பெண்களின் உடல் ஆண்களில் இருந்து மாறுபட்டது. அந்த பிரத்யேக உடலமைப்பை ஒட்டி அவளுக்கென்றே சில நோய்கள் வருவதுண்டு. இந்த கேன்சர்களும் அப்படிப்பட்டதுதான். ஆனால், அவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்று சொல்கிறார் டாக்டர் லலிதா சுப்ரமணியன்!
இதோ, பெண்களுக்கு அதிகம் வரும் கேன்சர்கள் பற்றியும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளும் பற்றிச் சொல்கிறார்..!
கருப்பை புற்றுநோய்
கருப்பையில் தோன்றும் இந்த நோய் பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிகிறது. ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் பெண்களில் 63 பேர் கருப்பை கேன்சரால் பாதிக்கப்படுகிறார்கள்.
என்ன அறிகுறி தெரியும்?
வயிறு வலி, உணவு செரிக்காமல் ஏப்பம், வயிறு வீக்கம் ஏற்படுதல் சிறிய அளவு உணவிலேயே வயிறு நிரம்பிய உணர்வு. அடிவயிற்றில் கனம், வாந்தி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசியின்மை, காரணமின்றி அதிகமாக பீரியட்ஸ் ஏற்படுதல்
இந்த கேன்சர் வரக்காரணம் என்ன?
குறிப்பிடத்தக்க காரணம் ஏதும் இல்லை. ஆனால்
ஏற்கெனவே குடும்பத்தில் உள்ள பாட்டிக்கோ, அம்மாவுக்கோ இந்த கேன்சர் இருந்தால் 4 முதல் 5 சதவீதம் வரை ரிஸ்க்குள்ளது.
குழந்தை இல்லாதவர்களுக்கும், சினை முட்டை ஊக்குவிக்கும் மருந்துகள் எடுத்துக் கொண்டவர்களுக்கும்,
மாதவிலக்கு நின்றவர்களுக்குத் தரும் ஹார்மோன் மாத்திரைகளும் சிறிய அளவில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.
எப்படிக் கண்டுபிடிப்பது?
பெண்களுக்கு உள் பரிசோதனை மூலமாகவும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன் மூலமாகவும்.
ஏன் இந்நோயினால் அதிகம் பெண்கள் இறக்கிறார்கள்?
1. நோயின் அறிகுறிகள் தெரியும் முன்பே அதை அறிந்து கொள்ள எந்த பரிசோதனையும் தற்போது இல்லை.
இந்த வகை கேன்சர்கள் பெரும்பாலும் முற்றியநிலையிலேயே தெரிய வருவதால்தான் இதில் உயிரிழப்பு அதிகம்.
சிகிச்சை முறைகள்:
வயிற்றில் முதலில் அறுவை சிகிச்சை செய்து கட்டி மற்றும் அது பரவும் வாய்ப்புகள் உள்ள அதன் அருகிலுள்ள சிறு உறுப்புகளையும் சேர்த்து அகற்றுவார்கள் அதன் பிறகு மருந்துகளும் 21 நாட்களுக்கு ஒரு முறை வீதம் ஆறு முறை செலுத்த வேண்டும். முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு முதலில் புற்றுநோய் மருந்துகளை செலுத்தி வயிற்றில் உள்ள நீரையும் கட்டியையும் குறைத்த பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.
மார்பக புற்றுநோய்
பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது.
என்ன காரணத்தால் வருகிறது?
குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. அணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் இந்தவகை புற்றுநோய் ஏற்படுகிறது.
திருமணமாகாதவர்கள் மற்றும் குழந்தையில்லாதவர்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு
அபாயம் எப்போது அதிகமாகிறது?
60வயது முதல் 70வயது வரை 4ல் ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்னைகள் வரலாம்.
தாயோ, சகோதரியோ மார்பக புற்றுநோய் உடையவராக இருந்தால் வரலாம்.
மாதவிலக்கு ஒன்பது வயதுக்கு முன்னாலும் 55 வயதுக்குமேலும் இருந்தால் வரலாம்.
முப்பது வயதுக்கு மேலே முதல் குழந்தையை பெற்றெடுத்தவர்களுக்கு..
குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு..
சிகிச்சைக்கென சிறுவயதில் கதிர் வீச்சு முறை அளிக்கப்பட்டிருந்தால்...
அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு...
அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு....
இந்த கேன்சர் வரும் அபாயத்தை எப்படிக் குறைப்பது?
உடற்பயிற்சி, கொழுப்புச் சத்தைத் தவிர்த்தல், பழவகைகள், இயற்கை உணவுகள் அதிகம் உட்கொள்ளுதல் சோயா புரோட்டீனும் லைகோபின், சத்துள்ள தக்காளி போன்ற காய்கறிகள், பீடாகரோடின் உள்ள காரட், பூசணிக்காய், செலரி எனப்படும் தாவர வகை உணவு அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மார்பக சுய பரிசோதனை
மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் யாவை?
ஆரம்ப நிலையில் எனில்,
வலியில்லாமல் கட்டி, புண், மார்பகப் காம்பிலிருந்து நீர் வடிதல்,கை அக்குளில் கட்டிகள் தெரியலாம்.
முற்றிய நிலையில் எனில்,
இருமல் மூச்சுத் திணறல், உடலில் எலும்புகளில் வலி ஏற்படலாம்.
எப்படி கண்டுபிடிப்பது?
கட்டியிலிருந்து நீரை எடுத்து திசுப் பரிசோதனை செய்யலாம்.
மோமோகிராம் எனப்படும் மார்பக கதிர் படமும் எடுத்துக் கொள்ளலாம்.
எக்ஸ்ரே மார்புக்கு, நுரையீரலுக்கு
அலட்ரா சவுண்டு பரிசோதனை, வயிறுக்கும்.
உடலில் எலும்புகளுக்கு எலும்பு ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
மார்பகப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்?
அறுவை சிகிச்சை மார்பகத்தை முற்றிலும் அல்லது கட்டியை மட்டும் சுற்றி அகற்றுவது. பின்னர் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கவேண்டும். அனைத்து மார்பகப் புற்றுநோயாளிகளுக்கும் புற்றுநோய் மருந்துகளை ஊசி மூலம் அளிக்கப்படுகிறது. பின்னர் திசுப்பரிசோதனை முடிவில் குறிப்பிட்ட சிலருக்கு ஹார்மோன் மாத்திரைகள் ஐந்து வருடங்களுக்கு உட்கொள்ள வேண்டும். வருடந்தோறும் மோமோகிராம் மார்பக எக்ஸ்ரே, ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய்
உலகில் மூன்றாவது முக்கிய பரவலான புற்றுநோய் இது. பெண்களுக்கு ஏற்படும் இந்தப் புற்றுநோய் இரண்டாம் இடம் வகிக்கிறது.
5000 புதிய நோயாளிகள் வருடந்தோறும் பாதிக்கப்படுகின்றனர்.
இரண்டு லட்சம் பெண்கள் இந்நோயினால் இறக்கின்றனர்.
முற்றிலும் குணமடையக்கூடிய ஒரு நோய்.
யாருக்கு ஏற்படலாம்?
வைரஸ் .... என்னும் கிருமி 16வயது 20,30 வயதில் உள்ள இளம் பெண்களின் கருப்பையின் கழுத்துப் பகுதியில் வேரூன்றும்பொழுது 20 வருடங்கள் கழித்து புற்றுநோய் ஏற்படலாம். புகைபிடிப்பது. உடலில் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்ளும்போது.
கர்ப்பை கழுத்தில் தோன்றும் புற்றுநோய்யை எவ்வாறு தடுக்கலாம்?
உடலுறவின் மூலம் ஏற்படும் தொற்று நோய்கள் வராமல் தடுத்தல், உடல் சுத்தத்தில் கவனம் கொள்ளுதல்.
மிகச்சிறிய வயதில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
யாருக்கு பாப்ஸ்மியர் செய்யவேண்டும்?
18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள பெண்களுக்கு. 40 வயதுக்கு மேல் வருடந்தோறும் செய்ய வேண்டும்.
மூன்று தொடர் சோதனைகள் நன்றாக இருந்தால், மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொண்டால் போதும்.
யாருக்கெல்லாம் இந்த டெஸ்ட் செய்ய வேண்டும்?
அதிகமான குழந்தைகளைப் பெற்றவர்கள்.
அதிக அளவில் பலருடன் உடலுறவு கொள்பவர்கள்.
புற்றுநோயாக மாறுவதற்கு முந்தைய நிலையில் உள்ள புண்களை எவ்வாறு குணப்படுத்தலாம்?
கோல்போஸ்கோபி என்ற கருவி மூலம் சதைப் பரிசோதனை செய்ய திசு எடுத்து விடுவார்கள்.
அசெடிக் அமிலம் மற்றும் ஐயோடின் திரவம் ஊற்றி எந்த இடம் மாறுபட்டுத் தெரிகிறதோ அதனை திசுப் பரிசோதனை செய்ய வேண்டும்.
கோன்பயாப்ஸியை லேசர் கருவி கொண்டு மேற்கொள்ளலாம்.
4. கருப்பையின் கழுத்தின் உள்பகுதியில் உள்ள திசுக்களைக் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
5. முதல் நிலை இரண்டாம் நிலையில் உள்ள புண்களை க்ரையோ சிகிச்சை மூலமாகவும் காட்டரி சிகிச்சை மூலமாகவும் லேசர் சிகிச்சை மூலமாகவும் இந்தப் புண்களை முற்றிலும் அகற்றிவிடலாம்.
6. வயது முதிர்ந்த பெண்களெனில் புண்களை நீக்க கர்ப்பப்பையை அகற்றிவிடலாம்.
புற்றுநோய் வந்த பிறகு சரி செய்ய முடியுமா?
ஒன்றாம் நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரி செய்யலாம்! இந்நிலையில் கதிர்வீச்சு சிகிச்சை முறையும் சமஅளவு பயனளிக்கும்.
இரண்டாம் மூன்றாம் நிலையிலும் கதிர்வீச்சு சிகிச்சையே பெரும்பாலும் மேற்கொள்ள வேண்டும்.
சரியான முறையில் குறிப்பிட்ட கால அளவில் கதிர் வீச்சு சிகிச்சை மேற்கொண்டால் இந்த நோயிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம். தற்போது பாதிக்கப்பட்ட பலர் புற்றுநோய் அல்லாத வேறு காரணங்களாலேயே பெரும்பாலும் இறக்கின்றனர்.
கதிர் வீச்சு சிகிச்சைக்குப் பயப்படக் காரணமே அதனைப் பற்றிய வீண் பயமும் கற்பனையும்தான்.
தற்போதைய உலகில் வசதியான உபகரணங்கள் மூலம் நோய் இருக்கும் பகுதியையும் அதனருகில் பரவியுள்ள மற்றும் பரவ ஏதுவாக உள்ள இடங்களையும் குறி வைத்துத் தாக்கி நோயிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.
0 comments:
Post a Comment