Ads Header

Pages


26 April 2012

தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'

அப்படியே சாப்பிடலாம்

மனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான சில `டிப்ஸ்' இங்கே...

`தேனகம்': இரண்டு குவளை ஆரஞ்சு அல்லது எலுமிச்சைச் சாறுடன் 8 குவளை தண்ணீரும், உங்க ருசிக்கேற்ப தேனும் சேருங்கள். ஐஸ் கட்டிகள் சேர்த்து `ஜில்'லென்று பருகுங்கள்.

தேன்- அன்னாசிப்பழ ரசம்: நசுக்கிய அன்னாசிப் பழத்தை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன், அரைக் குவளை தேன், அரைக் குவளை எலுமிச்சைச் சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேருங்கள். சுவையான, ஆரோக்கியம் தரும் `சாலட்' தயார்.

`சக்தி' பானம்: இயற்கை `யோகர்ட்' 150 மி.லி.யுடன், அதே அளவு ஆரஞ்சுச் சாறு, 30 மி.லி. தேன் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்குங்கள். நுரை பொங்க கண்ணாடிக் குவளையில் ஊற்றிப் பரிமாறுங்கள்.

சூடான பானத்தில்...: காபி, டீ போன்றவை பருகும்போது `கலோரி'களை குறைக்க விரும்புகிறீர்களா? சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளுங்கம். சர்க்கரையை விட தேன் இனிப்பானது என்பதால் கொஞ்சம் சேர்த்தாலே போதுமானது.

`தேன் வாழைக்கனி': வாழைப்பழத்தைத் தோலை உரித்துவிட்டு துண்டு துண்டாக்குங்கள். அவற்றின் மீது தேனை ஊற்றுங்கள். சுவையான பழ உணவு ரெடி!

தேன் `பேசியல்': நன்றாக அரைக்கப்பட்ட பாதாம் பருப்பு ஒரு மேஜைக்கரண்டி, உலர் ஓட்ஸ் 2 மேஜைக் கரண்டியுடன், ஒரு மேஜைக் கரண்டி தேன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையைக் கொண்டு உங்கள் முகத்தில் மென்மையாக `மசாஜ்' செய்யுங்கள். முகமெங்கும் சீராகத் தடவி உலர விடுங்கள். வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். முகம் இப்போ `பளிச்'!

சாப்பிடலாம்... முகத்தில் பூசலாம்...: ஒரு வெம்ளரியைச் சாறாக்கி, அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேருங்கள். அதை முகத்தில் பூசி, உலர்ந்ததும் முகத்தைக் கழுவுங்கள். முகம் பொலிவு பெறக் காணுங்கள். இந்தச் சாறை ஒரு வாரம் வரை `பிரிட்ஜில்' வைத்திருந்து பயன்படுத்தலாம்; பருகலாம்.

குளியலுக்கு...: உங்கள் தேகம் தகதகவென்று மின்ன வேண்டுமா? நீங்கம் குளிக்கும் வெந்நீரில் கால் குவளை தேன் கலந்து குளியுங்கள். குறிப்பாக உலர்ந்த சருமக்காரர்களுக்கு இக்குளியல் மிகவும் ஏற்றது. எகிப்து பேரழகி கிளியோபாட்ரா பயன்படுத்திய அழகுக் குறிப்புங்க இது!

முகத்தின் ஈரப்பதம் காக்க...: குளிர்காலத்துக்கு ஏற்ற குறிப்பு இது. 2 மேஜைக்கரண்டி தேன்,
2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து, முகத்தில் சீராகப் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள்.

கரும்புள்ளிகள் மறைய...: வெந்நீரையும், உப்பையும் சேர்த்து, அதை பஞ்சால் தொட்டு முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்துங்கள். பின்னர் அதன் மீது தேனில் நனைத்த பஞ்சை வைத்துத் தடவுங்கள். சிறிதுநேரம் கழித்துக் கழுவி, உலர விடுங்கள்.

தொண்டை இதமாக...: தொண்டை வலியா? அதற்கான அறிகுறìயா? எலுமிச்சைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகுங்கள்.

கேசம் பளபளக்கும்: தலைமுடிக்கு ஷாம்பூ தேய்த்துக் குளித்தபிறகு, ஒரு தேக்கரண்டி தேன், புத்தம் புதிய எலுமிச்சைச் சாறு, 4 குவளை வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கேசத்தை நனையுங்கள். அப்படியே உலர விடுங்கள். கேசம் நரைத்துவிடுள் என்று பயப்படாதீர்கம். பளபளக்கும்.

`கொழுப்பை'க் கட்டுப்படுத்தும்: தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவìல் படுக்கப் போகும் முன்பும் ஒரு குவளை வெந்நீரில் தேன், கிராம்புப் பொடி சேர்த்துப் பருகுங்கள். உங்கம் உடம்பில் தேவையற்ற கொழுப்புச் சேர விடாது இது.

தலைமுடியின் வறட்சியைப் போக்கலாம்: தேனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து உங்கள் தலைமுடியின் நுனிகளில் தடவுங்கள். பின்னர், வெந்நீரில் நனைத்த துணியால் 20 நிமிடங்கள் தலைமுடியைச் சுற்றி வையுங்கள். பின்னர் வழக்கம்போல் ஷாம்பூ போட்டோ, போடாமலோ குளியுங்கள். தலைமுடியின் வறட்சியைப் போக்கவும், நுனிகளில் சுருண்டுகொள்வதையும் தடுக்கவும் இந்த உத்தி உதவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner