Ads Header

Pages


15 April 2012

மலபார் ஊத்தப்பம் -- கிரில்டு சில்லி சிக்கன் சமையல் குறிப்புகள் !

கிரில்டு சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள் : சிக்கன் (போன்லெஸ்) _ 4 மெல்லிய துண்டுகள், பூண்டு பொடியாக நறுக்கியது _ 2 டீஸ்பூன், சோயா சாஸ், சில்லி சாஸ் _ தலா 2 ஸ்பூன், மிளகுத் தூள், எண்ணெய், உப்பு, வினிகர் _ தேவையான அளவு, சர்க்கரை ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்).

செய்முறை : சிக்கன் துண்டுகளை, சோயா, சில்லி சாஸ், மிளகுத் தூள், வினிகர் ஆகியவைகளில் குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தோசைக்கல்லில் (கனமானது) எண்ணெய் காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டு இரண்டு பக்கமும் மிதமான தீயில் வேக விட வேண்டும். வேகும்போது சிக்கன் துண்டுகளின் அடியில் தங்கியிருக்கும் சாஸை சிறிது சிறிதாக ஊற்றி வறுக்க. சுவையான சில்லி சிக்கன் ரெடி.
கஷ்மீரி வெஜிடபிள் ஜூகல்

தேவையான பொருட்கள் : காரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் (பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும், எல்லாம் சேர்த்து ஒரு கப்) வெங்காயம் _ பொடியாக நறுக்கியது, கசகசா, சோம்பு _ தலா ஒரு ஸ்பூன், தேங்காய் விழுது _ அரை மூடி, ஏலக்காய், பட்டை, கிராம்பு, முந்திரி _ வறுப்பதற்கு, பால் _ அரை கப். இஞ்சி, பூண்டு விழுது _ ஒரு ஸ்பூன், எண்ணெய், உப்பு _ தேவையான அளவு.

செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, கிராம்பு, முந்திரி போட்டு வறுத்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் விழுதில் பாதியைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி வேக வைத்த காய்கறிகளைச் சேர்க்கவும். பிறகு அதில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அத்துடன் மீதி தேங்காய் விழுதைச் சேர்த்து, பாலும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். சாதம், சப்பாத்தி, பிரட் என்று எல்லாவற்றுக்கும் பொருத்தமான சைட் டிஷ் இது!.

மல்டி வைட்டமின் சாலட்

தேவையான பொருட்கள் : நறுக்கிய வெள்ளரிக்காய், குடைமிளகாய் (பச்சை), காரட், முட்டைகோஸ், பைனாப்பிள், ஆப்பிள், கொய்யாப்பழம், பப்பாளி_தலா 2 டீஸ்பூன், லெமன் ஜூஸ், தேன், தக்காளி சாஸ், வெள்ளை மிளகுத்தூள் அல்லது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் _ சுவைக்கேற்ப.

செய்முறை : ஒரு பீங்கான் பாத்திரத்தில் காய்கறிகளையும், பழங்களையும், போட்டு அத்துடன் லெமன் ஜூஸ் சேர்த்து தேன், தக்காளி சாஸ், மிளகுத் தூள் அல்லது பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி, புதினா இலை மேலே தூவி சாப்பிடவும்.

ஹெல்தி மஷ்ரூம் டோஸ்ட்

தேவையான பொருட்கள்: கோதுமை பிரட் _ 4, நறுக்கிய காளான் _ அரை கப், இஞ்சி பொடியாக நறுக்கியது _ சிறிதளவு, மிளகுத் தூள் _ ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் _ 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம் பொடியாக நறுக்கியது _ 4 டீஸ்பூன், கொத்துமல்லி தழை _சிறிதளவு, உப்பு, எண்ணெய் _ தேவையான அளவு.

செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, காளானை வதக்கவும். பிறகு அத்துடன் தக்காளி சாஸை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையைக் கிளறி மிளகு பொடி, உப்பு, கொத்துமல்லி சேர்த்து 5 நிமிடம் கழித்து கீழே இறக்கவும். இதை 2 பிரட்டுகளுக்கு நடுவில் வைத்து தேவைப்பட்டால் வெண்ணெய் சேர்த்து) தோசைக் கல்லில் வதக்க 5 நிமிடத்தில் மஷ்ரூம் டோஸ்ட் ரெடி.

மலபார் ஊத்தப்பம்

தேவையான பொருட்கள் : ரெடிமேட் தோசைமாவு _ தேவையான அளவு, தேங்காய் துருவியது _ 2 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் _ லு டீஸ்பூன், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் _ தேவையான அளவு, வெங்காயம் பொடியாக நறுக்கியது _ 2 டீஸ்பூன்.

செய்முறை : தோசை மாவை ஊத்தப்பம் போல் கனமாக வார்த்து அதன் மேல் வெங்காயம், தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு சிறிது அழுத்தி தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக வேக விடவேண்டும்.

டி.வி. ஸ்நாக்ஸ்

தேவையான பொருட்கள் : பிரட் (சிறிய க்யூப்களாக கட் செய்து கொள்ளவும், இட்லி மிளகாய்ப் பொடி, நெய்_ தேவையான அளவு, கறிவேப்பிலை _ சிறிதளவு.

செய்முறை : வாணலியில் சிறிது சிறிதாக நெய் விட்டு அதில் பிரட் துண்டுகளைப் போட்டு டோஸ்ட் செய்யவும். பிறகு கறிவேப்பிலை போட்டு இட்லி மிளகாய்ப் பொடி தூவி, நன்றாகக் கலந்து பரிமாறவும்.

பவர் பிரேக்ஃபாஸ்ட்

தேவையான பொருட்கள்: பிரட் _ 6 துண்டுகள், முட்டை _ 4, காரட், மஷ்ரூம், குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) _ தலா 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு, கொத்துமல்லி _ தேவையான அளவு.
செய்முறை : முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கலக்கவும். காய்கறிகளை அரை வேக்காடு வேக வைக்கவும். இதை முட்டைக் கலவையுடன் கலந்து ஆம்லெட் செய்வது போல் செய்து பிரட்டில் வைத்தும் சாப்பிடலாம். தனியாகவும் சாப்பிடலாம்.

அயர்ன் ரிச் சாண்ட்விச்

தேவையான பொருட்கள் : பன், பீட்ரூட் (துருவியது) _ 1, வெண்ணெய், உப்பு _ தேவையான அளவு, வெள்ளரி ஸ்லைஸ் _ 8.

செய்முறை : இரண்டாக வெட்டி வெண்ணெய் தடவிய பன்னில் துருவிய பீட்ரூட்டை நடுவில் பரத்தி, அதன்மேல் உப்பு தூவி, அதன் மேல் வெள்ளரி ஸ்லைஸை வைத்து பன்னின் இன்னொரு பகுதியை மேலே மூடினால் அயர்ன் ரிச் சாண்ட்விச் ரெடி.

தாய் சிக்கன் ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள் : பொடியாக நறுக்கிய (சிக்கன், உதிரான சாதம், தாய் சில்லி சாஸ், ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்), குடைமிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது), எண்ணெய், உப்பு _ தேவையான அளவு.

செய்முறை : வாணலியில் எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு இஞ்சி, நறுக்கிய குடை மிளகாய், நறுக்கிய சிக்கன் போட்டு நன்றாக வதக்கி, தாய் சில்லி சாஸ் (2 ஸ்பூன்), உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது விட்டு பிரட்டவும். இதில் வடித்த சாதத்தைப் போட்டு உடையாமல் கிளறவும். தேவைப்பட்டால் மிளகுப் பொடி, ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner