 137 மில்லி கிராம்
மாங்கனீஸ் : 110 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் வைட்டமின் சி : 220 மில்லி கிராம் இருக்கின்றது. அதனால் இது எல்லோருக்கும் எந்த வயதினருக்கும் ஏற்ற மிகச் சிறந்த உணவு...

முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன... வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை...

முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்கா மலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இவ்விதம் மூன்று நாளைக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லபலன் கிடைக்கும்...

முருங்கைக் கீரையைச் சுத்தமாக ஆய்ந்து, அதை அம்மியில் வைத்துத் தட்டி எடுத்து கையில் வைத்துச் சாறு பிழிய வேண்டும். அந்த சாற்றில் ஒரு அவுன்ஸ் (ஷீக்ஷீ) அரை அவுன்ஸ் எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கலக்கிக் குடிக்க வேண்டும். சிறிது நேரத்தில் பித்த நீர் வாந்தியாக வெளியேறிவிடும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு ஒரு தரம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் செய்ய வேண்டும்...

முருங்கைச் சாறு எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கரைத்து குழந்தையானால், அரைச் சங்களவும், பெரியவர்களானால் இரண்டு சங்களவும் கொடுத்தால் சிறிது நேரத்தில் வயிற்று உப்புசம் நீங்கும்... முருங்கைக் கீரைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இடுப்பு வலி, வாதமூட்டுவலி முதலியவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கலாம்... முருங்கைக் கீரையையும், மிளகையும் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தலைவலிக்குத் தடவ குணம் காணலாம்... வீக்கங்களின் மீது பூச, வீக்கம் குறைவதைக் கண்கூடாகக் காணலாம்...

அடிவயிற்றுவலி, பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்றுவலி போன்றவற்றிற்கு முருங்கைக் கீரைச் சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேலை உண்டு வந்தால் மிகப் பலன் கிடைக்கும்...

முருங்கைக் கீரையினால் தயார் செய்யப்படும் சூரணம், உஷ்ண பேதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்... முருங்கைக் கீரையை உருவிய பின் நிற்கும் ஈர்க்குடன் கறிவேப்பிலை ஈர்க்கையும் சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம்... இக்கசாயம் வயிற்றில் உள்ள பூச்சிகளைப் போக்கும் தன்மையுடையது... உடலில் உண்டான நீர்க் கோவையை நீக்கி விடும்...

முருங்கைக் கீரையோடு இரு துண்டுப் பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு அரைத்துச் செய்யப்பட்ட மருந்து நாய்க்கடி நஞ்சை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது...

சர்க்கரை வியாதியை நீக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையுடன் போதிய அளவு எள் சேர்த்துச் சமைத்து உண்டு வர, கடுமையான சர்க்கரை நோய் விலகி, உடல் நலம் பெறும்...

இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படக் கூடியதுதான் முருங்கைக் கீரை... அதனால் அன்றாட உணவில் தவறாது முருங்கைக் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதுவரை முருங்கைக் கீரையின் மருத்து வத்தை நீங்கள் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்; இனிமேலாவது அதை நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், அதனால் எண்ணற்ற பலன்களை அடை யலாம்... மேன்மையான. ஆரோக்கியத்துடன் வாழலாம்... நோய்க்கு ஆட்படாத மனிதனின் முதுமை நிச்சயமாக தள்ளிப் போகும்... என்றும் இளமையாய் வாழலாம்... என்ன சொல்வது சரிதானே...! =
Read more

உடல் வலிமை பெற 20 யோசனைகள்!

உடல் வலிமை பெற 20 யோசனைகள்

புத்துணர்ச்சி உண்டாக:
துளசி இலைகளை செப்பு பாத்திரத்தில் இரவு நீரில் ஊற வைத்து காலையில் பருக வேண்டும்.
நோய் எதிர்ப்புச் சக்தி கூட:
அருகம்புல்சாறு 14 அவுன்ஸ் தினந்தோறும் அருந்த நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
உடல் அலுப்பு தீர:
மிளகை நெய்யில் வறுத்து தூள் வெல்லம், நெய் சேர்த்து கிளறி 5 கிராம் சாப்பிட்டு வர உடல் அலுப்புத் தீரும்.
உடல் குளிர்ச்சி பெற:
ரோஜா இதழ்களை இடித்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்க்கலாம்.
நரம்புத் தளர்ச்சி நீங்க:
மாதுளம் பழச்சாறு தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர நீங்கும்.
உடல் பலம் பெற:
பப்பாளி பழம் தினமும் சாப்பிடலாம்.
சுறுசுறுப்பாக இருக்க:
சுக்குப்பொடி அஸ்மாட்டில் கலந்து உண்டு வரலாம்.
நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக:
அதி மதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம் கொடி வேலி பட்டை 17 கிராம் பவுடராக்கி காலையில் கால் ஸ்பூன் சாப்பிடலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தி கூட :
ஆலமரத்து பட்டையை அரைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து பருகி வரலாம்.
உடல் வெப்பம் தணிய:
அஸ்வகந்தி இலையை பச்சையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டு வர தணியும்
உடல் வளர்ச்சி பெற:
உருளைக்கிழங்கு சிறுவர்களுக்கு நல்ல உணவு அதிகமாக சேர்த்து வர... வளர்ச்சி பெருகும்.
நரம்புகள் பலப்பட:
பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து வடிகட்டி மாலை மட்டும் சாப்பிடலாம்.
கண் பார்வை தெளிவடைய:
கறிவேப்பிலை துவையல் உண்ணலாம்
முகம் வளுவளுப்பாக இருக்க:
கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும்இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தடவ வேண்டும்.
முகச் சுருக்கம் மறைய:
முட்டை கோஸ் சாறை முகத்தில் தடவி வர மறையும்.
முகம் பளபளக்க:
காலையில் எழுந்ததும் அவரை இலைச்சாறை முகத்தில் தடவி, 1 மணி நேரம் கழித்து குளித்து வர முதுகு பளபளப்பாகும்
உடல் நிறம் சிவப்பாக:
செம்பருத்தி பூவை நீரில்போட்டு அரை மணி நேரம் கழித்து அந்த நீருடன் பூவையும் அரைத்துச் சாப்பிட்டு வர உடல் நிறம் சிவப்பாகும்.
தழும்புகள் மறைய:
அவரை இலை சாறு தினமும் தேய்த்து, காய்ந்த பின் குளிக்க மறையும்.
முகத்தில் வரும் கட்டிகள் மறைய:
சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ, கட்டிகள் வராது.

தோல் பளபளக்க:
எலுமிச்சம்பழம், நெல்லிக்காய், நிலக்கடலை இலைகளைச் சாப்பிட்டு வந்தால், பளபளப்பாகும்.
இதைச் செய்து பாருங்கள். உங்களுக்கும் உடம்பு நன்றாக முறுக்கு ஏறும். சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
அழகு குறிப்புகள்
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள்சிலவற்றை பார்ப்போமா.....

1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் ,தோளில் உள்ள சுருக்கங்கள்,மரு போன்றவை நீங்கி விடும்.

2 .உலர்ந்த சருமத்திற்கு முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து எடுத்து அத்துடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவவேண்டும் .அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ ,முகம் பொலிவுடன் மிளிரும்.

3 .காரட் எடுத்து நன்கு கூலாக அரைத்து அத்துடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி விடவும்.நன்கு காய்ந்தவுடன் முகத்தை கழுவவும்.முகம் பளிச் என்று இருக்கும்.(திருமணங்களுக்கு செல்லும்போது பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்.)

4 .பச்சைபயறு,கஸ்தூரி மஞ்சள் ,பூலாங்கிழங்கு மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.அதில் சிறிது எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசவும்.சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.இதே கலவையில் சிறிது எடுத்துதேங்காய் எண்ணெய்,ரோஸ் வாட்டர் ,எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி குளித்தால் சருமம் அழகாக தோன்றும்.

5 .தினமும் காலையில் இளநீர் பருகினால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.

6 .கண் பார்வை நன்கு வலுப்பெற அதிகாலையில் உதிக்கும் சூரியனை தினமும் பார்த்தல் வேண்டும்.

7 .மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,வேப்பிலை,ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டுபின்பு தலைக்கு தேய்க்கவும்.இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும்.மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது.ஷாம்புக்கள் பயன்படுத்தும்போதும் இதே போல் செய்யவேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

8.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும்.கூந்தல் அடர்த்தியாக வளரும்.

9 .கருவேப்பிலை,சின்ன வெங்காயம் - 4 , இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்துகுளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
Read more

பொன்மேனியாக்கும் பொன்னாங்காணிக்கீரை

ங்கச்சத்து உடலுக்குத் தேவையானது. இதன் சத்துக்கள் திரிதோஷத்தையும் நீக்கவல்லது. ஆயுளை நீடிக்கச் செய்யும். அறிவு விருத்தியாகும். நினைவாற்றல் பெருகும். வீரிய விருத்தி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை உண்டாக்கி, உடம்பில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் நீக்கவல்லது. தாது புஷ்டிக்குச் சிறந்தது. தோல் பகுதியில் சிறப்பாகச் செயல்பட்டு உடம்பினைப் பொன்மேனியாக்கும்.

தங்கத்தை பஸ்பமாக்கிப் பயன்படுத்தினால், மேற்கண்ட பொதுப்பலனைப் பெறலாம். சிறப்பாக, இருமல் நோய்க்கும், சயரோகத்திற்கும், உடல் பலவீனத்தை நீக்கவும், இரத்த விருத்திக்கும், புணர்ச்சி சக்தியை மேம்படுத்தவும் பயன்படுகிறது. சாமான்ய மக்கள் இதைப் பயன்படுத்த முடியாது.

அனைத்துத் தர மக்களும் பயன்படுத்தி தங்கத்தின் மருத்துவக் குணங்களைப் பெற தங்கச் சத்துள்ள மூலிகைகள், கீரைகள், மலர்கள் அனேகம் உள்ளன.

விலை மலிவானதும், எப்பொழுதும், எங்கும் கிடைக்கக்கூடியதும், விலை இல்லாதது மானவற்றைப் பயன்படுத்தி பல நன்மைகளைப் பெறலாம்.

பொன்னாங்காணிக்கீரை

தங்கச்சத்தைச் சிறப்பாகக் கொண்டது. பொன்+ஆம்+காண்+நீ=பொன்னாம்காணி என்ற காரணப் பெயர் கொண்டது.

பொன்னாங்காணிக்கீரையில் தங்கச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமாக இருப்பதாலும், சுண்ணாம்புச்சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் மிகச் சிறப்பாக இருப்பதாலும் இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. பொன்னாங்காணிக்கீரை சமைத்துச் சாப்பிடுவதால், உடல் பலம் கூடும். தோல் நோய்கள் வராது. கண் நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும். பார்வை தெளிவடையும். நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களும் மூலநோய் உள்ளவர்களும் தொடர்ந்து சாப்பிட்டால், குணம் பெறலாம்.

பொன்னாங்காணிக்கீரையை உப்பு சேர்க்காமல் வேகவைத்து வெண்ணெய் சேர்த்துக் கடைந்து தினசரி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். காட்டராக்ட் நோய் வராமல் பாதுகாக்கும். கண் சம்பந்தமான இதரப் பிணிகள் அனைத்தும் நீங்கி பார்வை தெளிவடையும். தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிடவேண்டும்.

பொன்னாங்காணிக்கீரையை துவரம் பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உடம்பு பெருக்கும். பொன்னாங்காணிக் கீரையில் துவரம் பருப்பு சேர்த்துச் சமைத்து நெய் சேர்க்காமல் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூன்று மாதங்களில் தேவையற்ற உடல் பருமன் குறையும்.

இக்கீரையில் பூண்டும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் மூல வியாதி முற்றிலும் குணமாகும். மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.

பொன்னாங்காணிச்சாறு 30 மில்லியளவு தயாரித்து, பசும்பாலில் கலக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பொன்னாங்காணிச்சாற்றைக் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

பொற்றிலைக்கரிப்பான்

பொற்றிலைக்கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச்சத்து அதிகம் உள்ளது. இக்கீரையைச் சாப்பிட்டால் உடல் பொன் நிறமாகும். உடலை எந்த நோயும் தாக்காது. கண்கள் ஒளி பெறும். பார்வை கூர்மை பெறும். புத்தி தெளிவடையும். குன்மக் கட்டிகள் நீங்கிவிடும். பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையை பச்சையாகத் தின்றால் மிகுந்த நன்மை கிடைக்கும். பச்சடியாகவும், கூட்டுக்கறியாகவும் தயாரித்துச் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூளைக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.

சித்தப்பிரமைக்கு மிக நல்ல மருந்து. கண்கள் சம்பந்தமான அனைத்து நோய்களும் நிவர்த்தியாகும். கபம் தொடர்பான சளி, இருமல் நீங்கும். ரத்த சோகை நோய் நிவர்த்தியாகி, நல்ல உடல் ஆரோக்கியம் ஏற்படும். பாண்டு நோய் நிவர்த்தியாகும். மஞ்சள்காமாலை நோயை முழுமையாக நீக்கிவிடும் மிக அற்புதமான மருந்தாகும். கல்லீரல், மண்ணீரல் நோய் வந்தால் இம்மூலிகை மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம். ரத்த விருத்திக்குச் சிறப்பான மூலிகையாகும்.

பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்து, நிழலில் நன்றாகக் காய வைத்துப் பொடி செய்துகொண்டு பொடியின் எடைக்குப் பாதி எடை, சீனி சேர்த்துக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை ஆகாரத்துக்கு முன்னதாக ஒரு தேக்கரண்டி பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சோகை, காமாலை, பாண்டு, வீக்கம், மூலம், மேகரோகங்கள் நிவர்த்தியாகும்.

பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரை இலையைச் சுத்தம் செய்து, நிழலில் சிறிது உலர்த்தி மெழுகுபதமாக அரைத்து சுண்டைக்காய் அளவில் மாத்திரை செய்து, சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் போட்டு, மாத்திரை மூழ்கும் அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றி ஐந்து தினங்கள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துக்கொண்டு, சிறியோர் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு வந்தால், சோகை, காமாலை, பாண்டு வீக்கம், குன்மக்கட்டி, கண், சீதபேதி, அதிசாரம், மாந்தக்கழிச்சல் குணமாகும். ரத்தவிருத்தி ஏற்பட்டு, உடல் தங்கநிறம் அடையும்.

ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மூர்ச்சை, மயக்கம், நரம்பின் அதிர்ச்சிகள், தூக்கமின்மை, புலம்புதல் போன்ற நிலையில் காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு மாத்திரை வீதம் தினசரி சாப்பிட்டு வந்தால், ஹிஸ்டீரியாவின் தொடர்புடைய அனைத்து நோய்க்குறிகளும் குணமாகும்.

கரிசலாங்கண்ணி நெய்

பொற்றிலைக் கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு பங்கும், பசு நெய் ஒரு பங்கும் சேர்த்துக் காய்ச்சி வண்டல் மெழுகுபதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப கற்கண்டு சேர்த்து காலை ஆகாரத்துக்கு முன்பும், இரவு படுக்கும்போதும் ஒரு தேக்கரண்டி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. மூலரோகம், கண் ரோகங்கள், உஷ்ண ரோகங்கள், இருமல் அனைத்தும் நிவர்த்தியாகும்.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner