Ads Header

Pages


19 April 2012

கம்பெனி தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்


நீங்கள் ஒரு பிஸினஸ் செய்கிறீர்கள் என்றால், பொதுவாக அந்த நிறுவனத்தை கம்பெனி என்றுதான் சொல்லுவோம். ஆனால், பிஸினஸை தனி நபர் வியாபாரம், கூட்டு வியாபாரம் மற்றும் கம்பெனி என்று மூன்று விதமாக பிரிக்கலாம். இதில் கம்பெனி என்று ஆரம்பிக்கும்போது நாம் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம்.

கம்பெனி தொடங்குவதற்கு, ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸில்தான் விண்ணப்பிக்க வேண்டும். இப்பொழுது எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டதால், ஆன்லைனிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். முதலில் ரூ.500/_ கட்ட வேண்டும் (கிரெடிட் கார்டில் கட்டிக் கொள்ளலாம்.) கம்பெனிக்கான ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பெயர்கள், நாம் செய்யும் பிஸினஸ§க்குத் தொடர்புடையதாக இருப்பது அவசியம். உதாரணமாக சாஃப்ட்வேர் பிஸினஸ் என்றால் கம்ப்யூட்டர் தொடர்பாகத்தான் இருக்க வேண்டும். அத்துடன் ஃபார்ம் 1கி படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதில் கம்பெனி ஆரம்பிக்கும் (பப்ளிக் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் ஏழு பேர். பிரைவேட் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் இரண்டு பேர்) இரண்டு பேரின் பெயர், முகவரியோடு கொடுக்க வேண்டும். அத்துடன் நாம் ஆரம்பிக்கப்போகும் மெயின் பிஸினஸ் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பெயர்கள், நாம் செய்யப் போகும் பிஸினஸ§க்கு எப்படி தொடர்புடையது என்பதையும் நியாயப்படுத்த வேண்டும்.

நாம் போடப் போகும் முதலீடு (பிரைவேட் லிமிடேட் கம்பெனி என்றால் ரூபாய் ஒரு லட்சம் இருக்க வேண்டும்) எவ்வளவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலே சொன்னவற்றையெல்லாம் முடித்து, விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டால், பத்து நாட்களுக்குள் அப்ரூவல் வந்துவிடும். அப்ரூவல் வந்த பிறகு, மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன்’ (மெயின் பிஸினஸ் மற்றும் அதன் தொடர்புடைய பிஸினஸ் பற்றிய விவரங்கள்), ‘ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் (கம்பெனி இயங்கும் விதம், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் போன்றவை) ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸ் அலுவலகத்தில் கொடுத்து உரிய கட்டணத்தைக் கட்டி ஒப்புதல் வாங்க வேண்டும். செய்யும் முதலீடுக்குத் தகுந்தாற்போல் இந்தக் கட்டணம் மாறுபடும்.

கம்பெனி தொடங்குவதற்கு முன் கீழ்க்கண்ட ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்:

மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன் மற்றும் ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் இரண்டையும், டைரக்டர்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டு, அவர்களுடைய பெயர், முழு முகவரி, தற்போது செய்து வரும் வேலை போன்றவற்றைக் குறிப்பிட்டு கொடுக்க வேண்டும்.

ஃபார்ம் _1ஐ ரூ.20/_ மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் (பத்திரங்கள் பதிவு செய்யும் முத்திரைத்தாள்), தேவைப்பட்ட விவரங்களைக் கொடுத்திருப்பதாக உறுதி அளித்துக் கொடுக்க வேண்டும். ஃபார்ம் _18ல் கம்பெனியின் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் பற்றி குறிப்பிட்டு கம்பெனியின் ஒரு டைரக்டர் கையெழுத்துப் போட்டு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஃபார்ம்_32ல் டைரக்டர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தை, அவர்களின் கையெழுத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும்.

கம்பெனியின் பெயர் அங்கீகரிக்கப்பட்ட கடிதம்.

மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷனில் பெயர் குறிப்பிட்ட அனைவரும் கையெழுத்துப் போட்டு டைரக்டர்களில் யாராவது ஒருவருக்கு, ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட, பொது அதிகாரப் பத்திரம் கொடுக்க வேண்டும்.

இவையெல்லாம் கொடுத்த பிறகு, ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பனிஸ்’ அலுவலகத்திலிருந்து ஒருநாளைக் குறிப்பிட்டு, அந்த ஆவணங்களைச் சரி பார்க்க அழைப்பார்கள். எல்லாம் சரியாக இருந்தால் ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ கிடைத்துவிடும். அது வந்தவுடன் நமது பிஸினஸைத் தொடங்கிவிடலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner