Ads Header

Pages


30 April 2012

ஹெல்த் ஸ்பெஷல்! கர்ப்பிணிகள் கவனத்திற்கு...

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, கணவனிடமும், மனைவியிடமும் சிலர் மறைமுகமாக `'ஏதேனும் விசேஷம் உண்டா?'' என்று கேட்பார்கள். இந்தக் கேள்வி தம்பதிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒரு பிறவிப்பயன் மகிழ்ச்சியை அளிக்கும் என்றால் அது மிகையாகாது! கர்ப்பமாக இருந்தால் அந்த குடும்பமே அவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும். அந்தளவுக்கு கர்ப்பிணி பெண்ணை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். உடலளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை கர்ப்பிணிகள் சந்திக்க வேண்டியிருக்கும். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கர்ப்பிணிகள் என்ன செய்யவேண்டும். இதோ,

* கணவன், மனைவிக்குள் இருக்கும் உடல் தொடர்பான உறவை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பமாகிய தொடக்க நிலையில் அவசியம் தவிர்க்க வேண்டும். அதே போல், இதற்கு முன்னால் ஏற்பட்ட கர்ப்பத்தில் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

* கர்ப்பிணிகள் பெரும்பாலும் பிரயாணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் வெயிலோ அல்லது மழையோ அதிகமாக இருந்தால் உடல் தளரும். தொலைதூரப் பயணத்தை கண்டிப்பாக தவிர்க்கவும். இது சிசுவுக்கு நல்லதல்ல.

* கர்ப்பிணிகள் எப்போதும் டைட்டாக இருக்கும் ஆடைகளை அணிய வேண்டாம். நல்ல காற்றோட்டமாக இருக்கும் தளர்வான ஆடைகளை அணியுங்கள். வீட்டுக்குள்ளேயே நடந்து பழகுங்கள்.


* கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் உணவு, சுத்தமானதாகவும், சத்தான உணவாகவும் இருத்தல் அவசியம். அதிகமான உணவு, நொறுக்குத் தீனிகள் வேண்டாம்.

* பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம். அதாவது ஏற்கனவே மூலம் இருப்பவர்கள் இந்த மலச்சிக்கல் அதிக அவஸ்தையை கொடுக்கும். இவர்கள் திரவ உணவை சாப்பிடுவது நல்லது.

* பெற்றோர் செய்யும் தவறுகள் பிள்ளைகளையும் பாதிக்கும். கர்ப்பிணிகளுக்கு பால்வினை நோய் இருந்தால், அது கருச்சிதைவுகளையும், குறை மாதத்தில் பிரசவமும், சிசு கருப்பைக்குள் இறந்து விடும் அபாயம் உண்டு. அப்படியே சுகப் பிரசவத்தில் பிறந்தாலும், நோஞ்சானாய் பிறக்கும். பால்வினை நோய் இருப்பதாக தெரிந்தால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.

* கர்ப்பிணிகளுக்கு நீரழிவு நோய் தாக்கும் அபாயம் உண்டு. இதற்காக கர்ப்பிணிகள் கவலை கொள்ள வேண்டாம். பின்னர் அது மறைந்து விடும். இதை கர்ப்பகால நீரழிவு என்று கூறுவார்கள். கர்ப்பத்துக்கு முன்னரே நீரழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, கர்ப்பம் தரித்தவுடன் மேலும் அதிகமாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner