Ads Header

Pages

09 December 2012

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து
சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா
நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம்
அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம்
வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும்,

சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம்
உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில்
உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி,
வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று
அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது
ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.
பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில்
சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி
காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல்
தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து
கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
Read more

09 November 2012

மகிழ்ச்சியான ரகசியங்கள்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் ட்ரீட் வைத்துக் கொள்ளுங்கள்.

* ட்ரீட் என்றால், பெரிய ஹோட்டலுக்குச் சென்று காஸ்ட்லி உணவுகளைச் சாப்பிடுவது என்று அர்த்தமில்லை... ஐஸ்க்ரீம், வெங்காய பஜ்ஜி, பேல்பூரி, பானிபூரி, சாக்லெட் என்று சிக்கனமாகக்கூட ட்ரீட் வைத்துக் கொள்ளலாம்.

வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* இரவு படுக்கப்போவதற்கு முன்பாக, உங்களுக்குப் பிடித்த வார இதழ்களை, நியூஸ்பேப்பரை பரபரப்பின்றி படியுங்கள். மனசு ரிலாக்ஸாகி, சட்டென்று தூக்கம் வந்து விடும்.

தூக்கத்திற்கு மட்டுமல்ல, உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளவும் நல்ல புத்தகங்கள் உதவும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வருடத்திற்கு குறைந்தது மூன்று புத்தகங்களாவது விலைக்கு வாங்கிப் படிக்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். இது மாதிரியான உங்களுக்கு ஒத்து வரக்கூடிய நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அதைத் தொடர்ந்து செய்தால், உங்களை அறியாமலேயே, உங்களிடம் ஒரு ஒழுங்கு வந்து, அந்த ஒழுங்கே உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மனதுக்கு இனிமை தருபவை உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கின்றன.

* காலையில் எட்டு மணி வரை தூங்கி விட்டு, அதன் பிறகு அரக்கப் பரக்க வேலையை ஆரம்பிக்கும் ஆளா நீங்கள்? உங்களிடம் ஒரு கேள்வி. இப்படி எட்டு மணி வரை தூங்கியும் உங்களால் அன்று முழுக்க ரிலாக்ஸ்டாக, களைப்பின்றி வேலை செய்ய முடிகிறதா? இல்லை தானே... காரணம், லேட்டாக எழுவதால் காலையில் உங்கள் வேலையை தாமதமாக அரக்கப் பரக்கத் துவங்குகிறீர்கள். விளைவு, எல்லா வேலைகளிலும் டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன். இதைத் தவிர்க்க இரவு கொஞ்சம் சீக்கிரமாகத் தூங்கச் செல்லுங்கள். காலையில் சற்று சீக்கிரமாக எழுங்கள். இனிமேல்தான் விஷயமே இருக்கிறது.

உங்கள் வீட்டில் மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று சூரியன் உதிப்பதை ரசித்துப் பாருங்கள். கோயில் மணி, பக்கத்து வீட்டு சுப்ரபாதம், பால்காரனின் கூப்பாடு... எல்லாவற்றையும் ஒரு பத்து நிமிஷம் நோட்டமிடுங்கள். ஏதோ ஒரு இனம் புரியாத அமைதியும் குதூகலமும் உங்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும்.

உங்களைச் சுற்றி நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

* யாரிடமும் பேசாமல், தனியாகவே வாழ்வதினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா சொல்லுங்கள்? கலகலவென்று நல்ல நட்பு வட்டத்திற்குள் வாழும்போது, எனர்ஜி லெவல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். பெண்களுக்கு இப்படிப்பட்ட நட்பு வட்டம் மிகவும் முக்கியம். ஏனென்றால், ஏதாவது ஒரு எமர்ஜன்ஸி என்றால் முதலில் கை கொடுப்பது பக்கத்து வீட்டு ஃபிரெண்ட்ஸ் தான்! நீங்கள் அபார்ட்மெண்ட்ஸில் இருக்கும் பெண்ணா? உங்களிடம் பக்கத்தில் இருப்பவர்கள் பழக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களா? டோண்ட் வொர்ரி. ஈகோவைத் தூக்கி எறிந்து விட்டு, அவர்களிடம் நீங்களே வலியச் சென்று பேசுங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான விசேஷங்களுக்கு (பர்த் டே, வெட்டிங் டே...) அவர்களை அழையுங்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளோடு, உங்கள் வீட்டுக் குழந்தைகளை நட்பாகப் பழக விடுங்கள். பிறகென்ன? மெல்ல மெல்ல அவர்கள் உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். இதில் மிகவும் முக்கியமான விஷயம். மிகவும் பர்ஸனலான விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஃபிரெண்ட்ஷிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

டான்ஸ் ஆடுங்கள்! மகிழ்ச்சியாய் உணர்வீர்கள்!

* நீங்கள் அறுபதாக இருந்தாலும் சரி, இருபதாக இருந்தாலும் சரி, சந்தோஷம் வேண்டுமானால் டான்ஸ் ஆடுங்கள். என்ன, அபத்தமாகத் தெரிகிறதா? உங்களை பத்துப் பேர் கூடியிருக்கும் கூட்டத்தின் நடுவில் ஆடச் சொல்லவில்லை. உங்கள் வீட்டில்தான் ஆடச் சொல்கிறோம். உங்களுக்குப் பிடித்த பாட்டு டீ.வி.யில் ஓடுகிறதா? நீங்களும் சேர்ந்து ஆடுங்கள். (உங்கள் மகனையும், கணவரையும்கூட உங்கள் டான்ஸில் சேர்த்துக் கொள்ளுங்கள்.) கொஞ்சம் வெட்கப்பட்டு, கொஞ்சம் சிரித்து எப்படி வேண்டுமானாலும் ஜாலியாக ஆடுங்கள். நீங்கள் வியர்க்க வியர்க்க டான்ஸ் ஆடினால் அது தாங்க எக்சர்ஸைஸ்! உங்கள் வயதை ஒத்த தோழிகளோடும் சேர்ந்து ஆடிப் பாருங்கள். பத்து வயது குறைந்தது போன்ற உணர்வு ஆடி முடித்தவுடன் ஏற்படும். அதற்குப் பிறகு உங்களுக்குப் பிரச்னைகள், வேலைப்பளு எது வந்தாலும் அதை ப்பூ... என்று ஊதிவிடுவீர்கள். (நீங்கள் டான்ஸ் ஆடுவதைப் பற்றி மற்றவர்கள் கிண்டல் அடித்தாலும் கண்டுகொள்ளாதீர்கள். பாவம்... அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த மகிழ்ச்சியின் சூட்சுமம்!)

ஆஹா பைக் பயணம்!

* நீங்களும், உங்கள் கணவரும் மிகவும் டிப்ரஸ்டாக உணருகிறீர்களா? உடனே இருவரும் பைக்கில் ஏதாவது ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்யுங்கள். (சாயங்கால நேரம் இது மாதிரியான பயணங்களுக்கு ஏற்றது) சில்லென்ற காற்று முகத்திலடிக்க பயணிக்கும் போது, உங்களுக்குள் ஒரு ரொமான்டிக் உணர்வு ஏற்பட்டு விடும்.

அப்புறம் டிப்ரஷனாவது ஒண்ணாவது?

உணவிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரலாம்!

* ‘சாக்லெட்’ மாதிரியான சந்தோஷத்தை ஏற்படுத்தும் உணவு வேறெதுவும் இல்லை. அதனால் உங்களுடைய பிரியமானவரோடு சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டே ஒரு வாக் சென்று பாருங்கள்! புதிதாய்ப் பிறந்தது போல உணர்வீர்கள்.

* ‘காரச் சுவைக்கு’ மகிழ்ச்சியைத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால். மாதம் ஒருமுறையாவது ஸ்பைஸியான, காரமான உணவுகளைச் சாப்பிடுங்கள். (அடிக்கடி காரம் சாப்பிட்டால் வயிற்றுக்குக் கேடு. ஜாக்கிரதை!)

* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுப் பாருங்களேன். டிப்ரஷனைக் குறைக்கும் சக்தி ஆப்பிளுக்கு இருக்கிறது. ஆப்பிளில் இருக்கக் கூடிய ‘ஃபிரக்டோஸ்’ எனர்ஜி லெவலை அதிகப்படுத்தும்.

பிடித்த பாடலை ஹம் செய்யுங்கள்...

* சிலர் உர்ரென்ற முகத்தோடு வேலை செய்வார்கள். சிலரோ ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்த படி, ஜாலியாக வேலை செய்வார்கள். உண்மையிலேயே ஜாலியாக வேலை செய்யத் தேவையான எனர்ஜியை, உங்களுக்குப் பிடித்த பாடல் கொடுத்து விடுகிறது. நீங்கள் தான் பாட வேண்டும் என்று இல்லை காஸெட்டையோ அல்லது ரேடியோவையோ ஆன் செய்து விட்டு உங்கள் வேலைகளை ஸ்டார்ட் செய்யுங்கள். வேலை எப்படி முடிந்தது என்றே உங்களுக்குத் தெரியாது.

மகிழ்ச்சியாய் இருக்க மசாஜ்!

* அதிகமான டிப்ரஷனால் (மனச்சோர்வினால்) அவதிப்படுகிறீர்களா? நம்பகமான ஆயுர்வேத நிலையங்களிலோ, பியூட்டி பார்லரிலோ மசாஜ் செய்து கொள்ளுங்கள். உடலுக்கான மசாஜ், மன பாரத்தையும் குறைக்கும்! மஸாஜ்க்கு டென்ஷன் மற்றும் ஸ்டிரெஸ்ஸைக் குறைத்து வாழ்க்கையின் மேல் பிடிப்பை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது.

* நாய், பூனை, புறா, முயல், லவ் பேர்ட்ஸ் ஆட்டுக் குட்டி என்று நீங்கள் விரும்பும் ஒன்றை வளர்த்துப் பாருங்களேன். டயர்டாக நீங்கள் உணரும் போதெல்லாம் அது உங்களை மகிழ்விக்கும்.

* பண்டிகை நாட்களை பேருக்கு கொண்டாடி விட்டு டீ.வி. முன்னாலேயே பழியாகக் கிடக்காமல், அன்று ஒரு நாளாவது, உறவினர்களை சந்தித்து அவர்களுடன் சந்தோஷமாக மட்டும் (கவனிக்க... சந்தோஷமாக மட்டும்) பேசி பொழுதைக் கழியுங்கள். இந்தப் பழக்கம் உங்கள் குழந்தைகளுக்கு, ‘உறவுகளை நேசிக்க வேண்டும்’ என்கிற விஷயத்தைப் புரிய வைக்கும்.

* பூக்கள், குழந்தைகள் இரண்டையும் போல மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வேறெதுவும் இல்லை. பூச்செடிகளை வளர்த்தால் உங்களுக்கு மிகப்பெரிய ரிலாக்சேஷன் கிடைக்கும். உங்கள் வீட்டு அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஆசை ஆசையாகக் கொஞ்சுங்கள். அது அதைவிடப் பெரிய ரிலாக்சேஷன்.

* மனசு கஷ்டமாக உணருகிறீர்களா? கவிதை, ஓவியம், கைவேலை (எம்பிராய்டரி, கூடை பின்னுவது போன்றவை) என எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதில் மனதைச் செலுத்துங்கள். உங்களின் கான்ஸன்ட்ரேஷன் செய்கிற வேலையில் திரும்பி விடும்

* சில பேரைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு சந்தோஷம் வந்து விடும். பேசினாலோ, உற்சாகம் தொற்றிக் கொண்டு, வாழ வேண்டும் என்கிற ஆசை வந்துவிடும். நீங்கள் சோர்வாய் உணரும் போது, இப்படிப்பட்ட ‘உற்சாக’ ஆட்களை சந்தியுங்கள் அல்லது ஃபோனில் பேசி,இழந்த எனர்ஜியை ரிசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.

* மனசு பாரமாக இருக்குமபோது, நீங்கள் பளிச்சென்று டிரெஸ் பண்ணிக் கொண்டு எங்கேயாவது வெளியில் செல்லுங்கள். நம்பிக்கையாக உணர்வீர்கள். அழுது வடியும் உடைகள் உங்களை இன்னமும் சோர்வாக்கும்.

* நீங்கள் மிகவும் சென்ஸிடிவ்வான ஆளாக இருந்தால், உங்களது பலவீனத்தைப் பயன்படுத்தி உங்களை ஒவ்வொருவரும் சீண்டிக் கொண்டேயிருப்பார்கள். உங்களுக்காக உண்மையிலேயே அக்கறைப்படுபவர்களின் வார்த்தகளைத் தவிர மற்றவர்களின் ‘டைம் பாஸ்’ கமெண்ட்களை கண்டு கொள்ளாதீர்கள். புறக்கணியுங்கள்.
Read more

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்

9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்

15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு

16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு

18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்

24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்

30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்
Read more

07 November 2012

கிராம்புவின் ( இலவங்கம் ) மருத்துவ குணங்கள்.

கிராம்புவின் ( இலவங்கம் ) மருத்துவ குணங்கள்
*
மருத்துவ குணங்கள்:

1. பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.

2. வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

3. உணவில் ஏற்படும் அஃபலாக்சின்(en:Aflatoxin Aflatoxin) என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் (en:Eugenol Eugenol) அழிக்கும்.

4. antioxident,இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

5. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.

6. உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.

7. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

8. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

9. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

10. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

11. முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

12. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

13. 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

14. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

15. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

16. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

17. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

18. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
*
19. பித்தம் குறைய

வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தால் தான் மனித உடலின் செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன. இதில் எதன் நிலை மாறினாலும் உடலில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றில் அதிகம் நிலைமாறுவது பித்த நீர்தான். பித்த அதிகரிப்பு ஏற்பட்டு உடலில் பல நோய்கள் உண்டாகும். இந்நிலை மாற கிராம்பு சிறந்த மருந்தாகும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்..
*
20. வாந்தி நிற்க

பேருந்துகளில் பயணம் செய்பவர்களக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.
*
21. வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாக

வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
*
22. வறட்டு இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.v சீன மருத்துவத்தில் கிராம்பின் பங்கு அதிகம். சிறுநீரகம், மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிரம்பையே அதிகம் பயன் படுத்துகின்றனர்.
*
23. தலைபாரம் நீங்க

கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும்
*
24. தொண்டைப்புண் ஆற

கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைத்து சாறு இறக்கினால் தொண்டைப்புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும்.

கிராம்பு, நிலவேம்பு இவற்றை சம அளவாக எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் உடல் அசதி நீங்கும். சுரத்திற்குப் பின் உண்டாகும் களைப்பைப் போக்கும்.

கிராம்பு, சுக்கு வகைக்கு 5 கிராம் எடுத்து அதனுடன் ஓமம், இந்துப்பு வகைக்கு 6 கிராம் எடுத்து சூரணம் செய்து தேனுடன் கலந்து கொடுத்தால் உணவு நன்றாக செரிமானமாகும்.
*
25. தோலில் உண்டாகும் படைகளுக்கு

கிராம்பை நீர்விட்டு அரைத்து படைகள் உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் தோலில் உண்டான படைகள் மறைந்துபோகும்.
**
26. கிராம்புத் தைலம்

கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயே கிராம்பு தைலம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல மணமுள்ளதாக இருக்கும். நாவில் பட்டால் உடனே சிவக்கும். இந்த கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.
*
27. ஆஸ்துமாவை நீக்கும் கிராம்பு:

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

28. பல்வலி நீங்க

பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை உபயோகப்படுத்துவார்கள். இது தொடர்ந்தால் பல பக்க விளைவுகள் உண்டாகும். சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி.

கிராம்பை நசுக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி உடனே குணமாகும். ஆனால் இது நிரந்தர தீர்வல்ல. உடனே மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவம் செய்துகொள்வது நல்லது.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.
Read more

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை நிரப்புவதற்காகவும், சுவைக்காகவும் சாப்பிடப் படுவதில்லை. சத்து, ஆரோக்கியம், உடல் இயக்கம் போன்றவைகளுக்காகவே உணவுகளை சாப்பிடுகிறோம்.

நீங்கள் விரும்பும் படியான ஆரோக்கியம் நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டுமானால், நீங்கள் சமையலுக்காக வாங்கும் பொருட்கள், அதை நறுக்கும் முறை, சமைக்கும் முறை, பரிமாறும் முறை, சாப்பிடும் முறை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
*
1. ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த வேளை உணவை சாப்பிடுங்கள்.
*
2. ஆற, அமர உட்கார்ந்து சாப்பிடுங்கள். மென்று விழுங்குகள். நொறுங்கத் தின்றால் நூறு வயது.
*
3. மிக வேகமாகவோ, ரெம்பவும் மெதுவாகவோ சாப்பிடாதீர்கள். சாப்பிடும்போது பேசுவதும் நல்லதில்லை.
*
4. கோபம், மனவருத்தம், தன்னிரக்கம் என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.
*
5. பசி இல்லாத போது சாப்பிடாதீர்கள். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்காதீர்கள்.
*
6. சாப்பிட்டதும் படுக்காதீர்கள். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்துத் தூங்குவதுதான் நல்லது.
*
7. எப்போதும் உணவை வீணாக்காதீர்கள்.
*
8. காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக ஒரு போதும் நறுக்கக்கூடாது. சிறிதாக நறுக் கும் போது, அவைகளில் இருக்கும் சாறு வெளியேறி சத்துக்கள் குறையும்.
*
9. சமையலுக்கு தரமான எண்ணையை பயன்படுத்தவேண்டும். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி சூடாக்குவதற்கு பதில், பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கிவிட்டு, அதன் பின்பு எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணையை ஊற்றிய பின்பு அடுப்பில் எரியும் தீயின் அளவை குறைத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால், எண்ணையில் இருந்து வெளி யேறும் ரசாயனத்தன்மையின் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.
*
10. எலுமிச்சை பழம், நேந்திரம் பழம், பால் போன்ற மூன்றையும் சேர்த்து ஒன்றாக எந்த உணவும் தயாரித்து சாப்பிடக்கூடாது. பாலும், எலுமிச்சையும் சேர்ந்தால் திரிந்து போகும். ஏத்தன் பழமும் (நேந்திரன்) பாலும் சேர்த்து சாப்பிட்டால், சளித்தொல்லை அதிகரிக்கும்.
*
11. நெய் சேர்க்கும் உணவில் சிலர், தனிச்சுவை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறிதளவு எண்ணையும் சேர்ப்பார்கள். அப்படி சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
*
12. பாகற்காய், வெந்தயம் போன்றவைகளில் இருக்கும் கசப்பு தன்மையை போக்க எந்த பொருளையும் அதனுடன் சேர்க்காதீர்கள். ஏன் என்றால் அவை இரண்டின் மூலமும் உடலுக்கு தேவையானதே கசப்புதான். அந்த கசப்பை நீக்கிவிட்டு அவைகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லை.
*
13. முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் புரோட்டீன் மிக அதிகமாக இருப்பதால், ஜீரணம் ஆக மிகவும் தாமதமாகும்.
*
14. காய்கறிகளை ஒரு போதும் அதிகமான அளவு எண்ணை சேர்த்து வறுக்கக்கூடாது. காய்கறிகளில் தொடர்ச்சியாக ஏற்றப்படும் சூடு அவைகளில் இருக்கும் வைட்டமின், தாதுச்சத்துகளை போக்கிவிடும்.
*
15. தினமும் ஒவ்வொரு நேரமும் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா?
காலையில் பாதி வயிற்றுக்கு உணவும் அதாவது 50 சதவீதம், மதிய உணவு 30 சதவீதம், நான்கு மணிக்கு 10 சதவீதம், இரவில் 20 சதவீதம் என்ற அளவிற்கு உணவு உண்ணவேண்டும்.
*
16. ஒரு சப்பாத்தி அல்லது ஒரு அகப்பை சாதம், பருப்பு குழம்பு, காய்கறி போன்றவை மதிய உணவில் சேர்க்கப்படவேண்டும். இதிலிருந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், கொழுப்பு, தாதுசத்துக்கள் போன்று உடலுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.
*
17. மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடையில் 7-8 மணிநேரம் இடைவெளி இருந்தால் மாலை நேரத்தில் எலுமிச்சை சாறு, பழச்சாறு, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிபருப்பு போன்றவைகளை சாப்பிடலாம்.
Read more

நீர்ச்சுருக்கு குணமாக...

நீர்ச்சுருக்கு குணமாக...

ஒரு சிலருக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்து விட்டால்
சிறுநீர் கழிக்கும் பொழுது நீர்த்தாரையில் சுருக்கு வலி
உண்டாகும் கடுக்கும்.

இந்த நிலை ஏற்பட்டால் நன்றாக
பழுத்த மாதுளம் பழத்தின் சிவந்த முத்துக்களில் ஒரு
கைப்பிடி அளவு எடுத்து அதை வாயில் போட்டு நன்றாக
மென்று தின்ன வேண்டும்.
மாதுளம் பழத்தின் விதையை
கீழே துப்பி விட கூடாது விதைகளை நன்றாக மென்று
மாவாகச் செய்து விழுங்க வேண்டும்.

மாதுளம் பழவிதைகளை மெல்ல மெல்ல அது பாதாம் பருப்பின்
சுவை வரும் அதான் இதை சுலமாக நாம் சாப்பிடலாம்.

இது போலவே தொடர்ந்து காலை,மாலை என முன்று
நாள் சாப்பிட்டால் நீர் கடுப்பு குணமாகிவிடும் தினமும்
சாப்பிட வேண்டும் அப்போதுதான் சரியாகும்.
Read more

06 November 2012

உலகப் பழமொழிகள்

பழமொழிகள்
உலகப் பழமொழிகள்

* துன்ப‌ப் பற‌வைக‌ள் உன் த‌லைக்கு மேலே வ‌ந்து வ‌ட்ட‌மிடுவ‌தை நீ த‌விர்க்க‌ முடியாது. ஆனால் அவை உன் கூந்த‌லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம‌ல் த‌டுக்க‌ முடியும்.
- சீன‌ப் ப‌ழ‌மொழி.

* இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.- கொரியா.

* வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.- டச்சுப் பழமொழி.

* தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.-பிரான்ஸ்.

* மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும். -இங்கிலாந்து.

* இதயம் ரோஜா மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும். - ரஷ்யா.

* கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி. -ஜெர்மன்.

* அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.- ஜெர்மனி.

* பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது. -இத்தாலி.

* ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் -யூகோஸ்லோவியா.
Read more

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்.

யனுள்ள மருத்துவக் குறிப்புகள்

பயனுள்ள பத்தொன்பது வகையான, எளிய மருத்துவக் குறிப்புகள் தொகுத்து - நோய்களுக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள் பயனடைவதற்காக அவற்றை இங்குத் தருவதில் மகிழ்கிறோம்!

(01) மாரடைப்பு

நடுமார்பில் வலி, மார்பில் இறுக்கிப்பிடித்ததுபோல் உணர்வு, மார்புப் பகுதியிலிருந்து இடது தோள்பட்டைவரை வலி பரவுதல், பின் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, கழுத்து வரைக்கும் பரவுதல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம் ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும். அதிகப் பதட்டம், மன அழுத்தம் உள்ளவர்கள், புகை-மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

(02) சிறுநீரகம்

பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். இதற்கு காரணம் இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறை. சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், கடும் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல், புளிச்ச வாசனை, அதிக நுரை, அடி வயிற்றில் வலி ஆகியன இருந்தால் உங்களுக்கு, சிறுநீரகக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். வெளிறிய மஞ்சள் நிறத்தைத் தவிர்த்து வேறு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.

(03) மறதி

இளமையில் மறதி என்பது வேறு! ஆனால் அளவுக்கு அதிகமான மறதி முதுமையில் ஏற்படும். இதற்கு ‘அல்ஸைமர் நோய்’ என்று பெயர். இந்த நோயைக் கட்டுபடுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. மேலும் கடுக்காய், நெல்லிக்காய், இஞ்சி ஆகிய உணவுப்பொருட்கள் வயதான பிறகும், நோய்கள் தொற்றாமல் பாதுகாக்கும். இதைவிட முக்கியம் உணவுக்கட்டுப்பாடு. சத்தான, மிதமான உணவுமுறை முதுமையில் மிக அவசியம்.

(04) இரத்த அழுத்தம்

இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச் சாப்பிடுவது நல்லது. உடலில் தடை பட்டிருக்கும் ரத்தக்குழாய்களைத் துளசிச் சாறு அகலப்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த-அழுத்தம் குறைந்து விடும்.

(05) புற்றுநோய்த் தடுப்பு

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்று நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வோர்க்குப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவத் தகவல் தெரிவிக்கின்றது. வெங்காயத்திலும் வெள்ளைப் பூண்டிலும் உள்ள ‘செலீனியம்’ என்னும் உலோகம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

(06) பல் ஈறு

பல் ஈறுகள் வீங்கி வலியால் துடிப்பவர்கள் படிகாரத்தைச் சிறிது தூளாக்கி வெந்நீரில் போட்டுக்கலந்து வாயைக் கொப்பளித்தால் வலி போன இடம் தெரியாது.

(07) மாரடைப்பு

மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிகாலையில்தான் மாரடைப்பு வருகின்றது. இதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் பெரும்பாலும் இரவில் அதிகம் தூங்க மாட்டார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுவோர்க்குத்தான் அதிகாலையில் மாரடைப்பு வருகின்றது.

(08) நரம்புத் தளர்ச்சி

நரம்புத் தளர்ச்சி நோய் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் ஏற்பட்டு வருகின்றது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரழிவுநோய், பெருந்தீனி, ரத்த அழுத்தம், தவறான வழியில் சக்தியை வீணாக்குதல், குடும்பப்பளு, சத்தான உணவை உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது. இதிலிருந்து தப்பிக்க நன்றாக உறங்க வேண்டும்
மன அளவிலும் உடல் அளவிலும் உடலைப் பேணிக் காக்க வேண்டும்.
உறங்குவதற்குமுன் அதிக நீரைப் பருக வேண்டும்
தூங்கும்முன் சூடான பானம் எதுவும் அருந்தக்கூடாது.

(09) வழுக்கை

சிலருக்குத் தலையில் வட்ட வடிவமாக வழுக்கை விழும். இதைத் தவிர்ப்பதற்கு மாதுளம் பழச்சாற்றைப் புழுவெட்டு உள்ள இடத்தில் சூடேற்றித்தேய்க்க மூன்று நாட்களில் அரிப்பு மாறி, முடி முளைக்கும். ஊமத்தைப் பிஞ்சை உமிழ் நீரால் மைபோல அரைத்துத் தலையில் தடவி வந்தால் புழுவெட்டு நீங்கும். ஆற்றுத் தும்மட்டிக்காயை நன்றாக நறுக்கித் தலையில் தேய்த்துவர பலன் கிடைக்கும்.

(10) தொண்டைப்புண்

தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்பட்டுவோருக்குப் பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சிறிது சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியன உதவும். மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியாக்கிப்போட்டு விட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு, தளதளவென்று கொதிக்க விட்டு, இறக்கிய கஷாயத்தில் சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால், தொண்டையைத் தொல்லைப்படுத்திக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் நீங்கி விடும்.

(11) உடல் தளர்ச்சி

வெங்காயத்தில் வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை உள்ளன. உடல்தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகளை எல்லாம் வெங்காயம் போக்குகிறது. இருதயத்தை வலுப்படுத்துகிறது. இது உடலுக்குச் சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியைத் திரும்பப் பெறவும் பயன்படுகின்றது. வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து. காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. வெங்காயத்தின் விஞ்ஞானப் பெயர் ‘ஆலியம்சிபா.’

(12) வயிற்றுப்புண்

வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் 1டீஸ்பூன், நிறைய பூண்டு உரித்துப்போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன், அதில் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டுவர, வயிற்றுப்புண்ணும் வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.

(13) அல்சர்

சர்வ சாதாரணமாக எல்லோரையும் தாக்கக் கூடிய நோய்களில் ‘அல்சரும்’ ஒன்று. நேரத்திற்குச் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு, சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாமல் இருப்பவர்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு அதிகம். முதலில் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியோடு ஆரம்பிக்கும். வாந்தி, எரிச்சல் ஏற்படும். அல்சர் ஏற்படக்காரணங்கள்:

காரமான உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளுதல்
மண்,கல் கலந்த உணவு, நீர் போன்றவற்றை உட்கொள்ளுதல்
கோபப்படுதல், பட்டினி இருத்தல்
போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படலாம்.

அறிகுறிகள்:
பசியின்மை, ஏப்பம் அடிக்கடி வருதல், வயிறு இரைச்சல், நெஞ்சு எரிச்சல்.

கட்டுப்பாடுகள்:
வேளாவேளைக்குச் சரியாக சாப்பிடுதல், இறைச்சி, மீன் போன்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றால் அல்சரிலிருந்து குணம் கிடைக்கும்.

(13) நோய் எதிர்ப்பு சக்தி

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துக்கள், என்சைம்கள், புரோட்டீன்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உபபொருட்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை என்பது உடலில் எனர்ஜி அதிகரிக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. அதனால்தான் மூளையில் ரத்தம் உறைந்த நிலையிலும் இதைப் பயன் படுத்துகின்றனர். ஆங்கில மருந்துகளிலும் இதன் பயன்பாடு உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர்போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்குக் கற்றாழை நல்ல பயன் தருகின்றது. தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.

(14) நெல்லிக்காய்

நெல்லிக்கனியில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்தைவிட இவற்றில் சுமார் 25மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்து உள்ளது. இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல் தொடர்பான வியாதிகள், எலும்பு, தாடை, மலச்சிக்கல், நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம். அதே போல் மூளைக்கோளாறு, இதய நோய், காசநோய், ஆஸ்துமா, நீரழிவு போன்ற நோய்களைக் குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும்.

(15) வலிப்புநோய்


வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசி நீரில் இளநீரையும்,தேனையும் கலந்து சாப்பிடக்கொடுத்தால் நரம்பு பலமடைந்து வலிப்பு நோய் குணமடைந்து விடும்.

(16) மஞ்சள்காமாலை

மஞ்சள்காமாலை நோய் கண்டவர்கள் நெல்லிக்காய்களை அரிந்து சாறு பிழிந்து இத்துடன் தேனையும் சிறிதளவு (2டீஸ்பூன்) கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் பறந்துவிடும்.

(17) பசியின்மை

சாப்பிட வேண்டும் போலிருக்கும். ஆனால் பசி இருக்காது. நல்ல பசி ஏற்பட சீரகத்தை லேசாக வறுத்து, கொஞ்சம் பனை வெல்லத்துடன் கலந்து பொடியாக்கிச் சாப்பிட வேண்டும்.

(18) தலைவலி

தலைவலி சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துப் பருக உடனே குணமாகும்.

(19) இடையழகு

பெண்களின் வயிறு பிரசவத்திற்குப்பிறகு பெருத்துத் தளர்ந்து விடும். ஏலக்காய்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்துவர 'சிக்' என்ற இடையழகு கிடைக்கும்.
Read more

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!

ண்களுக்கான அழகு குறிப்புகள்

பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. .(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலா?) ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான் வெயில், மழை,தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கரை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம் ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளனும். வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால்
மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும்.

வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்.. வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்..

முக அழகுக்கு:
பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம் டைமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள்

முட்டையின் மஞ்சள் கருவை( மூக்கை மூடிக்கொள்ளவும்) எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இது மாசம் 2 முறை செய்யவும்.

தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

உதடுக்கு:
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)

பற்களுக்கு:
எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

கூந்தலுக்கு;

தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்

வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை
சிறிது செம்பருத்தி பூ,இதனை காய வைத்து நன்றாக அறைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.

உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்

இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.

முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்

ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். இந்த டிப்ஸ் ஏற்கனவே நான் தமிழ்குடும்பம்.காமில் கொடுத்தது தான்

ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.

நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது

நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும்

சின்ன சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகாக இருக்கும்

ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும். அவர்களின் நிறத்துக்கு ஏற்றதை போல் தேர்வு செய்யவும்..

உள்ளாடைகள் தேர்வு செய்யும்
பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை எப்பொழுதும் நல்லது.

கல்லுரிக்கு போகும் ஆனா நீங்கள்

டீசுஷர்ட் போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும்.

இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் செயின் போட வேண்டாம். இளம் இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் பெண்களுக்கு பிடிக்காது.
வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க.

உடலின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் நிஜமான புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும், பிறர் மீது அதிக கோபமோ, பொறாமை படுவது உங்களின் முக அழகை கொடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க..
Read more

முகப்பரு மறையும்.

பாட்டி வைத்தியம்.
வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவுங்கள்.
வேப்பமர இலைகளையும், புதினா இலைகளையும், துளசி இலைகளையும் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.
இரவு படுக்கப் போகுமுன் கண்களைச் சுற்றியும் உள்ளங்கால்களிலும் விளக்கெண்ணெய் தடவிவந்தால், உடலின் சூடு குறைந்து கண்கள் தெளிவாகவும், பிரகாசமாகவும் தெரியும்.
Read more

05 November 2012

தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

ரிகசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி ஆகியவற்றை அரைத்து, காயவைத்து, தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி, பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தலைமுடியில் தடவிவந்தால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
Read more

இயற்கை பொருட்கள் மூலம் அழகை பராமரிக்க..

யற்கை பொருட்கள் மூலம் அழகை பராமரிக்க...
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று.

முகம் பொலிவு பெற

வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.

கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம்
சந்தனத் தூள் - 5 கிராம்
வசம்பு பொடி - 2 கிராம்

எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் உறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.
வெள்ளரிக்காய் (cucumber) சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்
***
முகச்சுருக்கம் மாற

ஆவாரம் பூ காய்ந்த பொடி - 5 கிராம்
புதினா இலை காய்ந்த பொடி - 5 கிராம்
கடலை மாவு - 5 கிராம்
பயிற்ற மாவு - 5 கிராம்
எடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் நீங்கும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் என்றும் இளமைப்பொலிவுடன் இருக்கலாம்.

வெள்ளரி - 2 துண்டு
நாட்டுத் தக்காளி - 1 பழம்
புதினா - சிறிதளவு
எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும் . இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.
***
முகம் பளபளக்க

காலை வேளையில், கடலைமாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகம் கழுவி வந்தால் முகம் பளபளக்கும். இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!
***
முகப்பரு தழும்பு மாற

புதினா சாறு - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு - 1 ஸ்பூன்
இவற்றில் பயிற்ற மாவு கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவி வந்தால் முகப்பருத் தழும்புகள் மாறும்.
***
ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற

சாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து, நீர்விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் ஆண்களுக்கு உண்டாகும் முகப்பரு தழும்புகள் மாறும்.

கொத்தமல்லி - 5 கிராம்
புதினா - 5 கிராம்
எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
***
Read more

தவிர்க்க கூடாத பத்து உணவுகள் !

விர்க்க கூடாத பத்து உணவுகள்
உடல் நலம்

நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:
பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.காரட்:

நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு :
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் :
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி :
நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால் மீன் மற்றும் நண்டு :

அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர் :
தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி :
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.முட்டைக்கோஸ் :
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.


மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.
Read more

உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

டம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி
பல் ரோகப்பொடி
சுக்கு, காசிக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு இவைகளைச் சமமாக எடுத்துலர்த்தி இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு சதா பல்லில் எகிறுகளில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும் அன்பர்கள், சிரித்தால் அழுதால் பல்லில் இரத்தம் வருபவர்கள், தினம் இரண்டும் முறையும் பல்துலக்கி வர இவையாவும் ஒழிந்துபோகும்.

உணவு செரிக்க எளிய வழி!
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டதும் பறித்த (உலராத) ஒரு இஞ்சித் துண்டை வாயில் போட்டு மெல்ல வேண்டும். கடும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி முதலியவற்றால் அவதிப்படுகிறவர்களும் இதே போல் ஒரு சிறு துண்டை மென்று தின்றால் போதும். இது வயிற்றையும், குடல் பகுதிகளையும் நன்கு பாதுகாக்கிறது. இந்தப் பகுதிகளில் வலி இருந்தாலும் உடனே குணமாகி விடுகிறது. சாப்பிட்ட உணவும் செரிமானம் ஆகிறது. வாந்தி ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

இப்படிச் சாப்பிடப்படும் சிறு துண்டு உடனே நன்கு உமிழ் நீரைச் சுரக்கச்செய்கிறது. அதன்மூலம் உணவு செரிமானத்துக்கு இன்றியமையாதது பயன்பரும் காடிப் பொருளையும், ஒரு வகையான எண்ணெயையும் உற்பத்தி செய்கிறது. இதனால் உணவு உடனடியாக ஜீரணமாகிறது.

அசைவ உணவு, பொரியல் வகைகள் ஆகியவை அதிகமாய்ச் சாப்பிட்டால் இது போல் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடவும்.

இல்லையெனில், உலராத இஞ்சியை ரசமாக்கி அரை தேக்கரண்டி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ரசத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் ரசம், ஒரு தேக்கரண்டி புதினா இரசம், ஒரு தேக்கரண்டி தேன் முதலியவற்றைக் கலந்து அருந்தினால் போதும்.

காலை நேரத்தில் காய்ச்சலா?
காலை நேரத்தில் காய்ச்சலால் அவதிப்படுபவர்களும், மஞ்சள் காமாலை, மூலத்தொந்தரவு, வாந்தி, பித்தக் கோளறு ஆகியன உள்ளவர்களும், காய்ச்சல் ஏற்படுவது போல் உணர்பவர்களும் மேற்கண்ட முறையில் ஒவ்வொரு முறையும் அவ்வப்போதே தயாரித்துத் தினமும் மூன்று வேளை வீதம் அருந்தி வரவேண்டும் இஞ்சி, தேன், புதினா, எலுமிச்சை ஆகியவை கலந்த இந்த டானிக் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாமல் முன்னரே தடுக்கும் சக்தி வாய்ந்த மருந்தும் ஆகும். உலராத இஞ்சிக்குப் பதிலாக சுக்குப் பொடியையும் பயன்படுத்தலாம்.

உடனே காய்ச்சல் தணிய'
ஆஸ்துமா, நுரையீரலில் காசம், கக்குவான் இருமல், மார்புச்சளி, கடுமையான காய்ச்சல் முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி இஞ்சி இரசத்தை ஒரு டம்ளர் வெந்தயக் கஷாயத்தில் கலக்கவும். சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும், இன்புளுன்சா காய்ச்சல்காரர்களுக்கு இஞ்சி சேர்க்கப்பட்ட இந்தக் கஷாயம் உடனடியாக உடலை வியர்க்கச்செய்து காய்ச்சலின் வேகத்தை மட்டுப்படுத்திவிடுகிறது.

குழந்தை வேண்டுமா?
தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமில்லாதவர்களுக்கு இது புத்துணர்ச்சியை ஏற்படுத்தித் தரும். மலட்டுத் தன்மை, விந்து முன் கூட்டியே வெளிப்படுதல், மேக நோய் போன்றனவும் உடனே குணமாகும். ‘ஆண்மை’ இல்லாதவன் என்று ஒதுக்கப்பட்ட ஆண்கள் இரவு படுக்கும் முன்பு அரைத்தேக்கரண்டி இஞ்சி இரசத்தையும், ஒரு தேக்கரண்டி தேனையும் அடுத்தடுத்து சாப்பிடவும், மூன்றாவதாக அவித்த கோழிமுட்டையில் பாதி சாப்பிடவும். இதனால் தாது பலம் பெறுவார்கள். தொடர்ந்து ஒரு மாதம் இதே போல் இரவில் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.

ஜலதோஷம் உடனடி நிவாரணம்
ஜலதோஷம் குணமாக, இஞ்சியை சிறுசிறு துண்டுகாய் நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். பிறகு அதை வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் காபி சாப்பிடுவது போல சூடாகவே அருந்த வேண்டும்.

சுக்குப் பொடிகூட போதும் தேநீர் தயாரிக்க!
ஜலதோஷம் தொடர்பான காய்ச்சலும், ஜலதோஷமும் குணமாக இஞ்சித்தேநீர் தயாரித்து அருந்த வேண்டும். முதலில் இஞ்சித் துண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து டீத்தூளை இந்தக் கலவையில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பால், சர்க்கரை ஆகியன சேர்த்து அருந்தவேண்டும்.

இருமலா?
இஞ்சித் துண்டை ரசமாக்கி, அதில் தேன் கலந்து தினமும் நான்கு வேளை அருந்தினால் எப்படிப்பட்ட இருமலும் உடனே கட்டுப்படும். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று துண்டுகளை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் இரசமாக்கி வடிகட்டி, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்த வேண்டும். ஒவ்வொரு வேளையும் இதே போல் தயாரித்து உடனுக்குடன் அருந்தி வர வேண்டும். இருமலுக்கும் ஜலதோஷத்துக்கும் இஞ்சியைப் போல் சிறந்த மருந்து இல்லை என்பார்களே மூலிகை மருத்துவர்கள்.

இஞ்சிக் காபி அருந்தலாமா?
அதிகமான அல்லது மட்டமான மாதவிடாய்ப் போக்கு உள்ள பெண்கள், உலராத பச்சையான இஞ்சியைத் தோல் உரிந்து இடித்துப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். இதற்கு ஒரே ஒரு சிறிய இஞ்சித்துண்டு போதும். ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் இந்தப் பொடியைப் போடவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கி, வடிகட்டி அருந்த வேண்டும். தேவை எனில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். காபி போல சுவையாகவும் இருக்கும். மாதவிடாய்க் கோளாறுகள் அனைத்தையும் குணமாக்கும். ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அந்தந்த வேளைச் சாப்பாட்டிற்கு பிறகு இந்தச் சூடான இஞ்சி காபியை அருந்த வேண்டும். இந்தியாவின் சில பகுதிகளில், இஸ்லாமிய பெண்கள் இந்த முறையைப் பின்பற்றி பலனடைந்துள்ளார்க்ள.

தலைவலி உடனே குணமாக!
உலர்ந்த இஞ்சியைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அந்தப்பசையை நெற்றியில் தடவ உடனே தலைவலி குணமாகும். பல் வலி என்றால் அந்த இடத்துக்கு மேலே முகத்தில் இந்தப் பசைையைத் தடவ வேண்டும்.

காது வலி என்றால், இஞ்சிச்சாற்றில் ஒன்று அல்லது இரண்டு துளிகளைக் காதுக்குள விட வேண்டும்.

எல்லா விதமான உடல் வலிகளையும் இஞ்சி குணமாக்கும். முதுகு வலி, இடுப்பு வலி என்றால் அந்தந்த இடங்களில் இஞ்சிப் பசையை அழுத்தி தடவினால் போதும்.

இதய நோய்களைக் குணப்படுத்தும் சுக்கு!
இதயத்தில் வலி, இதய பலவீனம், இதயப்படபடப்பு முதலியவை குணமாக இருபது கிராம் இஞ்சியை நன்கு கழுவி மிக்ஸி மூலம் ரசமாக்கி ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாற்றில் இரு தேக்கரண்டி தேன் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இந்த முறையில் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் இதய சம்பந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

உலர்ந்த இஞ்சியைத்தான் சுக்கு என்கிறோம். ஒரு தேக்கரண்டி சுக்குத்தூளை இதே போல் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து, அருந்தினாலும் இதய வலி, பலவீனம், படபடப்பு முதலியவை குணமாகும்.

நீரிழிவு நோய்க்காரர்கள் இஞ்சிச் சாற்றிலோ சுக்குச் சாற்றிலோ கல்கண்டு போட்டு தண்ணீர் சேர்த்துக் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

நெஞ்சு வலி குணமாகும்!

பாடகர்களும், தொண்டைப்புண், குரல் கமரல் முதலியவற்றால் அவதிப்படுவோர்களும் இஞ்சியை நன்கு மென்று தின்று உமிழ்நீரை வெளியில் துப்பவேண்டும்.

இளநீரில் தலா ஒரு தேக்கரண்டி சுக்குத் தூள், கல்கண்டுத் தூள் முதலியவற்றைக் கலந்து தினமும் இருவேளை வீதம் முடித்தால் நெஞ்சுவலி குணமாகும்.

ஆடுகின்ற பற்கள் கெட்டிப்பட்டு நிற்கவும், மஞ்சள் நிறப்பற்கள் ‘பளிச்’ என்று பிரகாசிக்கவும் 100 கிராம் சுக்குபொடியில் 7 கிராம் அளவு டேபிள் சால்ட் கலந்து, பற்பொடி தயாரிக்கவும். உப்பு சேர்க்கப்பட்ட இந்த சுக்குப் பற்பொடி வாய் நாற்றத்தையும் போக்கிவிடும்.

நறுமணப் பொருள்களும், வாசனைப் பொருள்களும் தயாரிக்க இஞ்சிலியிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் பயன்படுகின்றன. இவை இஞ்சி ரொட்டி, வயிற்றுக் கோளாறுகள் சம்பந்தமான மருத்துப் பொருள்கள் ஆகியன தயாரிக்கவும் பயன்படுகின்றன.

உலகில் சீனாதான் இஞ்சியை அதிகம் இறக்குமதி செய்து தக்க பாதுகாப்புடன் இருப்பில் வைத்திருக்கிறது.

வயிற்றுவலி என்றால் உடனே வீட்டில் சுக்குத் தேநீர் போடுவதற்குக் காரணம் பண்டைய கிரேக்க வைத்திய மேதைகளான அலிசென்னாவும், கேலனுந்தாம். இவர்கள் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி முதலியவற்றுக்கு சுக்கு டீ தூள், அருந்தச் சொன்னார்கள். அப்போது இதற்குச் சுக்கு கஷாயம் என்று பெயர்.

வேத காலத்திலும் இஞ்சியும், உலர்ந்த இஞ்சியான சுக்கும் மிக முக்கியமான மருந்துகளாக இருந்திருக்கின்றன.

இவ்வளவு ஆதாரங்கள் எதற்காக? தினமும் சுக்கு தேநீர் அல்லது சுக்கு காபி சாப்பிட்டாவது உடல் நலத்தைப் புதுப்பித்து ஆரோக்கியமாக வாழ ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்!

குறைந்த செலவில் கிடைக்கும் தங்கபஸ்பம், இஞ்சி.
Read more

04 November 2012

வ‌ண்டு ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க!!!

வ‌ண்டு ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க

அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.

அ‌ரி‌சி‌யி‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க அ‌ரி‌சி கொ‌ட்டு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌‌‌ல் வே‌ப்‌பிலைகளை‌ப் போ‌ட்டு ‌பி‌ன்ன‌ர் அ‌ரி‌சி கொ‌ட்ட வே‌ண்டு‌ம்.

எதையு‌ம் அ‌ப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம்.

அ‌வ்வ‌ப்போது சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.
Read more

ப‌த்‌திர‌ப்படு‌த்த ‌சில ‌விஷய‌ங்க‌ள்.

ப‌த்‌திர‌ப்படு‌த்த ‌சில ‌விஷய‌ங்க‌ள்

பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி‌வி‌ட்டு வை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் ‌நீ‌ண்ட நா‌ட்களு‌க்கு கெ‌ட்டு‌ப்போகாது.

காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.

தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை அ‌தி‌ல் தெளித்து வை‌க்கலா‌ம்.
Read more

மு‌ட்டையை வேக வை‌க்க !!!

மு‌ட்டையை வேக வை‌க்க

முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தே‌க்கர‌ண்டி வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும்.

முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.

மு‌ட்டையை வேக வை‌த்தாலு‌ம் ச‌ரி ஆ‌ம்லே‌ட் போ‌ட்டாலு‌ம் ச‌ரி பய‌ன்படு‌த்துவத‌ற்கு மு‌ன்பு அதனை லேசாக கழு‌வி ‌விடவு‌ம்.
Read more

வெங்காயம் நறுக்கினால் க‌ண்‌ணீ‌ர் வே‌ண்டா‌ம்.

க‌ண்‌ணீ‌ர் வே‌ண்டா‌ம்

எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பா‌தியாக நறு‌க்‌கி நீரில் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் நறுக்குங்கள். அழுகை குறையும்.

கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இ‌ட்‌லி விருப்பமுடன் சாப்பிடத் தோன்றும்.
Read more

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்.

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

கால்சியமும், ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒருமணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது..
Read more

01 November 2012

சமை‌க்க சில கு‌றி‌ப்புக‌ள்.

மை‌க்க சில கு‌றி‌ப்புக‌ள்

கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும் காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்க்கவும்.

ஒரு புது விதமான அடை செய்வதற்கு, அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.
Read more

பா‌ல் கெடாம‌ல் இரு‌க்க...

பா‌ல் கெடாம‌ல் இரு‌க்க

பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.

பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.

பா‌ல் கா‌ய்‌ச்சு‌ம் பா‌த்‌திர‌த்தை இர‌ண்டு நா‌ட்களு‌க்கு ஒரு முறையாவது வெ‌யி‌லி‌ல் காய வை‌க்கவு‌ம்.

‌தினமு‌ம் ஒரே பா‌த்‌திர‌த்‌தி‌ல் பாலை‌க் கா‌ய்‌ச்சாம‌ல் இர‌ண்டு பா‌த்‌திர‌ங்களை மா‌ற்‌றி மா‌ற்‌றி பய‌ன்படு‌த்துவது‌ம் ந‌ல்லது.

பாலை‌க் கா‌ய்‌ச்சு‌ம் மு‌ன்பு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி ‌சி‌றிது கொ‌தி‌க்க வை‌த்து, அ‌ந்த ‌நீரை ‌கீழே ஊ‌ற்‌றியது‌ம் பா‌ல் கா‌ய்‌ச்‌சினா‌ல் பா‌ல் கெடுவதை த‌வி‌ர்‌க்கலா‌ம்.
Read more

ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு எ‌ளிய உணவு.

ய‌ற்கை வைத்தியம்
ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு எ‌ளிய உணவு

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும். கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்
Read more

ஏல‌க்கா‌ய் பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம்.

ல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

ஏல‌க்காயை பொடியா‌க்க

ஏலக்காயைப் பொடித்துப் போடவும் என்றவுடன் பலரும் ஏலக்காயை அப்படியே அம்மியில் வைத்து பொடிக்க முயற்சி செய்வர். இது நன்கு பொடியாகாது.

ஏலக்காயை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து பிறகு பொடிக்கவும். எளிதாய் பொடியாகும்.

அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில், வறுக்காமல் ஏல‌க்காயுட‌ன் ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம்.

இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !

இளமை காக்க எளிய வழிகள் ஏலக்காய் நல்லதா?
மிக நல்லது!

மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.

ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.

ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.

ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லதும் கூட!

இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.

ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.

இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.

நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.

ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.

அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித்தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.
Read more

31 October 2012

மாதவிலக்கு வலி குறைய...

மாதவிலக்கு வலி குறைய

முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து 'சூப்' போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும். முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும். முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்.
Read more

ர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்.

ய‌ற்கை வைத்தியம்
ர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

த‌க்கா‌ளி‌ச்சாறு, எலு‌மி‌ச்சை சாறு, தே‌ன் இவை மூ‌ன்றையு‌ம் சம அளவு கல‌ந்து காலை, மாலை இரு வேளையு‌ம் 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர ர‌த்த‌ம் பெருகு‌ம், இ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தா‌ல் இதய‌ம் வலுவடையு‌ம். க‌ல்ல‌ீர‌ல் பல‌ம் பெறு‌ம். இது காசநோயா‌ளிகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. த‌க்கா‌ளியை ‌தினமு‌ம் ப‌ச்சையாக உ‌ட்கொ‌ண்டு வர ‌சிறு வய‌திலேயே ஏ‌ற்படு‌ம் முக‌ச் சுரு‌க்க‌ங்க‌ள் குணமாகு‌ம், சொ‌ரி, ‌சிர‌ங்குகளு‌ம் ‌தீரு‌ம். த‌க்கா‌ளியை ப‌ச்சையாகவோ, சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌த்தை சம‌ப்படு‌த்து‌ம். மல‌ச்‌சி‌க்கலை‌ப் போ‌க்கு‌ம்.. த‌க்கா‌ளியை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உ‌ள் உறு‌ப்புக‌ள் பல‌ம் பெறு‌ம்
Read more

பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம் ?

பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்?

இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது.

இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது.
*
ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்கார்ந்து சாப்பிடுபவன் யாரோ என்று நம் கதை வராமல் பார்ப்பது நம் கையில்த்தான் உள்ளது.
***
பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்!

1. நமது கடவுச்சொல் திருட்டு போவது நமது கையில் தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்? எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .
*
2. இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.
*
3. அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம்.
*
4. ஸ்பைவேர், மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு. எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை.
*
5. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.
*
6. முடிந்தவரை ஜிமெயில், யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள்.
*
7. அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- ! . , * - + `~ @ # $ % ^ & ( ) _ = : ; / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.
Read more

பளபளக்கும் தேகத்துக்கு பப்பாளி!

ழகிய பொருள்... அழகிய முகம்!

பளபளக்கும் தேகத்துக்கு பப்பாளி!

பளீர் பளபளப்பையும், சூரியனும் கொஞ்சம் வெட்கப்படக் கூடிய நிறத்தையும் அள்ளி அள்ளித் தருவதில் ஒரு வள்ளல் பப்பாளி. வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி மருத்துவத்தை செய்து பாருங்களேன்... பலே பப்பாளி தரும் பளீர் பளபளப்பில் சொக்கிப் போவீர்கள்!

எப்போது பார்த்தாலும் எண்ணெய் வழிந்து டல்லாக இருக்கிறோமே என்று கவலைப்படுகிறவர் களுக்காகவே இந்த பப்பாளி கூழ் மசாஜ்...

பப்பாளி பழ தோலை சீவி கூழாக்குங்கள். இந்த கூழ் & ஒரு டீஸ்பூனுடன், முல்தானி மட்டி | அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்தில் பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் ‘பளிச்’ என்று பிரகாசிக்கும். அதோடு, மேனியை சிவப்பாக்கும் மந்திரமும் இருக்கிறது இந்த மசாஜில்!

ஆண்களின் முகம் போல் சொரசொரப்பாக இருக்கும் சிலரின் முகம். அவர்களுக்கான சிறப்பு மருந்து இருக்கிறது, பப்பாளியின் தோலில்.

பப்பாளி தோலை வேகவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கூழை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால், தொடத் தொட மிருதுவான சருமம் கிடைக்கும்.

கண்ணுக்குக் கீழ் கருவளையம், கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை ஆக்கிரமித்த பகுதிகளை நார்மல் நிறத்துக்குக் கொண்டு வருவதில் பப்பாளி ஒரு நிபுணர்.

சோற்றுக் கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன், பப்பாளி கூழ் & 1 டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை கழுத்திலிருந்து மேல்நோக்கி முகம் முழுவதும் நன்றாகத் தேய்த்து, இது நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வாரம் இருமுறை இந்த சிகிச்சை செய்தாலே கருப்பெல்லாம் காணாமல் போய்விடும்.

(நார்மல் சருமம் கொண்டவர்களும் இதை ஒரு ‘ஃபேஸ் பேக்’ ஆக உபயோகிக்கலாம்!)

இளமையையும் நிறத்தையும் அள்ளிக் கொடுக்கும் இந்த பப்பாளி பேஸ்ட் குளியல்...

பப்பாளி பழக் கூழ், மஞ்சள் வாழைப்பழக் கூழ், சந்தனப்பொடி, பயத்தமாவு பொடி... நான்கை யும் ஒரே அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி, பேஸ்ட் ஆக்குங்கள்.

முகம் முதல் பாதம் வரை இதைப் பூசி, பத்து நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி குளியுங்கள். 10 நாளைக்கு ஒரு முறை இப்படி குளித்து வந்தால், இறந்த செல் புதுப்பிக்கப்பட்டு, அழகும் இளமையும் அள்ளிப் போகும்.

முகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு பலரும் பாதத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஒட்டுமொத்த உடம்பையும் தாங்கிப் பிடிக்கும் பாதத்தில் சுருக்கமும், கருமையும் படர்ந்து கரடு முரடாகிவிடும். இதற்கு பப்பாளி தரும் டிப்ஸ் இதோ...

பப்பாளி கூழ் & 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், விளக்கெண்ணெய் & கால் டீஸ்பூன் மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி, காய்ந்ததும் கழுவுங்கள். கருமையும் சுருக்கமும் காணாமல் போவதுடன் மெத்மெத்தென்ற பாதங்கள் கிடைக்கும்.

சிவந்த மேனியை விரும்புகிறவர்களுக்கான ஸ்பெஷல் பேக் இது...

உலர்ந்த திராட்சை & 10, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் & 1, இவற்றை முந்தைய நாளே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பப்பாளி கூழ் & அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 15 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி வர, சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களில் வரும் பெண்கள் போன்ற மந்திர மாற்றத்துடன் ஜொலிப்பீர்கள்.
‘‘உறுத்தும் முடி நீக்க உதவுங்கள் ப்ளீஸ்...’’

‘‘என் முகத்திலும், கை, கால்களிலும் அதிகமாக முடி முளைத்திருந்தது. இதற்காக பியூட்டி பார்லர் போய் வாக்ஸிங்கும் த்ரெடிங்கும் செய்யத் தொடங்கினேன். இப்போது பார்த்தால் அந்த இடங்களில் முன்பைவிட அதிகமாகவும் தடிமனாகவும் முடி வளருகிறது. பார்லர் போகாமல் இருக்கவே முடியவில்லை. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட, உதவுங்கள் ப்ளீஸ்...’’

‘‘பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங் களும் பழக்கவழக்கங்களும்தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்ற வற்றைச் செய்யும்போது முடி அடர்த்தியாவதுடன், அதிகமாக வளரவும் தொடங்கும்.

முகத்தில் இருக்கும் மீசை, தாடியையும், கைகளில் புசுபுசுவென வளர்ந்த முடிகளையும் நிரந்தரமாக அகற்ற இயலாது. ஆனால், முடியின் கருமையையும், வளர்ச்சியையும் தடுத்து, வலுவிழக்கச் செய்வதுடன், முடிகளை உதிர வைக்கவும், மேற்கொண்டு முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன.

சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரிமஞ்சள் பவுடர்... இந்த நான்கையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி, அழகைக் கொடுக்கும் அசத்தல் மிக்ஸ் இது! மஞ்சள் பூசிக் குளிப்பதுபோல் இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து குளியுங்கள். புருவத்தில் இந்த பவுடர் படுவதால் முடி உதிர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். வாரம் இருமுறை குளித்து வந்தாலே முகம், உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் நிறம் மாறி, பின் உதிர்ந்துவிடும்.

மிருதுவான ப்யூமிக்ஸ்டோனை (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) வாங்குங்கள். கலந்து வைத்திருக்கும் மிக்ஸை குழைத்து ப்யூமிக்ஸ்டோனில் தடவி, முடி இருக்கிற பகுதிகளில் லேசாகத் தேயுங்கள். இதை தினமும் செய்து வந்தாலும் முடி உதிரும். மேற்கொண்டு முடி வளராது.

த்ரெடிங், வாக்ஸிங் என்று அடிக்கடி பியூட்டி பார்லர் பக்கம் போகிறவர்கள், தினமும் முகம், கை, கால்களை கழுவும்போதெல்லாம் சோப்புக்கு பதிலாக இந்த மிக்ஸை பயன்படுத்தலாம். இதனால், முடியை அகற்றியதால் ஏற்பட்ட கருமையும் புள்ளிகளும் மறைவதுடன் சருமமும் மிருதுவாகும்.’’
Read more

முகப் பராமாரிப்பு...

முகப் பராமாரிப்பு...


முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்...

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின்
மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்
Read more

30 October 2012

மரம் வளர்ப்போம் வாருங்கள்!!!

மரம் வளர்ப்போம் !!!

மரம் வளர்ப்போம் வாருங்கள்


மாமழை பெறுவோம் வாருங்கள்

யாகம் வளர்த்தால் மழை வரும் என்ற


மடமையைப் போக்குவோம் வாருங்கள்!

யாகம் வளர்ப்பது மூடத்தனம்


மரம் வளர்ப்பது மூலதனம்

செடி கொடி வளர்த்துப் பாருங்கள்


வெம்மை நீங்கி வாழலாம்!


மக்கள் தொகை பெருக்கத்தால்


காட்டு வளங்கள் அழிகின்றன


காட்டு வளங்கள் அழிவதால்


கானல் வெப்பம் அதிகரிக்கும்!


வெப்பம் உலகில் அதிகரித்தால்


வேண்டா விளைவுகள் ஏற்படுமே


மழை நீர் மறைந்து போகும்


மனித இனம் அழிந்து போகும்!

வனவிலங்குகள் மாண்டு போகும்

புல் பூண்டுகள் தொலைந்து போகும்


பூமிப் பந்து நெருப்பாகும்

வேண்டாம் இந்த விபரீதம்!


புவியின் வெப்பம் தணிக்கவே

பூமியெங்கும் மரம் நடுவோம்


மழை வளம் காக்கவும்

மனித வளம் காக்கவும்


மரம் வளர்ப்போம் வாருங்கள்!
Read more

28 October 2012

மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!!

மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!!

"விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. "புவி வெப்பமயமாதல்" (Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என அறிவியலாளர்கள் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் சராசரி மனிதனோ இதைப் பற்றிய எந்த கவலையும், விழிப்புணர்வும் இன்றி சொந்த வீடான பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான்.

குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசுபடுத்துவதில் மனிதனுக்கு நிகர் யாரும் இல்லை.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் இடையறாது உமிழப்பட்டுக் கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடு போன்ற விஷ வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு விண்வெளிக்குச் சென்று காற்று மண்டலத்தில் கலக்கும்.

இது ஒரு போர்வை போல் பூமியைச் சுற்றி மூடிக் கொண்டு மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது. பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்குத் தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. நாம் மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதால் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மரங்களின் அவசியம் தற்போது, உலகை உலுக்கி வரும் பிரச்சினைகளில் சுற்றுப்புற சூழல் மாசடைதல் என்பது மிக முக்கியமானது. இதன் காரணமாகவே பூமி வெப்பமடைகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, நெடுங்காலத் தீர்வாக மரங்கள் நடவேண்டும் என்பதை அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம்.

இருக்கின்ற மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக, வெட்டிச்சாய்த்து வருகிறோம். ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக ஐந்து மரங்களையாவது நட வேண்டும். ஒரு சின்ன இலை வளர அந்த மரம் எடுக்கும் முயற்சி மிக அசாதாரணமானது.
நம்முடைய வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், குளிர்சாதனப் பயன்பாடு மிகவும் குறையும். மின்கட்டணம் குறையும். குளுமையான வேப்பமரத்துக் காற்று யாருக்குத்தான் பிடிக்காது?

மரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும், கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை பெரிய அளவில் குறைக்கின்றன.
மரங்களால் மழை பெய்யும், நீர்வளம் பெருகும், நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும். புவி வெப்ப அளவு உயர்வால் ஏற்படும் விளைவுகள் புவி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இதய நோய் சுவாச நோய்கள் மேலும் தீவிரமடைகிறது. அதிக வெப்பம் காரணம் பலரும் வெப்பத் தாக்குதலுக்குள்ளாகி மடிவதைக் காண்கிறோம்.

காற்று மண்டலத்தின் தாழ்வடுக்குகளில் ஓசோன் செறிவு அதிகரிக்கச் செய்கிறது. இது சுவாசப் பாதிப்பையும், நுரையீரல் பாதிப்பையும் உருவாக்குகிறது. ஆஸ்த்துமா நோயை மேலும் தீவிரமடைய செய்கின்றது. அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடும், அதிக வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது. அதற்குப் போட்டியாக மனிதனே விவசாய நிலங்களை கான்கிரீட் போட்டு மூடி விடுகிறான். இந்த பூமியின் மேற்பரப்பு எங்கும் ஏற்படும் வெப்ப உயர்வால் நீண்ட வறட்சியும் தண்ணீர் பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படும். பாலங்கள், ரோடுகள் போன்ற கட்டுமானங்கள் வெப்பத் தாக்குதல்களால் வலுவிழந்து அதன் பராமரிப்பு செலவு அதிகமாகி விடும். கடல் மட்டம் உயரும். பெரும்பாலான பெரிய வியாபார நகரங்கள் எல்லாம் கடற்கரையிலே உள்ளன. கடல் மட்டம் உயர்வதால் பல பெரும் நகரங்கள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. வான் மழை பொய்க்கும். துருவங்களின் பெரும் பனிக்கட்டிகள் உருகி மிகப்பெரும் வெள்ளச் சேதங்களையும், புவியியல் பாதிப்புகளையும் உருவாக்கும்.

அப்படி ஒரு அபாயம் இப்போது நம் தலைக்கு மேல் கத்தியாக இருக்கிறது.
இன்றைய தலைமுறையினரின் கடமை இன்றைய தலைமுறை இப்போது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். செடிகொடிகள் வளர்ப்பதிலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று முயற்சிப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தற்போது வளர்ந்து இருக்கும் மரங்களை பாதுகாப்பதிலும் நம்மைவிட இன்றைய தலைமுறையினர் துடிப்புடன் இருக்கிறார்கள்.
மலைப் பிரதேசங்களில், மரங்களை வெட்டிச் சாய்த்து அடுக்கு மாடி குடியிருப்புகள், உல்லாசக் குடியிருப்பு போன்றவற்றை கட்டுவதன் மூலம், அங்கே நிலத்தின் பிடிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இது கண்டிப்பாய் தடுக்கப்பட வேண்டும்.

சென்ற மழையின் போது, ஊட்டியில் நடந்த நிலச்சரிவு பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான இடங்கள் கூட இப்போது வெப்பமடைந்து வருகின்றன. ஊருக்கே குளிர்சாதன வசதி செய்தது போல் இருந்த இடங்களில் இப்போது குளிர்சாதன வசதியுடன் தங்குமிடங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன விஷயம்... குளிர்சாதனங்கள் குளிரூட்டுவதற்காக வேலை செய்யும் போது வெளிவிடும் நச்சு வாயு, சுற்றுப்புறச் சூழலை வெப்பமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைப் போன்ற சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உறைகளால் நிகழும் சுற்றுப்புறச் சீர்கேட்டையும் இளையோர்கள் கண்டிப்பாய் தடுத்திடல் வேண்டும்.
மழை நீர் சேமிப்பு தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும், கனமழை. ஆனால் இந்த மழை நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவற்றைத் தேக்கி வைக்கும் ஏரிகள் இன்று தூர்ந்து போய்விட்டன. அல்லது வீட்டுமனைகளாகவும், போக்குவரத்துப் பணிமனைகளாகவும், புதிய பேருந்து நிலையங்களாகவும் மாறிவிட்டன. ஏரிகளுக்கு மழை நீரை கொண்டு வரும் வாய்க்கால்கள் சரியாக பராமரிக்கப் படாமல் இருப்பதால் ஏரிகள் நிரம்புவதில்லை. இதனால் விலைமதிப்பற்ற மழை நீர் வீணாகிறது. மழை நீர் கடலில் சேர்ந்தால் யாருக்கு நன்மை?

அதை மண்ணுக்குள் சேர்த்தால் நம் அனைவருக்கும் நன்மை. இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து வேளாண் உற்பத்தி பெருகும். நம் குடிநீர் பஞ்சமும் தீரும்
மழை நீர் சேமிப்பால் கீழ்க்காணும் நன்மைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. நீர் பற்றாகுறை குறைகிறது. நீரின் கார அமில (PH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.

விவசாய நிலங்களில் மண்அரிப்பைத் தடுக்கிறது.
நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் செலவு குறைகிறது. மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெற உதவுகிறது. மழைநீர் சேமிப்பு பகுதியின் அருகிலுள்ள மரங்கள் மிக விரைவில் வளர்கின்றன. நகர்ப் புறங்களில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் காத்து சாலை போக்குவரத்தை தடையின்றி நடைபெற உதவுகிறது. நகர்ப் புறங்களில் நிறைய இடங்களில் நீர் தேங்குவதை தடுத்து நோய்கள் பரவுவதை தடுக்கின்றது.

சென்னை மாநகரில், 1,800 சதுர அடி கட்டட மேற்பரப்பு (அல்லது மொட்டைமாடி) உள்ள வீட்டில் மழைநீர்த் தொட்டியைப் பெரியதாகத் தரைக்குக் கீழே அமைக்க முடிந்தால், தற்போது பெய்யும் மழையளவுப்படி 58 நாளில் 1,00,800 லிட்டர் மழை நீரைச் சேமிக்க முடியும். இந்த நீர் தூய்மையானது. 6 நபர்கள் உள்ள ஒரு குடும்பம், இந்த நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். தற்போது சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 2 லிட்டர் நீரின் விலை குறைந்தபட்சம் இருபத்தி ஐந்து ரூபாய். அப்படியானால் இந்த மழை நீரில் பாதியைச் சேமிக்க முடிந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் பல லட்சம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும்.


பசுமை இல்லா பூமி பாலைவனம் மழை பெய்யவில்லை, ஆகவே விவசாயம் செய்ய முடியவில்லை என்றஅங்கலாய்ப்பையும் நிறையவே கேட்டு வருகிறோம். இதற்கு காரணம் நாம்தான். மரங்கள் வெட்டப்பட்டு விளை நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிது புதிதாக பல நகர்கள் இரவோடு இரவாக முளைத்து வருகின்றன. நீர்நிலையுள்ள இடங்களில் கூட இது பரவி வருவது பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டால், உணவுக்கு... வீடுகளின் மொட்டைமாடிகளில் காய்கறி செடிகள், பூஞ்செடிகளை பயிரிட வேண்டிய நிலை ஏற்படும். நம்முடைய சந்ததியினருக்கு எத்தகைய உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம்? எல்லா இயற்கைச் செல்வங்களையும் சுரண்டிய பின்னர், அவர்களுக்கென்று என்ன மீதம் விட்டு வைக்கப் போகிறோம்?

பசுமையைப் பறிகொடுத்து விட்டுப் பாலைவனமாய் நிற்கும் பூமியைத்தான் மீதம் வைக்க முடியும்.
மரம் தரும் பலன்கள் மலர்கள், காய், கனிகள் தருகிறது. நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது. காற்றை சுத்தப்படுத்துகிறது. நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது. மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

1. ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.


2. ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.

3. ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.


4. ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.


ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.


மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும்.

அந்த பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.

ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.
மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்" என்கிறது குறள். "பெருந்தன்மை உள்ளவனிடத்தில் உள்ள செல்வம்; அனைத்து பாகங்களையும் மருந்தாய் தரும் மரத்திற்கு ஒப்பாகும்" என்று மரத்திற்கு பெருமை சேர்க்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்!

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கில் முதலிடமும், புங்க மரம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆற்றலும் காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் ஆற்றலும், அத்துடன் காற்றில் கலந்துள்ள Anthro cyanine என்னும் நச்சு வாயுவை ஈர்த்துக்கொள்ளும் (கொல்லும்) ஆற்றலும் உள்ளடக்கிய மரமான வேம்பு
தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும் நெல்லி உடலுக்கு முறுக்கு தந்திடும் முருங்கை காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளித்து, விஷத்தை முறித்து, வாய் புண்ணை ஆற்றும் எலுமிச்சை நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தி விடும் கடுக்காய் சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படும் வில்வம். கண் பார்வைக் கோளாறுகளுக்கும், எலும்புகள் பலமடையவும், புண்கள் விரைவில் ஆறவும் உதவும் கருவேப்பிலை குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையான பழத்தினை தரும் நாவல் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கும் அத்தி பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படும் ஆலமரம் உடலில் இருக்கும் தேவையற்ற ரசாயன நஞ்சை நீக்கும் நல்ல மருந்து அகத்தி மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டதும் . .

18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றுள்ள மரமான அவுரி
என்று எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டு மனித சமுதாயம் நோயற்று வாழ்வதற்கு ஒருதாயைப்போல ஏராளமான மரங்கள் உதவுகின்றன. மரங்கள், காய்களாகவும், கனிகளாகவும், கீரை வகைகள் என்றும் மனிதனுக்கு பலவழிகளில் உணவைத் தருகின்றன. இவைகள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடையாக விளங்குகின்றன. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான சுவைமிகுந்த உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.

வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். அந்த நேரத்தை பயனுள்ளதாக்க வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.


மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.


மரங்களே மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.
மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும் போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. கோடையில் வெப்பக் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.
உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக - எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரங்களை பேணுவோம்! மனிதராய் மாறுவோம்!
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் வளத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இயற்கை நமக்கு கொடையாக வழங்கியுள்ள மரம் செடிகளை நிறைய வளர்க்க வேண்டும். மரம் செடிகள் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனால் சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தாவரங்களின் சேவை நமக்கு தேவைப்படுகிறது. நமக்கு சொந்த வீடோ, வாடகை வீடோ இருக்கட்டும், நம் வீட்டை சுற்றி நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவோம். சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு பங்காற்றிட உறுதி கொள்வோம்!
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! வளம் அடைவோம்!
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner