மிளகு வெங்காயக்குழம்பு.
தேவையான பொருட்கள் = பெரிய வெங்காயம் 6, தக்காளிப்பழம் 100 கிராம், மிளகாய் வற்றல் 2, தனியா 2 டீஸ்பூன், துவரம்பருப்பு 2 டீஸ்பூன், மிளகு கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், புளி கொட்டைப்பாக்களவு, கருவேப்பிலை, தாளிப்பதற்கு நெய் தேவையான அளவு.
செய்முறை = தக்காளிப்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும், வெங்காயத்தை அரிந்து வதக்கி வைத்துக்கொள்ளவும், எண்ணைவிடாமல் மிளகாய், தனியா, துவரம்பருப்பு, மிளகு முதலியவற்றைத் தனித்தனியாக வறுக்கவும், புளி, கருவேப்பிலை, உப்பு, வறுத்தசாமான்கள், வெங்காயம் முதலியவற்றை மசிய அரைக்கவும், மிக்ஸியில் அல்லது அம்மியில் அரைக்கலாம். கற்சட்டி அல்லது களிம்பேறாத பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைக்கவும். நன்றாக கொதித்து நான்கு கப் அளவிற்கு வற்றியவுடன் எடுத்து விடவும். கடுகு தாளித்து தக்காளிப்பழ சாற்றை கலந்து உபயோகப்படுத்தவும்.

0 comments:
Post a Comment