Ads Header

Pages


24 April 2012

எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா?

எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா?
முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:-
புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.
கண்ணில் கருவளையம் மறைய...
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
முகத்தை பாதுகாக்கும் முறை:-
ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
உதடு உலர்ந்து விட்டதா?
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெநதயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.
கழுத்தில் உள்ள கருவளையம் மறைய:-
சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்.
இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல:-
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி ய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
காது அழகை பராமரிப்பது எப்படி?
பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்... காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.
ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.
உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியது.
சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner