ஜில் ஜில் ஃபலூதா
இதை சமைக்க வேண்டாம்! அப்படியே கலந்து சாப்பிடலாம்.
தேவை :
சேமியா - 1 கப்
பீட்ரூட் துருவல் - 1/4 கப்
கேரட் துருவல் - 1/4 கப்
வெள்ளரி துருவல் - 1/4 கப்
வெல்லக் கரைசல் - 1 மேஜைக்கரண்டி
ஐஸ்கிரீம் அல்லது மில்க்மெயிட் - 1 குழிக்கரண்டி
ஏலப்பொடி - 1 சிட்டிகை
திராட்சை -10 (அலங்கரிக்க)
செய்முறை :
கெட்டியான சேமியாவை ஒரு கப் நீரிலே வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும் வெல்லத்தை சுத்தப்படுத்தி, கெட்டியான கரைசலாக தயாரித்து வைக்கவும்.
பீட்ரூட், கேரட், வெள்ளரி ஆகியவற்றை நீளவாக்கில் துருவி வைக்கவும்.
ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் அடியில் முதலில் ஒரு தேக்கரண்டி அளவு சேமியாவை இடவும். இதன் மீது ஒரு தேக்கரண்டி மில்க் மெயிட் அல்லது ஐஸ்கிரீமை இட்டு, அதன் மீது அரை தேக்கரண்டி கேரட் துருவல், அரை தேக்கரண்டி வெள்ளரி துருவல், அரைத் தேக்கரண்டி பீட்ரூட் இட்டு மீண்டும் இதே போல் டம்ளரை நிரப்பி வரவும்.
கடைசியில் சற்று அதிகமாக ஐஸ்கிரீமை இட்டு அதன் மீது திராட்சைகளால் அலங்கரிக்கவும். காய்கறி சாப்பிட மாட்டேன் என்று அடம் செய்யும் குழந்தைகள் கூட அள்ளித்தின்றுவிடும்.
மருத்துவக் குறிப்பு : பீட்ரூட் ரத்த விருத்திக்கு நல்லது, கேரட் கண் பார்வைக்கு நல்லது, வெள்ளரி குளிர்ச்சியை அளிக்கும்.
நார்சத்து நிரம்பியது.
எப்படிப்பட்ட களைப்பையும் விரட்டி அடிக்கும் இந்த ஜில் ஜில் பலூதா.

0 comments:
Post a Comment