Ads Header

Pages


29 April 2012

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி 'பேக்'

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி 'பேக்'...?

‘‘எனக்கு 35 வயதாகிறது. தலையில் கால்வாசி நரைத்துவிட்டது. டை போட விருப்பமில்லை. வீட்டிலேயே மருதாணி போட்டுக் கொள்கிறேன். இதனால், அடிக்கடி உடல் குளிர்ச்சியாகி ஜலதோஷம் பிடித்து விடுகிறது. ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கவும், சில மாதங்களுக்கு சேர்த்து மருதாணி ‘பேக்'கை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளவும் சொல்லித் தாருங்களேன்.’’

‘‘மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணி யுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.

இந்த மருதாணி பேஸ்ட்டை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம்.

மருதாணி பவுடர் & கால் கிலோ, கடுக்காய் பவுடர் & 25 கிராம், துளசி பவுடர் & 25 கிராம், நெல்லிக்காய் & 50 கிராம், டீத்தூள் டிகாஷன் & 50 கிராம், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, யூகலிப்டஸ் ஆயில் & 4 துளி, ஆலீவ் ஆயில் & 4 டீஸ்பூன்... இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள்.

இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த 'பேக்'கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

மருதாணி இலை & 250 கிராம், கொட்டை நீக்கிய கடுக்காய் & 25 கிராம், சுத்தம் செய்யப்பட்ட துளசி இலை & 25 கிராம், கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் & 25 கிராம்... இவற்றை நன்றாக நசுக்கி கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில் & 10 துளி, ஆலீவ் ஆயில் & 4 டீஸ்பூன், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, டீத்தூள் டீகாஷன் & 100 கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இந்த 'பேக்' இரண்டு மாதம் வரை கெடாது.’

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner