Ads Header

Pages


15 April 2012

வாழைப் பழம் நாம் ஏன் தினமும் சாப்பிட வேண்டும்?

வாழைப்பழம்தானே...' அலட்சியம் வேண்டாம்!

அன்றாட வேலைகளுக்கு பின் சோர்வை நீக்கு கிறது...ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது... மூளைக்கு சக்தி தருகிறது...! இப்படி சொல்லிக் கொண்டே போகின்றனர் அந்த சின்ன பழத்தைப் பற்றி! அது, வாழைப் பழம் தான்!

நாம் ஏன் தினமும் வாழைப் பழம் சாப்பிட வேண்டும்? இதோ, நிபுணர்கள் ஆய்வு செய்து சொல்கின்றனர், படியுங்கள்:

வாழைப் பழத்தில் இல் லாத சத்துக்களே இல்லை. இதில் மூன்று வித சர்க் கரைகள் உள்ளன. அதா வது, "ப்ரக் டோஸ், க்ளூக் கோஸ், சக்ரோஸ்' ஆகி யவை. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அபூர்வமானது. உடலுக்கு இந்த சத்துக்கள் அவசிய தேவை.

நார்ச்சத்து, புரதச் சத்து உணவுகள் மனிதர்களுக்கு மிக முக் கியம். அவற்றை இந்த வாழைப் பழம் தருகிறது. வைட்ட மின்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் ஆகிய சத்துக்களும் இருப் பதால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே கிடைக்கிறது. இனி எந்தெந்த நோய் வரா மல் காக்கிறது என்று பார்ப்போமா?

ஸ்ட்ரோக்ஸ்: பக்க வாதங்கள் வராமல் தடுக்க ்து அதிகம். அதனால், ரத்த அழுத் தத்தை அறவே தடுத்து விடும்.

சோர்வு நீக்குதல்: கடும் வேலையிலும் சோர்வு வராமல் நீக்குவது வாழைப் பழம் தான். சாப்பிட்ட பின் சுறு சுறுப்பு தானாக வந்து விடும். அதன் பின், மீண்டும் சில மணி நேரம் வேலை செய்யலாம். வாழைப்பழத்தில் உள்ள, "ட்ரைப் டோபன், செரடோனின்' ஆகிய ரசாயன சத்துக்கள் தான் இதற்கு காரணம்.

ரத்த சர்க்கரை: வாழைப்பழத் தில், "வைட்டமின் பி6' உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது இதுதான்.

நெஞ்சு எரிச்சல்: வாழைப் பழத்தில், "ஆன்டாசிட்' ரசாயனம் உள்ளதால், உணவு சாப்பிட்ட பின் சிலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது.

மூளை சக்தி: காலை சிற்றுண்டியிலேயே ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது, மூளைக்கு சுறு சுறுப்பை தரும். அதனால், மதிய உணவு, மாலை வேளை நொறுக்குத் தீனி, இரவு சாப்பாடு ஆகிய வற்றுடன் வாழைப்பழம் சாப் பிட்டால், மூளை சுறு சுறுப்புக்கு கேட்கவா வேண்டும்.

மலச்சிக்கல்: வாழைப் பழத் தில் மிகுந்த நார்ச் சத்து உள்ளது. மலச் சிக்கல் வரா மல் தடுத்து விடுவது வாழைப்பழம் தான்.

ரத்தசோகை: வாழைப்பழத்தில், இரும்புச்சத்து உள் ளது. ரத்தத்தில் ஹீமோக் ளோபின் சத்து இல்லாததால் தான் ரத்த சோகை ஏற்படுகிறது. ரத்த சோகை உள்ள வர்கள், வாழைப்பழம் சாப் பிட்டு வந்தால், ரத்த சோகை போயே போச்சு.

வயிற்றுப்புண்: பல பழங் களில், அமிலச் சத்து இருக்கிறது. அதனால், வயிற்றுப் புண் (அல்சர்) உள்ளவர்கள் சாப்பிட கூடாது. ஆனால், வாழைப் பழத்தில் அமிலச் சத்து இல்லவே இல்லை. அத னால், தாராளமாக சாப்பிடலாம். வயிற்றில் வாழைப் பழம் போனதும், வயிற் றில் உள்ள அமிலச் சத்தை குறைக் கிறது. அதனால், "அல்சர்' உள்ள வர்களுக்கு கை கொடுக்கிறது வாழைப்பழம்.

தெரிஞ்சுக்குங்க...!
* வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக வெட்டி, ஜுஸாக்கி, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக் கல், சிறுநீர் பாதையில் கிருமித் தொற்று ஆகி யவை நீங்கும். உடலில் தேங்கியிருக்கும் கெட்டநீர் சிறுநீர் மூலம் வெளியேறும். சிறுநீர் பிரிவது எளிதாகும்.

***

* உடம்பில் கை, கால் எரிச்சல் அல்லது கண் எரிச்சல் அல் லது உடலில் எரிச்சல் என்று இருந்தால் கவலை வெண்டாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிடுங்கள். சிறிது நேரத்தில் குணமாகும். தீராத வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு கனிந்த வாழைப் பழத்தை சாப்பிட்டால் குணமாகும்.

***

* உடலில் சிலருக்கு சிலந்தி போன்ற கட்டிகள் ஏற்படும். இந்த கட்டிகள் மீது வாழைப்பழத்தை நன்றாகக் குழைத்து பூசி வந்தால் கட்டிகள் சீக்கிரமே பழுத்து சீழ் வெளியாகி குணமாகும். கரப்பான் நோய்க்கு வாழைப்பழத் தோலை நெருப்பினில் எரித்து சாம்பலாக்கி, அதை கடுகு எண்ணை கலந்து கரப்பான் மீது பூசினால் குணமாகும்.

***

* மூலம் மற்றும் பவுத்திரம் ஆகிய சிக்கல்களால் சிக்கித் தவிப்போர், நன்றாக பழுத்த வாழைப் பழத்தை பாலில் போட்டு வேகவைத்து, மசித்து, காலை, மாலை சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். திராட்சை சாறு, தேன், வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் கட்டுப்படும்.

***

* வாழை பிஞ்சுகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, காலை, மாலை சாப்பிட்டு வந்தால் குடல்புண், இரைப்பை புண் மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகிய பிரச்சினைகள் நீங் கும். அதேபோல், வாழைப்பழத்தை தேனில் ஊறவைத்து, அதனுடன் 2 பேரீச்சம் பழத்தை சேர்த்து, பாலுடன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் ஆறிவிடும்.

***

* ரொம்பவும் கனியாத வாழைப் பழத்தை எடுத்து, அதனுடன் ஒரு சிட்டிகை ஏல அரிசித் தூளை தொட்டுச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அதேபோல், வாழைப் பழத்துடன் சிறிது உப்பும், புளியும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி மற்றும் ரத்தபேதி நீங்கும்.

***

* மாதவிடாய் நிற்கும் காலங்களில், கருப்பை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் போது, கருச்சிதைவு, கரு கலைதல் ஆகிய பிரச்சினைகளால் அவஸ்தைப் படும் பெண் கள், வாழைப்பூவின் மேலே உள்ள முதிர்ந்த இலைகளை நீக்கிவிட்டு, மொட்டு போல் இருக்கும் பகுதியை ஜுஸாக்கி கற்கண்டு சேர்த்து, காலையிலும், மாலையிலும் சாப் பிடுவது மிகவும் நல்லது.

***

* கனிந்தும் கனியாமல் அரை குறையாக இருக்கும் வாழைப் பழத்தை பாலில் வேக வைத்து கூழ் போல் ஆக்கி, அதனுடன் பாதாம் பருப்பு, பேரீச்சம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி போடவும். இவற்றுடன் தேனும் கலந்து வைத்துக் கொள்ளவும். இதை தினமும் காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, கை, கால் நடுக்கம் ஆகியவை நீங்கும். மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.

***

* சில குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருக்கும். குடல் புழுக்களை ஒழிக்க எலுமிச்சம் பழ சாறுடன், வாழைப் பழம், பப்பாளி பழம் ஆகியவற்றை சேர்த்து கலவை யாக்கி கொள்ளவும். அத்துடன் ஆரஞ்சுத் தோல், மாதுளம் பழத்தோல் இவற்றை கலந்து பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் புழுக்கள் நீங்கி குடல் சுத்தமாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner