Ads Header

Pages


15 April 2012

பசலைக்கீரையின் பயன்கள்!

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் பசலைக் கீரைக்கு உண்டு. பருப்புடன் சேர்த்துச் சமைத்தால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின்சி, இரும்பு, சுண்ணாம்பு, புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. பற்களும் எலும்புகளும் உறுதி பெற இந்தச் சத்துக்கள் அவசியம். புகைப்பவர்களின் உடலில் அழிந்துவரும் வைட்டமின்சி சத்துக்களை ஈடு செய்ய இந்தக் கீரையை அடிக்கடி உண்ணலாம். பசலையின் இளந் தளிர்களைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் உடல் உஷ்ணம் விலகி,கண் எரிச்சலும் உடல் எரிச்சலும் நீங்கும். நீர்க்கடுப்பு அகலும்.

சில பெண்கள் கர்ப்ப காலங்களில்மலச் சிக்கல் ஏற்பட்டு, நீர் பிரியாமல் கஷ்டப்படு வார்கள். அவர்கள் மருத்துவரின் ஆலோச னையுடன், பசலைக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். தவிர, கருவில் வளரும் குழந்தைக்கு கால்சியம், இரும்புச் சத்து இரண்டும் கிடைப்பதால், குழந்தை நல்ல உடல் நலத்துடன் பிறக்கும். பசலைக் கீரையையும், பிஞ்சு முருங்கைக் காயையும் உணவில் நிறைய சேர்த்துக்கொண்டால் தாய்ப் பால் அதிகம் சுரக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தக் கீரை, ஒரு வரப்பிரசாதம்!

நீண்ட நாள் தலைவலியால் கஷ்டப்படுபவர்கள், பசலையின் சாறு எடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வந்தால், தீராத தலைவலியும் தீரும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் ஆற்றலும் இந்தக் கீரைக்கு உண்டு. நீர்க் கோவை, சளி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்தக் கீரையின் சாற்றை வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல குணம் பெறலாம்.

கோடை காலத்தில் ஏற்படும் வேனிற் கட்டிகளில் சீழ் பிடித்து வேதனையை அனுபவிப்பவர்கள், இந்தக் கீரையைப் பூண்டு சேர்த்து வதக்கி, கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் சுத்தமாக வெளிவந்துவிடும்.

பசலைக் கீரையோடு சின்ன வெங்கா யம் சேர்த்துச் சமைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புகைபிடிக்கும் எண்ணமே பூண்டோடு ஒழியும் என்கிறார்கள்!

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner