Ads Header

Pages


30 April 2012

வீட்டு வைத்தியம்!

ஆண், பெண் எல்லோருக்குமே இப்போ கண் பிராப்ளம் நிறைய..

அந்தக் காலத்தை விடவும் இப்போ கண்ணுக்கு வேலை அதிகம். கம்ப்யூட்டர் முன் உட்கார்றது, டி.வி&யில ஒரு சீரியல்கூட விடாமப் பார்க்கறது.. இப்படி ஏகப்பட்டது இருக்கு. ஏர் கண்டிஷன் ரூம்லயே உட்கார்ந்து வேலை பார்த்தாலும் கண் உறுத்தும்; நமைச்சல் எடுக்கும்; சிலருக்கு ராத்திரி தூக்கத்துலகூட ஒத்தைக் கண்ணுல இருந்து நீரா வடியும்.. இதெல்லாம் நம்ம உடம்பு உஷ்ணத்துனாலே ஏற்பட்டதுங்கறதைப் புரிஞ்சுக்கணும்.

இதுக்கு என்ன வைத்தியம்?

ராத்திரி படுக்கறதுக்கு முன்னே, கண், முகத்தை எல்லாம் சுத்தமா அலம்பிட்டு, மெல்லிசான வெள்ளைத் துணியை, விளக்கெண்ணெயில் நனைச்சு எடுத்து, ஒரு பூவன் வாழைப் பழத்தை அப்படியே பஞ்சாமிர்தத்துக்குப் பிசையற மாதிரிப் பிசைஞ்சு, அந்தத் துணியில ரெண்டு உருண்டையா வச்சு, ரெண்டு கண்களையும் மூடிட்டு, இந்தத் துணிய, பழத்தோடச் சேர்த்துக் கட்டிட்டுப் படுங்கோ.. குறைஞ்சது மூணு நாலு மணி நேரம்.. தூங்கிட்டாலும் பாதகமில்லே..

இந்தப் பூவன் பழம், விளக்கெண்ணெயோட சேர்ந்தா & அத்தனை குளிர்ச்சி. சில பேர் உருளைக்கிழங்கை வேக வச்சு, மசிய அரைச்சு, கண் மேலாக கட்டிக்கிறது உண்டு. ஆனாலும் பூவனும், விளக்கெண்ணெயும் எப்பவும் ஜோடி நம்பர் ஒன்தான்!

அது மட்டுமில்லே.. நாற்பது, அம்பது வயசுக்கு மேல, நிறைய பெண்களுக்கு மலச்சிக்கல் வரும். காரணம் சொல்ல முடியாது. டென்ஷன், வேலைப் பளு, சாப்பாட்டுல நார்ச்சத்து குறையறது.. இது மாதிரி நிறைய இருக்கும்.

இப்படிப்பட்டவங்க, தாராளமா அரை லிட்டர் விளக்கெண்ணெய அடுப்புல வச்சு, எண்ணெய் காய்ஞ்சதும் அதுல நாலைஞ்சு பூவன் பழத்தை கொஞ்சம் தடிமனான வில்லைகளா வெட்டிப் போட்டு, சிவக்கப் பொரிச்சுக்கணும். எண்ணெய் ஆறினதும், சுத்தமான பாட்டில்ல எடுத்து வச்சுக்கிட்டு, தினமும் ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னால நாலு துண்டு வாழைப்பழத்தை, அப்படியே ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயோடு முழுங்கிட்டுப் படுக்கணும்.

அப்படிப் பண்ணா, காலைல டாய்லட்ல தபஸ் பண்ண வேண்டாம். மூலம் இருந்தா ஆறிடும். வயித்துல சிலருக்குக் கீரைப் பூச்சி இருக்கும். அதனால பசி எடுக்காது. இவங்களுக்கெல்லாம் இது அருமருந்து! உஷ்ணத்துனாலே மேல் வயிறு வலிச்சாலும் தாராளமாச் சாப்பிடலாம்.

இந்த விளக்கெண்ணெய் இருக்கே.. அது ஒரு அற்புதமான மருந்துதான்!

விளக்கெண்ணெயை, உள்ளங்கால் எரிச்சலுக் கும், தொப்புளைச் சுத்தி ஏற்படற வலிக்கும்கூடத் தடவலாம். இமைகள், புருவங்கள் மேல தினமும் ஒரு சொட்டு விளக்கெண்ணையைத் தடவி வந்தா, அழகான, அடர்த்தியான புருவமும் இமைகளும் கிடைக்கும்.

வேற எதுக்காகவும் இல்லைன்னாலும், கடைசியா நான் சொல்லியிருக்கறதுக்காகவாவது, கடைக்கு ஓடுவீங்களே..

பாட்டி வைத்தியம்!

அஜீரணமா, வயிற்று வலியா, தலைவலியா, எந்த உபாதையாக இருந்தாலும், நம்மூர் பாட்டி வைத் தியத்துக்கு ஈடே இல்லை. நாம தான், கொஞ்சம் தலை வலி என்றாலும், உடனே ஆங்கில மாத்தி ரையை தேடுகிறோம்; ஆனால், அமெரிக்காவில், இப்போதெல்லாம், நம்மூர் பாட்டி வைத்தியம் தான் பிரபலமடைந்து வருகிறது. கையடக் கமான பாட்டில்களில் இஞ்சி, கற்றாழை, பூண்டு போன்றவற்றை பொடியாகவும், சாறாகவும் தயார் செய்து விற்கின்றனர்.

உடல் வலி சிகிச்சை நிபுணர் ஜாக்கப் டிடெல்பம், "1...2...3... போச் வலி' என்று, பாட்டி வைத்தியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு மருத்துவ புத்தகமே, எழுதி விட்டார்.

"அலோபதிக் (ஆங்கில) மருத்து வத்தில் இல்லாத மருந்துகளே இல்லை. அவற்றிலும் ஒரே மாதிரியான சத்துக்கள், ரசாயனங்களை செயற்கையாக வைத்துத் தான் தயாரிக்கிறோம். ஆனால், மூலிகை, தாவர பொருட்களில் இந்த சத்துக்கள், ரசாயன தன்மைகள் இயற்கையாக கிடைக்கும். அதனால், நான் இயற்கை மூலிகை மருந்துகளை என் நோயாளிகளுக்கு கொடுக்கிறேன்!' என்றார் டாக்டர்

"உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது ஐந்து இயற்கை மூலிகை பொருட்கள் தான்!' என்றும் அவர் கூறுகிறார். அவர் பார்வையில் அந்த ஐந்து மூலிகைகள்:

இஞ்சி :



மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.





கற்றாழை:



சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடு கிறோம். அவர், "ஆயின்ட் மென்ட்' தருவார்; "ஆன்டி பயாடிக்' மாத்திரை தரு வார். ஆனால், பல ஆண்டுக்கு முன் இதெல் லாம் இருந்ததா? அப்போ தெல்லாம் கற்றாழை சாறு தான். அதைக் காயத்தில் போட் டால், அடுத்த நாளே வடுவே காணாமல் போய்விடும்.




"இப்போது பலருக்கும் இதை, "ஆலுவேரா' என்று தெரியுமே தவிர, கற்றாழை தான் அது என்று புரியாது; முகம் பளபளப்பது முதல் சரும அழகுக்கும், "ஆலு வேரா' ஆயின்ட்மென்ட், ஜெல் என்று ஏதேதோ வந்து விட்டது. கடைகளில் அழகான பாட் டில்களில் அடைத்து தரு வதை பயன்படுத்துவதை விட, நீங் களே, கற்றாழையை வளர்க் கலாம்; தேவைப்படும்போது பயன்படுத்தலாம்!' என்றும் கூறுகிறார்

மஞ்சள்:

உடலில் எந்த வீக்கமாகட்டும், வயிற்று கோளாறாகட்டும் அவற்றை நீக்கும் இயற்கை தன்மை கொண்டது மஞ் சள். சாப்பாட்டில், சிற்றுண்டியில், அன்றாடம் 900 முதல் 1800 மில்லி கிராம் வரை மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.

குங்கிலியம்: மூட்டு வலி, உடல் வலி போக்க அருமையான நிவாரணி, குங்குகிலியம் இலையின் சாறு. இஞ்சி சாறு போல, இதையும் சாப்பாட்டில் சேர்க்கலாம்; தனியாகவும் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு சாப்பாட்டிலோ, தனியாகவோ மூன்று முறை இந்த சாறை பயன்படுத்தினால், எந்த எலும்புப் பிரச்னையும் பின்னாளில் அண்டாது.

வினீகர்:

ஒரு கப் ஆப்பிள் வினீகரை குடித்து வந்தால், உடலில் எந்த வலியும் வராது. தண்ணீரிலோ, மற்ற பானங்களிலோ இரண்டு ஸ்பூன் வினீகரை போட்டு சாப்பிட்டு வரலாம். வலி உள்ள இடங்களில், கர்சீப் மூலம் வினீகரை தொட்டு தடவினால் போதும், வலி போய்விடும். காயத்தை ஆற்றும் அரிய குணம் இதற்கு உள்ளது.

என்ன... முயற்சித்துப் பார்ப்போமா?

1 comments:

Unknown said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner