தொண்டை எரிச்சல் என்பது பொதுவாக அனைவரையும் பாதிக்கக்கூடிய பிரச்னை தான். அதற்கு, வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வைத்திய முறைகள் இதோ:
* வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வீட்டிற்கு வருகிறீர்கள். உடனே, "ஜில்' என்று இருக்கும் தண்ணீரை குடிக்க வேண்டும் என்று தோன்றும். அப்படி செய்தால், தொண்டை எரிச்சல் இன்னும் அதிகமாகும். அதற்கு பதில், அந்த தண்ணீரை சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து விட்டு, பிறகு குடிக்க வேண்டும். வரும் முன் காப்பது சிறந்தது அல்லவா?
* வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை கொப்பளிக்க வேண்டும் அல்லது அரை மணிக்கு ஒரு முறை வெதுவெதுப்பான நீரைப் பருக வேண்டும்.
* ஒரு கப் தண்ணீருடன், சிறிது துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் மிளகு மற்றும் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். இந்த கஷாயம், அரை கப்பாக குறைந்தவுடன் இறக்கி வையுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.
* ஒரு கப் சூடான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து, அதில் சிறிது தேன் சேர்த்து, ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை பருகலாம்.
* ஒன்று அல்லது இரண்டு கிராம்பை எடுத்து, பற்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, அதன் சாறை மட்டும் விழுங்க வேண்டும்.

0 comments:
Post a Comment