Ads Header

Pages


17 April 2012

வீட்டுக்குறிப்புக்கள் சில! டிப்ஸ்...

உங்கள் வீட்டில் வெள்ளை அடித்தாலோ அல்லது பெயிண்ட் அடித்தாலோ ஒரு வாரத்துக்கு அந்த வாசம் போகாது. அந்த அறைகளில் நறுக்கிய வெங்காய துண்டுகளை போட்டு வையுங்கள். பெரும்பாலும் அறைகளின் கதவை மூடி வைத்திருந்தால் ஒரே நாளில் பெயிண்ட் வாசம் இட்ஸ் கான்!

காலையில் அரக்கப் பறக்க வேலைக்கு செல்பவர்கள், இரவு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பாத்திரங்கள் முழுவதையும் தேய்த்து சுத்தப் படுத்தி விடவும். இல்லாவிட்டால் காலையில் பாத்திரம் தேய்ப்பது ஒரு இமாலய வேலையாகத் தெரியும்.

முட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால்... அதன் மேல் உப்பு போடவும். சிறிது நேரத்துக்குப் பின்னர் துடைத்துவிட்டால் சுத்தம் செய்வது எளிது. வாடையும் இருக்காது.

நான்வெஜ் அயிட்டங்களை மைக்ரோ வேவ் ஓவ னில் வைத்து எடுத்த பிறகும், வாசனை போகாது. வாஷிங் லோஷன் இல்லாவிட்டால் பவுடர் போன்றவற்றை ஓவனில் கொஞ்சநேரம் வைத்து எடுங்கள். உணவின் வாசனை போயே போச்...!

விளக்கெண்ணை, கடலை எண்ணை, இலுப்பை எண்ணை ஆகிய மூன்றையும் கலந்து விளக்கு ஏற்றினால், நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணையும் குறையாது. ஆடைகளில் எண்ணைக் கறை பட்டு விட்டால் கவலை வேண்டாம். அதன் மீது சிறிது ஆல்கஹாலை தேய்த்துவிட்டு அப்புறம் துவைத்தால் கறை போய்விடும்.

வாஷிங் மெஷினில் துணியை போடும்போதோ அல்லது அழுக்கு துணிகளை வாளியில் உள்ள சோப்பு நீரில் ஊற வைக்கும்போதோ அதனுடன் சிறிதளவு ஷாம்பு சேர்த்தால் துவைக்கும் துணிகள் காய்ந்த பிறகும் கமகம வாசனையாக இருக்கும்.

சமையலறை மேடை மீதும், கப்போர்டுகள் மீதும் அடிக்கடி அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறையாவது நன்றாக துடைத்தால் தான் சுத்தமாக இருக்கும். இதற்கு எளிய வழி உண்டு. சமையலறை மேடை மற்றும் கப்போர்டுகள் மீது பாலிதீன் பேப்பர்களை ஒட்டி வைத்து வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.

தினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் வெந்நீர் வைக்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். குக்கரையே காஸ்கட் போடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தால் சீக்கிரமே சூடாகி விடும். அதேபோல், இளஞ்சூடான நீரில் துணிகளை துவைத்தால் எளிதில் அழுக்கு போய்விடும்.

உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறதா? அப்படி என்றால் ஒரு சின்ன ஐடியா... உங்களுடைய செல்லத்தை டிவி அறையில் உட்கார வையுங்கள். அல்லது அதன் அருகில் ரேடியோவை பாட விடுங்கள். யாரோ பேசுவதாக நினைத்து கொஞ்ச நேரம் குரைத்து விட்டு அமைதியாகி விடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner