செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். அதில் பச்சைமிளகாய், பெருங்காயத்தூள், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பிசையவும். மாவு கலவையை எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டுப் பொரிக்கவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
கோதுமை பக்கோடா: மாவு கலவையுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
_____________________________________________________________________________________
செய்முறை: ஊற வைத்த பயத்தம்பருப்பு, நறுக்கிய தக்காளி, தேங்காய் துருவல், நெல்லிக்காய், பச்சைமிளகாய், சீரகம்.. எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். கடைந்த தயிரில் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, உப்பு, மஞ்சள்தூள், உளுந்துப்பொடி, வெந்தயப்பொடி சேர்த்துக் கிளறி சூடுபடுத்தவும்.
சிறிது நுரை வந்ததும் இறக்கி, வறுத்த சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கடுகு தாளித்துக் கொட்டவும். விரும்பினால் வேக வைத்த காய்கறிகளையும் சேர்க்கலாம்.
பயத்தம்பருப்பு தயிர்க்குழம்பு: சுண்டைக்காயுடன் மோர்மிளகாயையும் தாளித்து சேர்க்கலாம். சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.
____________________________________________________________________________________
செய்முறை: கொள்ளு மாவு, பொட்டுக்-கடலை மாவு, மைதா மாவு, எள்ளுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை சப்பாத்திமாவு போல் கொஞ்சம் தடிமனாக இட்டு, டைமன் வடிவத்தில் வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உப்புக்கு பதிலாக அரை கப் சர்க்கரை சேர்த்து இனிப்பு பிஸ்கெட்டும் செய்யலாம்.
கொள்ளு பிஸ்கெட்: கொள்ளுடன் முந்திரி, பாதாமை பொடித்து சேர்த்துச் செய்தால் கரகரப்பாக இருக்கும்.
0 comments:
Post a Comment