Ads Header

Pages


22 April 2012

உடல் நல குறிப்புக்கள்!


உடல் பெருக்கக் காரணம்

நமது உடலுக்கு ஆரோக்கியம் வந்தால் அழகும் தானாகவே வந்துவிடும். நொறுக்குத் தீனிகள் அடிக்கடி சாப்பிட்டால் உடம்பு பெருத்து விடும். கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

அடிக்கடி நீர் குடித்தால்...

ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் பருகவேண்டும். இதனால் உடல் வறண்டு போகாமல் இருக்கும். அதேபோல் மாதத்திற்கு ஒருநாள் வெறும் திரவ உணவை உட்கொண்டால் உடல் உறுப்புகள் வலிமை பெறும். காலை உணவைக் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

சைவமா... அசைவமா?

சைவ உணவு சாப்பிடுவோரை விட அசைவ உணவு சாப்பிடுவோரே குண்டாகி வருகின்றனர். ஏனென்றால் அசைவ உணவில் கொழுப்புச் சத்துகள் அதிகமாக உள்ளன. ஆனால் அசைவ உணவில் உடலுக்குத் தேவையான புரதசத்தும், ஊட்டச் சத்தும் கிடைக்கிறது.


எத்தனை கலோரி தேவை?

ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 1200 கலோரிகள் தேவைப் படுகிறது. அதற்கு மேல் நாம் சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் உடம்பிலேயே தங்கிவிடுவதால் நாளடைவில் பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்குகின்றன.

வைட்டமின் சி குறைந்தால்...

முட்டைக்கோஸ், ஆரஞ்சு, கேரட், கீரை, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் குறைந்தால் உடல் எலும்புகள் பலவீனமாகும். பற்களில் பிரச்சினைகள் ஏற்படும்.

உதடுகள் வெடித்தால்...

கல்லீரல், கோழி, மீன், பால், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி2 அதிகமாக உள்ளது. இது உடலில் குறைந்தால் உதடுகள் வெடிக்க ஆரம்பித்து விடும்.

ஆரோக்கியத்துக்கு அவசியம்!

வெண்ணை, பால், பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, எலுமிச்சை, இறைச்சி, வாழைப்பழம், அன்னாசிபழம் போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.

சாப்பிடும்போது இடையே...

உணவு சாப்பிடும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு அதிகமாக நீர் அருந்தினால் உணவு ஜீரணம் ஆகாது. அதுபோல் உடலுக்குத் தேவைப்படும் தாதுக்கள், வைட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்ளாது.


தூங்கி எழுந்தவுடன்...

தூங்கி எழுந்தவுடன் விடியற்காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் நீர் குடிப்பது உடல் ஆரோக்கியம் பெறும். இதனால் மலச்சிக்கலும் ஏற்படாது. மேலும் சிறுநீர் கற்களும் ஏற்படாது.

நீர் குடிக்காவிட்டால்...

உடற்பயிற்சி செய்பவர்கள் வேர்வையாக வெளியிட்ட நீரை ஈடுகட்ட தாராளமாக நீர் அருந்துவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்புண்டு! அதேபோல், தக்காளி, பால், உப்பு போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

வேப்பிலையின் நன்மை!

வேப்பிலைக் கொழுந்து கசக்காது! இதில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. வேப்பிலைக் கொழுந்தை சுத்தம் செய்து துவையல் அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். விஷக் கிருமிகளைக் கொல்லும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner