தெரியுமா தெரியுமா?
வேண்டாமே "டங்க் கிளீனர்'
பல் தேய்ப்பது சரிதானா என்று என்றாவது நீங்கள் யோசித்ததாவது உண்டா? காலை எழுந்தவுடன், பிரஷ் ஷில் பற்பசையை வைத்து, "சர்ர்... சர்ர்' என்று, "விட்டேனா பார்' என்பது போல, பற்களுடன் சண்டை போடுபவரா நீங்கள்?
பல் தேய்க்கும் போது , அழுத்தித் தேய்ப்பது சரியே அல்ல; அதிலும், சிலர், ரத்தம் வந்தால், சுத்தமாகி விட்டது என்று நினைத்துக் கொள்கின்றனர், அது மகா தவறான எண்ணம்.
* பிரஷ்ஷை முதலில் வெளிப்புற மேல் பற்களில் வைத்து தேயுங்கள். அப்புறம் கீழ்ப்பக்க வெளிப்புற பற்கள்.
* இது முடிந்ததா...? அடுத்து, உள் பக்க மேல்புற பற்கள், அடுத்து கீழ்ப்புற பற் களில் தேய்க்க வேண்டும்.
* உணவுகளை கடிக்கும் பற்களின் மேற் பரப்பை சுத்தம் செய்ய வேண்டும்.
* அழுக்கு சேர்ந்தால், வாய் நாற்றமடிக்கும். அதனால், நாக்கில் சேரும் படிமத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக "டங்க் கிளீனர்' பயன்படுத்தவே கூடாது.
* பற்களுடன் உள்ள ஈறுகள் தான் , ரத்த ஓட்டத்துக்கு முக்கியம். அதை கடைசியாக இதமாக மசாஜ் செய்ய வேண்டும்.
சுற்றி சுற்றி பிரஷ்ஷை தேய்ப்பதுடன், மேலிருந்து கீழ் தேய்த்து, உள் , வெளிப்புற பற்களில் உள்ள துகள்களை நீக்கலாம்.
கண்ட கண்ட ஐஸ் கிரீமா?
குழந்தைகளுக்கு பிடித் ததே ஐஸ் கிரீம் தான். அதிலும், நல்ல சத்துக்கள் இல்லாமல் இல்லை. ஆனால், கண்ட கண்ட ஐஸ்கிரீம் வாங்கி தந்தால், அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு தான் பிரச்னை.
அதெப்படி கண்டுபிடிப் பது? கடையை பார்த்தாலே, பிராண்டை பார்த்தாலே தெரியும். அப்படியில்லாவிட்டால், குழந்தைக்கு தொண்டை கட்டி விட்டது தெரிந்தாலே, கலப்பட ஐஸ்கிரீம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
போதுமான சுகாதார பாதுகாப்புடன் இல்லாத ஐஸ்கிரீம் என்றால், தொண்டை காட்டிக் கொடுத்துவிடும். வயிற்று பிரச்னை வரும். சிறுநீர் கோளாறு வரும். மற்ற உணவுகளை விட, ஐஸ்கிரீமில் தான் உயிருள்ள பாக்டீரியாக்கள், அப்படியே உடலுக்குள் போய்விடும். அது பிஞ்சு உடலில் போக அனுமதிக்கலாமா?
உடல் குண்டாக இருக்கணுமா?
நீங்கள் இளம் வயது தானா? உடல் பருமனா? அப்படியானால், சிறிய சிறிய உடற் பயிற்சிகள் இதோ:
* தூக்கம் வராமல் படுக்கையில் சும்மாவாவது படுக்காதீர்கள்.
* எதற்கெடுத்தாலும் உட்காருவது, சாய்ந்து கொள்வதை தவிருங்கள்.
* நின்றபடி செய்யும் வேலையை உட் கார்ந்து செய்யாதீர்கள்.
* நடந்தபடியே சிறிய வேலையை செய்ய முடியும் என்றால், அதற்காக நிற்காதீர்கள்.
* வேகமாக நடக்க முடியும் என்றால், மிதமா நடக்காதீர்கள்.
* சாப்பிட்ட காபி டம்ளரை நீங்களே, சமையல் அறையில் கொண்டு போய் வையுங்கள்.
* உங்கள் சிறிய வேலைகளையும் கவுரவம் பார்க்காமல் செய்யுங்கள்.
* மார்க்கெட் போகவும் கார், ஸ்கூட்டர் பயணம் வேண்டாம்.
* ஆபீசில் "சீட்'டில் உட்கார்ந்து விட்டால், எழாமல் இருக்காதீர்கள்.
* மாடிப்படியில் ஏற முடியும் என்றால், "லிப்ட்' பயன்படுத்தாதீர்கள்.
* தண்ணீர் வேண்டுமானால், வயதான தாயிடம் "ஆர்டர்' செய்யாதீர்கள்.
* ஸ்கூட்டரை துடைப்பது, தோட்டவேலை செய்யுங்கள்.
* மனைவியின் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்படி எல்லாம் செய்தால், அப்புறம் எதற்கு தனி உடற்பயிற்சி? இதிலேயே உடல் பருமன் குறைந்துவிடுமே!
முப்பதிலாவது விழிச்சிக்குங்க
சிறிய வயதிலேயே, டீன்ஏஜில் குண்டாக இருந்தால், அதற்கு உடற்பயிற்சி, யோகா போன்றவை பலன் தரும். ஆனால், "டீன்ஏஜில்' கண்டபடி சாப்பிட்டு உடல் பருமன் போட்டு விட்டால், அப்போதாவது விழித்துக் கொள்வது நல்லது.
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
* நீங்கள் முப்பது வயதை தாண்டியவரா?
* உடல் பருமன் அதிகமாக இருப்பதாக உணர்கிறீர்களா?
* குடும்பத்தில் சர்க்கரை வியாதி யாருக் காவது இருந்ததா?
* சாட், பாஸ்ட் புட் சாப்பிடும் வழக்கம் உள்ளவரா?
* ரத்த அழுத்தம் சற்று அதிகம் தானா?
இவை தான் அறிகுறி, உடனே டாக்டரிடம் செக்கப் செய்து கொண்டால் போதும், சர்க்கரை நோய் வருமா என்பது தெரிந்துவிடும். இல்லை என்று தெரிந்ததும், மீண்டும், சாட் அயிட்டங்களில் மூழ்கி விடாதீர்கள், உஷார்.
அப்புறம், நாற்பதில் அவதிப்படப் போவது நீங்கள் தான். அப்போது, எதையுமே சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். உங்கள் குஷி எல்லாம் பறந்துவிடும். அதனால், இருபதில் இருந்தே, வாயை கட்டுங்கள், முடிந்தவரை!

0 comments:
Post a Comment