Ads Header

Pages

26 September 2013

இயற்கையின் அழகு சாதனப்பொருட்கள்

தினசரி புதுப்புது அழகு சாதனங்களின் விளம்பரத்தை நாம் பார்க்கிறோம். எது உங்கள் சருமத்துக்கு தீங்கு விளைவிக்காதது, எதை வாங்கினால் நீங்கள் விரும்பும் பயன் கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு பதில், நீங்கள் அந்தப் பொருட்களை வாங்கி பயன் படுத்திய பிறகுதான் கிடைக்கும்!. ஆனால் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் நம் அழகுக்கு அழகு சேர்க்க, இயற்கை பல அழகு சாதனங்களை நமக்கு வழங்கியுள்ளது. இவற்றை தேடி நாம் வெகு தூரம் செல்ல வேண்டாம். உங்கள் சமையல் அறையிலேயே கிடைக்கும் பொருட்கள்தான் இவை. 1. வெள்ளரிப் பிஞ்சு: இதன் சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சற்று சூடான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். 2. எலுமிச்சம் பழம் : எலுமிச்சம் பழச் சாற்றை தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தை வெண்மையாக்கும். ப்ளீச் செய்து கொள்வதற்கு பதிலாக இதை உபயோகித்துப் பாருங்கள். எலுமிச்சம் பழச் சாற்றுடன் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவினால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கவும். 3. மோர் : இது குடிப்பதற்கு மட்டுமல்ல, குளிப்பதற்கு முன்பு முகத்திலும் உடம்பிலும் தடவி பிறகு குளித்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 4.வெந்தயம் : சீயக்காய் அரைக்கும்போது வெந்தயம் போட்டு அரைப்பது வழக்கம். ஷாம்பு உபயோகிக்கும் இந்த காலத்தில், இதைத் தண்ணீரில் ஊர வைத்து குளிப்பதற்கு முன் முடியில் தடவினால் முடி பளபளப்பாக இருக்கும். 5.விளக்கெண்ணெய் : கை, கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். இதை புருவத்திலும், கண் இமையில் உள்ள முடியிலும் தினமும் படுப்பதற்கு முன் தடவி வந்தால் அது அடர்த்தியாகும். 6. பருப்பு : கடலை மாவையும் பயத்தம் பருப்பு மாவையும் கலந்து சோப்புக்கு பதிலாக உபயோகித்து வந்தால், உங்கள் சருமம் உலர்வதை தவிர்க்கலாம். 7. தேங்காய் எண்ணெய் : இதை முடியில் தடவுவது பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் பழக்கம். இதை வாரம் ஒருமுறை உடலில் நன்றாகத் தேய்த்து, அதன் பின் குளித்தால் பட்டுப் போன்ற மென்மை தரும். 8. பூசு மஞ்சள் தூள் : இதை, தொடர்ந்து முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் முடி வளர்வதை தடுக்கலாம். ஆனால் மஞ்சள் தேய்த்து குளித்தவுடன் வெய்யிலில் செல்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் இதனால் சருமம் கருமை அடையும்.
Read more

ஆ‌‌ப்‌பிளா‌‌ல் அழகாகு‌ம் முக‌ம்

ஆ‌ப்‌பி‌ள் உடலு‌க்கு ம‌ட்டும‌ல்ல சரும‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்ற பழமாகு‌ம். ஆப்பிள் பழத்‌‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு நன்றாக மசித்து‌க் கொ‌ள்ளவு‌ம். அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசவு‌ம். அரை மணி நேரம் முக‌த்‌தி‌ல் ஊறவிட்டு, ‌பிறகு கு‌ளி‌ர்‌ந்த ‌நீரா‌ல் முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் புது‌ப் பொ‌லிவு பெறு‌ம். இதே‌ப் போல ஆப்பிள் பழத்துண்டுகளை தோ‌ல் ‌நீ‌க்‌கி ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வை‌க்கவு‌ம். ந‌ன்றாக கொ‌தி‌த்தது‌ம் அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு ‌பிறகு அதை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். ‌நீ‌ங்க‌ள் வறண்ட சருமம் கொ‌ண்டவராக இரு‌ந்தா‌ல் சரும‌‌ம் மு‌ற்‌றிலுமாக மா‌றி‌விடு‌ம். முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
Read more

தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்!

தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்!
தங்களின் மவுஸ் வேலை செய்ய மறுக்கிறதா! நண்பர்களே, கவலை வேண்டாம் ஓர் தற்காலிக தீர்வு. தங்களின் கணினியில் மவுஸானது செயல்படவில்லை போன்ற பிரச்சனைகள் கண்டிப்பாக ஓர் சமயத்தில் நிகழும் நண்பர்களே! நமது கணினியில் நாம் கீ-போர்டை காட்டிலும் அதிகம் பயன்படுத்துவது மவுஸைதான். அப்படியிருக்கும் போது ஓர் அவசர காலத்தில் தங்களின் மவுஸ் ஆனது வேலை செய்யவில்லை என்றால் எப்படி இருக்கும்...இது மாதிரி நிகழும் இந்த பிரச்சனையை தற்காலிகமாக போக்க ஓர் வழி உள்ளது. தங்களின் கணினி முறையில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த முறையை செயல்படுத்தலாம். இதன் மூலம் தங்களின் கீ-போர்டினையே மவுஸ் ஆக பயன்படுத்தலாம். இந்த முறை STICKY KEYSஎன அழைக்கப்படும். இந்த முறையை தங்களின் கணினியில் செயல்படுத்த வேண்டுமா. முதலில் தாங்கள் செய்ய வேண்டியது.
  • 1. தங்களின் கீ-போர்டில் SHIFT கீயை 5 முறை அழுத்துங்கள். தொடர்ந்து,
  • 2.தற்போது தங்களின் விண்டோவில் S STICKY KEYSTIஎன்னும் ஓர் சிறிய திரை தோன்றும். அதில் SETTINGS என்பதைனை கிளிக் செய்யவும்.
  • 3.பின்னர் தோன்றும் திரையில்MOUSE என்பதைனை கிளிக் செய்யவும். உதவிக்கு மேலே உள்ள புகைபடத்தை காணவும்.
  • 4. பின்னர் USE MOUSE KEYS என்பதில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்ப்படுத்தவும். பின்னர் APPLY---OK என்பதைனை தந்து வெளியேறவும்.
  • 5.தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முறை முடிந்தது.
இனி தங்களின் கீபோர்டினை எப்படி மவுஸ் ஆக பயன்படுத்துவது என காணலாம்.
  • 1.தங்களின் மவுஸ் கர்சர் மேலே நகர்த்த வேண்டும் என்றால், தங்களின் கீபோர்டில் வலதுகை ஓரமாக இருக்கும் நம்பர் பட்டன்களில் 8 என்பதை அழுத்தவும்.
  • 2.கீழே நகர்த்த வேண்டுமென்றால்-0
  • 3.இடதுகை (LEFT)ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-4
  • 4.வலதுகை(RIGHT) ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-6
மேலும் ஓர் செயலை OK OR SELECT செய்ய வேண்டுமென்றால் 5 என்னும் கீயை அழுத்தவும். அதாவது தங்களின் மவுஸில் LEFT CLICK மேற்கொள்ளும் முறையை இது மேற்கொள்ளும். மேலும் மவுஸில்RIGHT CLICK மேற்கொள்ளும் முறையை மேலே படத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள பட்டனை கீபோர்டில் பயன்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.
Read more

இணையத்தில் தாங்கள் விரும்பும் பக்கங்களை PDF பைலாக பெற...

இணையத்தில் தாங்கள் விரும்பும் பக்கங்கள் PDF பைலாக பெற
நண்பர்களே நம் இணைய உலா தேடல்களில் பல செய்திகளை, யோசனைகளை நாம் காணலாம். அவ்வாறு நம்மை கவர்ந்த செய்திகள் மற்றும் வலைபக்கங்கள் என பல உண்டு. நாம் ஒரு முறை கண்ட சில செய்திகள் அல்லது பக்கங்களை நாம் பிற்காலத்தில் மீண்டும் காண வாய்ப்புகள் ஏற்படலாம்.
இந்த மாறி நேரத்தில் மீண்டும் நம்மால் அந்த செய்திகளையோ அல்லது பக்கங்களையோ காண்பது என்பது கடினம். இதற்கு தான் ஓர் அருமையான முறை ஒன்று உள்ளது. இணையத்தில் தாங்கள் கண்ட இணைய பக்கங்களை ஓர் அழகிய PDF பைலாக மாற்றி தங்கள் கணினியில் சேமித்து கொண்டால். அதை எப்போது வேண்டுமனாலும் காணலாம்.
இந்த சேவையை ONLINEயில் வழங்குகிறது PDF MY URL என்னும் இணையதளம். இந்த சேவையை பெறுவது முற்றிலும் இலவசமே! இந்த இணையதளத்திற்கு சென்று தங்கள் PDF பைலாக மாற்ற விரும்பும் இணையதள பக்கத்தின் URLயை இட்டால் போதும். சிறிது வினாடிகளில் தங்களி விருப்ப இணையபக்கம் முழுமையான PDF பைலாக கிடைத்துவிடும். பின்னர் இதை தங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
இந்த இணைய தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்:
Read more

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு பெற…

* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.
* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.
* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.
* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.
* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.
* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.
* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.
* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
Read more

பொடுகுத் தொல்லை போயே போச்சு

* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.
Read more

20 September 2013

கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர...

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?


கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்... * வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும். * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும். * முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம். * அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்' செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது. * இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு. * நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது. * சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். * தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும். * நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது. * விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது. * கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம். * அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும். * தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும். * நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம். * பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும். * தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும். * ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது. * தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும். இதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்: * வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்
Read more

விஷம் அருந்தியவர்களுக்கு வசம்பு

சம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். * இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும். * கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. * பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.
Read more

16 September 2013

வெல்லமும், மிளகும் உடலுக்கு நல்லது

வெல்லமும், மிளகும் உடலுக்கு நல்லது
குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். கோதுமை தவிட்டை மண் சட்டியில் போட்டு வறுத்து, ஒரு வெள்ளைத் துணியில் போட்டு, முடிச்சு போடவும். இதை, உடல் பொறுக்கும் சூட்டில் குழந்தைகள் தலைப்பகுதியில் ஒத்தி, ஒத்தி எடுக்க வேண்டும். மார்பு மற்றும் முதுகு பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்; நிவாரணம் கிடைக்கும். பனி காலங்களில் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு, கருத்து விடும். இதை தவிர்க்க, குளிர் சீசன் ஆரம்பித் ததுமே தினமும் உதட்டில் லேசாக வெண்ணெய் தடவி வரவும்.
கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம். குளிர் காலத்தில் உரை மோர் விடும் போது, அதனுடன் சிறிது புளி உருண்டையை போட்டால், கெட்டியான தயிர் தயார் அல்லது ஹாட் பேக்கில் பாலை ஊற்றி, உரை ஊற்றுங்கள்; கெட்டியான தயிர் கிடைக்கும். வெறும் தரையில் படுக்க வேண்டாம். பாய் விரித்து, அதன் மீது பெட்ஷீட் விரித்து படுக்கவும். வெளியே செல்லும் போது, காதுகளை மறைத்தபடி மப்ளர் அல்லது ஸ்கார்ப் கட்டிக் கொண்டு செல்லவும். சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றிலிருந்து தப்பிக்கலாம். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். சூடான சாப்பாட்டையே சாப்பிடவும். சப்பாத்தி, கொண்டை கடலை, கொள்ளு போனறவற்றை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். குளிப்பதற்கு வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். குளிர் காலத்தில் வெந்நீர் அருந்துவது, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காக்கும்; ஜீரணத்திற்கும் நல்லது. காட்டன் வகை உடைகளைத் தவிர்த்து, சிந்தடிக் ஆடைகளை அணியலாம். வெளியே செல்லும் போது ஸ்வெட்டர், சால்வை அணிந்து செல்வது நல்லது. குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து, வெளியே அழைத்துச் செல்வதும் அவசியம். குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். கோதுமை தவிட்டை மண் சட்டியில் போட்டு வறுத்து, ஒரு வெள்ளைத் துணியில் போட்டு, முடிச்சு போடவும். இதை, உடல் பொறுக்கும் சூட்டில் குழந்தைகள் தலைப்பகுதியில் ஒத்தி, ஒத்தி எடுக்க வேண்டும். மார்பு மற்றும் முதுகுபகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்; நிவாரணம் கிடைக்கும். தலைக்கு குளித்தபின், சாம்பிராணி புகை போடுவது நல்லது. மாலை வேளையில் வீடு முழுக்க சாம்பிராணி புகை போடுவதால், வெது வெதுப்பாக இருப்பதோடு, கொசு தொல்லையும் இருக்காது. எண்ணெய் மற்றும் மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது. குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயிற்றம் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து விடவும். சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும். என்ன தோழியரே... குளிர்காலத்தை வரவேற்க தயாராக இருப்போமா?
Read more

வாயுத்தொல்லைக்கான எளிய தீர்வுகள்

* வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்கயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும். * வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து. * இஞ்சி + சுக்கு + கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும்.
* வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடவும்.
Read more

சீக்கிரம் காய்ச்சல் குணமாக..

சீக்கிரம் காய்ச்சல் குணமாக..

காய்ச்சல் இருக்கும் போது எழும்பிச்சை சாறு சாப்பிட தாகம் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் உடல் சூடு ஆக மொத்தம் இரண்டுமே குணமாகும். * பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலுக்கு தென்,இஞ்சிச்சாறு,எழும்பிச்சைச்சாறு கலந்து குடித்துவர நாளடைவில் குணமாகும். * எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும் திராட்சை பழத்தை தோல்+கொட்டையுடன் சாப்பிட சீக்கிரம் குணமாகும். * மலேரியா குணமாக மிளகுத்தூள்+ 2 பல் பூண்டு+தேன் கலந்து வெந்நீரில் விட்டு குடித்து வர மலேரியா குணமாகும். * காய்ச்சல் குணமாக வேப்பிலையை வருத்த சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சலும் நீங்கும் + நல்ல தூக்கம் வரும். * மிளகு+திப்பிலி+சுக்கு சமஅளவு போடி செய்து தேனில் சாப்பிட குணமாகும்
Read more

நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை. ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு, நெய் மிக முக்கியமான மருந்து. ஆய்வு: ஐம்பத்து ஏழு வயதான ஒருவருக்கு, தோள் மூட்டில் கடுமையான வலி இருந்தது. கைகளை முழுவதுமாக தூக்க முடியவில்லை. அவருடைய உணவு வழக்கத்தில், கொழுப்பற்ற அல்லது மிகக் குறைந்த கொழுப்பே இருந்தது. கறிகாய்களை மிக அதிக அளவிலும், மிளகாய்களை அதிகமாகவும் உண்ணும் பழக்கம் இருந்தது. அவருக்கு ரத்தக் கொழுப்பு மிகவும் அதிகமாக இருந்ததால், நெய்யைச் சேர்க்காமலும், எண்ணெய் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளாமலும், மிகவும் கவனமாக இருந்தார். நவீன மருத்துவத்தில் அவருக்கு ரத்தக் கொழுப்பினைக் குறைக்க, மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் இதுவரையில், அவர் அதை எடுக்கத் தொடங்கவில்லை. அவருடைய நடைமுறைகள் மற்றும் வழக்கங்களை வறண்ட மற்றும் கொழு ப்பு / எண்ணெய் பசையற்ற உணவு, குளிர் சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகளில் வேலை, (மிளகாய் நிறைந்த) காரமான உணவு, அடிக்கடி பிரயாணம் போன்றவற்றால் வாயு மிகவும் சீற்றமடைந்ததால், தோளில் வலி கடுமையாக இருந்தது. மேற்கூறிய முரணான வழக்கங்களை கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. சிகிச்சையாய், உட்கொள்ளுவதற்கு நெய் மருந்து பரிந்துரைக்கப்பட்டது. காலை மற்றும் மாலையில், வேளைக்கு 15 ml கொடுக்கப்பட்டது. நெய் என்ற பெயரைக் கேட்டவுடனேயே அவர் கவலைப்பட்டார். தன்னுடைய ரத்தக் கொழுப்பின் நிலை என்ன ஆகுமோ என பயந்தார். சீற்ற மடைந்த வாயுவினால் பாதிக்கப்பட்ட தோளுக்கு, இதுவே உகந்த மருந்து என்று, திரும்பவும் உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த ஐந்து வாரங்களுக்கு, அவர் நெய் மருந்தை ஒழுங்காக உட்கொண்டார். உணவிலும் நெய் சேர்த்துக் கொண்டார். 5-6 வாரங்களில், ஏறக்குறைய ஒரு கிலோ, நெய் மருந்தாகவும், உணவாகவும் உண்டு முடித்தார். இதற்குள் அவர், ரத்தக் கொழுப்பு அளவினைக் குறித்து மிகுந்த கவலையுடன் இருந்தார். LIPID PROFILE எனும் சோதனையை எடுத்த போது, ஆச்சரியப்படும் வகையில் அவருடைய கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசராய்டு அளவுகள், நெய் மருந்தால் குறைந்ததாகத் தெரிந்தது. சோதனையின்படி, எல்லா அளவுகளும் விரும்பத்தக்க அளவுகளுக்கு குறைவாகவே உள்ளன. HDL சிறு அளவு குறைந்தாலும், விரும்பத்தக்க அளவைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. ரத்தக் கொழுப்பு குறைந்தது நெய் மருந்தை உட்கொண்டதால், வாயுவினால் ஏற்பட்ட வலி தீர்ந்ததுடன், ரத்தக் கொழு ப்பும் குறைந்தது. நெய் அனேக சிறந்த குணங்களைக் கொண்டது. நெய் அறிவு, ஞாபக சக்தி, நுண்ணறிவு, ஜீரண சக்தி, பலம், ஆயுள், விந்து, கண்பார்வை இவற்றை அதிகரிக்கும். சிறுவர், முதியோர், மகப்பேறு, உடல் ஒளி, மிருதுத் தன்மை, குரல் இவற்றுக்குச் சிறந்தது. மார்புவலி, உடல் இளைப்பு, அக்கி என்னும் தோல் நோய், ஆயுதம், நெருப்பு இவற்றால் துன்புற்ற உடல் போன்றவற்றுக்கும் சிறந்தது. வாதம், பித்தம், நஞ்சு, மனக்கலக்கம், உடல் வறட்சி, முகத்தில் தெளிவின்மை, காய்ச்சல் ஆகியவற்றை நெய் நீக்கும். நெய் இத்தனை நல்ல குணங்களையுடையது. இவ்வளவு சிறந்ததோர் உணவை, இன்றைய மக்கள், இது ஒரு கொழுப்பு என்று ஒதுக்கி விட்டனர்.
Read more

15 September 2013

பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விஷகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்யவேண்டியது அவசியம்.
உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 250 வகைதான் விசத்தன்மையுள்ளவை.
இந்தியாவில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகைதான் விஷமுள்ளவை.
ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 15000-20000 பேர் விஷத்தால் இறக்கிறார்கள்.
விஷப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு. இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில் இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும். சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் படத்தில் கண் இருக்காது.
இறந்த பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம். நல்லபாம்பின் தாடையில் விஷப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.
நல்ல பாம்பின் விஷக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
நல்லபாம்பு விஷமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விஷமாகும்.
1. கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.
2. கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.
3. 30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.
4. சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.
5. நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.
6. கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.
7. கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.
8. சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.
9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.
10. சிகிச்சை:
 முதலுதவி - கடிவாயின் மேல் சிறிது அகலமாக, பட்டையாக துணியால் கட்டலாம். அகலமாக அழுத்திக்கட்டுவதால் தோலுக்கடியிலுள்ள இரத்தத் தமனிககளின் வழியாக விசம் பரவுவது குறையும்.
 கடித்த கால் அல்லது கைப் பகுதியை அசைக்காமல் வைக்க வேண்டும்.
மருந்துகள்:
 விச முறிவு மருந்தை தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.
 விசம் அதிகமாக இருந்தால் செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilator) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் சிறந்தது.
நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :
1. அதிக அளவு விஷத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.
2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவராமை, தகுந்த சிகிச்சை அளிக்காதது ஆகியவையே.
உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.
Read more

தேள் கடி

தேள் கடி:
தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.
எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்­ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.
நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.
Read more

ஆண்மைக் குறைவு

ஆண்மைக் குறைவு:
மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வுஉண்டாகும்.
தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.
அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.
படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.
Read more

தாது விருந்தி

தாது விருந்தி:
முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.
நெய், மிளகு, உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.
கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
Read more

உடல் மெலிய...

உடல் மெலிய:
100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.
இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.
கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீ­ர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.
நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
Read more

கை நடுக்கம்

கை நடுக்கம்:
காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.
வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
Read more

தலை அரிப்புக்கு...

தலை அரிப்புக்கு... வேப்பில்லை இலையை பறித்து அதனுடன் சிறுது (கொஞ்சம் தாளரமாகவே) தயிர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து தலையில் தடவி ஊற வைத்து 30 நிமிடம் கழித்து குளித்தால் . பொடுகு shampoo எனக்கு எதுக்கு ??என கேள்வி கேட்பீர்கள்.. அரை டீஸ்பூன் மிளகுடன் அரை கப் பசும்பால் சேர்த்து அரைத்து, கொதிக்க வையுங்கள். பிறகு இந்த கலவையை ஆறவிட்டு, மிதமான சூட்டில் தலையில் தேய்த்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து, சீயக்காய் போட்டு தலையை அலசுங்கள். இப்படி, ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று தலைக்கு குளித்துவந்தால், இரண்டு வாரங்களிலேயே தலை அரிப்பு சுத்தமாகப் போய்விடும். சிலருக்கு எப்போதும் தலைமுடி கசகசவென பிசுபிசுத்து கிடக்கும். வியர்வை நாற்றமும் அடித்து சங்கடப்படுத்தும். இதற்கும் ஒரு எளிய சிகிச்சை இருக்கிறது. மிளகு, ஓமம், சீரகம்.... மூன்றையும் சம அளவு எடுத்து தண்*ரில் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த நீரில் சீயக்காயைக் கரைத்து, தலைக்கு போட்டு குளியுங்கள். வாரம் இரு முறை இப்படி குளித்து வந்தால், தலையில் வியர்வை நாற்றம் நீங்கி, முடி பொலிவுடன் ஜொலிக்கும். தலை அரிப்பையும் இது கட்டுப்படுத்தும். தலைக்குக் குளித்தவுடனே சிலருக்கு தலையில் நீர் கோர்த்து அவதிப்படுவார்கள். அதற்கும் கை கொடுக்கிறது இந்தக் கலவை... அரை டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் ஓமம்.... மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி மிதமான சூட்டில் உச்சந்தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். இப்படி செய்துவந்தால், தலையில் கோர்த்த நீர் வடியும். உஷ்ணம் நீங்கி கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
Read more

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.
1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.
3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.
4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.
8. எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
9. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
10. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.
Read more

பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.
1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.
9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.
Read more

பொடுகு நீங்க என்ன செய்யலாம்?

பொடுகு நீங்க என்ன செய்யலாம்?
துளசி பொடி, வேப்பிலை பொடி இரண்டையும் சுடு நீரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். நாளடைவில் பொடுகு மறைந்து விடும்.
Read more

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.

1.தினசரி காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும். 3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும். 4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது. 5. காலை சிற்றுண்டி (8.00 - 9.00 மணிக்குள்): வெண்ணெய் எடுத்த மோர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு. 6. மதிய உணவு (12.00 - 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர். 7. இரவு உணவு (7.00 - 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு. 8. பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க ல்லவும். "இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.
Read more

கண்ணில் திடீரென்று எரிச்சல்

மருத்துவ டிப்ஸ்...: ஒரு சின்ன பாட்டில் பன்னீர் எப்போதும் வீட்டில் இருக்கட்டும். கண்ணில் திடீரென்று எரிச்சல் ஏற்பட்டாலோ, தூசி விழுந்து விட்டாலோ அல்லது உஷ்ணத்தால் பொங்கினாலோ ஒவ்வொரு துளி விட்டுக் கொண்டால், அந்த உபாதைகள் நீங்கி விடும்.
Read more

14 September 2013

கால்நடைகளுக்கு உதவும் மூலிகை மருத்துவம்

முன்னெச்சரிக்கைக்கு உதவும் மூலிகை மருத்துவம் !
கால்நடை மழைக் காலம் தொடங்கி விட்டாலே... காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டெங்கு என விதவிதமான நோய்கள் மனிதர்களை வாட்டி எடுக்கின்றன. கால்நடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல! இவற்றையும் பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் சிலரின் ஆலோசனைகள் இங்கே இடம் பிடிக்கின்றன.
நோய்களை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம்!
முதலில் பேசுகிறார்... மருத்துவர் புண்ணியமூர்த்தி (பேராசிரியர் மற்றும் தலைவர் -தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூர்).
''வெயில் காலத்திலிருந்து மழைக் காலத்துக்கு பருவநிலை மாறும்போது, கால்நடைகளுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, சுவாச சம்பந்தமானப் பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. தவிர, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு... வசிப்பிடங்களின் தன்மைக்கு ஏற்றவாறு கோமாரி, நீலநாக்கு நோய், கொள்ளை நோய், நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களும் வரலாம். அந்தந்தப் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாகவே இத்தைகைய நோய்களுக்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதனால் தவறாமல், தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.
தீவனம்... கவனம்!
பொதுவான சில பராமரிப்பு முறைகளையும் கடைப்பிடித்தால், மழைக் காலங்களில் நோய்த் தாக்குதலில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துவிட முடியும். மழை நேரங்களில் மாடுகள் சரியாக மேய்ந்து இரை எடுக்காது. அதோடு புதிய புற்களோடு முளைத்திருக்கும் களைகளையும் சாப்பிடுவதால், கழிச்சல் நோயும் வரலாம். அந்த மாதிரி நேரங்களில் அவ்வப்போது மாடுகளுக்கு தானியங்களையும், அடர்தீவனங்களையும் கொடுத்து சமாளிக்கலாம். திடீரென்று, அடர்தீவனங்களைக் கொடுக்கும்போது செரிமானப் பிரச்னைகள் வந்து விடும். எனவே, முன்கூட்டியே கொஞ்சம் கொஞ்சமாக அடர்தீவனங்களையும் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.
மழைக்காலங்களுக்குத் தேவையான சோளத்தட்டை, கடலைக்கொடி, வைக்கோல் போன்றவற்றையும் முன்பே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கோழிகள் உட்பட அனைத்துக் கால்நடைகளுக்கும் மூலிகை உருண்டைகளைத் தயாரித்துக் கொடுத்துவிட வேண்டும்.
கொசுக்களைவிரட்ட மூலிகை மூட்டம்!
மாலை நேரத்தில் இரும்புச் சட்டியில் மணலைக் கொட்டி கட்டை, கரி மூலம் நெருப்பு உண்டாக்கி... நொச்சி, பலா, எருக்கு, தைல மர இலை என அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய... ஆடு, மாடுகள் சாப்பிடாத மூலிகை இலைகளையும், சாம்பிராணியையும் போட்டு மூட்டம் போட்டால்... கொட்டகையில் கொசு தொல்லை இருக்காது. இதனால் பெரும்பாலான நோய்கள் பரவாமலும் தடுக்க முடியும்.
வருமுன் காப்போம்!
மழைக் காலங்களில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் வரும். இந்நோய்க்கான தடுப்பூசி கால்நடை மருந்தகங்களில் இலவசமாகவே போடப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல், அதைப் போட்டு வர வேண்டும். சுவாச சம்மந்தமான நோய்களும் இந்தக் காலத்தில் தாக்குதல் நடத்தும். மூலிகை உருண்டை கொடுப்பதன் மூலம் இவற்றை தடுத்து விடலாம். ஒருவேளை நோய் தாக்கி விட்டால்... மருந்துகள் மூலம் சரிப்படுத்தலாம்'' என்று சொன்னார் புண்ணியமூர்த்தி.
''மாடுகளை ஈரம் இல்லாத இடத்தில் கட்டுதல்; பசுந்தீவனத்தின் அளவை குறைத்து, உலர்தீவனத்தை அதிகப்படுத்துதல்; அடர்தீவனத்தில் தண்ணீரின் அளவைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். அதையும் தாண்டி கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகைகளைக் கொண்டே சரி செய்யலாம்'' என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த கால்நடை மூலிகை மருத்துவர் ராஜமாணிக்கம், அந்த மருந்துகளை வரிசையாகப் பட்டியலிட்டார் இப்படி-குளிர் காய்ச்சல் நோய்: வெங்காயம்-200 கிராம், மிளகு-10 கிராம், வெற்றிலை-5, சீரகம்-5 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து உள்ளே கொடுத்தால்... அரை மணி நேரத்திலே காய்ச்சல் குறைந்து விடும்.
ஜன்னி: மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வேப்பண்ணெயைத் தேய்த்து, சாம்பிராணிப் புகை போட்டு வந்தால், சரியாகி விடும். அல்லது குப்பைமேனி இலை-50 கிராம், சின்ன வெங்காயம்-25 கிராம் எடுத்துக் கொண்டு, இரண்டையும் அரைத்து... வெள்ளைத் துணியில் கட்டி மூன்று நாட்களுக்கு மூக்கு மற்றும் காதில் ஐந்து சொட்டும், கண்ணில் இரண்டு சொட்டும் விட்டு சாம்பிராணிப் புகை போட்டு வந்தால், சரியாகி விடும்.
கால் புண்: காலில் ஏற்படும் சேற்றுப் புண்ணுக்கு, ஓமவல்லி இலை-50 கிராம், வேப்பிலை-50 கிராம், புகையிலை-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து 2 முதல் 3 நாட்களுக்கு புண்ணில் தடவி வந்தால், சரியாகி விடும்.
கோமாரி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... துளசி-100 கிராம், விரலி மஞ்சள்-3 துண்டு, உப்பு 10 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து மூன்று உருண்டைகளாகப் பிரித்துக் கொண்டு, தினம் ஒன்று வீதம் மூன்று நாட்களுக்கு உள்ளே கொடுதால் கோமாரி அண்டாது.
கோமாரி நோய் தாக்கிவிட்டால், கால் கிலோ மருதாணி இலையை இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி ஆற வைத்து, இளம்சூட்டில் கால் மற்றும் வாய்ப்பகுதியில் புண் உள்ள இடங்களைக் காலை-மாலை வேளைகளில் கழுவி விட வேண்டும்.
மூன்று மஞ்சள் வாழைப்பழம், 100 மில்லி நல்லெண்ணெய் கலந்து பிசைந்து, 24 மணி நேரம் வைத்திருந்து கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் செய்தால்... நோயில் இருந்து மாடுகள் மீண்டுவிடும்.
ஆடுகளைத் தாக்கும் ஈரல் முட்டி நோய்: இந்த நோய் வெள்ளாடுகளை அதிகமாகத் தாக்கும். ஈரமான இடங்களில் கட்டுதல், சாணி, சிறுநீர்தேங்கிய இடங்களில் கட்டுதல் போன்றவற்றால் இந்நோய் தாக்கும். நோய் தாக்கிய ஆடுகள் குன்றிப்போய் விடும். ஒரு ஆட்டுக்கு 50 முதல் 70 கிராம் பருத்தி விதை என்ற அளவில், தினமும் ஒரு வேளை என ஏழு நாட்களுக்குக் கொடுத்தால், நோய் சரியாகி விடும்.
மூக்கடைப்பான்: 100 கிராம் கண்டங்கத்திரிப் பழத்தை (கறி முள்ளி) இடித்து வெள்ளைத்துணியில் கட்டி, ஒரு லிட்டர் ஆட்டுச் சிறுநீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, ஒவ்வொரு ஆட்டின் மூக்கிலும், 3 சொட்டுகள் வீதம் காலை-மாலை வேளைகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு விட்டு வந்தால் மூக்கடைப்பு சரியாகி விடும்.
படுசாவு (கத்தல் நோய்): மழை முடிந்து 10 நாட்கள் வரை... ஒன்றரை மணி நேரம் மேய்த்துவிட்டு, ஒரு மணி நேரம் மேய்ச்சல் இல்லாத இடத்தில் நிறுத்தி, செரிமானம் செய்ய விட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் மேய விட வேண்டும்.

வெள்ளைக்கழிச்சலுக்கு மருந்து!

கீழாநெல்லி-50 கிராம், சின்ன வெங்காயம்-5, பூண்டு-2 பல், மஞ்சள்-
5 கிராம், சீரகம்-20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து... அரிசிக் குருணை அல்லது நொய்யில் கலந்து தொடர்ந்து, 3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால்... வெள்ளைக் கழிச்சல் சரியாகி விடும்.
துளசி-20 இலை, தும்பை-10 இலை, கற்பூரவள்ளி-1 இலை, தூதுவளை-1 இலை, சீரகம்-5 கிராம், மஞ்சள்-5 கிராம், மிளகு-
5 கிராம், பூண்டு-5 பல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால்... சுவாச நோய் சரியாகி விடும். இது பத்து கோழிகளுக்கான அளவு.
கால்நடைக்கான மூலிகை உருண்டை!
பிரண்டை-100 கிராம், சோற்றுக் கற்றாழை-200 கிராம், நெல்லிக்காய்-2, முருங்கைக் கீரை-100 கிராம், கீழாநெல்லி-100 கிராம், கரிசலாங்கண்ணி-100 கிராம், குப்பைமேனி-100 கிராம், வேப்பங்கொழுந்து-100 கிராம், பூண்டு-5 பல், சின்ன வெங்காயம்-5 ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.
சீரகம்-20 கிராம், மிளகு-10 கிராம், மஞ்சள் தூள்-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
அரைத்தக் கலவை... இடித்தக் கலவை... இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அவற்றுடன் பனைவெல்லம்-200 கிராம் கலந்து சிறு சிறு உருண்டை பிடித்து, கல் உப்பில் தோய்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு மாட்டுக்கான அளவு. ஆடுகள் எனில்... ஐந்து ஆடுகளுக்குப் போதுமானதாக இருக்கும்.
Read more

பிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள்

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
Read more

பிரிட்ஜில் எவ்வளவு காலம் பொருட்களை வைக்கலாம்

பிரிட்ஜில் எவ்வளவு காலம் பொருட்களை வைக்கலாம்.
இப்பொழுது பெரும்பாலான வீடுகளிலும் குளிர் சாதன பெட்டி இருப்பதால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காய்கறி வாங்க வேண்டும், தினமும் சமையல் செய்ய வேண்டும், மேலும் சமைத்ததை உடனுக்குடன் செலவு செய்துவிட வேண்டும் போன்ற கவலைகள் எதுவும் கிடையாது, என்றாலும் வாங்கி வரும் ஒரு சில பொருட்கலளை வெளியில் வைத்திருந்தும் பயன்படுத்தலாம். அவ்வாறு எங்கு வைத்திருந்தாலும் சரி அவைகளை ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் வைத்திருந்து பயன்படுத்திவிட வேண்டும் இல்லாவிடில் சத்துக்களை இழந்த வெறும் சக்கையை சாப்பிடுவதுப் போல் பலனேதும் இருக்காது. மேலும், பிரிட்ஜை சரியான சீதோஷ்ண நிலையில் வைத்திருப்பது அவசியம், அதாவது அதிலிருக்கும் தெர்மாஸ்டேட் 37 டிகிரி முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட சீதோஷ்ண நிலையில் இருத்தல் வேண்டும் இதனால், பிரிட்ஜில் இருக்கும் உணவுப் பொருட்கள், நீண்ட நாட்களுக்கு கெடாமல் பிரஷ்ஷாகவும் இருக்கும். அவ்வாறு இருக்க எந்தெந்த பொருட்களை எவ்வளவு காலம் பிரஷ்ஷாக வைத்திருந்து பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
முதலில் பழங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்:
ஆப்பிள்: இதை குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.
வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
திராட்சை இதனை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்,
ஆரஞ்சு, கமலா, கிரேப் ஃ புரூட், இதனை 2 வாரங்கள் பிரிட்ஜில் வைக்கலாம்
பைனாப்பிள் - நன்கு பழுத்த பிறகு பிரிட்ஜில் 3 - 5 நாட்கள்
தர்பூசணி துண்டு - பிரிட்ஜில் 6 - 8 நாட்கள் வைக்கலாம்
எலுமிச்சை- இரண்டு வாரம் வைக்கலாம்
பெர்ரி பழ வகைகள்- பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம்.
பேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவைகள் - பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு பிரிட்ஜில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
காய்கறிகள்:
பீன்ஸ்- இதை நன்கு கழுவி, பிரிட்ஜில் வைத்திருந்து 3 - 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும்.
கத்தரிகாய்- இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 -4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
தக்காளி- வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம் ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
கேரட்- நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
பீட்ருட்- இரண்டு வாரம் வைத்திருக்கலாம். காலிபிளவர்,
முள்ளங்கி-- இரண்டு வாரம் பிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
வெண்டைக்காய்- 5 - 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்
உருளைக்கிழங்கு- வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்
வெங்காயம்- வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்
குடமிளகாய்- நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.
கீரைவகைகள்- பிளாஸ்டிக் பையில் 3 - 5 நாட்கள் வைக்கலாம்.
முட்டகோஸ், செல்லரி,- பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம்.
புரோக்லி, மஷ்ரும் - அதிகபட்சம் 2 -3 நாட்கள் வைக்கலாம்.
பூசனிக்காய், வெள்ளரிக்காய் - ஒரு வாரம் வைக்கலாம்.
அசைவ வகைகள்:
முட்டை- பிரிட்ஜில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயப்னடுத்துவது நல்லது.
வேக வைத்த முட்டை- பிரிட்ஜில் 5 -6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
முட்டை வெள்ளைகரு- பிரிட்ஜில் 2 -3- நாட்களுக்குள்
முட்டையின் மஞ்சட் கரு- 2 -4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
பிரஷ் சிக்கன், தோல் நீக்காதது - 1 - 2 நாட்கள் வைத்திருக்கலாம்.
பிரஷ் மட்டன், பீஃப் - 1 -3 நாட்கள் வைக்கலாம். மீன்- 1 - 2 நாட்கள் வைக்கலாம்.
மீன் க்பிள்ளட்ஸ்/ துண்டுகள்- நான்கு நாட்கள் வைக்கலாம்.
எறா, நண்டு - பிரிட்ஜில் இரண்டு நாட்கள் வைக்கலாம்.
சமைத்த இறைச்சி- நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஃ பிரீசரில் வைப்பதானால் நான்கு மாதங்கள் வரை வைக்கலாம்.
மற்றபடி பால். தயிர், வெண்ணெய் போன்ற டெயிரி/dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும் நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது. மேலும் அவைகளை நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும் தடுக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக, எப்போதும் ஃபிரஷாக உண்ண வேண்டுமானால்
1.முதலில், அவைகளை தரமான பொருளாக பார்த்து வாங்க வேண்டும்.
2.வாங்கியதை, அந்தந்த இடத்தில் பதப்படுத்திவிட வேண்டும்.
3.திட்டமிட்டு, பொருட்களை உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும். நன்றி.
Read more

ரத்த விருத்திக்கு ரோஜாப்பூ குல்கந்து

ரோஜாவின் மருத்துவகுணம்ரோஜாப்பூவால் சரும நோய்கள்
நீங்கும். ரத்த விருத்தி உண்டாகும்.. சீதபேதி குணமாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
உஷ்ணத்தால் வரும் வயிற்று வலிக்கு:
ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை (தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்)ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும் பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும். குன்ம வயிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.
ரத்த விருத்திக்கு குல்கந்து
களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு (இதழ் கால் அல்லது முக்கால் இருக்கலாம்) அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும். பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும். சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம். இதனால் ரத்த விருத்தி உண்டாகும்.
சரும நோய்களுக்கு:
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.
Read more

எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள்

எலுமிச்சையின் வகைகள்:

எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு.

பயன்கள்:

வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.

தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.
Read more

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் !

தலைவலி:
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
தேள் விஷம்:
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி:
சர்க்கரை வியாதி உள்ளவர்கவெற்றிலையின் மருத்துவ குணங்க இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
அல்சர்:
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
தாம்பூலம் தரித்தல்:
நமது உடலில் சுரக்கும் 24 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த உண்மை. ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.
Read more

04 September 2013

இருதயம் பலம் பெற...

இருதய பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும். 2.இதயம் பட படப்பு தீர:-தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும். 3.இதய நோய்கள் தீரு:-துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் நீங்கும். 4.இதயத்தில் குத்து வலி தீர:-கருந்துளசி,செம்பருத்திப் பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வர இதய வலி குத்து ஆகியவை தீரும். 5.இதய பலகீனம் தீர:-தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீரும். 6.இதய பலம் பெற:-அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 கரண்டி வீதம் காலை மாலை இரு வேளயும் சாப்பட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம் பெறும். 7.இதய நடுக்கம் தீர:-திருநீற்றுப் பச்சிலை சாற்றை மூக்கின் வழியாக நுகர்வதால் இதய நடுக்கம் தீரும். 8.இதயம் பலம் பெற:-மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம் பலம் பெறும். 9.இதய பலகீனம் தீர:-செம்பருத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வர (காலை மாலை)இதய பலகீனம் தீரும். 10.மாரடைப்புத் தீர:-தான்றிக்காயைப் பொடி செய்து 2 சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து நாவிற் தடவி வர மாரடைப்புத் தீரும். தொடரும்!
Read more

தலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் !

* நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.
* நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.
*நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.
* நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.
* நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
* நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி,அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.
* நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.
* நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.
* நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.
* நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்
Read more

ஆஸ்துமா,மார்ச்சளி குணப்படும்--பாகற்காய் சாறு

பாகற்காய் மூன்று தேக்கரண்டி பாகல் இலைச்சாறுடன் ஒர் கிளாஸ் மோர்கலந்து பருகிட மூலம் குணமாகும். ஒரு கோப்பை பாகல் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்த இரத்த கோளாறுகள் நீங்கும். குடுத்து குடித்து ஈரலைப் பாழாக்கிக் கொண்டவர்கள் தினமும் காலையில் 30 மி.லி அளவுபாகல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும். ஒரு தேக்கரண்டி பாகல் வேர்களை பசைபோல் அரைத்து அத்துடன் சம அளவு தேன் அல்லது அதே அளவு துளசிச்சாறு கலந்து இரவு தோறும் அருந்த ஆஸ்துமா,மார்ச்சளி குணப்படும். பாகற்காய் ருசியில் கசக்கும் என்றாலும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.இதனை வறுக்கலாம்,அவிக்கலாம்,ஸ்ஃப் செய்யலாம்.குழம்பு,பொரியல்,செய்யலாம்.வற்றல் செய்து சேமித்து வைக்க ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். ஈரபதம்-92.4 கிராம் புரதம்-1.6 கிராம் கொழுப்பு -0.2 கிராம் இழைப்பாண்டம்-0.8 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் கார்போஹைட்ரேட்கள்-4.2 கிராம் கால்சியம்- 20 மி.கி மக்ளீசியம்- 17 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 70 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 17.8 மி.கி பொட்டாசியம்- 152 மி.கி செம்பு- 0.18 மி.கி சல்ஃபர்- 15 மி.கி குளோரின்- 8 மி.கி வைட்டமின் ஏ- 210 ஐ.யூ தயமின்- 0.07 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி நியாஸின்- 0.5 மி.கி வைட்டமின் சி- 88 மி.கி 100கிராமில் 5 கலோரி உள்ளது. பாகற்காய் குளிர்ச்சியைத் தரும்.சிறந்த மலமிளிக்கி.பசியைத் தூண்டும்.பித்த உபாதைகள் நீக்கும். நீரழிவுக்கார்ர்களின் உணவில் பாகற்காய் அவசியம் இடம் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கும். பாகற்காய்யில் தாவர இன்சுலின(plant insulin)இருப்பதை பிரிட்டிஷ் மருத்துவ குழு ஆரிய்ச்சி செய்து தெரிவிக்கிறது. நீரழிவு நோயாளிகள் தினம் சாப்பிட்டு வந்தால்,வைட்டமின் ஏ,பி,பி2,சி மற்றும் அயச்சத்துக்ளை அவர்கள் பெறமுடியும். தொடர்த்து பயன்படுத்திவர உயர் இரத்த அழுத்தம்,கண் உபாதைகள்,நரம்புவீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner