Ads Header

Pages

30 March 2012

வெங்காயம் அவசியம்!

வெங்காயம் அவசியம்!

ஒன்றுக்கும் உதவாத நபர்களைப் பார்த்து `போடா வெங்காயம்' என்று கூறுவார்கள். ஆனால் வெங்காயம் மகத்துவங்கள் நிகழ்த்தக் கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தொடர்ந்து வெங்காயம் சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. குடல் புற்று நோய் மரபு ரீதியாக ஏற்படும் நோய் என நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் நமது உணவு முறையின் மூலம், இந்த புற்று நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். ஆப்பிள், வெங்காயம் போன்றவற்றில் உள்ள வேதிப்பொருள்கள் இந்த புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை வாய்ந்தவை. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமும் இந்த நோய் வரும் வாய்ப்பை குறைக்கலாம். எனவே வெங்காயம், ஆப்பிள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
Read more

நன்னாரி - கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து

நன்னாரி


சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத் துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும். உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும் குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை பல மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நன்னாரி. நன்னாரியின் வேர்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படு கிறது. உலக நாடுகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுத்தப் படுகிறது. இதன் வேர் தூள் செய்யப்பட்டு டீயாக பயன்பாட்டில் உள்ளது. நமது பரம்பரிய மருந்துகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுகின்றது. நன்னாரியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந் துள்ளது. `சப்போனின்' என்ற உடலை தூய்மை செய்யும் பொருள் இதில் அதிகம் உள்ளது. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படக்கூடிய முடக்கு வாதம், செதில் உதிர் தல் நோய் எனப்படும் சோரியா ஸிஸ், கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு, இது சிறந்த மருந்து. சிறுநீரக நோய்கள் உடல் சூட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் பால்வினை நோய் களுக்கு இது சிறந்த மருந்து.

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.

நன்னாரி பால்:
1. நன்னாரி - 200 கிராம்

2. சுக்கு - 50 கிராம்

3. ஏலக்காய் - 25 கிராம்.

செய்முறை:- நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.


நன்னாரி சர்பத்:
நன்னாரி - 200 கிராம்.

தண்ணீர் - ஒரு லிட்டர்.

சர்க்கரை - 1 கிலோ.

எலுமிச்சம்பழம் - 6 (சாறு எடுத்து கொள்ளவும்).

செய்முறை:

1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.

3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.

4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம். நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும்.

தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்.
Read more

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

மூலிகைகளும், தீரும் நோய்களும்...
2
31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

33. கீழாநெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

34. குப்பை மேனி: தோல் நோய்கள், மூலம், பவுத்தரம், குடல் பூச்சிகள்

35. சிறு குறிஞ்சான்: சர்க்கரை வியாதி, அதிமூத்திரம், உடல் சூடு

36. சிரியா நங்கை: கடி விஷங்கள், மதுமேகம், உடல் பலவீனம்

37. சீந்தல் கொடி: மதுமேகம், மலேரியா, பித்தம், தாது பலவீனம்

38. தும்பை: சொரி, சிரங்கு, விஷங்கள், பீனிசம் வாதடர் தாமரை

39. பொடுதலை: இடுப்பு பிடிப்பு, ரத்த மூலம், மதுமேகம், தோல் நோய்கள்

40 பொன்னாங்கண்ணி: கண் நோய்கள், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

41. புதினா: ருசியின்மை, வாந்தி, பசிமந்தம், அதிமலக்கழிவு

42. மணத்தக்காளி: அல்சர், மூலம், வாய் நாக்கு புண்கள், மூலம்

43. மகாவில்வம்: பித்தம், மேகம், அல்சர், கண் கோளாறுகள்

44. மருதாணி: தோல் நோய்கள், வெட்டை, மதுமேகம்

45. மஞ்சள் கரிசாலை: காமாலை, ஆஸ்துமா, ஈரல் குற்றங்கள்

46. முசு முசுக்கை: இருமல், சளி, ஆஸ்துமா, சிறுநீரக கோளாறுகள்

47. முருங்கை: உடல் சூடு, கண் நோய்கள், தாது பலவீனம்

48. வாத நாராயணன்: வாத மூட்டுப் பிடிப்புகள், பாரிச வாதம், தண்டுவட வலிகள்

49. வேம்பு: வயிற்று பூச்சிகள், சொறி சிரங்கு, விஷ கடிகள்

50. வெள்ளனுகு: வெள்ளை, வெட்டை, வாதம், தோல் நோய்கள்

51. அத்தி: மூலம், வயிற்றுக் கடுப்பு, அல்சர், மலச்சிக்கல், நீரழிவு

52. அரச இலை: உடல் காங்கை, தாது நஷ்டம், பெண்மலடு நீங்கும்

53. அம்மான் பச்சரிசி: உடல் எரிச்சல், நமைச்சல், வெள்ளை முட்டை

54. அவுரி இலை: கீழ் வாதம், சளி, சகல விஷங்கள்

55. ஆடு தீண்டா பாளை:வயிற்றுப்பூச்சி, சொறி, சிரங்கு, விஷ கடிகள்

56. ஆல இலை: வயிற்று கடுப்பு, வெள்ளை விழுதல், மேகநீர்

57. கல்யாண முருங்கை: மூத்திரக் கோளாறுகள், வாய் மற்றும் உள் வேக்காடுகள்

58. கற்பூர வள்ளி: சளி, இருமல், காசம், வாதக் கடுப்பு

59. துத்தி: மூலம், அல்சர், கிட்னி வலிகள், நீர்ச்சுருக்கு

60. நாயுருவி: மூலம், கபம், தேமல், மேக நோய்கள்

61. நொச்சி: சகல வாதங்கள், பீனிசம், இரைப்பு, இருமல்

62. பூவரசு: விஷக் கடிகள், பெருவயிறு வீக்கம், சொறி சிரங்கு

63. மா இலை: தோல் நோய்கள், நீரேற்றம், மலடு

64. கிச்சிலி கிழக்கு: குளியல் பொடியல் சேர்க்க தோல் நோய்கள் தீரும்

65. நிலப்பண்ண கிழங்கு: இடுப்பு வலி, மூலம், மூத்திர நோய், தாது நஷ்டம்

66. பூமிச்சக்கரை கிழங்கு: மூலம், கீழ்வாதம், வயிற்றுவலி, வெள்ளை

67. சதா வேரி கிழங்கு: வெள்ளை, உட்சூடு, மேக எரிச்சல், தாது பலவீனம்

68. சர் பகந்தி: ரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி

69. நித்ய கல்யாணி வேர்: மதுமேகம், மூத்திர தாரையின் சகல கோளாறுகள்

70. வெட்டிவேர்: பித்தம், தலை மற்றும் கழுத்து நோய்கள் சுக்கில நட்டம்

71. கடலழிஞ்சல்: நீரழிவு, மதுமேகம், முத்தோஷ நீர்ப்போக்குகள்

72. கோரை கிழங்கு: பித்தம், தாகம், தேக எரிச்சல், கபம் வாதம்

73. மருதம்பட்டை: ரத்தப்போக்கு, இருதய வியாதிகள், அதி - மூத்திரம்

74. அசோகபட்டை: மூலம், பெண்களின் அதிரத்தப்போக்கு நீங்கும்

75. பாகற்காய்: மூலம், சர்க்கரை வியாதி, மலக்கிருமி தொந்தரவு

76. நெருஞ்சில்: நீர்க்கடுப்பு, நீரடைப்பு, கல்லடைப்பு, நீர் எரிச்சல்

77. மங்குஸ்தான் ஓடு: அல்சர், ரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு, நீர் எரிச்சல்

78. மாதுளை ஓடு: வாய்ப்புண், வயிற்றுக் கோளாறுகள், தாது நட்டம்

***

எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொரு ளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடு ருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சரு மத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ட்ரை ஸ்கின் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது நல் லது.

***

பழங்குடியினரால் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணை... நீலகிரித் தைலம் (ïகலிப்டஸ்). காயங்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் சீழ்வடிதலைத் தடுக்கும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் மார்பு சளி, கோழை சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றை நீக்கும்.

***

விளக்கெண்ணையை சருமத்தின் மீது பூசினால் உடல் குளிர்ச்சி ஏற்படும். தலைக்கு தடவும்போது கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவ முடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சிïட்டி தூக்கத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது. உடல், கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றில் உண்டாகிற எரிச்சலை நீக்கும்.

***

தேங்காய் எண்ணையை கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் தீரும். கேசத்திற்கு ஊட்டமும், வளர்ச்சியும், குளிர்ச்சியும் கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்கும். சமையலில் தேங்காய் எண்ணையை சேர்ப்பதால் நமது உட லுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.

***

உடலுக்கு வனப்பும், ஆரோக்கியமும் அளிக்கக் கூடியது பாதாம் எண்ணை. அனைத்து வைட்டமின் சத்துக்களும், குறிப்பாக தோலுக்கு அழகூட்டும் வைட்டமின் `இ' சத்தும் இதில் அதிகமாக காணப்படுகின்றன. பாதாம் எண்ணையை பெண்கள் தங்கள் உடல் மீது தேய்த்து வர சீக்கிரமே தோலின் பளபளப்பு அதிகரிக்கும்.

***

ஆலிவ் எண்ணை சருமத்திற்கு வெண்மையும், கேசத்துக்கு போஷாக்கும் அளிக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி முதலான ஊட்டச்சத்துகளும், தாதுப் பொருட்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் பழங்காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆலிவ் கனியை உண்டதுடன், ஊறுகாயாகவும் பயன்படுத்தினர். ஆலிவ் எண்ணையை அதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

***

நிறமும், மணமும் அற்ற திரவம் கிளிசரின். சருமத்தின் ஈரப்பதத்தையும், தளர்ச்சியும் கொடுக்கக் கூடியது. கை, கால்களுக்கு மிருதுவான தன்மையை அளிக்கக் கூடியது. காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் கிளிசரின் சினிமா, தொலைக் காட்சிகளில் வரும் அழுகை காட்சிகளுக்கு அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.

***

கோக்கோ எனும் தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணை போன்ற கொழுப்புச் சத்துள்ள பொருளே கோக்கோ பட்டர். இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. புரதச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் தாதுப் பொருட்கள் மிகுந்திருப்பதால் சரு மத்திற்கான மாஸ்க் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.

***

வேப்ப எண்ணை சிறந்த கிருமி நாசினி. தோல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள், தொற்று நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாரம் ஒரு முறை வேப்ப ணீஎண்ணையை அளவோடு தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும். குழந்தைகளுக்கும் வேப்ப எண்ணை மிகவும் நல்லது.

***

கடுகு எண்ணை சருமத்திற்கு வனப்பை அதிகரிக்கும். அதனால்தான் அழகூட்டும் சோப்புகளில் கடுகு எண்ணை சேர்க்கப்படுகிறது. உணவிலும் சேர்த்துக் கொண்டால் இளமை கூடும். தோல் மற்றும் தோலுக்கு அடுத்துள்ள சதைப் பிடிப்புகளிலும் கடுகு எண்ணை ஒரு நிவாரணியாக பயன்படுகிறது.

***
Read more

முள்ளு தேன் குழல், சுவையான அதிரசம் சமையல் குறிப்புகள் !

======================================================================
நான் செய்யும் முள்ளு தேன் குழல், ப்ளைன் தேன் குழல் இரண்டுமே கடினமாக இருக்கிறது. வாயில் போட்டதும் கரையும் படியாக முள்ளுத் தேன்குழல் எப்படி செய்வது?

பச்சரிசி_1 கிலோ, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு_தலா 150 கிராம், வெண்ணெய் ¼ கிலோ, பெருங்காயம், உப்பு, சீரகம், எண்ணெய்_தேவையான அளவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து காய வைத்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். அரிசி மாவில் பயத்தம் பருப்பு மாவு, உப்பு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய் போட்டுப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மாவை முள்ளு தேன் குழல் அச்சில் போட்டுப் பிழியவும். இந்த முள்ளு தேன் குழல் வாயில் போட்டதும் கரகரவென்று கரைந்து போகும்.

ப்ளைன் தேன்குழல் செய்ய பச்சரிசி_1 கிலோ,உளுந்து, வெண்ணெய்_தலா ரு கிலோ, பெருங்காயம், உப்பு, சீரகம்_சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து உலர்த்தி மிஷினில் அரைத்துக் கொள்ளவும். உளுந்தை பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து ப்ளைன் தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் திருப்பி விட்டு எடுக்கவும்.
======================================================================
சட்டென்று சுட்டுச் சாப்பிடும்படி சுவையான அதிரசம் செய்ய, பாகு எப்படி எடுப்பது?பச்சரிசி மாவு ½ கிலோ, பொடித்த வெல்லம்_300 கிராம், ஏலக்காய்ப் பொடி_சிறிதளவு, எண்ணெய்_தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டிப் பாகு எடுத்துக் கொள்ளவும். வெல்லப்பாகை தண்ணீரில் விட்டு திரட்டினால் உருண்டு வரும்போது, எடுத்து தட்டில் போட்டால் ‘டங்’கென்று சத்தம் வர வேண்டும். அதுதான் அதிரசப் பாகின் பக்குவம்.

ஒரு பேசினில் மாவை எடுத்துக் கொண்டு, வெல்லப் பாகை கொஞ்சங் கொஞ்சமாக விட்டுக் கிளற வேண்டும். நன்கு கிளறியதும் அரை மணி நேரம் கழித்து, மாவை சின்ன அப்பள சைஸில் தட்டி எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுக்கவும். எத்தனை சாப்பிட்டாலும் சாப்பிடும் ஆசை அடங்காது!
====================================================================

மோர்க்கூழ் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு_1 கப், கடுகு, உளுந்து_தலா 1 டீஸ்பூன், புளித்த தயிர்_3 கப், மோர் மிளகாய்_5, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு_சிறிதளவு.

செய்முறை:

அரிசி மாவில் உப்பு, தயிர், பெருங்காயம் போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மோர் மிளகாய் போட்டுத் தாளித்து கரைத்த மாவை கொட்டிக் கிண்டவும். கடாயில் ஒட்டாமல் வரும்போது கிளறி இறக்கவும்.

குறிப்பு : மாவு வெந்திருக்கிறதா என்று பார்க்க, மாவை கையில் எடுத்து உருட்டினால் மாவு கையில் ஒட்டக் கூடாது. இதுதான் பக்குவம்.
Read more

உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்


உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால் முதல் மந்திரம் இதுதான். எல்லோரையும் நேசியுங்கள். உங்களிடமிருந்து அன்பை மற்றவருக்கு அனுப்புங்கள். கோபம், வெறுப்பு, கடுமை என எல்லாம் மற்றவரை என்ன செய்கிறதோ இல்லையோ உங்களை, உங்கள் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். எதற்கு மற்றவர் மேல் கோபப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தைப் பலி கொடுக்க வேண்டும்? பதிலாக ஒவ்வொருவரையும் நேசியுங்கள். அன்பு காட்டுங்கள். எதிரில் இருக்கிறவர் கையில் இருக்கும் ஆயுதங்களை அழிக்கும் சக்தி அன்புக்கு உண்டு. அன்பு ஒரு டிரான்குவிலைசர். அன்பை உங்களுக் காக, உங்கள் மனம் மற்றும் உடல் நல னுக்காகப் பயன் படுத்துங்கள்.
Love everyone!


மனதில் எந்தப் பதட்டமும் ஏற்படாதிருக்க திரும்பத் திரும்ப இதை உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள். நம்மைப் பொறுத்தவரை யாரும் கெடுதல் செய்பவர்கள் இல்லை. எங்கோ, என்றோ ஒரு கெட்ட விஷயத்தை ஒருவர் செய்துவிடுவார் என்ற எண்ணத்தில் எப்போதும் நாம் கெட்டவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். வேண்டாம். யாரும் கெட்டவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டு நாளைத் தொடங்கிப் பாருங்கள். நாள் எவ்வளவு மகிழ்ச்சியாக நகருகிறது என்று!

There are no bad Guys!

நாம் இந்த விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நமக்காக நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப் படுத்துகிறோம். ‘‘அடடா... அப்பவே நினைச்சேன்...’’ என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.

Hear Your Mind Voice!

நன்றாக இருக்கிறோம் என்று நம்புங்கள். நல்லது நடக்கிறது என்று நம்புங்கள். நல்ல வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நம்புங்கள். நடந்த சில கசப்பான சம்பவங்களும் நல்லவற்றை அடையாளம் காட்டவே நடந்தன என்று நம்புங்கள். நம்புவது என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்க உதவும் சாவி. சந்தோஷத்தின் கதவைத் தட்டி தட்டிச் சோர்ந்து போய்விட்டதாக நினைக்கிறீர்களா? சுலபமாக கதவைத் திறந்து சந்தோஷத்தை அடைய முடியும்.

Key is to believe!சில நேரம் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகளை மறப்பது, வெட்கப்படுவது, அவமானப்படுவது என்று மூன்று வழிகளில் எதிர்கொள்ளலாம். மறப்பதால் திரும்ப தவறு நடக்க வாய்ப்புகள் ஏற்படும். அவமானப்பட்டால் மனம் பாதிக்கும். கோபம், வெறுப்பு, சோகம் என அந்த வழி மனிதனை அழுத்தும். மூன்றாவதாக இருக்கிற வெட்கப்படுவதுதான் நல்ல வழி. நம்மையும் அழிக்காமல், திரும்பவும் நடக்கவிடாமல் தடுக்கும் சக்தி அதற்கு உண்டு.

Be ashared of your mistakes!

உங்களுக்கு தியானத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது மிகப் பொறுமையாக அதன் சக்தியை அடைய முடியாமல் இருக்கலாம். பரவாயில்லை. தியானம் வேண்டாம். ஜஸ்ட் கண்களை மூடுங்கள். மனம் வழி உங்கள் காயங்கள் ஆறுவதாக நினைக்கத் தொடங்குங்கள். ஒரு இரண்டு மூன்று நிமிடம் போதும். எந்த தோல்வியின் காயத்தையும் இது ஆற்றத் தொடங்கும். உடல் காயத்தை உங்கள் மருத்துவர் பார்த்துக் கொள்வார்.

Heal yourself Spiritually and mentally.

பிறக்கும்போதே எப்படி உங்களுக்குச் சில உரிமைகள் வந்துவிடுகிறதோ அப்படியே சந்தோஷமாக இருப்பதும் வந்துவிடுகிறது. எதற்காகவும் உங்கள் உரிமைகளில் எந்த ஒன்றையும் இழக்காதீர்கள். அதுவும் சந்தோஷமாக இருக்கிற உரிமை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிற உரிமை. அதை இழப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இழக்க வேண்டுமா என்று யோசியுங்கள்.

Happiness is your birthsight!

எந்தத் தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.

Forgive!

ஆம். இது ஒரு விதத்தில் ஸ்பிருச்சுவல் தன்மையை நோக்கி நகருகிற நிலை. மனதை நோக்கிப் பாருங்கள். எல்லாமே சரியாக இருக்கும் என்கிற அபிப்ராயம். நம் எண்ணமே நல்லதையும், கெட்டதையும் தீர்மானிக்கிறது என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இதுதான். நீங்கள் உங்கள் இதயத்தில் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள் என்று ஜீனஸ் சொன்னது.

No good or bad.. Thinking Makes it so!

இந்தச் சக்தியை கடவுள் என்று நம்புகிறவர் கடவுளை நோக்கி நகரலாம். ஒரு இயற்கை சக்தி என்று நம்புகிறவர் அதை நோக்கி நகரலாம். பாவம், நோய், மரணம் என எல்லாம் பயம், தயக்கம், கொடுமை என அதன் நண்பர்களையே துணையிருக்க அழைக்கும். ஆனால் இயற்கையின் ஒளியின் முன் நாம் அதிலிருந்து விடுபட்டு அமைதி அடைய முடியும்.

Towards the Spiritual !

உங்கள் துயரம் எவ்வளவு அதிகமானது அல்லது உங்கள் தோல்வி எவ்வளவு பின்னோக்கி, தள்ளியிருக்கிறது என்பது முக்கியமானது அல்ல. அதிலிருந்து விடுபட்டு உங்கள் நாளுக்காக திடமுடன் காத்திருப்பதுதான் முக்கியமானது. உங்கள் நாள் வருகிறது என்று நம்புங்கள். அதற்காக காத்திருங்கள்.

Wait for your day

பயம் என்பது எதிர்மறை சக்தி. கெட்ட தேவதைகளின் கூடாரம். உங்கள் உடலையும், எதிர்காலத்தையும் அரிக்கக்கூடிய சக்தி பயத்திற்கு உண்டு. பயப்படாமல் எப்படி இருப்பது என்று நீங்கள் கேட்கலாம். சுலபமான வழி ஒன்று இருக்கிறது. பயத்தைவிட்டு சற்றுத் தள்ளி நில்லுங்கள். உங்களைத் தொட்டால்தான் ஆரோக்கியக் கேடு. பக்கத்தில் பயத்தை வைத்துவிட்டு அது கொடுக்கிற உத்வேகத்தில் வேலை செய்யுங்கள்.

Away From Fear!

உங்களுக்குச் சில இடங்களில் சுதந்திரம் கிடைக்கும். சில இடங்களில் கிடைக்காது. கிடைக்காத இடத்தைப் பற்றிய அணுகுமுறை வேறானது. ஆனால் கிடைக்கிற இடத்தின் அருமையை நீங்கள் உணர வேண்டும். அந்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் சரியான வழி. இந்த வழி வெற்றிகளைத் தருவதைவிட, வெற்றிகளை மேலும் அதிகமாக்க உதவும் என்பதே முக்கியமானது.

Dont take things for granted.

நாம் என்ன இப்படி இருக்கிறோம்? நாம் எதற்குமே லாயக்கில்லை? தொட்டாலே தோல்விதான்? நாம் போதுமான தகுதியுடன் இல்லையே? இப்படி எல்லாம் உங்களையே நீங்கள் எதிர்ப்பதைக் கைவிடுங்கள். ஏன் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருக்க வேண்டும்? எதிர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ? எவ்வளவு திறமை இருக்கிறதோ? அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளின் முதல் பெரிய அடியை எடுத்து வையுங்கள்.

Accept who you are!

நீங்கள் அதிகபட்ச உயரத்தை அடைய வேண்டுமா? இந்த ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும். நீங்கள்

செய்ய முடிந்ததைச் சொல்லி அதைச் செய்வதற்காக முயற்சி செய்யும்போது உலகத்தின் மிக நேரான பாதை ஒன்றில் நடக்கத் தொடங்குகிறீர்கள். இதனால் பதட்டம் இல்லை. கவலை இல்லை. தேவையற்ற எதிர்பார்ப்பு இல்லை. உங்கள் வெற்றி உங்கள் தேர்வின் அளவில் பிரதிபலிக்கும்.

Sky what your are going to do!இதற்குச் சுலபமான வழி மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பது. வாய்ப்பு இருக்கும்போது நல்லது செய்வது. ஆசிர்வாதங்கள் உங்கள் வாழ்வின் உறுதியான மகிழ்ச்சிக்கு அடித்தளம். மனமறிந்து கெடுதல் செய்யாதீர்கள்.

Count your blessings!

இதன் மூலம் எதிராளியின் மனதை உங்களால் மதிப்பிட முடியும். மற்றவர் நிலையில் நின்று பார்ப்பது ஒரு கலை. தேவையற்ற வெறுப்பை இது தடுக்கும். அப்படி நின்று பார்க்கும்போது, அவர் சுயநலமாக இருக்கிறாரா? அதனால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? என்று யோசியுங்கள். பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால் விலகிவிடுங்கள். அவ்வளவுதான். இதனால் உடல், மனம் இரண்டுக்குமான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்.

பெருந்தன்மையை மற்றவரிடம் எதிர்பார்த்துவிட்டு ஒவ்வொரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியை உங்களுக்குக் கொண்டுவராது. இப்படி ஒவ்வொரு குணம், செயல் என எல்லாவற்றிலும் மற்றவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். நீங்கள் விரும்புகிற அந்த குணம் உங்களிடம் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

Be the person you most want to be!

ஆம். உலகம் ஒரு விதத்தில் கண்ணாடி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பை உங்கள் செயல்பாடுகளே தீர்மானிக்கிறது. உங்கள் எதிரே இருக்கிற இந்தக் கண்ணாடியில் நீங்கள் எப்படித் தெரியவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

World is your mirror!

பேச்சு பணம் என்றால் அமைதி என்பது தங்கம். பணத்தைவிட தங்கத்திற்கு மதிப்பும், கௌரவமும் அதிகம். அமைதி காப்பதால் வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் தவிர்க்கப்படுவதோடு, உடல், மனம் இரண்டும் தணியத் தொடங்குகிறது. ஒரு தியானத்தின் மிக ஆரம்ப நிலைக்கு உங்கள் உடலும், மனமும் பழகத் தொடங்கும்.

Silence is gold!

நீங்கள் ‘சரி’ என்பதை அடைய விரும்புகிறீர்களா? அல்லது அமைதியை அடைய விரும்புகிறீர்களா? என்பதை யோசியுங்கள்.

தவறுகளை ஒப்புக் கொள்வது சற்று சங்கடமாக இருந்தாலும் அது அமைதியையும், சந்தோஷத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

கூடவே பெருந்தன்மையானவர் என்ற எண்ணத்தையும் உருவாக்கும். தவிர, செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதில் மனம் விசாலமடையும்.

Accept your mistakes!


தனிமையில் ஒரு நிமிடம் நின்று நாம் ஏதேனும் சேவை செய்கிறோமா என்று யோசியுங்கள். கடவுள் படைப்பில் நம்மால் அமைதியை உருவாக்க முடியும். சேவையில் பல விதங்கள் இருக்கின்றன. ஒரு நிமிடம் யோசியுங்கள். நாம் சந்தோஷத்தை நோக்கி நகருகிறோமா?

Are you serving? Find a way to serve!

உங்கள் கனவுகள், அதன் உயரம், அதை அடைய உங்களுக்கு இருக்கும் சக்தி என எல்லாம் உங்களுக்கு மட்டுமே தெரியும். அதனைச் சரியாக மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தவிர, நீங்கள் அதை அடைய முடியாத நேரங்களில் மற்றவர்களின் ‘அச்சச்சோ, அப்பவே நினைச்சேன், இது தேவையா?’ போன்றவற்றை தவிர்க்கலாம். ‘கனவுகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்’ என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகருங்கள்.

Walk towards to your Dreams!


ஆம். ஒவ்வொருவரிடமும் ஒரு எதிரி இருக்கிறான். மற்றவர் கண்டுபிடிப்பதைவிட நமக்கு நாமே கண்டுபிடிப்பதன் மூலம்தான் அவனை வெளியேற்றி வெற்றியைப் பெறமுடியும். அது கோபமா? ஈகோவா? பொறாமையா? என்னவென்று யோசித்து வெளியேற்றுங்கள்.

No Romance with your inner enemy!

இது மற்றவற்றைவிட உடலையும், மனதையும் அதிகம் பாதிக்கக்கூடியது. எதற்கு பயம்? உங்களுக்கு கிடைத்திருக்கும் எதுவும் உங்கள் பயத்தால் கிடைத்தது அல்ல. உங்கள் திறமையால் கிடைத்தது. ஆனால், உங்களை விட்டுப் போகும் எதற்கும் உங்கள் பயம் காரணமாக இருக்கலாம். பயம் பலவிதங்களில் வெளிப்படலாம். கோபம், அத்துமீறல், அராஜகம், நோய், வலி, துயரம், மீளமுடியாமை, சுயலாபம்,

விட்டொழிக்க முடியாத நிலை, கடைசியாக வன்முறை. எதற்கு இதெல்லாம்? இதில் ஒன்றில் கூட மகிழ்ச்சி இல்லை.

Get out of the Fear!

நல்ல மரத்தில் மோசமான பழங்கள் பழுப்பதில்லை. கெட்ட மரத்தில் நல்ல பழங்கள் கிடைக்காது. இது பைபிள் வரி. நல்ல எண்ணத்தின் மூலமே நீங்கள் நல்ல பழங்களைக் கொடுக்க முடியும். உங்கள் எண்ணத்தில் அன்பு இருந்தால், உங்கள் எண்ணத்தில் கொடுக்கும் ஆசை இருந்தால், உங்கள் எண்ணத்தில் நேர்மை இருந்தால் உங்கள் விளைவுகள் சந்தோஷத்தின் கனிகளாகத்தான் இருக்கும்.

Be a good tree!

உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதில் நீங்கள் செய்யும் செயல் சிறியதாக இருக்கக் கூடாது. நீங்கள் எவ்வளவு சிறப்பாக அதைச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்யுங்கள். மனதில் சின்ன குற்ற உணர்வு கூட இல்லாமல் செய்யுங்கள். அது பல வெற்றிகளின் திறவுகோல்.

Do your best every time!

உதவி செய்வதன் மூலமே உங்கள் இதயத்தின் சுவர் மெத்தென்ற மலர்களால் பொத்தி வைக்கப்படும். ஒரு கண்ணீர்த் துளியை ஏந்திக் கொள்ளுங்கள். ஒரு ஆதரவற்று அலையும் கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு ஜோடி பதறும் கண்களுக்கு ஆறுதலாக நில்லுங்கள்.

Help those who need help!


ஒவ்வொரு செயலுக்கும் நாம் வெற்றி, தோல்வி என்கிற இருபக்க நாணயத்தை வைக்கிறோம். வாழ்வில் இந்த நாணயம் வைத்தே ஒவ்வொன்றையும் எடை போட்டால் நாம் செல்லாக் காசாகி விடுவோம். ஏனென்றால், எல்லோருக்குமே சறுக்கல் உண்டு. ஒரு செயலுக்கு நிறைவும் மறைவுமே உண்டு. நிறைவு இல்லாத போது தெரிகிற மறைவில் நிறைவு மறைந்து இருக்கிறது. மறைந்து இருப்பதை வெளியே கொண்டு வர மேலும் சற்று காலம் ஆகும். காத்திருந்து திரும்ப நிறைவை அடையுங்கள்.

No such thing as Failure!

ஒவ்வொருவருமே ஏதோ ஒரு செயல் முடிந்த உடன்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஏதோ ஒரு வெற்றி. அவர்கள் கணக்கில் ஒரு வெற்றி. இதையெல்லாம் தள்ளி வையுங்கள். இருக்கிற ஒவ்வொரு கணமும் வாழுங்கள். வாழும் சந்தோஷத்தை அடையுங்கள். ஒரு நிமிடம் கூட திரும்ப வராத இந்த வாழ்வை ஒவ்வொரு நிமிடமும் வாழுங்கள்.

Live every moment!

இதை நாம் சட்டென்று உணர முடியாமல், கேட்டது கிடைக்க வில்லையே என்று வருத்தப்படு வோம். ஆனால், ஒவ்வொரு பிரார்த் தனையுமே ஒவ்வொரு பதிலோடு தான் திரும்ப வருகிறது என்பதே நிஜம். அந்தப் பதில் எந்த வடிவத்தில் எந்த விதத்தில், எந்த நேரத்தில் வந்து சேருகிறது என்பதை உணர முயற்சியுங்கள்.

All prayers are answered!


எது தேவை என்பதைப் போலவே எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. இல்லைகளை சுலபத்தில் நீக்க முடியும். தேவைகள் என்று சிலவே நிற்கும். அதில் ஒன்றை
கைப்பற்றுங்கள். கண் வையுங்கள்.

Focus!


பகிர்ந்து கொள்ளுவதன் மூலமே வாழ்வின் சுவை அதிகரிக்கும். உணர்வில், உடலில் பகிர்ந்து கொள்கிற எல்லாமே சுவையுடையது என்பதை நினைத்துப் பாருங்கள். பகிர்வில் ஆன்மா ஈடுபடுகிறது. இது ஒரு விதத்தில் ஆன்மாவிற்கான லோகா.

Share your life!


இது எதிர்பார்ப்பின் மூலம் வருகிற பொருளைவிட அதிக நிம்மதியைத் தரும். உங்கள் மனம் சலனமின்றி செயல்படும். கண்களில் கடவுளின் ஈரம் படிந்துவிடும். ஒரு கோயிலின் கதவைப் போல மனம் திறந்து கொள்ளும்.

Give without expectation!

செய்ததையே செய்யாதீர்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நீங்கள் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். தொடங்குங்கள் புதிதாக. உங்கள் எண்ணத்தை, உங்கள் செயலை,உங்கள் வாழ்வை.

Start new!
Read more

29 March 2012

அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்' இங்கே...


மனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். தேனை எப்படியெலëலாம் பயன்படுத்தலாம் என்பதற்கான சில `டிப்ஸ்' இங்கே...

`தேனகம்':

இரண்டு குவளை ஆரஞ்சு அல்லது எலுமிச்சைச் சாறுடன் 8 குவளை தண்ணீரும், உங் கள் ருசிக்கேற்ப தேனும் சேருங்கள். ஐஸ் கட்டிகள் சேர்த்து `ஜில்'லென்று பருகுங்கள்.

தேன்- அன்னாசிப்பழ ரசம்:

நசுக்கிய அனëனாசிப் பழத்தை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன், அரைக் குவளை தேன், அரைக் குவளை எலுமிச்சைச் சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேருங்கள். சுவையான, ஆரோக்கியமë தரும் `சாலட்' தயார்.

`சக்தி' பானம்:

இயற்கை `யோகர்ட்' 150 மி.லி.யுடன், அதே அளவு ஆரஞ்சுச் சாறு, 30 மி.லி. தேன் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்குங்கள். நுரை பொங்க கண்ணாடிக் குவளையில் ஊற் றிப் பரிமாறுங்கள்.

சூடான பானத்தில்...:

காபி, டீ போன்றவை பருகும்போது `கலோரி'களை குறைக்க விரும்புகிறீர்களா? சர்க் கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரையை விட தேன் இனிப் பானது என்பதால் கொஞ்சம் சேர்த்தாலே போதுமானது.

`தேன் வாழைக்கனி':

வாழைப்பழத்தைத் தோலை உரித்துவிடëடு துண்டு துண்டாக்குங்கள். அவற்றினë மீது தேனை ஊற்றுங்கள். சுவையான பழ உணவு ரெடி!

தேன் `பேசியல்':

நன்றாக அரைக்கப்பட்ட பாதாம் பருப்பு ஒரு மேஜைக்கரண்டி, உலர் ஓட்ஸ் 2 மேஜைக் கரண்டியுடன், ஒரு மேஜைக் கரண்டி தேன் சேர்த்துக் கலந்துகொள் ளுங்கள். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையைக் கொண்டு உஙëகள் முகத் தில் மென்மையாக `மசாஜ்' செய்யுங்கள். முகமெங்கும் சீராகத் தடவி உலர விடுங் கள். வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். முகம் இப்போ `பளிச்'!

சாப்பிடலாம்... முகத்தில் பூசலாம்...:

ஒரு வெள்ளரியைச் சாறாக்கி, அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேருங்கள். அதை முகத்தில் பூசி, உலர்ந்ததும் முகத்தைக் கழுவுங்கள். முகம் பொலிவு பெறக் காணுங்கள். இந்தச் சாறை ஒரு வாரம் வரை `பிரிட்ஜில்' வைத்திருந்து பயன்படுத்தலாம்; பருகலாம்.

குளியலுக்கு...:

உங்கள் தேகம் தகதகவென்று மின்ன வேண்டுமா? நீங்கள் குளிக்கும் வெந்நீரில் கால் குவளை தேனë கலந்து குளியுங்கள். குறிப்பாக உலர்ந்த சருமக்காரர்களுக்கு இக்குளியல் மிகவும் ஏற்றது. எகிப்து பேரழகி கிளியோபாட்ரா பயன்படுத்திய அழகுக் குறிப்புங்க இது!

முகத்தின் ஈரப்பதம் காக்க...:

குளிர்காலத்துக்கு ஏற்ற குறிப்பு இது. 2 மேஜைக்கரண்டி தேன், 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து, முகத்தில் சீராகப் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள்.

கரும்புள்ளிகள் மறைய...:

வெந்நீரையும், உப்பையும் சேர்த்து, அதை பஞ்சால் தொட்டு முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்துஙëகள். பினëனர் அதன் மீது தேனில் நனைத்த பஞ்சை வைத்துத் தடவுங்கள். சிறிதுநேரம் கழித்துக் கழுவி, உலர விடுங்கள்.

தொண்டை இதமாக...:

தொண்டை வலியா? அதற்கான அறிகுறìயா? எலுமிச்சைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகுங்கள்.

கேசம் பளபளக்கும்:

தலைமுடிக்கு ஷாம்பூ தேய்த்துக் குளித்தபிறகு, ஒரு தேக்கரண்டி தேன், புத்தமëபுதிய எலு மிச்சைச் சாறு, 4 குவளை வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கேசத்தை நனையுங்கள். அப்படியே உலர விடுங்கள். கேசம் நரைத்துவிடும் என்று பயப்படாதீர்கள். பளபளக்கும்.

`கொழுப்பை'க் கட்டுப்படுத்தும்:

தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவìல் படுக்கப் போகும்முனëபும் ஒரு குவளை வெந் நீரில் தேன், கிராம்புப் பொடி சேர்த்துப் பருகுங்கள். உங்கள் உடம்பில் தேவையற்ற கொழுப் புச் சேர விடாது இது.

தலைமுடியின் வறட்சியைப் போக்கலாம்:

தேனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து உங்கள் தலைமுடியின் நுனிகளில் தடவுங்கள். பின்னர், வெந்நீரில் நனைத்த துணியால் 20 நிமிடங்கள் தலைமுடியைச் சுற்றி வையுங்கள். பின்னர் வழக்கம்போல் ஷாம்பூ போட்டோ, போடாமலோ குளியுங்கள். தலைமுடியின் வறட்சியைப் போக்கவும், நுனிகளில் சுருண்டுகொள்வதையும் தடுக்கவும் இந்த உத்தி உதவும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சி-யால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

அதிகாலை-யிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.


நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்த-வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.


சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனை-யாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.


நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டு-விட்டால் உடம்பு அவ்வளவுதான்.


ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.


மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.


படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.


ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.


இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். நமது உடலுக்கு கார்-போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.


சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசி-யின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்-குழாய் தொடர்பான சில தொல்லை-கள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங் டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.


இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
Read more

விலை உயர்ந்த செல்போன்களைத் திருட்டிலிருந்து காப்பாற்ற அற்புதமான சாஃப்ட் வேர்!


விலை உயர்ந்த செல்போன்களைத் திருட்டிலிருந்து காப்பாற்ற அற்புதமான சாஃப்ட் வேர் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சாஃப்ட்வேர் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய சாஃப்ட்வேரின் உதவியால் சென்னை மாநகர காவல்துறையின் ‘சைபர் க்ரைம்’ பிரிவினர், காணாமல் போன நோக்கியா ‘என் (ஸீ) 70’ மாடல் செல்போனை புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

சென்னையை சேர்ந்த விக்ரம் என்ற இளைஞர் தனது செல்போனில் ‘கார்டியன்’ என்கிற செல்போன் திருட்டுத் தடுப்பு சாஃப்ட்வேரை இணைய தளத்திலிருந்து இலவசமாகவே டவுன்லோட் செய்திருந்தார். ‘கார்டியன்’ சாஃப்ட்வேரின் சிறப்பம்சம் இதுதான். அதாவது, ‘இந்த சாஃப்ட்வேர் பதிவுசெய்த செல்போன் ஒருவேளை திருடு போனால், அதில் ஒவ்வொரு முறையும் போடப்படும் புதிய சிம் கார்டுகளின் நம்பரை உடனடியாக இந்த சாஃப்ட்வேர் காட்டிக் கொடுத்துவிடும்.’ எப்படி என்கிறீர்களா?

‘கார்டியன்’ சாஃப்ட்வேர் லோடு செய்யப்பட்ட நம் செல்போனில் முதல் வேலையாக, நமக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் செல்போன் நம்பரைப் பதிவு செய்துவிட வேண்டும். இப்படிச் செய்தால், நம் செல்போன் திருடு போகும்பட்சத்தில் அதில் இருக்கும் ‘கார்டியன்’ சாஃப்ட்வேர் புதிய சிம் கார்டுகளின் எண்களை நாம் ஏற்கெனவே கொடுத்திருக்கும் நம் நண்பர் அல்லது உறவினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். தகவலாக அனுப்பிக் கொண்டேயிருக்கும். இதை வைத்துத் திருடு போன செல்போனை யார் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்துகொண்டு அதை மீட்கலாம். கடந்த மாதம் விக்ரம், சென்னை சூளைமேட்டிலிருக்கும் தனது நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருக்கிறார். அப்போது அவரது செல்போன் தொலைந்துபோய் விட்டது. உடனே, சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில், தொலைந்துபோன செல்போனில் டவுன்லோட் செய்திருந்த ‘கார்டியன்’ சாஃப்ட்வேர், அந்த போனில் புதிதாகப் போடப்பட்ட ஒவ்வொரு சிம் கார்டின் எண்ணையும் விக்ரம் ஏற்கெனவே அந்த போனில் பதிவு செய்திருந்த அவருடைய சகோதரியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய ஆரம்பித்துவிட்டது. இதையெல்லாம் சூளைமேடு போலீஸாரிடம் விக்ரம் எடுத்துச் சொல்லியும், பெரிய நடவடிக்கை ஒன்றும் இல்லை. எனவே, நம் அலுவலகத்துக்கு வந்தார் விக்ரம்.

விக்ரமை அழைத்துக் கொண்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் சைபர் க்ரைம் உதவி ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு உதவி ஆணையர் டாக்டர் சுதாகரிடம் புகார் செய்தோம். அவரிடம் ‘கார்டியன்’ சாஃப்ட்வேர் பற்றியும் அது அனுப்பிய சிம் கார்டு எண்களையும் சொன்னவுடன் மிகவும் உற்சாகமானார். உடனடியாக, திருடு போன செல்போன் தற்போது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். மறுநாள் பிற்பகல் நம்மையும் விக்ரமையும் அழைத்த உதவி ஆணையர் டாக்டர் சுதாகர், திருப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரமின் செல்போனை அவரிடம் ஒப்படைத்தார்.

‘‘விக்ரமின் செல்போன் நான்கைந்து கைகள் மாறி கடைசியாக திருப்பூரில் இருந்ததை எங்கள் புலன்விசாரணை மூலம் கண்டுபிடித்தோம். இதற்கு விக்ரம் தன் போனில் போட்டிருந்த ‘கார்டியன்’ சாஃப்ட்வேர்தான் பெரிதும் உதவியது. பொதுவாக, சென்னையில் மாதம்தோறும் சுமார் 150 முதல் 200 செல்போன்கள் காணாமல் போவதாகப் புகார்கள் பதிவாகிறது. ஐ.ஈ.எம்.ஐ. எனப்படும் செல்போனின் தனி அடையாள குறியீட்டு எண் குறிப்பிட்டு வரும் புகார்களை செல்போன் சேவை வழங்கும் ஆபரேட்டர்கள் மூலம் கண்காணித்து, காணாமல் போன செல்போன்களை மீட்டு வருகிறோம். எழுபது சதவி கிதத்துக்கு மேல் ரெக்கவரி செய்து உரியவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக் கப்பட்டு வருகிறது. செல் போன் திருட்டைத் தடுக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக பழைய செல்போன்களை வாங்காதீர்கள். ஒருவேளை தெரிந்தவர்கள் பயன்படுத்திய செல்போனை வாங்க நேர்ந்தால் பில்லைக் கேட்டு வாங்குங்கள். பெரும்பாலும் பழைய செல்போன்களை வாங்குபவர்கள் திருட்டு போனை வாங்கிய வழக் கில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. அடுத்து, செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் செல்போனின் தனி அடையாள எண்ணான ஐ.ஈ.எம்.ஐ. எண்ணைத் தனியாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் செல்போனில் *#06# என்று அழுத்தினால் போதும்... ஐ.ஈ.எம்.ஐ. எண்ணைத் தெரிந்து கொள்ளலாம். நவீன ரக செல்போன்களை வைத்திருப்பவர்கள் ‘கார்டியன்’ போன்ற சாஃப்ட்வேர்களைப் பதிந்து வைத்துக் கொண்டால், செல்போன் திருடு போனால் அதனை எளிதில் கண்டுபிடிக்க முடியும். சென்னைக்குள் இருப்பவர்கள் தங்கள் செல்போன் காணாமல் போனால் cybercrime@rediffmail.com(சைபர்க்ரைம் @ ரிடிஃப்மெயில்.காம்) என்ற மின்னஞ்சலில் புகாரை அனுப்பினால் அதனடிப்படையில் உரிய நடவடிக்கையைக் காவல்துறை எடுக்கும்’’ என்றார் டாக்டர் சுதாகர்.

‘கார்டியன்’ சாஃப்ட் வேர் மூலம் தன் செல் போன் உடனடியாகக் கண்டு பிடித்துத் தரப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்த விக்ரம், ‘‘கார்டியன்சாஃப்ட்வேரை
http://www.download.com/Guardian/3000-11138_4-10612971.html,
http://www.symbian-toys.com/guardian.aspx
ஆகிய இணையதள முகவரிகளில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்’’

மொத்தத்தில், விலை உயர்ந்த செல்போன்களுக்கு ‘கார்டி யன்’ போன்ற இலவச சாஃப்ட்வேர்கள் நிச்சயமாகவே ‘கார்டியன்’தான்!

செல்போன் திருட்டு தடுப்பு சாஃப்ட்வேரான ‘கார்டியனை’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் இணைய தளங்கள் மூலமாக கம்ப்யூட்டரில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிறகு, டேட்டா கேபிள் மூலமாக செல்போனில் குறிப்பிட்ட இந்த சாஃப்ட்வேரை பதிந்து கொள்ளலாம். ‘நோக்கியா’ கம்பெனி மாடல்களான 6600, 7610, 6630, 6670 என்&70, 72, 80, 93, 95 ஆகிய செல்போன்களில் இந்த சாஃப்ட்வேர் சிறப்பாக செயல்படுகிறது. பெரும்பாலும், இந்த மாதிரியான செல்போன்களை வாங்கும்போது இணை உபகரணங்கள் என்று சொல்லி கொடுக்கப்படும் சார்ஜர், ஹேண்ட்ஸ் ஃப்ரீ, மைக் போன்ற பொருட்களில் இந்த டேட்டா கேபிளும் அடங்கும். மேலே குறிப்பிட்ட இந்த மாடல் செல்போன்களைத் தவிர, ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பாலான செல்போன்களில் இதுபோன்ற திருட்டுத் தடுப்பு சாஃப்ட்வேரை நாம் பதியவைக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. அந்த குறைபாட்டை நீக்குவதற்கான முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வரும் செல்போன் நிபுணர்கள், ‘இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லா செல்போன்களுக்கும் திருட்டு தடுப்பு சாஃப்ட்வேரை பதிய வைக்கும் முயற்சி சாத்தியப்படும்’ என்கிறார்கள்.
Read more

அழகின் ரகசியம்! “வெல்கம்” குங்குமப்பூ....”குட்பை” கரும்புள்ளி.


இது அழகுக்கு சலாம் போடும் ‘வேடிக்கை’ மனிதர்களின் உலகம்!
இங்கே, தாய்ப்பாலின் அருமையைக் கூட
ஐஸ்வர்யாராய் எடுத்துச் சொன்னால்தான் எடுபடுகிறது!

செக்கச் சிவப்பை அள்ளித் தருகிற குங்குமப்பூ, தோலை பளபளப்பாக்கி பளீரிட வைக்கிறது. ஸ்பெயின் நாட்டில் அதிகமாக விளையும் குங்குமப் பூவின் விலையைப் போலவே, அது அள்ளித் தரும் பலன்களும் அதிகம்.

முகச் சுருக்கத்தைப் போக்கி பொலிவை கூட்டும் குங்குமப்பூவின் அசத்தல் டிப்ஸ்.

10 கீரல் குங்குமப்பூவை 1 டீஸ்பூன் பாலில் கலந்து ஊறவைத்து நன்றாக மசியுங்கள். இதை முகத்தில் பூசி உலர்ந்ததும் கழுவுங்கள். முகச் சுருக்கம் காணாமல் போய், 10 வயது குறைவாக காட்டும்.

மழைக் காலம். தோலில் வறட்சி தாண்டவமாடும். வறட்டுத்தன்மையை அடியோடு அகற்ற செய்கிறது குங்குமப்பூ.

பாதாம்பருப்பு & 25 கிராம், ரவை & 30 கிராம், குங்குமப்பூ & 10 கிராம்... இவற்றை நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். இது கலக்கும் அளவுக்கு பசும்பால் சேர்த்து, வடை மாதிரி செய்து உலர்த்துங்கள். இதில் ஒன்றை எடுத்து, பால் ஏடு கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

ரவை, தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றி, புது செல்களை உருவாக்கும். பாதாம், வறட்சியைப் போக்கும். குங்குமப்பூ, நிறத்தைக் கொடுத்து வசீகர அழகை வழங்கும்.

முகத்தில் தொய்வு இல்லாமல் பளிங்கு போல் மாற்றிக் காட்டுகிறது, இந்த குங்குமப்பூ ஸ்க்ரப்.

சர்க்கரையை அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அது கலக்கும் அளவுக்கு வெண்ணெய், குங்குமப்பூ சம அளவு சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு கைகளால் நுரை வரும் வரை நன்றாக மசியுங்கள். க்ரீமாக வந்ததும், முகப் பகுதியில் கீழிருந்து மேல் நோக்கி பூசி, ஐந்து நிமிடம் நன்றாக தேயுங்கள்.

பத்து நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்து வர, முகம் தொய்வில்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

விசேஷங்களுக்கு போகும்போது அழகாக தெரிய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்தான். இதற்கு பியூட்டி பார்லருக்குதான் ஓட வேண்டும் என்பதில்லை. இந்த குங்குமப்பூ ப்ளீச் செய்து பாருங்கள்.

குங்குமப்பூவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன், முல்தானிமட்டி & 2 டீஸ்பூன்... இதனுடன் வெந்நீர் சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். முகம், கழுத்து பகுதிகளில் ‘திக்Õகாக பூசி, ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்.

பியூட்டி பார்லருக்கு போய் ‘ப்ளீச்' செய்தது போல் பளிச்சென மின்னும்.

தோலை பளபளப்பாக்கி, சிகப்பு நிறத்தை அள்ளித்தரும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டில்தான் அதிகம் விளைகிறது. விலையும் அதிகம்தான்! ஆனாலும் அழகு கலையில் முக்கிய இடம் வகிக்கிறது.

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும் அசத்தல் டிப்ஸ் இதோ:

குங்குமப்பூவில் 10 பிசிறை எடுத்து, பாலில் ஊற வையுங்கள். நன்றாக ஊறியதும் அதை மசியுங்கள். அதை அப்படியே எடுத்து, முகத்தில் தடவுங்கள். உலர்ந்த பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள். டவலால் அழுத்தமாக துடைக்காமல் ஒத்தி எடுங்கள். இப்போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு சில வயது குறைந்திருக்குமாம்! முகமும் பொலிவுடன் காணப்படும்.

கோடை முடிஞ்சு இனி பனி, மழைக்காலம் ஆரம்பம், தோலில் வறட்சி வந்து குடி கொள்ளும். இந்த வறட்டுத் தன்மையை அடியோடு அகற்றும் சக்தி குங்குமப்பூவுக்கு உண்டு!

சிறிதளவு குங்குமப்பூ, 30 கிராம் ரவை, பாதாம் பருப்பு 25 கிராம் இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும். பின்னர் அவற்றுடன் பசும்பாலை சேர்த்து கலக்கவும். கொஞ்ச நேரம் உலர வைக்கவும். உலர்ந்த பிறகு அவற்றுடன் பால்ஏடு சேர்த்து கலந்து, முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான நீரில் கழுவினால், முகம் பளபளவென ஜொலிக்கும்.

இதில் உள்ள பாதாம்பருப்பு வறட்சியை நீக்கும். ரவை முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உண்டாக்கும், குங்குமப்பூ தோலுக்கு சிகப்பை கொடுத்து, முகத்தை அழகாக்கும்!

கொஞ்சம் வயசானால் முகத்தில் ஒருவித முரட்டுத்தனம் ஏற்படும். அதை தடுத்து, பளிங்குபோல் மாற்ற ஒரு வழி!

ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை எடுத்து நன்றாக அரைக்கவும். அதில், குங்குமப்பூ மற்றும் வெண்ணை சேர்த்து பிசையவும். பேஸ்ட் போல் வந்ததும், அதை எடுத்து, முகத்தில் கீழிருந்து மேலாக தேய்க்கவும். பத்து நிமிடம் இப்படி மெதுவாக தேய்த்தபிறகு முகத்தை கழுவி விடவும். வாரத்துக்கு ஒருமுறை இப்படி செய்து வந்தால், தொய்வில்லாத முகமாக மாறி பளிச் தெரியும்.

ஏதாவது, பார்ட்டி அல்லது விழாக்களுக்கு செல்லும்போது பலரும் நம்மை பார்க்க வேண்டும் என்று அனைவருக்குமே ஆசை உண்டு! அந்த ஆசையை நிறைவேற்றுகிறது குங்குமப்பூ. இதனால் பளிச்சென மாறி விழாவின் நாயகியாக நீங்கள் மாறினாலும் ஆச்சரியமில்லை!

சிறிதளவு குங்குமப்பூவை எடுத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் முல்தானிமட்டி 2 ஸ்பூன், கொஞ்சம் வெந்நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் ஆக்கவும். அதை முகம், கழுத்து பகுதிகளில் பூசவும். பத்து நிமிடம் கழித்து கழுவினால் சும்மா கழுவி துடைத்த பளிங்கு சிலை போல் தகதகவென தங்கமாக மின்னுவீர்கள்!

குங்குமப்பூவால் கலராக மாறும் ரகசியத்தை தெரிந்து கொண்டீர்களா? இனி ஜமாயுங்கள்!
சுண்டினால் ரத்தம் தெறிக்கும் நிறம் 'திருமதி செல்வம்' அபிதாவுக்கு. நீள நீள தொங்கட்டான்களும் ஃப்ரீ ஹேருமாக 'டிபிக்கல் சென்னை கேர்ள்' ஆக ஜொலிக்கிறவரிடம் அழகின் அம்சங்களாக எடுத்துச் சொல்ல ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான காரணங்களாக நம்மிடம் சொல்லவும் ஏராளம் இருக்கிறதாம் இவருக்கு. வாருங்களேன் கேட்கலாம்..

''எனக்கு முகத்துல எண்ணெய் வழியும்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு பளிச்னு இருக்குறதுக்குக் காரணம் பியூட்டிஷியனா இருக்கற என் அக்காதான். அவங்க பால்ல குங்குமப்பூவை கலந்து தருவாங்க. அதை முகத்துல தடவி நல்லா மசாஜ் பண்ணுவேன். இதுனால முகம் பளபளப்பாகுறதோட, கரும்புள்ளிகளும் காணாம போயிடும்.

வறண்ட சருமம் இருக்கிறவங்க தேங்காய்ப் பாலோட குங்குமப்பூவை கலந்து மசாஜ் செய்யணும். தேங்காய்ப் பால்ல இருக்கற எண்ணெய்ப் பசை, வறண்ட சருமத்துக்கு ரொம்ப நல்லது. இப்போ நிறைய போலி குங்குமப்பூ வந்துடுச்சு. ஒரிஜினல் குங்குமப்பூவை எப்படி கண்டுபிடிக்கிறதுனு சொல்லட்டுமா? ஒரிஜினல் குங்குமப்பூவை பால்ல போட்டா, பால் மஞ்சள் நிறத்துல மாறிடும்.

எனக்கு இன்னிக்கு வரை முடி உதிர்ந்ததே இல்லை. அதுக்குப் 'பின்னால' ஒரு காரணம் இருக்கு. குறுமிளகு, மருதாணி, கறிவேப்பிலை, செம்பருத்தி பூ எல்லாத்தையும் தண்ணியில அலசிட்டு, மிக்ஸியில நல்லா அரைச்சு, ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்குவேன்.

தேங்காய் எண்ணெயை இரும்பு கடாயில காய வச்சு, கை பொறுக்குற சூடு வரும்போது, இந்த ஜூஸை அதோட கலந்து கொஞ்ச நேரத்துல இறக்கிடுவேன். இந்த எண்ணெய்தான் என் கருகரு கூந்தலுக்குக் காரணம். குறுமிளகு, பொடுகுத் தொல்லையில இருந்து முடியை பாதுகாக்கும்ங்கிறது இந்த எண்ணெய்ல கூடுதல் பலன்.

கேரளாவுல இருக்கறவங்க தினமும் காலையில இந்த எண் ணெயை பஞ்சுல தொட்டு, இஞ்ச் இஞ்சா தலையில தேய்ச்சுட்டு ஒரு மணிநேரம் கழிச்சி ஷாம்பூ போடாம தலைக்குக் குளிப்பாங்க. இதனால தலையில போதுமான எண்ணெய் இருக்குமே தவிர, அது முகத்துல வழியாது. வாரத்துல ரெண்டு நாள் மட்டும் ஷாம்பூ போட்டுக் குளிப்பாங்க.


பாதங்கள் வழவழப்பா இருக்கறதோட காரணத்தைச் சொல்லட்டுமா? கொஞ்சம் சொரசொரப்பான, அதே நேரம் காலை பதம் பார்த்துடாத மாதிரியான ஒரு கல்லை பாத்ரூம்ல வெச்சிருக்கேன். குளிச்சு முடிச்சதுமே இந்தக் கல்லால காலை நல்லா தேய்ப்பேன். இறந்த செல்கள்லாம் உரிஞ்சு வந்துடும். இதை தினமும் செஞ்சுட்டு வந்தா, 'பித்த வெடிப்பா.. அப்படின்னா என்ன?'னு கேக்கலாம்!''
Read more

ஆரோக்கியமாக இருக்க சில எளிய வழிகள்-16


நம்மில் பலருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் உடலில் நாம் விரும்புகிற ஆரோக்கியம் இருக்கிறதா? என்ற ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டால் பதில் சொல்ல முடியாது. காரணம் கெட்ட பழக்கங்கள் மட்டுமே உடலை பாதிப்பது இல்லை. நல்ல பழக்கங்கள் இல்லாததும் நம் உடலை பாதிக்கிறது. ஏதோ ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது என்றால் அதை விடுவதற்கு சிறு சிறு முயற்சியாவது செய்கிற நாம், நல்ல பழக்கங்களுக்கு வரும்போது அதை உருவாக்கிக் கொள்வதற்கு எந்த சிரத்தையும் எடுப்பது இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டு நான்கு நாளாக சிகரெட்டை கைவிட்டுப் பார்க்கிறவர்கள் பத்து நிமிஷம் நடைப் பயிற்சி பற்றி யோசிப்பதே இல்லை. இந்தப் பிரச்சினை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்ளாமல் நம்மைக் காப்பாற்றுவது போலவே, நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கெட்ட பழக்கங்கள் இனிப்புச் சுவை உடையவை. சுலபத்தில் அடிமைப்படுத்தும். நல்ல பழக்கங்கள் கசப்பு. ஆனால் பழகப்பழக இனிப்பைக் காட்டும். அந்த இனிப்பைப் பெற சில நேரம் நாம் கசப்பைப் பழக வேண்டும். எப்படி? கீழே அதற்கான சில எளிய வழிகள் இருக்கின்றன. பயன்படுத்தி மகிழுங்கள்.

நாள் ஒன்றுக்கு பத்து நிமிடம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் இனி தினமும் என்று முடிவு செய்யாதீர்கள். முப்பது நாட்களுக்கு மட்டும் என்று முடிவு செய்யுங்கள். முதல் நாள் முடிந்தவுடன் இன்னும் இருபத்தொன்பது நாட்கள்தான் என்று தோன்றும். அடுத்த நாளில் உங்களின் இலக்கில் மற்றொரு நாள் குறையும். இப்படியே போகப்போக நான்காவது வாரத்தில் சரி இது கடைசி வாரம் என்று தோன்றும். கடைசி நாளில் இந்த ஒரு மாதம் நடந்ததில் என்ன என்று யோசித்துப் பாருங்கள். முதல் நாள் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து சிரமப்பட்டு எழுந்த நீங்கள் முப்பதாவது நாள் எழுப்பாமல், அலாரம் அடிக்காமல் எழுந்திருந்ததை உணர முடியும்.

சீக்கிரம் எழுந்ததால் இந்த மாதம் முழுக்க உங்கள் வேலைகள் பதட்டமின்றி ஏதோ நிறைய நேரத்துடன் முடித்திருப்பதை உணருவீர்கள். உங்கள் தொந்தி சற்று சரிந்திருக்கிறது. இடுப்புப் பகுதியில் ஒரு சுதந்திரம். மூச்சு சுலபமாக இருக்கிறது. தினமும் நடந்ததில் புதிதாக ஒரு நண்பர் கிடைத்து அதனால் பல நாள் ஆடிட்டிங் பிரச்சினை ஒன்று தீர்ந்திருக்கிறது. உங்கள் புத்துணர்ச்சி சில மடங்கு அதிகரித்திருக்கிறது. ஏதோ ஒரு நோயைப் பற்றி பேச _ கேட்க நேரிடும் போது தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிகிறது. உங்களுக்கு சற்று சர்வீஸ் செய்து விட்டது போல இருக்கிறது. சுலபமான அசைவுகள். அட.. இவ்வளவு சுகமா நடப்பதனால்? முப்பதாவது நாள் இந்தப் பழக்கம் உடலில் ஒட்டிக் கொண்டு நீங்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் விடியலில் விழிப்பு தட்டும். அவ்வளவுதான்... நல்ல ஒரு பழக்கத்தை ஒரு முப்பது நாள் மட்டும் தொடருங்கள். பிறகு பழக்கம் உங்களைத் தொடரும்.

Anything good commit thirty days!

ஜிம்முக்குப் போவது என்று முடிவு செய்தால் தினமும் செல்லுங்கள். ஷட்டில் காக் விளையாட நினைத்தால் தினமும் விளையாடுங்கள். பாக்சிங் என்றால் தினமும் பங்ச்! பரண்மேல் ஏறினால் தினமும் உயரம்! உடற்பயிற்சிக்கு என்று எது செய்தாலும் தினமும் செய்யுங்கள். தினமும் என்பதுதான் நல்ல பழக்கங்களைக் கைக்கொள்ளும் தாரக மந்திரம். வாரத்திற்கு இரண்டு நாள், மூன்று நாள் என்றால் சோம்பல். இடை நாட்களில் தடை பட்டு விடும். வேண்டாம்.

Anthing good make it daily!

படிக்க, நடக்க, பாட என்று எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் ஆரம்பிக்கும் போது எளிமையாக மிக எளிமையாக ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று தொடங்குங்கள். தொடங்கியிருக்கிறோம் என்பதை நீங்களே உணராத அளவிலான நேரத்தில் தொடங்குங்கள். அடுத்த வாரம் பதினைந்து நிமிடம். அதற்கடுத்த வாரம் இருபது நிமிடம். இப்படியே அதிகப்படுத்துங்கள். இதுவே நீங்கள் நினைத்ததை அடைய சுலபமான வழி. இதை விட்டு விட்டு எடுத்தவுடனே ஐம்பது பங்கி, பத்து முட்டை, காபி கட், கம்பங்கூழ் என்று தடாலடியாக மாற்றாதீர்கள். மூன்று நாள்தான் நடக்கும். நான்காவது நாள் பகல் நாலுமணிக்குத்தான் எழுந்திருப்பீர்கள். என்னப்பா? என்று அம்மா கேட்டால் முனகி ‘ஸ்ட்ராங்கா காபி கொடு’ என்பீர்கள். களிதான செய்யச்சொன்ன என்று அம்மா கேட்டால் முறைப்பீர்கள். தடாலடியில் முக்கியப் பிரச்சினை தொடர முடியாது.

Anthig good start simple!

புதிதாக முயற்சி செய்கிற எந்த நல்ல பழக்கத்தையும் நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதுதான் அதன் முக்கியத்துவத்தையும், தேவையையும் அதிகப்படுத்தும். அந்தச் செயலை ஞாபகப்படுத்திக் கொள்வதை விட அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு செயல் பழக்கமாக மாறுவதற்கு ஆரம்ப காலங்களில் ஞாபகப்படுத்திக் கொள்வது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

Anything good Remind Yourself!

ஒரு நல்ல விஷயம் நல்ல பழக்கமாக மாறுவதற்கு ‘திரும்பத் திரும்ப’ என்ற சொல் மற்றுமொரு அடிப்படை மந்திரம். ஒவ்வொரு நாளும் அதே நேரம், அதே அளவு, அதே வேகம், அதே உழைப்பு, அதே கவனம், அதே முறை என்று திரும்பத் திரும்ப என்ற வார்த்தைக்குள் எவ்வளவு ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். ஒரு முப்பது நாட்களுக்கு இந்த ‘அதே’க்களை பயன்படுத்தினால் போதும். எந்த நல்ல செயலும் பழக்கமாக ஒட்டிக் கொண்டு விடும்.

Anything good stay consistant!

காலையில் ஜாகிங் செய்யும் முதல் இரண்டு நாள் வெறுப்பாகத்தான் இருக்கும். ‘தாத்தா தினமும் பத்து மணிக்குத்தான் தூங்குவார். எண்பது வயது வரைக்கும் நல்லாத்தானே இருந்தார்...’ என்று கேள்வி வரும். ‘பாட்டி என்ன ஜாகிங்கா செஞ்சுச்சு... பல்லாங்குழிதானே விளையாடுச்சு’ என்று சப்பைக் காரணங்கள் நல்ல செயல்களுக்கு எதிராகத் தோன்றும். சோவையாக யோசித்தபடி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் அந்தப் பெண்ணைக் கவனிக்க முடிகிறது. அட... யார் இது?... நம்ம ஏரியால பாத்ததே இல்லையே? என்று கவனித்து ஓட்டத்தில் சுவாரசியம் வரும். அடுத்த நாள் காலை அலாரம் அடித்ததும் தாத்தா, பாட்டி யெல்லாம் வந்து கவனத்தைக் கலைக்க மாட்டார்கள். பார்க் பெண் ஞாபகத்துக்கு வந்து பட்டென்று சுறுசுறுப்பு காலைக் கடிக்கும். அவளுக்காக ஓடினாலும் சரி, உங்களுக்காக ஓடினாலும் சரி. ஓடுவது நல்லது. இப்படி ஏதாவது ஒரு காரணத்தை உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்கும். ஆரோக்கியம் புதிதாகவும் கிடைக்கும்.

Secret is Get a buddly

அவ்வப்போது ஏதாவது ஒரு நல்ல பழக்கத்தை நாம் முயற்சி செய்து தோற்கிறோம். சிலர் விடாப்பிடியாக கடைப்பிடித்துத் தப்பிக்கிறார்கள். தினமும் அரைமணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது என்று முதலில் திட்டமிடுகிறோம். நண்பருடன் தொலைபேசியில் பேசுகிறோம். அப்பாடா... இன்று ‘கோலங்கள்’ பார்க்காமல் தாண்டியாகிவிட்டது என்று சாப்பிடுகிறோம். பிறகு படுக்கும் போது மெல்ல சானல் செய்தி கவனிக்கிறோம். தூக்கம் வராத மாதிரி இருக்கிறதே என்று யோசித்தபடியே ரிமோட்டைத் தடவியதில் தேன் கிண்ணம் ஆளை கிரங்கடிக்கிறது. வழக்கமாக கோலங்கள், மதுரையோடு முடித்துக் கொண்ட நாம் மாறாக சிரி சிரி முடித்து சௌத்ஃபுல் வரை வந்தாகிவிட்டது. அப்புறம் எதுக்கு வம்பு என்று இப்போதெல்லாம் எட்டரை மணிக்கு சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கு கோலங்கள் போடத் தயாராகிவிட்டோம். இதுதான் கடைசியாக முயற்சி செய்தது என்றால் கூட பரவாயில்லை. மறுபடியும் ஒரு தடவை முயற்சி செய்யுங்கள். பத்து நாள் ஓடி நின்று விட்டேன் என்று திரும்ப ஓடத் தொடங்குங்கள். அந்த நாள் அப்பழக்கத்தைக் கைவிட்டேன் என்றால் திரும்ப அதைத் தொடருங்கள்.

Try try one you quit Finally!

‘‘எடுத்த உடனே பத்து கிலோ எடை குறைக்கப் போகிறேன்’’, இனிமேல் ‘டீ, காபியே கிடையாது’, ‘ஒன்லி வெஜ்’ என்று பெரிய பெரிய திட்டத்தில் கை வைக்காதீர்கள். இரண்டு வாரம் காய்கறிகளைக் கடித்துத் துப்பிவிட்டு முடிவு ஞாயிறில் நண்பர்களோடு சேர்ந்து அடுத்த நான்கு வாரங்களுக்கும் சேர்த்து கோழியை இல்லை இல்லை கோழிகளைச் சாப்பிட்டு விடுவீர்கள். (பறவைக் காய்ச்சல் பயம் வேறு சுவையை அதிகமாக்கும்). இதே மாதிரி குழப்பங்களில் சிக்கி தோல்வி அடையாமல் ஒரு சிறிய இலக்கை வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் ஒரு கிலோ எடை குறைந்தால் போதும். அதற்காக எளிய மாற்றங்களை தினசரி வாழ்வில் எடுங்கள். இப்படி இயங்கும் போது கடைப்பிடிக்கிற பழக்கங்கள் உங்களுக்கு கடுமையாக இருக்காது. பழக்கமும் மெல்ல கைக்கு வரும்.

Fix a small farget!


உடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்கள் என்றால் உடனே அதில் முழுமையை எதிர்பார்க்காதீர்கள். காலில் ஷ¨ லேஸ் அறுந்து விட்டதற்காக அன்றைய ஜாகிங்கை நிறுத்தாதீர்கள். வெறும் காலோடு ஓடலாம். தப்பில்லை. பெர்ஃபெக்ஷன் என்பது பழக்கத்தைக் கைக்கொள்ள முடியாமல் உங்களை நகர்த்தி விடும். நல்ல பழக்கங்களை முயற்சி செய்யும் போது இம்பெர்ஃபெக்ஷன் என்பது அனுமதிக்கப்பட வேண்டியது. எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை விட எது சரியாக இருக்க வேண்டுமோ அது சரியாக இருந்தால் போதும்.

Be Imperfect!

பழக்கத்தை மாற்றும் செயல்களில் இந்த ‘ஆனால்’ என்பது மிக முக்கியமான ஃபார்முலா கீ என்று பல்வேறு சைக்கலாஜிக்குகள் உறுதி செய்திருக்கிறார்கள். எதிர்மறையாக ஒரு செயலைச் சிந்திக்கும் போது ஆனால் என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள். ‘தினமும் அஞ்சு கிலோ மீட்டர் ஓட முடியாது என்னால... ஆனால் கொஞ்ச நாள் ஆனா முடியும்னு நினைக்கறேன்...’ அவ்வளவு தான். இந்த ‘ஆனா’வை’ பயன்படுத்தினால் எந்த பழக் கத்தையும் நீங்கள் கைக் கொள்ள முடியும்.

Use the word "But"!

நீங்கள் எதை விட்டுவிட நினைக்கிறீர்களோ அல்லது எதை பற்றிக்கொள்ள நினைக்கிறீர்களோ அதற்கு எதிரான காரணிகளை உங்கள் சுற்றுப்புறங்களில் இருந்து நீக்குங்கள். முதல் முப்பது நாட்களுக்குப் போதும். டி.வி. வேண்டாம் என்றால் ஒரு மாதம் கேபிளை கட் செய்யுங்கள். (ஆப்பரேட்டரிடம் சொல்லிவிட்டு!) கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்றால் ஃப்ரிட்ஜில் வைத்து காப்பாற்றுகிற ஸ்வீட்ஸை அகற்றுங்கள். கிச்சனில் நெய்க்கு தபா. காரக் குழம்புக்கு நெய்க்கு பதில் நெல்லி வத்தல். வீட்டில் நோ பிஸ்கட்ஸ். இந்த மாதிரி உங்களுக்கு எது தேவையோ அதை உருவாக்கும் சுற்றுப்புறங்களை முதலில் உருவாக்கிக் கொள்ளுங்கள். மேசையில் மைசூர்பாகை வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வாக்கிங் போகாதீர்கள்.

Remove Temptation!

குண்டான நண்பர்கள் இருக்கிறவர்கள் சீக்கிரமே குண்டாகி விடுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்திருக்கிறது. யார் மாதிரி நாம் மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரைக் கண்ணாடியில் பாருங்கள்! ‘உன் நண்பனைக் காட்டு நீ யார் என்று சொல்கிறேன்...‘ என்று காந்திஜி சொன்ன வாசகம்

ஆரோக்கியத்திற்கும் பொருந்தும்.

எனவே,Be Associate with Role model!


முடிவுகளை எதிர்பார்த்தால் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்காவிட்டால் மனம் சோர்வடைந்து விடும். பரிசோதனைகள் அப்படி அல்ல. அதில் தோல்விகள் கிடையாது. வெவ்வேறு பதில்கள் அவ்வளதுதான். முப்பது நாட்களுக்கு ஜாகிங் செய்தால் இரண்டு கிலோ எடை குறையும் என்று எதிர்பார்க்காதீர்கள். முப்பது நாட்களுக்கு ஓடினால் என்ன ஆகிறது என்று எதிர்பாருங்கள். ஒருத்தருக்கு எடை குறையலாம். ஒருத்தருக்கு முதுகுவலி குறையலாம். ஒருத்தருக்கு புத்துணர்ச்சி அதிகமாகலாம். ஒருத்தருக்கு புதிய தோழி கிடைக்கலாம். வெவ்வேறு விடைகள். ஆனால் எல்லாமே நல்லது. Run it as an Experiment!

இந்த முறை அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்ட(NLP) முறை. பெரிதாக ஒண்ணுமில்லை. படு சுலபம். சிகரெட்டை விட வேண்டும் என்றால் முதலில் அதைக் மனக்கண்ணில் பாருங்கள். சிகரெட்டை எடுக்கிறீர்கள், பற்ற வைக்கிறீர்கள். உதடுக்கு அருகில் போகும் போது இது தேவையா என்று யோசிக்கிறீர்கள், பின் தூக்கி வீசுகிறீர்கள். அவ்வளவுதான், இந்தக் காட்சியை தினமும் மனக்கண்ணில் காணுங்கள். முப்பது நாட்களுக்குச் செய்யுங்கள்.

நல்ல செய்தியைப் பெற்று விடுவீர்கள்.

Swist!

உடற்பயிற்சி செய்கிறீர்கள், காலையில் ஓடுகிறீர்கள், மாலையில் நடக்கிறீர்கள் என்றால் முதலில் அது சம்பந்தமான பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள். தினமும் அரை மணி நடந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். புதிய உணவு முறைக்கு மாறுகிறீர்கள் என்றால் காபிக்கு பதில் கம்பு எவ்வளவு நல்லது என்பதை உணருங்கள். பின் கம்பு வரும் போது பலன் ஞாபகத்திற்கு வரும். காபி சுவை வராது.

Know the benefits!

ஆரோக்கியத்திற்காக உங்களுக்காக வேறுபடும் உங்கள் விஷயங்களைச் செய்ய முடியாது. நீங்கள் நடந்தால்தான் உங்களுக்கு ஆரோக்கியம். வேறு யாரும் உங்களுக்காகச் செய்ய முடியாது. உதவி இது. வாழ்வு உங்களுடையது. உங்களுக்காக

நீங்கள் உதவி செய்து கொள்ளுங்கள்.
Do it for Yourself!
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner