Ads Header

Pages


23 April 2012

வளமான வாழ்விற்கு உணவே மருந்து!

ஆரோக்கியமான வாழ்க்கை வாழத்தான் நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படைத் தேவையாகும். வயிறு பசி ஆற மட்டும் உண்டால் போதும் என்ற கணக்கெல்லாம் செய்து கொள்ளாமல், நல்ல சாப்பாடு சாப்பிடத்தான் வாழ்கிறோம் என்று எண்ணினால், நோய் நொடியற்ற வாழ்க்கை வாழலாம். நல்ல உணவு முறையைப் பின்பற்றினால், தோல் நோய், கறுத்த சருமம், சொறி, அரிப்பு, உலர் சருமம் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கலாம்.

இப்போது எதற்கெல்லாமோ ‘ரெடிமேட்’ வந்துவிட்டது. குழந்தைகளின் ‘பிரேக்ஃபாஸ்ட்’ என்ற பெயரில் ரெடிமேட் வகையறாக்கள், குழம்பு பேஸ்ட், புளியோதரை மிக்ஸ், ரெடிமேட் இட்லி, தோசை, உப்புமா மற்றும் இனிப்பு வகையறாக்கள், அவ்வளவு ஏன் புளியோதரை, எலுமிச்சை, வத்தக்குழம்புகூட ரெடிமேட் பேக்கில் விற்கப்படுகிறது. இவற்றைப் பதப்படுத்த ரசாயனம் கலக்கப்படுகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், வெறும் ரெடிமேட் உணவு வகைகளையே சாப்பிட்டு உடலை வளர்த்தால் உடல் கோளாறு ஏற்படாமல் தவிர்க்க என்ன முயற்சி செய்தாலும் முடியாது. அளவுக்கதிகமான தானியங்கள், பால்பொருட்கள் ஆகியவற்றை உண்டால் உடல் என்னாவது? பழங்களையும் காய்கறிகளையும் முக்கியமாக கீரை வகைகளையும் அன்றாட உணவு வகைகளாக சேர்க்காமல் ஒதுக்கினால், அதைவிட தீங்கு வேறு ஏதும் இல்லை என்பதோடு உடலுக்கு அத்தியாவசிய தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடும்.

பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் அளவான தானிய வகைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உடல் உபாதைகள், பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மகப்பேறு பாதுகாப்பு, உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வது போன்ற பல ஆரோக்கியமான வழிவகைகளைப் பெறமுடியும்.

நீங்கள் பின்வருவனவற்றைப் பின்பற்றினால் போதும்.

தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் மிக மிக அவசியம். வைட்டமின் ஏ நிறைந்த பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவையும் பூசணிக்காய், பரங்கிக்காய், பாகற்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை, புளி, மோர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாம்பார், ரசம் போன்றவற்றில் இவற்றைச் சேர்ப்பதாலும் அல்லது கூட்டு, பொரியல் செய்தோ சாப்பிடுவது சிறந்து பலனை அளிக்கும்.

அதேபோல், தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். முளைக்கீரை, அரைக்கீரை பசலைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை ஆகியவற்றில் கூட்டோ, பொரியலோ செய்து சாப்பிடலாம் அதுபோன்றே தினமும் அருகம்புல் ஜூஸ், தேன் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை கிடைக்காத பட்சத்தில் கறிவேப்பிலை கொத்தமல்லி, புதினா துவையல் செய்து சாப்பிடலாம். மதிய நேரங்களில் உலர் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு, வேக வைத்த பயிறு வகைகள், சோயா பால் மிகவும் உகந்ததாகும்.

இரவு நேரங்களில் படுக்கப்போவதற்கு அரை மணி முன்பாக ஒரு டம்ளர் பாலில் பனங்கற்கண்டு, தேன் சேர்த்து சாப்பிடுவது இரவு நல்ல நித்திரையளிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது ஆகும். அதுபோன்றே காலை, மாலை என இருவேளை நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசித்து இரத்த ஓட்டத்தை சீராக்கிக் கொள்வதோடு இப்பயிற்சிகளை தினமும் அனுசரிப்பது நமது இதயத்திற்கு மிகவும் பலத்தை அளிக்கும். அன்றாடம் குளிப்பதற்குக்கூட அதிகமாக சோப்பை பயன்படுத்தாமல் கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளித்தல் மற்றும் வாரம் ஒரு தடவை எண்ணெய்க் குளியலும் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்ததாகும்.

வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை அணிவதும் உடல் உஷ்ணத்திற்கு ஏற்றமானதாகும். இவ்வாறாக, உடலைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கை உணவை நாம் தினமும் பழக்கப்படுத்திக் கொள்வதோடு கூடுமான வரை மனதில் கவலைகளுக்கு இடம் கொடுக்காமல் பிரார்த்தனை, தியானம், மனதை ஒருமுகப்படுத் தும் பயிற்சிகள், யோகா போன்றவற்றை அனுச ரிப்பதாலும் மனதில் எப்போதும் குதூகலமும் அமைதியும் ஏற்படும். மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் வாழ்வது ஒரு முறைதான் _ வாழ்க்கை வாழ் வதற்கே. அதற்கு உணவே மருந்தாக இறைவன் அளித்துள்ளான். சிறந்த உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.

நோய்களும் சிகிச்சைகளும்

முதலில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சமையல் உணவுகளினால்தான் மனிதன் பல்வேறு நோய்களுக்கு உட்பட நேரிடுகிறது. நோயாளியான மனிதன் ஒரு மீன் மாதிரி. மீன் தண்ணீரீல் மட்டும்தான் வாழ முடியும். நான் தரையில்தான் இருப்பேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்றால், யாரால் காப்பாற்ற முடியும்?

ஆஸ்துமா, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோயாளிகள் (சாகும்வரை மருந்தை உணவாக சாப்பிடத் தயாராக இருப்பவர்கள்) முழு இயற்கை உணவில்தான் உண்மையான ஆரோக்கியம் பெற முடியும். அவர்கள் சமைத்த உணவையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுடைய ஆரோக்கி யத்தை நாம் காப்பாற்றுவது கடினம். அந்த நோயாளிகள் மருந்து மாத்திரை, ஊசிகள் மூலம் நோய்கள் நீங்கப் பெற்றாலும் அதற்குப் பிறகும் கூட ஒரு ஆரோக்கியமான மனிதனைப் போல சாப்பிடவோ, நடக்கவோ, ஓடவோ, வேலைகள் செய்யவோ முடியாமல் நோயாளியைப் போலவே வாழ்ந்திடும் நிலை ஏற்படுகிறது. எனவே, மீன் நிலையிலுள்ள நோயாளி மனிதன் முற்றிலும் சமையல் உணவை நிறுத்தி, பழம், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றைச் சாப்பிட ஆரம்பித்தால் இழந்த ஆரோக்கியத்தை மீளப் பெற முடியும்.

எனவே தன்னுடைய தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் மீன் நிலைக்குத் தள்ளப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அளவாகச் சாப்பிட்டு ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு மேல் சாப்பிடாமல் 24 மணி நேரமும் பசித்துக் கொண்டு இருக்கும்படி சிகிச்சை பெற வேண்டும். பசி இருந்துகொண்டே இருந்தால் ஓரளவு ஜீவகாந்த சக்தி மீதி இருக்கின்றது என்று அர்த்தம். அந்த சக்திதான் நோய் குணமடைய உதவி செய்யும் என்று அர்த்தம். மருந்துகளின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரட்டஸ் கூறுகிறார், ‘‘நோயாளிகளுக்குக் கொடுக்கும் அதிகமான உணவு அதிக தொல்லை தரும். மனிதனுடைய உணவு மருந்தாக வேண்டும். மருந்தே உணவாக இருக்க வேண்டும்’’ என்று.

எந்தக் காரணங்களினால் ஆஸ்துமா வந்தாலும் அது எப்படிப்பட்ட ஆஸ்துமாவாக இருந்தாலும் இயற்கை உணவில் இனிமையாக குணம் பெறலாம். மூச்சுத் திணறல் ஏற்பட்டவுடன் நோயாளிகள் அஹிம்சை எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீரில் சிறிது தேன் கலந்து ஒரு டம்ளர் வரை சாப்பிடலாம். இவ்வாறு மூன்று நாட்கள் முடிந்தவரை பட்டினியாக இருந்தால் உடல் சுத்தம் அடைந்து நுரையீரலில் அடை பட்டிருந்த சளி, வெளியேறத் துவங்கிவிடும். முதலில் பல காய்கறிகளும், பழங்களும் சாப்பிட் டால், அலர்ஜி என்று சாப்பிடாமலிருந்தவர்கள் இந்த மூன்று நாள் பட்டினிக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தால் உடல் ஏற்றம் கொள்ளும். தினசரி காலையிலும், மாலையிலும் அரை மணி நேரம் தொட்டில் குளியல் அல்லது முதுகுத்தண்டு குளியல், அல்லது ஈரத்துணி குளியல் எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஆஸ்துமா வருவதற்கான முக்கியக் காரணமான சமைத்த உணவு வகைகள், பால் சம்பந்தப்பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்த்தல் வேண்டும். இயற்கை காபி அல்லது இயற்கை டீ போன்றவற்றை பனை வெல்லத் தோடு சேர்த்துப் பருகலாம். தூதுவளை, துளசி, வெற்றிலை இவற்றில் கைப்பிடியில் பாதியளவு எடுத்து மென்று சாப்பிட்டு சக்கையைத் துப்பி விடவும். மதிய உணவு கீழ்க்காணும் விதத்தில் அமைவது சாலச் சிறந்தது.

சாதம் ஒரு கரண்டி _ கொத்தமல்லி அல்லது புதினா சட்னி _ சமைத்த காய்கறிகள் இரண்டு கரண்டி _ சமைக்காத காய்கறிகளின் பச்சடி 2 கரண்டி _ தக்காளி, வெங்காயம் நறுக்கிய தேங்காய்த் துருவல் போட்டுக் கலந்த முளைவிட்ட பயிறு தானியங்கள் ஒரு கரண்டி _ நறுக்கிய இயற்கைப்பழங்கள் (ஆப்பிள், சப்போட்டா, மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை) போன்றவற்றை யும் மேலே கூறியபடி சாதம் ஒரு பங்கும் மீதி எல்லாம் சேர்த்து பத்துப் பங்காக அமைத்துக் கொள்ளவும்.

உணவே மருந்து

பச்சைக் காய்கறிகளைப் பற்றி தகவல்களைத் தந்து, அவற்றின் மூலம் ஒரு சில நோய்கள் வரும் முன் அவற்றிலிருந்து தற்காத்து தடுத்துக் கொள்ளவும், நோய்கள் வந்த பின் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மருத்துவக் குறிப்புகளையும் தந்து ‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’’ என்பதை தெளிவுபடுத்த முயன்றுள்ளேன்.

இயற்கையின் படைப்பில்தான் எவ்வளவு விந்தைகள்! இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகில் தினம் தினம் புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள், புதுப்புது மாற்றங்கள் என மாறிவரும் நாகரிகங்களின் வளர்ச்சிக்கேற்ப புதுப்புது நோய்களும் ஏற்பட்டு மனித குலத்திற்கு சவால் விட்ட வண்ணம் அச்சுறுத்தலை தந்து கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. அதுபோன்றே கடந்த ஆண்டு இயற்கை சீற்றமாய் வெளிப்பட்ட சுனாமியின் தாக்கம், தொடர்ந்து பூகம்பம், வெள்ளம், கேதரீனா மற்றும் ரீட்டா போன்ற புயல். அப்பப்பா! நினைத்துப் பார்த்தால், இயற்கையின் தாக்கம் என்பது, உலகை அச்சுறுத்துகின்ற நிலையில், அனைவரையும் பீதியடையச் செய்வது என்பது நியாயம்தானே!

இவற்றையெல்லாம் ஒரு சில நேரம் நினைத்துப் பார்த்து, சிந்தித்துச் செயல்பட முற்பட்டால் மனிதர்களின் வாழ்வில் முன்னேற்றங்களும், இயற்கைக்கு எதிராகச் செய்யும் காரியங்களின் விபரீதங்களும் புரிந்துவிடும்.

அதிலும் மனிதனின் ஆரோக்கியம் என்பது இயற்கையின் அமைப்பில் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பதோடு இயற்கையாகவே கிடைக்கும் பச்சைக் காய்கறிகள், கீரை, கனி வகைகள், மூலிகைப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை முறையாக உபயோகப்படுத்தும் வழி வகைகளை எண்ணற்ற நூல்கள் மற்றும் மருத்துவ உரைகள் மூலம் அறியும் வாய்ப்புகள் இருக்கும்போது, அவற்றை முறையாக நாம் பின்பற்றுகிறோமா என்றால் அதுதான் இல்லை. எனவே அடிப்படையில் வள்ளுவர் குறளில் காட்டிய ‘‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’’ என்பதற்கேற்ப, நாம் அனைவரும், வாழ்கின்ற காலத்தில் நோயின்றி நலமும் வளமும் சூழ வாழ்ந்திட, இத்தகைய இயற்கை உணவினை உட்கொள்ளுவதுதான் சாலச் சிறந்தது.

கட்டுரையின் தொடக்கத்தில் கூறியபடி, காய்கறிகள் என்றால் நமக்கு உடனே நினைவில் வருவது, அன்றாடம் புத்தம் புதிதாய் நம் வீட்டு பின்புறத்தில் விளையும் காய்கறிகளான, கத்தரி, வெண்டை, பூசணி, பரங்கி, கொத்தவரங்காய், அவரை, இஞ்சி, நாட்டுத் தக்காளி, முருங்கை, அருநெல்லி, சுண்டைக்காய், புடலை, வாழைக்காய், பாகற்காய், தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கீரை வகைகளான தண்டுக்கீரை, புதினா, மல்லி, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக்கீரை, பச்சை கொத்தமல்லி ஆகியவற்றோடு நார்த்தை, மாங்காய், மாதுளை, பலா, வாழை மற்றும் விதவிதமான மலர்ச்செடிகள் என எவ்வளவு வகைகள்.

அதுவும் விடியற் காலைப்பொழுதில், அவற்றைப் பார்த்து ரசித்து, அன்றைய சமையலுக்கு என மார்க்கெட் பக்கம் கூட செல்லத் தேவையின்றி, நாம் விளைத்த உணவுப் பயிர் வகைகள் என்ற மகிழ்வில் சமைத்து சாப்பிடுவோமே, அதன் சுவையும், அதன் மருத்துவக் குணங்களும், இன்று நாம், டின் ஃபுட் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் என்ற செயற்கைப் பண்டங்களின் மூலம் பெறுகிறோமா அல்லது வாய்க்கு ருசியாகத்தான் சாப்பிட முடிகிறதா என்பதே என் கேள்வி? நம் நாட்டில் ஒரு சில காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் கனி வகைகள் ஒரு சில சீசன்களில் மட்டும்தான் விளையும் அல்லது கிடைக்கும். ஆனால் கத்தரி, வெண்டை, முட்டைக் கோஸ், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், காலி ஃபிளவர், பீட்ரூட், புரக்கோலி, பூசணி, பரங்கி பாகற்காய், சுண்டைக்காய், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் என அனைத்துமே எளிதாய் விற்கப்படுவதால், அவற்றை நமது அன்றாட உணவில், பக்குவமாக சுவைகூட்டிச் சமைத்து உண்போமானால், அப்புறம் நோய்க்கு இடமேது!

An Apple a day keeps the Doctor away என்ற பழமொழிக்கேற்ப ஆப்பிள் பழம் இருக்கிறதே, அதன் நிறமும், தரமும், அளவும், சுவையும் மிகவும் தனித்தன்மையுடையதாகும். அன்றாடம் ஒவ்வொருவரும் அவசியம் ஆப்பிளை சாப்பிட்டாலே போதும். இரத்தக் கொதிப்பு, சுகர் மற்றும் மூட்டு வலி என்ற உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏன் பிற நோய்களும் தோன்றாது என அறுதியிட்டுக் கூறலாம்.

சிலவகை நோய்களும்

இயற்கை மருத்துவ சிகிச்சையும்

இரத்தக் கொதிப்பு நோய்

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். உடலியல் தொடர்பான பிணிகள் மற்றும் மனோ தத்துவ ரீதியிலான பிணிகள் என்று. ஒரு சில நோய்கள் மனமும் உடலும் சார்ந்த பிணி எனப்படுகிறது. இந்த நோய்க்கான மருத்துவத்தில் ஒரு நல்ல அம்சம் இதைப் பூரணமாக குணப்படுத்தி விடலாம் என்பதே. மன எழுச்சிகளும், பதற்றமும், கவலையும் உடலில் பிரதிபலித்து பிணியாக உருவாகி விடுகிறது.

‘பிளட் பிரஷர்’ எனும் இரத்த அழுத்தம் (இரத்தக் கொதிப்பு) நமது உடலில் 24 மணி நேரமும் இயங்கும் இதயம் மற்றும் அதன் இரத்த ஓட்டம் தொடர்பானதாகும். உடலுக்குள் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும் இரத்தம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில், அழுத்தத்துடன் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்தது, மருத்துவ ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி ஹார்வியின் கண்டுபிடிப்பு ஆகும்.

இயற்கையான இரத்த அழுத்தம் அதிகப்படும் போதுதான் அது நோயாகிறது. அதனால் பல தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்திற்கும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் இரத்தக் குழாய்களும் தான் இருதயத்தின் சீரான நிலைக்கு முக்கியமாகும். இருதயம் சுருங்கி இரத்தத்தைப் பம்ப் செய்யும்பொழுது இரத்த அழுத்தம் கூடுதலாகவும், இருதயம் விரிந்த நிலைக்குத் திரும்பும்போது இரத்த அழுத்தம் குறைவாகவும் கணக்கிடப்படுகிறது. இருதய துடிப்பிற்கேற்ப இரத்த அழுத்தம் ஒவ்வொரு கணமும் நம் உடலுக்குள் மாறி மாறி நிலவுகிறது.

இவ்வாறு இயல்பாகவே சீரான இரத்த அழுத்தம் நிலவுவதால் தான் உடல் முழுவதும் இரத்தம் ஓடி தன் பணியைச் செய்கிறது. எனவே இரத்த அழுத்தம் என்பது ஓர் இயற்கையான உடல் ரீதியான செயல். இப்படி சீராக இருக்க வேண்டிய இரத்த அழுத்தம் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது இரத்த அழுத்தம் எனப்படுகிறது. ஒருவர் உடம்பில் பெரும்பாலும் அதிகமான இரத்த அழுத்தமே இருந்து கொண்டு வருமானால் அது ஒரு வியாதியாக மாறி ‘ஹை பிளட் பிரஷர்’ எனப்படுகிறது. நம் சுவாசத்தில், சாதாரண மூச்சு, மூச்சுத் திணறல், இரைக்க இரைக்க மூச்சு வாங்குதல் என்னும் மூன்று நிலைகளுக்கு ஏற்ப, சாதாரண இரத்தம், குறைவான இரத்த அழுத்தம், அதிகமான இரத்த அழுத்தம் என்று மூன்று நிலைகள் உள்ளன. இந்நோயின் தன்மை, இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிவகைகள் பற்றி அறிந்து கொள்வோம். இயற்கை மருத்துவத்தில் இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்தக் கொதிப்பில் உள்ள உயர் மற்றும் குறைந்த அழுத்தத்திற்கு கீழ்க்காணும் வகையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

SAFI BLOOD PURIFIER 200ML BOTTLE

The Herbal Remedy

நோயாளியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து அதற்கான இயற்கை மருந்துகளை வயது, இரத்தப் பரிசோதனைக்கு ஏற்ப உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றைக் கண்டறிந்து மற்றும் பிற உடல் பாதிப்புகளையும் கேட்டு, உணவு முறைகளை மாற்றியும், உடலுக்குப் போதுமான ஓய்வு மற்றும் தேகப்பயிற்சியான தினமும் நடைப்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றைக் கடைப்பிடிக்கவும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தவிர எம்மிடமுள்ள இயற்கை, மூலிகை மருந்து வகைகள் நோயின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது.

நமது உடல் ஆரோக்கியத்திற்கான இயற்கை மருத்துவக் குறிப்புகளாக நமக்கு அவ்வப்போது ஏற்படும் பல்வேறு சாதாரண நோய்களையும் அதற்கான நிவாரணம் அளிக்கக்கூடிய எளிய வழிவகைகளையும் ஒரு பட்டியல் தொகுப்பாக கீழ்க்காணும் முறையில் தந்திருக்கிறேன். எனவே இதை உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் உடனடி கையேடாக உபயோகிக்கவும், அவசர சிகிச்சையை வீட்டிலிருந்தே பெறும் வகையில் அமைத்துக் கொள்ளவும் பயன்படும் என நம்புகிறேன். எந்தவித நோய்க்கும் அடிப்படைக் காரணமாக அமைவது நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள், சுற்றுப்புற சுகாதாரம், தவறான பழக்க வழக்கங்களை தவிர்த்தல், போதுமான உடல் ஓய்வு, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் மனதில் இறுக்கம் ஏற்படாத வாழ்க்கை போன்றவைதான்.

இவையாவும் கவனத்தில் கொண்டு, நமது அன்றாட வாழ்க்கை அமைந்துவிட்டால், மன நிம்மதியையும், மன மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் பெற்று நோயின்றி வாழ முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சரி, இனி நமக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் _ அதற்கான இயற்கை மருத்துவ முறையில் உள்ள சிகிச்சையைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

திடீர் காய்ச்சல்: திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டால் இஞ்சியுடன் மிளகையும் சேர்த்து நசுக்கி நீரில் கொதிக்க காய்ச்சி வடிகட்டி சோயா பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் காய்ச்சல் தணியும். சிறிது சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தலைவலி: சாதாரணமாய் ஏற்படும் தலைவலிக்கு சுக்கு கைகண்ட மருந்தாகும். கொஞ்சம் சுக்கை எடுத்து நீரிட்டு மைபோல் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி நீங்கும்.

வாந்தி பேதி நிற்க: வாந்திபேதி, மந்த பேதி ஏற்பட்டு தொல்லை தருமாயின் ஒரு சட்டியில் இரண்டு மிளகாயைச் சேர்த்து கருகும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அந்த வறுத்த சட்டியில் இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்குக் காய்ச்சி, அந்நீரை ஒரு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டால் போதும், வாந்தி நின்றுவிடும்.

பித்தத்துக்கு: பித்த நோய்க்கு சீரகம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகும். 30 கிராம் சீரகத்தை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டு சீரகம் கறுப்பு நிறம் ஆகும் வரை நன்றாகக் காய்ச்ச வேண்டும். பிறகு அந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பித்தம் தணியும். எண்ணெய் ஸ்நானம் செய்யும் அன்று மட்டும் தயிர், மோர் தவிர்க்க வேண்டும்.

அடுத்து கறிவேப்பிலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும், துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து உண்பது ஆகியவையும் பித்தம் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கும். பித்த அதிகரிப்பால் தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவை ஏற்படும்போது, கொத்தமல்லி எனும் தனியாவை, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் உடைத்துப் போட்டு, அடுப்பில் நன்றாகக் கொதிக்க வைத்து அந்நீரை இறுத்து வடிகட்டி சிறிது சர்க்கரையும் சேர்த்து காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட பூரண குணம் ஏற்படும். அதுபோன்றே தேங்காய்ப் பால் வாய்ப்புண், நெஞ்சுப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றினை குணம் அடையச் செய்வதோடு பித்தத்தையும் தவிர்க்கும். வாய்ப்புண்ணிற்கு கொப்பரைத் தேங்காயை மென்று தின்றால் கூட நிவாரணம் கிடைக்கும்.

உடல் சூடு தணிய: திராட்சைப்பழம், சாத்துக்குடி, இளநீர், அருகம்புல் சாறு மற்றும் நெல்லிக்காய் போன்றவை உடல் சூட்டைத் தணிக்கும். அன்றாடம் மோர் அருந்துவது (முக்கியமாக கோடை காலங்களில்), மாதுளம், வெள்ளரிப்பழம், பேயம் பழம், தர்பூசணி போன்றவையும் உடற்சூட்டையும் தாகத்தையும் போக்கக்கூடியதாகும்.

மதுவின் மயக்கம் தீர: அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தி மயக்கமடைந்திருப்பவருக்கு மாதுளம் பழத்தை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொடுத்தால் போதும் மயக்கம் தெளியும். சிலர் எலுமிச்சம் பழத்தைக்கூட இவ்வாறு பிழிந்து சாறு எடுத்து அருந்தச் செய்வார்கள். சில சமயம் அது வாந்தி ஏற்பட வைக்கும்.

பல்வலி நீங்க: பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே. பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும். ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும். அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும். அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும். தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.

மேலும் சில மருத்துவக் குறிப்புகள்

இரத்தக் கொதிப்பிற்கு வெள்ளைப் பூண்டு சிறந்த நிவாரணி.

இருமலுக்கு வசம்பு.

எந்த வகை உணவையும் அளவிற்கு அதிகமாக உட்கொண்டாலும் அதற்கு மேலே நாலு பேரீச்சம் பழம் சாப்பிட்டால் போதும். செரிமானம் ஆகிவிடும்.

வெந்நீர்க் குளியல் காலிலிருந்தும், குளிர்நீர்க் குளியல் தலையிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.

கண்களுக்கு நலம் தருபவை பொன்னாங்கண்ணி கீரை.

பற்கள் பாதுகாப்பிற்கு கரிசலாங்கண்ணி கீரை.

வயிற்று உபாதைகளுக்கு வாழைப்பழம்.

இதயத்திற்கு மீன் எண்ணெய், பூண்டு.

தோல் மினுமினுப்பிற்கு தேன்.

இளநரைக்கு பாதாம்பருப்பு.

கொழுப்பைக் குறைக்க வெங்காயம்.

நரம்புத் தளர்ச்சிக்கு சோயா.

நடுங்கும் கைகளுக்கு மாம்பழச்சாறு.

குடல் நலத்திற்கு புதினா கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லி.

உடல் சூட்டைத் தணிக்க இளநீர், அருகம்புல் சாறு, லெமன் ஜூஸ்.

ஒவ்வொரு உடலிலும் மூலாதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தி நல்ல நிலைமையில் இருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அச்சக்தி தன் பலத்தில் குன்றினால் அதன் தன்மைக்கேற்ப வியாதிகள் தோன்றுகின்றன. இந்த அடிப்படையில்தான் வியாதி வராமல் தடுக்கவும், வியாதி வந்தபின் தீர்க்கவும் இயற்கை நமக்கு அளித்துள்ள காய்கறிகள், கனிவகைகள், எண்ணற்ற மூலிகை வகைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, அன்றாடம் உண்ணும் உணவு வகைகளின் முக்கியத்துவம், நல்ல பழக்க வழக்கங்கள், நடைப்பயிற்சி, தியானம், பொழுதுபோக்கு போன்றவற்றைச் சார்ந்தே ஒவ்வொருவரின் ஆரோக்கியம் சீராக அமைய முடியும் என்பதே இயற்கை தந்துள்ள உண்மையான அடிப்படையாகும். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

டான்சில் குணமாக

டான்சில் என்னும் உள்நாக்கு வளர்ச்சி பொதுவாகவே சிறுவர்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுவதுண்டு. அதற்கு புளியையும் உப்பையும் சமபங்கு சேர்த்து அரைத்து உள்நாக்கில் தடவி வர சிறிது சிறிதாக கரைந்து போகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு

குழந்தைகளுக்கு ஏற்படும் பலவித நோய்களிலிருந்து நிவாரணம் பெற, சிறிது வேப்பங்கொழுந்துடன் கொஞ்சம் மிளகு, பூண்டின் ஒரு பல் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்குச் சாப்பிட வைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி கொடுத்து வர, எந்த வித நோயும் தொல்லை கொடுக்காது. அதுபோன்றே குழந்தைகள் பல்வேறு திண்பண்டங்களை உட்கொள்வதால் வயிற்றில் பூச்சித் தொல்லை, உப்புசம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, பூச்சித் தொல்லையையும் ஒழிக்க மருத்துவரை கலந்து உரிய சிகிச்சை பெறவும்.

ஹிஸ்டீரியா நோய் குணமாக

ஹிஸ்டீரியா எனும் மனபாதிப்பு அடைந்தவர்களுக்கு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது பெருங்காயத்தைச் சேர்த்து கலக்கி தினமும் மூன்று வேளை சாப்பிட நல்ல மாறுதல் காணலாம்.

கருக் குழந்தை வளர்ச்சிக்கு

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அடிக்கடி முருங்கைக் கீரை, பேரிக்காய், ஆப்பிள், மாதுளம் போன்ற பழ வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதோடு, மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு, இரத்த சோகை எனும் நோய் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்வதும் சிறந்ததாகும்.

பருவம் அடையாத பெண்களுக்கு மருந்து

குங்குமப்பூ மிக உயர்ந்த மருத்துவ குணம் வாய்ந்தது. அதிக வயதாகியும் பருவமடையாமல் இருக்கும் பெண்களுக்கு குங்குமப் பூவை உள்ளுக்குள் கொடுத்து வர, விரைவில் பருவமடைவார்கள். கருவுற்றிருக்கும் தாய்மார்களும் தினமும் இரவில் காய்ச்சிய சோயா பாலில் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வர, சுகப்பிரசவம் ஏற்படும். அதுபோன்றே இரவில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிட செரிமானமும் எளிதாகும். சிறிது குங்குமப்பூவை தாய்ப்பாலில் இழைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி நீங்கும்.

இவ்வாறு இழைத்து வருவதில் இரண்டு சொட்டுகள் கண்களில் விட்டால் கண் நோய் குணமாகும்.

மாதவிடாய்க் கோளாறுகள் குணமாக

வெங்காயத்தைப் போல வெங்காயப்பூவும் மருத்துவ குணம் உடையது. வெங்காயப் பூக்களை சிறிது நேரம் ஊற வைத்து அதைக் குடிநீராக அருந்தினால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.

இரத்தப்போக்கு நீங்க

பெண்களுக்கு மாதவிடாயின் போது, அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதுண்டு. இதைக் கட்டுப்படுத்த வாழைக்காயை அடுப்பில் சுட்டு தோலை எடுத்து எறிந்துவிட்டு, உள்காயை நன்றாக அரைத்து தயிரில் நன்கு கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.

காதுகுத்தல் நீங்க

காது குத்தல் இருந்தால் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிது பெருங்காயத்தைப் பொரித்து பின் அந்த எண்ணெயை மட்டும் லேசான சூட்டில் சில துளிகள் காதில் விட குணம் பெறலாம்.

காமாலை நோய்க்கு மருந்து

காமாலை நோயா? பூவரசு இலைக் கொழுந்துடன் ஐந்து மிளகைச் சேர்த்து அரைத்து ஒரு தேசிக்காய் பழ அளவு மோரில் கலந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் ஏழு அல்லது பத்து நாட்களில் குணமாகும். அந்த நாட்களில் உப்பு கலந்த உணவை அறவே நீக்க வேண்டும். மதுபானமும் அருந்தக்கூடாது.

கண்சதை வளர்ச்சி குணம் பெற

சிலருக்கு கண்சதை வளர்ச்சி ஏற்படுவதுண்டு இதற்கு சிக்கன வைத்தியமாக பேரீச்சம் பழத்தின் உட்புறம் இருக்கும் கொட்டையை எடுத்து அதை பன்னீரிலோ அல்லது தாய்ப்பாலிலோ இழைத்து கண்ணுக்கு மை இடுவதுபோல போட குணம் பெறலாம்.

முடி உதிர்வதைத் தடுக்க

சில பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்தல் இருக்கும். அவர்கள் நெல்லிக்கனிகளை அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து தலையில் ஊறும்படி தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்தல் நின்றுவிடும். தலையில் முடி உதிர்ந்து சொட்டையாதலுக்கு வெள்ளைப்பூண்டுப் பற்களைத் தேனில் ஊரவைத்து சொட்டை விழுந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தேய்த்து வரவேண்டும். அவ்வாறு தொடர்ந்து இருபது நாட்கள் செய்ய முடி வளரும். தலை முடி வளர, எலுமிச்சம் பழவிதைகளுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நீர் விட்டு அரைத்து முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வந்தால் சிறிது நாளில் முடி வளரும். உடல் சூட்டினால் சிலருக்கு முடி கொட்டி விடுவதுண்டு. அதற்கு வெந்தயத்தை நீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தப்பின் குளிக்கவேண்டும். உஷ்ணம் கட்டுப்படுவதோடு, முடி கொட்டுவதும் நிற்கும்.

இரத்த விருத்திக்கு

வாழைப்பூ பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களை குணமாக்கவல்லது. இரத்த விருத்திக்கும் வாழைப்பூ மிகவும் சிறந்த உணவுப்பொருளாகும். அதனால் வாழைப்பூவை அடிக்கடி சமைத்து உண்பது நல்லது.

நரம்புத் தளர்ச்சிக்கு

நரம்புத் தளர்ச்சிக்கு வெங்காயம் சிறந்த நிவாரணி ஆகும். வெங்காயத்தை நன்றாக வதக்கி காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமடையும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

ஆரஞ்சு பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்குண்டு. பித்தத்தைத் தணித்து ஜீரண சக்திகளை அதிகரிக்கும். இருமல், நீரிழிவு மற்றும் ஈரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது. ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் ஆகியவற்றை முதியோர் முதல் இளம் சிறார்கள் வரை அனைவரும் பருகலாம். சர்க்கரைக்குப் பதிலாக குளுகோஸ்கூட சேர்த்துக் கொள்ளலாம்.

இதய பலவீனத்திற்கு

இதய பலவீனம், இதயக் கோளாறு உள்ளவர்கள் சிறிய இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் தெளிய வைக்க வேண்டும். பின் தெளிந்த நீரை வடிகட்டி அத்துடன் ஒரு ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் தேசிக்காய்ச் சாறு கலந்து தினந்தோறும் காலையில் சாப்பிடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும். இதயக் கோளாறு மீண்டும் வராது.

கண் ஒளியை அதிகரிக்க

பப்பாளி பல நோய்களைக் குணமாக்கவல்ல பழங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இது சிறந்த கிருமிநாசினியும் கூட. சீரண சக்தியை அதிகரிக்கும். கண் பார்வையை அதிகரிப்பதோடு கண்களுக்கு வலு தந்து பார்வை சம்பந்தமான கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

இடுப்புவலி நீங்க

இடுப்பு வலி, கை கால் குடைச்சல் போன்ற தொல்லைகளுக்கு சிக்கன வைத்தியமாக கொஞ்சம் கோதுமை மாவை பொன் வறுவலாக வறுத்தெடுத்து, அதில் சிறிது தேனைக் கலந்து பிசைந்து சாப்பிட்டு வர வலிகள் நீங்குவதோடு, சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த

நீரிழிவு நோயாளிகள் விதை நீக்கிய பேரீச்சம் பழத்தை அரைத்து பாகு செய்து சாப்பிட இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர்ப் பிரச்னைகளைத் தவிர்க்க

அருகம்புல் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகும். நீண்ட நாள் உயிர் வாழ ஏற்றது. ஒரு பிடி அருகம்புல்லை எடுத்து சுத்தம் செய்து கொஞ்சம் நீரிலிட்டு காய்ச்சி இந்நீருடன் சோயா பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

இந்நீரை காபி அல்லது தேனீரில் கூட கலந்து சாப்பிடலாம். இதனால் சிறுநீர் சம்பந்தமான தொல்லைகள் நீங்கும். சிறுநீர்ப்பையும் உறுதிப்படும். சில நேரங்களில் சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியாத எரிச்சலும் வலியும் இருக்கும். இதற்கு சிறிது விளாம்பழத்தினை நீரில் கரைத்து உள்ளுக்கு அருந்தினால் எரிச்சலும் வலியும் நீங்கும்.

இரத்த சோகை குணமடைய

கொய்யாப்பழம் எல்லா காலத்திலும் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் அதை அன்றாடம் சாப்பிட்டு வர இரத்த சோகை குணமடையும்.

விருந்தோம்பல்

சில சமயங்களில் நமது உடலை பாதிக்கும் வகையில் நம்மையும் அறியாமல், பலதரப்பட்ட ஐயிட்டங்களில் ருசியின் தாக்கத்தில் உந்தப்பட்டு நமக்கு அஜீரணம் அளிக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு அவஸ்தைப்பட நேரிடலாம். எனவே உணவு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை என்பதை முன்கூட்டியே எச்சரிக்கின்றேன்.

வயிற்று வலி

உஷ்ணத்தினால் வயிற்றில் எரிவது போலவும், முறுக்குவது போலவும் சில சமயங்களில் உபாதைகள் ஏற்படுவது என்பது ஒரு சிலருக்கு இயல்பானதே. இதற்கு மருந்தை தேடிக்கொண்டு எந்த மருத்துவரிடமும் செல்ல வேண்டாம். தனியா 100 கிராம், மிளகாய் 5 கிராம், மிளகு 3 கிராம், துவரம்பருப்பு 50 கிராம், பெருங்காயம் 5 கிராம், உப்பு வேண்டிய அளவு இவற்றை தனித்தனியே வறுத்து சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். சாதத்துடன் இப்பொடியை கலந்து சிறிது நெய் சேர்த்தோ அல்லது இட்லி, தோசை போன்ற பலகாரங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

இதனால் உஷ்ண சம்பந்தமான வயிற்றுக் கோளாறு நீங்கும். மூலச்சூட்டினால் அவதியுறுவோர் மாங்கொட்டையை உடைத்து அதனுள்ளிருக்கும் பருப்பை அரைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

வயிறு உப்புசம் நீங்க சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து தெளிய வைத்து பின் அந்நீரை அருந்தலாம்.

அதுபோலவே வயிற்றுக் கடுப்பு நீங்க வெந்தயத்தை நன்றாக அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் போதும்.

சிலருக்கு வயிற்றில் பூச்சிகள் இருப்பதனால் சரிவர பசிக்காது. இதற்கு அன்னாசிப் பழம் நல்ல மருந்தாகும். அன்னாசி பழச்சாறு வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் உள்ளது. அதுபோன்றே மாங்கொட்டை பருப்பும் பூச்சிகளை ஒழிக்கும். மாங்கொட்டையை உலர்த்தித் தூள் செய்து சிறிது தேனில் குழைத்துச் சாப்பிட பூச்சித் தொல்லை ஒழியும். மேலும் பித்தத்தினால் ஏற்படும் தொல்லையை நீக்க இஞ்சி சாற்றில் கொஞ்சம் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் பெறலாம். தேவைப்பட்டால் கொஞ்சம் தேசிக்காய்ச் சாற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். வயிற்றுளைச்சலுக்கு சூடான பாலில் தேசிக்காய்ச் சாற்றைப் பிழிந்து பால் முறிந்த பின் தெளிந்து வரும் நீரைப் பருகினால் போதும்... உளைச்சல் கட்டுப்படும்.

மலச்சிக்கல்

‘மலச்சிக்கல் பல சிக்கல்’ என்பது ஆன்றோர் மொழி. பொதுவாகவே இரவில் நிம்மதியான தூக்கம், காலையில் மலம், சிறுநீர் கழித்தல் ஆகியவை சீராய் இருந்தாலே போதும் உடல் பாதிப்பு ஏற்படுவது என்பது அவ்வளவாக இருக்காது. நீடித்த மலச்சிக்கலில் அவதிப்படுவோர் வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் ஒரு தேசிக்காய்ச் சாற்றைப் பிழிந்து மூன்று பச்சை மிளகாயை நறுக்கிப்போட்டு நன்றாகக் கலக்கி அரை மணி நேரத்திற்குப் பின்பு சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். பேரீச்சம் பழம்கூட மலச்சிக்கல்களை போக்கும் குணமுள்ளது. இப்பழத்தைக் தொடர்ந்து சாப்பிடுவதினால் ஏற்படும் உஷ்ணத்தைத் தணித்துக்கொள்ள சோயா பால் அருந்தினால் போதும்.

தூக்கம் வர

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரையைச் சாப்பிடுவதை பலர் வழக்கமாய் கொண்டுள்ளனர். இது மிகவும் கெடுதலானது. இயற்கை வைத்தியமாக வெங்காயத்தை நசுக்கி ஒரு சொட்டு கண்ணில் பிழியலாம். அத்துடன் சீரகத்தை ஒரு மெல்லிய துணியில் முடிந்து அடிக்கடி அதன் வாசனையை நுகரலாம். இதனால் இயற்கையாகவே நல்ல தூக்கம் வரும்.

உடல்சூட்டைத் தணிக்க

திராட்சைப்பழம் உடலின் உஷ்ணத்தை தணித்து குளிர்ச்சியை உண்டாக்குவதோடு, மலச்சிக்கலையும் போக்கும் என்பதால் ‘திராட்சைப் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நன்மை பயக்கும்.

மூல வியாதிக்கு மருந்து

மூல வியாதியினால் அவதியுறுவோர் தேசிக்காய் சாற்றை சோயா பாலில் பிழிந்து கலந்து சாப்பிட்டு வர வலியும் குறையும், இரத்தப்போக்கு இருந்தாலும் குறைந்து குணமாகி விடும்.



நெகிழவைக்கும் நெல்லிக்காயின் பயன்?(Gooseberry)
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். இதைவிட நெல்லிக்காய் சாப்பிடுங்க அப்படின்னு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேறெதாவது காரணம் தேவைப்படுமா? இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், மற்ற இயற்கை உணவுகளைப்போல் இல்லாமல் நெல்லிக்காயை சமைத்து உண்டாலும் அதனுடைய சத்து சமைப்பதனால் குறைவதே கிடையாது.

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. மனிதனுடைய ஈரல் இந்த கொழுப்புச் சத்திற்கு அடிப்படையாக அமைவது. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் ‘சி’ இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்துவிடும். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

நெல்லிப்பொடி + சர்க்கரைத் தூள் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரில் கரைத்துப் பருகி வர, உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் நெல்லிப்பொடி + சர்க்கரை + பாகற்காய் பொடி 2 அல்லது 3 முறை ஒரு நாளைக்கு சாப்பிட்டு வர முன்னேற்றம் தெரியும்.

அசிடிடி உள்ளவர்களுக்கும் நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. ஏன் முடி வெள்ளையாக மாறி வருகிறது என்று கவலைப்படுபவர்கள், நெல்லிப்பொடியை ஒரு இரும்புக் கின்னத்தில் போட்டு தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்தால் ஷாம்பு + கண்டிஷனர் + ஹேர்டை தயார்!

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner