Ads Header

Pages

12 May 2013

'மலிவு விலையில் மாரடைப்புக்கு மருந்து!

'லிவு விலையில் மாரடைப்புக்கு மருந்து!

லக அளவில், மனித உயிர் குடிக்கும் அபாயகரமான நோய்களில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது 'மாரடைப்பு!’ -இது பழைய செய்தி என்றாலும், 'இந்தியாவில், மாரடைப்பைத் தடுக்கும் மலிவு விலை மருந்துகளை ஏழைகள்கூட வாங்குவது இல்லை!’ என்ற பேரதிர்ச்சி செய்தியை வாசிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று! இந்தியாவில், யாரும் மாரடைப்புக்கு மருந்து சாப்பிடுவது இல்லையா? அல்லது மலிவு விலை மருந்து கிடைப்பதே மருத்துவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்தாலும் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கவில்லையா? என பல கேள்விகளைக் கிளப்பியிருக்கிறது இந்த ஆய்வு.
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு விகிதம் அதிகம். எனவே, 'ஒருவருக்கு நீரிழிவு இருப்பது உறுதியானால், அவருக்கு மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்கான சிகிச்சையையும் சேர்த்தே அளிக்க வேண்டும்’ என்கிறது அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன்! இதுகுறித்து 'நீரிழிவு மருத்துவ நிபுணர்’ டாக்டர் கருணாநிதியிடம் பேசினோம். ''இந்த ஆய்வின் முடிவு நூற்றுக்கு நூறு சரி! ஆனால், நம்மூரைப் பொறுத்தவரை எந்த நோய் வந்தாலும் முதலில், கை மருந்து, அடுத்ததாக மெடிக்கல் ஷாப் என 'தனக்கு தானே மருத்துவம்’ செய்துகொள்கிறார்கள். முடியாத பட்சத்தில்தான் சிறப்பு மருத்துவர்களை அணுகுகிறார்கள். இதுபோல், நோய் முற்றிய நிலையில் வருபவர்களுக்கு ஆரம்பக் கட்ட சிகிச்சைகள் பலனளிக்காது. அறுவை சிகிச்சை மாதிரியான உச்சகட்ட சிகிச்சை முறைகளைத்தான் செய்தாக வேண்டும். மருத்துவ விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால், ஆரம்பக்கட்டத்திலேயே விலை குறைந்த மருந்து களால், மாரடைப்பை சரி செய்துவிட முடியும்!'' என்று நம்பிக்கை ஊட்டியவர் தொடர்ந்து, ''பெரும்பாலும் மரபு ரீதியாகவே இந்தியர்களின் ஜீன்களில் கடத்தப்படும் இந்நோய்க்கு அதிகம் பலியாவது ஆண்கள்தான். பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனானது மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், நீரிழிவு பாதிப்பு உள்ள பெண்களுக்கும், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டிய (ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு தடைபட்டு விடுவதால்) பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கு நிகராகவே இருக்கிறது.
ஒரு குடும்பத் தலைவருக்கு மாரடைப்பு வந்தால், பின்னாளில் வாரிசுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாற்பது வயதில், குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக வழி நடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் குடும்பத் தலைவரை இந்நோய் தாக்கும்போது மனதாலும், மருத்துவச் செலவுகளாலும் ஒட்டுமொத்தக் குடும்பமே நிலைகுலைந்து போய்விடுகிறது. மாரடைப்பை சரிசெய்யக்கூடிய அறுவை சிகிச்சை செலவுகள் சாதாரண மருத்துவமனைகளிலேயே லட்சங்களில்தான் ஆரம்பிக்கிறது. எனவே, இந்நோய் பாதிப்பு உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களது முப்பது வயதில் இருந்தே வருடத்துக்கு ஒருமுறை கட்டாயமாக 'கொலஸ்ட்ரால் டெஸ்ட்’ (fasting lipid profile) எடுத்துக் கொள்ளவேண்டும். இதில், 'எல்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவுக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது 'ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவு குறைவாக இருந்தாலோ உடனடியாக சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

ரத்தக் கொதிப்பு, நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், உடற்பயிற்சியே செய்யாதவர்கள், அதிக உடல் எடையுடன் கொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்குத் தொடர்ச்சியான உடற்பயிற்சியும், டயட் இருப்பதுமே சிறந்த வழி. பெரும் பான்மையானவர்களால் இதனை சரிவரப் பின்பற்ற முடியவில்லை. அதனால்தான் 'STATIN’ என்ற மருந்தைக் கண்டுபிடித்தார்கள். கொழுப்பைக் குறைக்கக்கூடிய இந்த மருந்து பல ரகங்களில், மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனாலும், டாக்டரின் ஆலோசனையின்படி, நல்ல தரமான நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்துவது பக்க விளைவுகளைக் குறைப்பதோடு, நல்ல பலனையும் கொடுக்கும்.

இந்த 'STATIN’ வகை மருந்துகளைத் தவறாமல் சாப்பிட ஆரம்பித்தால் மாரடைப்பு வராமலே தடுக்கமுடியும். மாரடைப்பு வந்தபிறகும்கூட இதே மருந்தின் அளவை அதிகமாகப் பயன்படுத்தும்பொழுது, கொழுப்பின் அளவு நாற்பதில் இருந்து ஐம்பது சதவிகிதம் வரை குறைந்துவிடுவதால், மாரடைப்பு அபாயமும் முற்றிலும் நீங்கிவிடுகிறது.

'க்ரீன் அண்ட் க்ரெய்ன்’ எனப்படும் பச்சைக் காய்கறிகள், பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை மற்றும் பயிறு வகைகள், மோர்.... போன்ற உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றவை. தினமும் அரை மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க நடைப்பயிற்சி செய்யலாம்; அல்லது உடலுக்கும், மனதுக்கும் தெம்பூட்டக் கூடிய நீச்சல் பயிற்சி செய்யலாம்.

மாடிப்படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, எந்திர உதவி இல்லாமல் நாமே வீட்டு வேலைகளை செய்துவருவதும் கொழுப்பைக் குறைக்க உதவும் நல்ல உடற்பயிற்சிகள்'' என்றார் விளக்கமாக.

டாக்டர் சொன்னதையெல்லாம் அப்படியே ஃபாலோ பண்ணுங்க. ஹார்ட் அட்டாக்குக்கு குட்பை சொல்லுங்க!
Read more

08 May 2013

தொண்டையில் "கிச்சு கிச்சு' தொந்தரவா...

தொண்டையில் "கிச்சு கிச்சு' தொந்தரவா...

இரண்டு தேக்கரண்டி மிளகை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு மேஜைக் கரண்டி நெய்யில் நன்கு பொரித்து,
நாக்கு பொறுக்கும் சூட்டில், நேராக தொண்டைக் குழியில் ஊற்றி,
10 வினாடி கொப்பளித்து, மிளகை கடித்து தின்னவும்.
Read more

மூட்டு வலியை விரட்ட...

மூட்டு வலியை விரட்ட.

மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம்நாத்.

எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் நம் உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.
சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம். மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும். தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம். சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்னை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும்.
பாதுகாப்பு முறை
விபத்து, திடீர் அசைவு, அதிக இயக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தசை வலிகளை சில நடைமுறைகளால் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நீட்டி மடக்க வேண்டும். சூடான ஒத்தடம் கொடுப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். புரதங்கள் எலும்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும். கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் எலும்புக்கு வலு சேர்ப்பதால் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் விளையாடும் போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கூட மூட்டு வலி ஏற்படலாம். முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் குதித்தோடும் விளையாட்டுகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு எலும்பின் இறுதிப் பகுதியில் எலும்பு வளரும் நுனி உள்ளது. இந்த வளரும் நுனி பாதிக்கப்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும்.
பெரியவர்கள் வேலை செய்யும் போது ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் வயதாவதால் ஏற்படும் தசை தேய்மானத்தை தடுக்கலாம். தசையை வலுவாக்கும் பயிற்சிகள் இதற்கு உதவும். முழங்கால் மூட்டு உடலின் எடையை தாங்குவதால் அதிக எடை வலியை ஏற்படுத்தும். இதை தவிர்க்க முறையான எடைக்குறைப்பு வழிகளை மேற்கொள்ளலாம். உணவில் உப்பின் அளவை குறைக்கவும். நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இடையில் நடப்பதும், கால்களை நீட்டி மடக்குவதும் நல்லது. மூட்டு பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி செயல்படுவது பாதுகாப்பானது என்கிறார் எலும்பு மருத்துவ சிகிச்சை நிபுணர் பிரேம்நாத்.
பாட்டி வைத்தியம்
1) அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.
2) அவுரி இலையை, விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி குணமாகும்.
3) உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து தடவினால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குணமாகும்.
4) ஊமத்தை இலை, அரிசி மாவு இரண்டையும் சம அளவில் எடுத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க வைத்து பற்றுப் போட்டால் வீக்கம் குணமாகும்.
5) கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குணமாகும்.
6) கடுகு 30 கிராம், கோதுமை 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம். மூன்றையும் அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பூசினால் வலி குணமாகும்.
7) கடுகு கீரையை அரைத்து, நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலமாக காய்ச்சி கை, கால்களில் பூசிக் கொண்டால் மூட்டு பிரச்னை தீரும்.
8) கருவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் உணவுக்கு பிறகு ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
9) குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வலி குணமாகும்.
ராகி புட்டு:
ராகிமாவுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் கலந்து ஆவியில் வேக வைக்கவும். தேங்காய் துருவல், பாதாம், முந்திரி ஆகியவற்றை வெந்த ராகி மாவின் மேல் தூவவும். நெய்யில் உலர்ந்த திராட்சையை வறுத்து போடவும். இத்துடன் வெல்லப் பாகு தயாரித்து கலந்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கிடைக்கும்.
இறால் பக்கோடா:
200 கிராம் இறாலை சுத்தமாகக் கழுவி, அதனுடன் சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து ஊற வைக்கவும். பாசிப்பருப்பு மாவு 1/2 கப், கடலை மாவு 1/2 கப், அரிசி மாவு 1/2 கப் ஆகியவற்றைக் கலக்கவும். இந்த கலவையுடன் சோம்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, இஞ்சி பூண்டில் ஊறிய இறால் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து பக்கோடா பதத்தில் பிசையவும். இதை எண்ணெயில் பொறித்து சாப்பிடலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள் கிடைக்கும்.
சோயா சப்பாத்தி:
சோயா 100 கிராம் எடுத்து வெந்நீரில் கழுவி பிழிந்து அரைக்கவும். கோதுமை மாவு ஒரு கப், மைதா ஒரு கப் மாவை சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். அரைத்த சோயா, நறுக்கிய பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை சப்பாத்தியின் மேல் பேஸ்ட் போல தடவவும். இப்படியே தோசைக்கல்லில் சப்பாத்தி போல இரண்டு பக்கமும் வேகவைத்தால் போதும். இது கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்தது.
டயட்:
எலும்பின் வலிமைக்கு அவசியமாக இருப்பது கால்சியம், பாஸ்பரஸ். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் தேவையான அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இல்லாதபோது மூட்டுத் தேய்மானப் பிரச்னை தோன்றும்.பெண்களை பொருத்தவரை மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தம் வெளியேறுவதால் மூட்டுப் பிரச்னைகள் வரலாம். மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது. வயது மூப்பின் காரணமாக 50 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூட்டுப் பிரச்னை இருக்கும். வயது அதிகம் ஆகும்போது உடலில் ரத்த உற்பத்தி குறைகிறது. இதனால் எலும்புகள் சத்துக் குறைபாட்டின் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறது. சிறு வயதினர் தினமும் சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு 450 மில்லி கிராம் கால்சியம் கிடைக்க வேண்டும். டீன் ஏஜ் பருவத்தில் 550 மில்லிகிராம் கால்சியம் அவசியம்.
சிறு வயதினருக்கு 800 மில்லிகிராம் பாஸ்பரஸ் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு 1200 மில்லிகிராம் பாஸ்பரஸ் அவசியம். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சத்துகள் இந்த அளவுக்கு இல்லாவிட்டால் 30 வயதுக்கு மேல் மூட்டுத் தேய்மானப் பிரச்னைக்கு ஆளாக நேரிடும். ராகி, இறால், மீன், சோயாபீன்ஸ், அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பால், பாலாடைக் கட்டி, வெல்லம், சிவப்பு பீன்ஸ், பாசிப்பருப்பு, கேரட், பாதாம், முந்திரி ஆகியவற்றில் இருந்து அதிகளவு கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது என்கிறார் உணவு ஆலோசகர்.
Read more

பிரண்டை - மருத்துவக் குணங்கள்

பிரண்டை

மருத்துவக் குணங்கள்:

பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும். காரத்தன்மையும், எரிப்புக் குணமும் கொண்டது.
-------------------------------------------------------------------------------------
இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.
-----------------------------------------------------------------------------------------
பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.
குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.
------------------------------------------------------------------------------------------
வாய்ப்புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.
-------------------------------------------------------------------------------------------
தீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 – 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும். நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வேளை கொடுக்க குணமாகும்.
----------------------------------------------------------------------------
300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.
-------------------------------------------------------------------------------------
பிரண்டை உப்பை 2 – 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.
இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.
---------------------------------------------------------------------------------------
மூன்று வேளை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.
பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.
-------------------------------------------------------------------------------------------
பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.
----------------------------------------------------------------------------------------
நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.
------------------------------------------------------------------------------------------
பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.
---------------------------------------------------------------------------------
பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.
---------------------------------------------------------------------------------
பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.
------------------------------------------------------------------------------------
முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.
-------------------------------------------------------------------------------------
பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.
---------------------------------------------------------------------------------------
மருத்துவ மூலிகை

இலைகளும்,இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு
முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா,
ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட
உதவுகிறது.

மெலிந்த உடல் குண்டாக

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள்
பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு
வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
வயிற்றுப் பொருமலால்அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும்.மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.


பிரண்டை துவையல்

எலும்புசந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால்
தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால்
அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி
பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச்
செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன்
சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப்
பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி,
கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------------
மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத்துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
மூலநோயால்அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

ரத்த ஓட்டம் சீராகும்

உடலில்
கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில்
கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால்
இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய
வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

------------------------------------------------------------------------------------------------------------
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.
Read more

பொடுகு சுத்தமாக நீங்கி விடும்

லசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ, 50 கிராம் வாங்கி, அதை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ மூன்று வாரங்கள் குளித்தால், பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
Read more

ரு‌சியான ஆ‌ம்லெ‌ட் தயா‌ரி‌க்க...

ரு‌சியான ஆ‌ம்லெ‌ட் தயா‌ரி‌க்க...

ஆம்லெட் தயாரிக்கும்போது அதனுடன் சிறிதளவு பால் மற்றும் உளுத்தம் மாவு சேர்த்தால் ஆம்லெட் மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

கோதுமை மாவை அரைக்கும்போது சோயாபீன்ஸை அதனுடன் சேர்த்தால் சப்பாத்தி ருசியாக இருப்பதுடன் ஊட்டச் சத்தும் அதிகரிக்கும்.

பாகற்காய், பப்பாளி போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தால் மஞ்சளாக மாறிவிடும் இதை தடுக்க அதனை பெரிய துண்டங்களாக நறுக்கி வைக்கலாம்.

ஊறுகாய்களை பாட்டில்களில் அடைக்கும் முன் பாட்டிலில் சிறிதளவு வினீகரை விட்டு நன்றாக குலுக்கினால் பாட்டிலின் உட்சுவர்களில் படியும் வினீகர் ஊறுகாய்களில் பூஞ்சக் காளான் பூப்பதைத் தடுக்கலாம்.

முள்ளங்கி வைத்த பரோட்டா தயாரிக்கும்போது, நறுக்கிய முள்ளங்கியை வறுத்து பிறகு உப்பை சேர்த்தால் முள்ளங்கியில் உள்ள நீர் வற்றாமல் பரோட்டாவை சுருட்ட சுலபமாக இருக்கும்.

பால்கோவா தயாரிக்கும்போது மெலிதான துணியில் 2 ஸ்பூன்கள் கோதுமைமாவை இட்டு இறுகக் கட்டி கொதிக்கும் பாலினுள் வைத்தால், பால்கோவா கிரீம் நிறத்தில் தயாராகும்.

காலிஃப்ளவர் சமைக்கும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால் வெண்மையாக இருக்கும்.

வெஜிடபிள் சூப் ருசியாக இருக்க காய்கறிகளை சிறிதளவு வெண்ணையுடன் சேர்த்து வறுக்கலாம்.

பூரிகள் மொறுமொறுப்பாகவும் பெரிதாகவும் வர மாவுடன் சிறிதளவு ரவாவையும் சக்கரையையும் சேர்க்கவும்.
Read more

05 May 2013

மல‌ச்‌சி‌க்கலு‌க்கு மாமரு‌ந்து

ல‌ச்‌சி‌க்கலு‌க்கு மாமரு‌ந்து
ந‌ம் நா‌ட்டி‌ல் வளரு‌ம் பல தாவர‌ங்க‌‌ள் மருத‌்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டு‌ள்ளன. அ‌தி‌ல் இலைக‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல் மலர்களையும் பழங்களையும் பயன்படுத்திப் பல மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கியாகவு‌ம் உ‌ள்ளது. கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது.

ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்கவு‌ம் ரோஜா பய‌ன்படு‌கிறது.

யுனானி மரு‌த்தவ‌த்‌தி‌ல் குல்கந்து என்று சொல்லப்படும் மருந்து ரோஜா, பேரீச்சம் பழம் ஆகியவற்றிலிருந்து தயாரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மலச்சிக்கலுக்குக் குல்கந்து ஒரு சிறந்த மருந்து. குடல் சம்பந்தமான வியாதிகளை இது குணப்படுத்துகிறது.
Read more

உட‌ல் இளை‌க்க....

ட‌ல் இளை‌க்க கை வை‌த்‌திய‌ம்
food

சில‌‌ர் ‌நிறைய நொறு‌க்கு‌த் ‌தீ‌ணி சா‌ப்‌பி‌ட்டு, ச‌ரியான அளவு வேலை செ‌ய்யாம‌ல் உட‌ல் பெரு‌த்து‌க் காண‌ப்படுவா‌ர்க‌ள்.

ஒரு ‌சில‌ரு‌க்கு சுர‌ப்‌பிக‌ளி‌ன் ‌பிர‌ச்‌சினையா‌ல் உட‌ல் பெரு‌த்து‌க் காண‌ப்படு‌ம். இ‌வ‌ர்க‌ள் உ‌ரிய ‌சி‌‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல் உட‌ல் பெரு‌க்க‌த்தை‌க் குறை‌க்கலா‌ம்.

முத‌லி‌ல் சொ‌ன்னது போ‌ல், உட‌ல் உழை‌ப்பு இ‌ல்லாம‌ல், உணவு‌ப் பழ‌க்க‌த்‌தி‌ன் மூல‌ம் உட‌ல் எடை அ‌திகமாக இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளு‌க்கு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படு‌ம்.

குண்டாக இருப்பவர்கள் இலந்தை மர இலையைக் கொண்டு வந்து ந‌ன்கு கழு‌வி அரைத்து ‌சிறு ‌சிறு உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வைத்துக் கொள்ளுங்கள்.

இதில் தினசரி ஒரு உரு‌ண்டையை‌ப் போ‌ட்டு ஒரு டம்ளர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி‌க் குடித்து வாருங்கள், ஊளைச்சதை குறையும்.
Read more

தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம்

தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம்
வாகை மர‌த்‌தி‌ன் பல‌ன்க‌ள் பல உ‌ள்ளன. அதனை‌க் கொ‌ண்டு செ‌ய்யு‌ம் கை வை‌த்‌திய‌ங்க‌ள் ப‌ற்‌றி அ‌றியலா‌ம்.

வாகை இலையை அரை‌த்து க‌ண் இமைக‌ளி‌ன் ‌மீது வை‌த்து க‌ட்டி வர, க‌ண் ‌சி‌வ‌ப்பு, க‌ண் எ‌ரி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

வாகை‌ப் ப‌ட்டையை பொடி செ‌ய்து அரை ‌கிரா‌ம் முத‌ல் ஒரு ‌கிரா‌ம் அளவு வரை வெ‌‌ண்ணெ‌யி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர உ‌ள்மூல‌ம், ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம்.

வாகை மர‌ப்ப‌ட்டையை தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் கல‌ந்து கொடு‌‌த்து வர பெரு‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

வாகை மர‌த்‌தி‌ன் ‌விதை‌யி‌ல் இரு‌ந்து பெ‌ற‌ப்படு‌கி‌ன்ற எ‌ண்ணெ‌ய், கு‌ஷ‌்ட நோ‌‌ய் பு‌ண்களை குணமா‌க்கு‌ம் த‌ன்மை கொ‌ண்டது.

அடிப‌ட்ட காய‌த்‌தி‌ன் ‌மீது வாகை மர‌ப்ப‌ட்டையை பொடி‌த்து தூவ ‌விரை‌வி‌ல் காய‌ம் ஆறு‌ம்.
Read more

க‌ட்டிக‌ளு‌க்கு எ‌ளிதான கை வை‌த்‌திய‌ம்

க‌ட்டிக‌ளு‌க்கு எ‌ளிதான கை வை‌த்‌திய‌ம்
சில குழ‌ந்தைகளு‌க்கு அடி‌க்கடி க‌ட்டிக‌ள் வ‌ந்து தொ‌ல்லை கொடு‌க்கு‌ம். இத‌ற்கு எ‌ளிதான கை வை‌த்‌திய‌ம் உ‌‌ள்ளது.

வாகை ‌விதையை பொடி செ‌ய்து பா‌லி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர நெ‌றி‌க்க‌ட்டிக‌ள் ம‌ற்று‌ம் நெ‌றி‌க்க‌ட்டிகளா‌ல் ஏ‌ற்படு‌ம் கா‌ய்‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

வாகை மர ‌விதையை ‌நீ‌ரி‌ல் உரை‌த்து பூ‌சி வர, க‌ண் க‌ட்டிக‌ள் கரையு‌ம். இதனையு‌ம் நெ‌றி‌க்க‌ட்டிக‌ள் ‌மீது‌ம் பூசலா‌ம். ‌‌விரை‌வி‌ல் ந‌ல்ல குண‌ம் பெறலா‌ம்.

வாகை‌ப் பூ‌வினை அரை‌த்து‌ப் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர, க‌ட்டிக‌ள், தடி‌ப்பு, ‌வீ‌க்க‌ம் போ‌ன்றவை குணமாகு‌ம்.

மேலு‌ம், க‌ட்டிக‌ள் ‌மீது ம‌ஞ்ச‌ள் வை‌த்து ப‌ற்று‌ப் போ‌ட்டு வர ‌விரை‌வி‌ல் க‌ட்டிக‌ள் உடையு‌ம்.

க‌ண் இமைக‌ளி‌ல் க‌ட்டிக‌ள் வ‌ந்தா‌ல், கை ‌விரலை ஒ‌ன்றோடு ஒ‌ன்று தே‌ய்‌த்து அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் சூ‌ட்டை உடனடியாக ‌க‌ண் இமைக‌ள் ‌மீது வை‌க்க ‌விரை‌வி‌ல் க‌ட்டி உடையு‌ம்.
Read more

ப‌ல், ஈறு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினை‌க்கு...

ப‌ல், ஈறு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினை‌க்கு
teeth

பலரு‌க்கு‌ம், ப‌ல் ம‌ற்று‌ம் ஈறு‌ப் பகு‌திக‌ளி‌ல் ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம். பொதுவாக ஒ‌வ்வொருவரு‌ம் பய‌ன்படு‌த்து‌ம் ப‌ற்பசையே வா‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ளு‌க்கு‌க் காரண‌ம். ப‌ற்பசை ம‌ற்று‌ம் உ‌ண்ணு‌ம் உண‌வி‌ல் செ‌ய்யு‌ம் மா‌ற்ற‌ங்கா‌ல் பெருமளவு ‌பிர‌ச்‌சினையை‌த் ‌தீ‌ர்‌க்கலா‌ம்.

வாகை மர‌ப்ப‌ட்டையை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து பா‌லி‌ல் கல‌ந்து குடி‌த்து வர, ப‌சியை உ‌ண்டா‌க்கு‌ம். வா‌ய்‌ப்பு‌ண் குணமாகு‌ம்.

வாகை வே‌ர்‌ப் ப‌ட்டையை பொடி செ‌ய்து, அதை‌க் கொ‌ண்டு ப‌ல் துல‌க்‌கி வர, ப‌ல் ஈறு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட நோ‌ய்க‌ள் குணமாகு‌ம். ப‌ல் உறு‌தியாகு‌ம்.

வாகை வே‌ர்‌ப் ப‌ட்டையை ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி வெதுவெது‌ப்பாக இரு‌க்கும‌் போது அதனை‌க் கொ‌ண்டு வா‌ய்‌க் கொ‌ப்ப‌ளி‌த்து வர, வா‌ய்‌ப்பு‌ண், ப‌ல் ஈறு உறு‌தியாகு‌ம்.

வாகை‌ப் ‌பி‌சினை பொடி செ‌ய்து பா‌ல் அ‌ல்லது வெ‌‌ண்ணெ‌யி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர, அ‌ல்ச‌ர் என‌ப்படு‌ம் குட‌ல் பு‌ண்ணை‌க் குண‌ப்படு‌த்து‌ம், குட‌ல் பு‌‌ண் குணமானா‌ல் வா‌யி‌ல் பு‌ண் வருவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.
Read more

பா‌ட்டி சொ‌ன்ன ‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்

பா‌ட்டி சொ‌ன்ன ‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்
வெ‌ற்‌றிலையை‌ப் ‌பி‌ழி‌ந்து சாறு எடு‌த்து தே‌ன் கல‌ந்து அரு‌ந்‌தி வர ‌தீராத இரும‌ல் குணமாகு‌ம்.

அ‌திகாலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் வே‌ப்ப‌ங்‌கொழு‌ந்தை ‌தி‌ன்று வர வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மிக‌ள் ஒ‌ழி‌யு‌ம்.

இர‌ண்டு கர‌ண்டி க‌றிவே‌ப்‌பிலை சா‌ற்றை ஒரு ட‌ம்ள‌ர் மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்தா‌ல் அ‌ஜீரண‌ம் ‌நீ‌ங்கு‌‌ம்.

ப‌ப்பா‌ளி‌‌த் பழ‌த் து‌ண்டை ப‌ல் வ‌லி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் அட‌க்‌கி வை‌க்க ப‌ல் வ‌லி ‌தீரு‌ம்.

ப‌ல் சொ‌த்தையான இட‌த்‌தில‌் ‌கிரா‌ம்பை நசு‌க்‌கி வை‌த்து, வா‌யி‌ல் வரு‌ம் உ‌மி‌ழ்‌நீரை வெ‌ளியே‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ப‌ல் சொ‌த்தை காணாம‌ல் போகு‌ம்.

வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் ‌சீரக‌த்தை வறு‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த ‌சீரக கஷாய‌‌த்தை‌க் கொடு‌க்க உடனடியாக வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்
Read more

உட‌ல் நலனு‌க்கு ஏ‌ற்றது நில‌க்கடலை

ட‌ல் நலனு‌க்கு ஏ‌ற்றது
இருதய‌ம் பல‌‌வீனமாக இரு‌ப்பவ‌ர்க‌ள் முளைக‌ட்டிய ப‌ச்சை‌ப் பரு‌ப்பை சா‌ப்‌பி‌டுவது ந‌ல்லது.

முழு ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். முடி ‌நீ‌ண்டு வளரு‌ம். குட‌ல், க‌ல்‌லீர‌ல் முத‌லிய உறு‌ப்புகளு‌‌க்கு வலுவை‌த் தரு‌ம்.

உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌ப் பெரு‌க்கை ‌நிறு‌த்தவு‌ம், மூ‌க்‌கி‌ல் ர‌த்த‌ம் வருவது, மாத‌வில‌க்‌கி‌ன் போது ஏ‌ற்படு‌ம் அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப் போ‌க்கு ஆ‌கியவ‌ற்றை ‌நிறு‌த்த ‌நில‌க்கடலை உதவு‌ம்.

ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் ‌தினமு‌ம் ஒரு கை‌ப்‌பிடி ‌நில‌க்கடலை சா‌ப்‌பி‌ட்டா‌ல், ச‌த்து குறை‌ந்து உட‌ல் மெ‌லிவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். உடலு‌க்கு வ‌லிமை தரு‌ம், தசையை வள‌ர்‌க்கு‌ம்.

உட‌ல் வ‌லிமை பெற, மூ‌க்கடலை என‌ப்படு‌ம் கொ‌ண்டை‌க்கடலையை முத‌ல் நா‌ள் இர‌வி‌ல் ஊற வை‌த்து அடு‌த்த நா‌ள் த‌ண்‌ணீரை வடிக‌‌ட்டி ப‌ச்சையாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.
Read more

01 May 2013

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

ட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக் கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
Read more

சுளு‌க்கு ‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு வை‌த்‌திய‌ம்

சுளு‌க்கு ‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு வை‌த்‌திய‌ம்
திடீரெ‌ன்று சுளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு, அதனா‌ல் ‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌பிர‌ண்டை ‌நி‌ச்சயமாக உதவு‌ம்.

பிர‌ண்டையை இடி‌த்து, சாறெடு‌த்து, அதனுட‌ன் ‌சி‌றிது பு‌ளியு‌ம், உ‌ப்பு‌ம் சே‌ர்‌த்து குழ‌ம்பு பதமாக கா‌ய்‌ச்‌சி, பொறு‌க்க‌க் கூடிய சூ‌ட்டி‌ல் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர இர‌ண்டொரு நா‌ட்க‌ளி‌ல் குணமாகு‌ம்.

சு‌ளு‌க்கு ம‌ற்றும அடி ப‌ட்ட ‌வீ‌க்க‌ம் குணமாக, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவரலா‌ம்.

பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக‌ம் உதவு‌ம். எனவே, கா‌ல்‌சிய‌‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌பிர‌ண்டையை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

பிர‌ண்டை துவைய‌ல், ‌பிர‌ண்டை வ‌ற்ற‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.
Read more

சில கை வை‌த்‌திய முறைக‌ள்.

சில கை வை‌த்‌திய முறைக‌ள்
திருமணமா‌கி இ‌ன்னு‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்களு‌க்கு ஒரு இய‌ற்கை வர‌ப்‌பிரசாதமாகு‌ம் தே‌ன்.
குழ‌ந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் கரு‌ப்பை ‌பிர‌ச்‌சினைக‌ள் ‌நீ‌ங்‌கி ‌விரை‌வி‌ல் குழந்தை பிறக்கும்.

காது அடை‌த்தது போ‌ல் இரு‌க்‌ந்து, எ‌ப்போது‌ம் அ‌தி‌ல் ஒரு சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கு‌ம். இ‌ப்படி இரு‌ப்பவ‌ர்க‌ள், நா‌‌ட்டு மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதை ஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். கா‌தி‌ல் இரு‌க்கு‌ம் அடை‌ப்புக‌ள் ‌நீ‌ங்கு காது சு‌த்தமாகு‌ம்.காது அடை‌ப்பு‌ம் ‌நீ‌ங்கு‌ம்.

எ‌‌ப்போது‌ம் தா‌ளி‌க்கு‌ம் போது கடுகு, ‌‌சீரக‌ம், க‌றிவே‌ப்‌பிலை‌ப் போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம். இவை மூ‌ன்று‌ம் ‌ஜீரண‌த்‌தி‌ற்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.

வாழைத்தண்டு, சிறுநீர்க் கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் கழிக்கச் சிரமப்படுகிறவர்கள் வாழைத் தண்டுக் கறி சமைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.
Read more

குல்கந்தின் பயன்கள்

குல்கந்தின் பயன்கள்
சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).
தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து.

முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.
Read more

உங்கள் கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

கோப்புறைகளுக்கு கடவுச்சொல் கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுக்க வேண்டுமா?
உங்கள் கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
அதற்கு இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தும் நிரல்களும் உள்ளன.
1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன்(user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால், அதன் File System என்.டி.எப்.எஸ்(NTFS) ஆக இருக்கும்.
2. இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ, அதன் மீது Right Click செய்திடவும். பின் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Alt அழுத்தியவாறே Double Click செய்திடவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில் நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.
5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.
6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும். இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த கோப்புறையை யாரும் திறக்க முடியாது.
இரண்டாவதாக ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில்(menu) File தேர்ந்தெடுத்து, பின் Add a Password என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல் பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்
Read more

சித்த மருத்துவக் குறிப்புகள் - இய‌ற்கை வைத்தியம்

 சித்த மருத்துவக் குறிப்புகள் 
 
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
——————————————————————————–
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
——————————————————————————–
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
——————————————————————————–
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
——————————————————————————–
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
——————————————————————————–
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
——————————————————————————–
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
——————————————————————————–
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
——————————————————————————–
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
——————————————————————————–
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
——————————————————————————–
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
——————————————————————————–
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
——————————————————————————–
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
——————————————————————————–
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
——————————————————————————–
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
——————————————————————————–
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
——————————————————————————–
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
——————————————————————————–
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
——————————————————————————–
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
——————————————————————————–
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்


ஆண்மைக் குறைவு நீங்க : தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் முழுவதும் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க : அடிக்கடி மாம்பழத்தைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்
.
கருவுற்றிருக்கும் தாய்ய்ய்ய்மார்களுக்கு : கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர, பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

மலச்சிக்கல் தீர : மலச்சிக்கலில் சிரமப்படுவோர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் சரியாகும்.

பற்களும் ஈறுகளும் உறுதியடைய : நெல்லிக்கனியைப் பற்களிளால் நன்றாக மென்று தின்று வர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.

இரத்த கொதிப்பு குணமாக :
இரத்த கொதிப்பு நோய் கொண்டவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வர, இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்.
Read more

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!

டல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:
* தினமும் ஏதாவது ஒரு பழ ஜுஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜுஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
Read more

முகம் அழகு பெற...

னிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது முகம் தான். உடலிலும், உள்ளத்திலும் குறை ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம்.
இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களின் பகட்டு விளம்பரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.இந்த முக அழகு பொருட்கள் உடலுக்கு தீங்குகளை விளைவிக்கக் கூடியவை. இவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் நாம் பணத்தையும் அழகையும் இழப்பதுதான் மிச்சம்.
ஆனால் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.
சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும். ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும்.

வறண்ட சருமத்திற்கு:
வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.

முகம் பொலிவு பெற:தேன் – 1 ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு – 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்

இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.

எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு:இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான். எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும்.
இதற்கு நிரந்தரத் தீர்வு

தேன் – 1 ஸ்பூன், முட்டை வெள்ளை கரு.
இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும். எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும்.

மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கங்கள் மாறும்.
Read more

தலையில் பொடுகா? கவலையை விடுங்கள்...

பொடுகு வராம‌ல் தடு‌க்க ம‌ற்றவ‌ர் பய‌ன்படு‌த்‌திய ‌சீ‌ப்பை பய‌ன்படு‌த்துவதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்.
* வாரம் இருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையை தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
* நெய், பால், வெண்ணெய் முத‌லிய உணவுகளை ‌சி‌றிது உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
* இந்தக் கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசை கிடைக்கிறது. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடியைக் காப்பாற்றலாம்

பொடுகை அழிக்க

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.
*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.
*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.
* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.
*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.
*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.
*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.
*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.
*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner