அதிக எடை பல்வேறு நோய்களை உடம்பில் கொண்டுவந்துவிடுகிறது.. எடையை குறைக்க என்ன செய்யலாம் என்று தவிப்பவர்களுக்கு இதோ சில டிப்ஸ்கள்:
* எந்த உணவின் மீது அதிகம் ஆசை கொள்கிறீர்களோ, எதை அதிகம் சாப்பிடுகிறீர்களோ, அதை முதலில் படிப்படியாக குறைத்து விடுங்கள்.
* கொழுப்பு அதிகம் கொண்ட உணவு வகைகளை குறைத்து விடுங்கள். அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால், சட்டென்று உங்கள் உடல் எடையையும் நினைத்துக் கொள்ளுங்கள். போகப்போக நீங்களே குறைத்து விடுவீர்கள்.
* நீங்கள் அருந்தும் பால் கொழுப்பு நீக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
* பசிக்கும்போதெல்லாம் நொறுக்குத்தீனிகளை தின்பதற்கு பதிலாக, பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை கொண்டு செய்த சாலட்டை சாப்பிடுங்கள். அவ்வாறு சாப்பிட்டு முடித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான குடிநீரை குடியுங்கள். இப்படி செய்து வந்தால், உங்கள் எடை தானாக குறைய ஆரம்பித்து விடும். அதேநேரம், சமச்சீரான சக்தி உடலுக்கு கிடைக்கும்.
* விருந்து வைபவங்களுக்கு சென்றால், மூக்கு முட்ட தின்னாதீர்கள். அளவோடு மட்டும் சாப்பிடுங்கள்.
* சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளுக்கு குட்-பை சொல்லிவிட்டு, அதற்கு பதிலாக மீன், முட்டையை மட்டும் வெறும் ஆசைக்காக அளவோடு உட்கொள்ளுங்கள்.
* அதிகாலை வேளையில் மிதமான சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், இரண்டே மாதங்களில் உங்கள் உடல் இளைத்துவிடும். உடலில் உள்ள எக்ஸ்ட்ரா கொழுப்பை கரைத்துவிடும் சக்தி தேனுக்கு உண்டு.
* இஞ்சியை சாறு பிழிந்து, தேன்விட்டு சூடு செய்து ஆற வைத்துவிடுங்கள். காலை உணவுக்கு முன் அதில் ஒரு கரண்டியும், அதேபோல் மாலை ஒரு கரண்டியும் எடுத்து உட்கொண்டு, அதன்பின் சிறிது வெந்நீர் அருந்தி வர, 40 நாட்களில் உங்கள் பெரிய வயிறு வற்றிப்போய் இருக்கும்.
* வாழைத்தண்டுச்சாறு, பூசணிச்சாறு, அருகம்புல்சாறு - இவற்றில் ஏதாவது ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர உடல் பருமன் குறையும். அதேநேரம், உடல் பொலிவு பெறும்.
* முருங்கைப்பூவை பசும்பாலில் இட்டு காய்ச்சி, தொடர்ந்து 41 நாட்கள் குடித்துவர உடலுக்கு கட்டுக்கோப்பான வடிவம் கிடைக்கும்.
***

0 comments:
Post a Comment