நாம் எப்படி உட்கார்ந்து (அல்லது நின்று, படுத்து) ஒரு வேலையைச் செய்கிறோம் என்பதுதான் நமக்கு முதுகுவலி வருவதற்கு முக்கியமான காரணம். முதுகை வளைத்தபடி பைக் ஓட்டுவது, கனமான மெத்தையில் படுப்பது, குனிந்து சேரில் அமர்ந்தபடி எழுதுவது, ஒரு பக்கம் சாய்ந்தபடி நிற்பது, குனிந்து ஒரு பொருளை எடுப்பது என்று பல தவறான போஸ்களில்தான் நாம் பெரும்பாலும் பணியாற்றுகிறோம். அதுதான் பிற்காலத்தில் முதுகு வலியாக பிரச்னை ஏற்படுத்துகிறது. இதோ, எந்த போஸ் சரி, எது தவறு என்று விளக்குகிறார் பிஸியோதெரபிஸ்ட் டாக்டர் ப. கிருஷ்ணன்.
முதுகு வலிக்கு என்ன தீர்வு?
சொல்கிறார் எலும்புநோய் டாக்டர் டேனியல்
பெண்களின் 40 வயதுகளில் அதிகம் பாதிக்கப்படுவது முதுகு மற்றும் இடுப்பு வலியால்தான். அதிலும் தினமும் 20-30 கி.மீக்கு மேல் டூ-வீலர் ஓட்டுபவர்களுக்கு எலும்புத் தேய்வு அதிகம் ஏற்படுவதால் முதுகுவலி தவிர்க்க முடியாது. இதற்கு தைலம் மாத்திரைகள், குழந்தையை விட்டு மிதிக்கச் சொல்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு ட்ரீட்மெண்ட்டை வைத்திருக்கிறார்கள். இதில் தைலம், மாத்திரைகள் ஒருவிதமான சைட் எஃபெக்ட்டுகளை ஏற்படுத்தும் என்றால், கடைசியாக உள்ள மீதி வைத்தியத்தால் முதுகெலும்பின் இடைத்தட்டு நழுவி டிஸ்க் ப்ரோல்ப்ஸ் என்ற நிரந்தர நோய்க்கேகூட வழி வகுத்துவிடும். அதனால் முதுகு வலிக்கு உரிய ட்ரீட்மெண்ட் மற்றும் எக்ஸர்சைஸ் செய்து நிரந்தர நிவாரணம் பெற வழி தேட வேண்டும்.
இதில் நோயின் காரணத்தைச் சரியாக கண்டுபிடிப்பது தான் முதல்படி. சிறுநீரகக் கல்லால் வரும் வலி, முதுகெலும்புத் தட்டு நழுவியதால் ஏற்படும் வலி, முதுகெலும்பு தேய்ந்தால் வரும் வலி என ஏற்படும் வலிகளில் இவற்றில் எதனால் முதுகுவலி ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொண்டு ட்ரீட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.
அதிலும், 75% முதுகு மற்றும் இடுப்பு வலியை உணவு, உடற்பயிற்சி மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலமே சரி செய்ய முடியும்.
பழக்க வழக்கங்களின் மூலம் முதுகு மற்றும் இடுப்பு வலியை எப்படி சரிசெய்வது?
அதிகமாக வாகன சவாரி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. முதுகெலும்பை ஸ்ட்ரெச் செய்ய உதவும் உடற்பயிற்சிகளான, குப்புறப்படுத்து ஒவ்வொரு காலாகவும் பின் இரு காலையும், (மூட்டு வளைக்காமல்) உயர்த்துவது, ஒரே சமயத்தில் முன் பக்க உடலையும் கால்களையும் உயர்த்தி வயிறு தரையில் இருக்கும்படியாகச் செய்வது, மகாமுத்ரா, யோகமுத்ரா ஆசனங்களைச் செய்வது முதுகுவலிக்கு நல்ல தீர்வு. குளிர்ந்த உணவும் கூட முதுகுவலியை அதிகரிக்கும். பெண்களுக்கு 40 வயதுகளில் ஏற்படும் முதுகுவலிக்கு பெரும்பாலும் ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக இருக்கக்கூடும். அதற்குத் தீர்வு கால்சியம் கையில் உள்ளது.
0 comments:
Post a Comment