பலரையும் அலற வைக்கும் சத்தமில்லாத எதிரி மஞ்சள் காமாலைதான்! குழந்தைகள்,
பெரியவர்கள் என்ற எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் வரும் மஞ்சள்
காமாலையும் ஒரு தொற்று வியாதிதான்! குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால்.
வீட்டிலுள்ள அனைவருக்கும் வந்து 5 முதல் 7 நாட்கள் வரை நம்முடைய உடலில்
அழையா விருந்தாளியாக தங்கியிருந்துவிட்டுச் சென்று விடும்.
இது ‘ஹெப்படைடிஸ் ஏ, பி, சி, இ என்று 4 வகைப்படும்.
‘ஹெப்படைடிஸ் ஏ’
இந்த வகை மஞ்சள் காமாலைதான் நம்மில் அதிகம் பேருக்கு வருவது... இது அதிக ஆபத்தில்லாதது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரு வாரத்திலேயேகூட குணப்படுத்திவிடலாம்.
‘ஹெப்படைடிஸ் ஏ’ வருவதற்கான காரணங்கள்:
நம் உடலில் உள்ள கணையத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பித்தம் அதிகமாகி அது ரத்தத்தில் அதிக அளவில் கலந்து விடுதல். அசுத்தமான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள்.
அறிகுறிகள்:
கண்கள் மஞ்சள் நிறமாகி விடுதல், வயிறு வீக்கம், சிறுநீர் மஞ்சளாகப் போகும், ஃபீவர், அஜீரணம், வாந்தி, மலம் வெளுத்துப் போகும், மஞ்சள் காமாலை முற்றி விட்டால் உடலெல்லாம் அரிக்க ஆரம்பிக்கும்.
ட்ரீட்மெண்ட்:
கீழாநெல்லிச் செடியை வேருடன் பிடுங்கி அதை மண் போக சுத்தமாக அலசுங்கள். பிறகு அதை மோர் விட்டு அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 40 நாட்கள் சாப்பிட வேண்டும்.
கீழாநெல்லி சூரணம், கரிசாலை கற்பம், மண்டூராதி குடிநீர் போன்றவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலையை 100 சதவீதம் குணமாக்கி விடலாம்.
மஞ்சள் காமாலை வந்தவர்கள் சாப்பிடக் கூடாதது:
மஞ்சள் காமாலை வந்தால் நம் ஈரலின் செயல் திறன் குறைந்துவிடும். அதனால் எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்கள், அசைவ உணவுகள், அதிக உப்பு போன்றவைகளை சுத்தமாக தவிர்த்து விடுங்கள். மஞ்சள் காமாலையின் பாதிப்பு குறைய ஆரம்பிக்கும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் டைப்பாய்டு வரக்கூடிய வாய்ப்புள்ளதால் சுத்தமான குடிநீர் மற்றும் உணவில் கவனமாக இருங்கள். தவிர இந்த நேரத்தில் அதிக உடல் உழைப்பும் நல்லதல்ல. சிலர் இந்த விதிமுறைகளை சரியாக ஃபாலோ செய்யாமல் விட்டு விடுவார்கள். அல்லது நோய் முற்றிலும் தீரும் முன்பே தவறான உணவுகளை சாப்பிடுவது, குடிப்பது போன்றவை உயிருக்கே ஆபத்தாக வந்து முடியலாம்! அதனால் சில இறப்புகள் நேர்கின்றன.
‘ஹெப்படைடிஸ் பி’
மிக ஆபத்தான வகை மஞ்சள் காமாலை இது! ஒருமுறை ‘ஹெப்படைடிஸ் பி’ வந்துவிட்டால் அந்தக் கிருமி வாழ்நாள் முழுக்க உடலில் இருக்கும். இந்த வகை மஞ்சள் காமாலைக்கு தீவிர சிகிச்சை அவசியம்! ‘ஹெப்படைடிஸ் பி’ வருவதற்கான காரணங்கள்:
சுத்திகரிக்கப்படாத ஊசி, போதை ஊசி போட்டுக்கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களுடன் உடலுறவு கொள்ளுதல்.
அறிகுறிகள்:
உடல் எடை திடீரென்று கிடுகிடுவென குறைந்துவிடும்.
‘ஹெப்படைடிஸ் ஏ’வைப் போல இது 10 நாளில் சரியாகாது.
உடல் அரிக்கும்
‘ஹெப்படைடிஸ் பி’ பொறுத்த வரைக்கும், இது வந்தால் நிறைய பேருக்கு அறிகுறியே தெரியாது. ‘ஹெப்படைடிஸ் பி’ முற்றி விட்டால் ஈரல் புற்று நோய் கூட ஏற்படலாம். ஸோ, கவனமாக இருங்கள்.
ட்ரீட்மெண்ட்:
ரத்தப் பரிசோதனையில் ‘ஹெப்படைடிஸ் பி’ இருப்பது தெரிய வந்தால் மருத்துவருடைய ஆலோசனைப்படி தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
இது கூடவே கூடாது!
‘ஹெப்படைடிஸ் ஏ’ அல்லது ‘ஹெப்படைடிஸ் பி’ இரண்டில் எது வந்தாலும் குடிப்பழக்கம் கூடவே கூடாது. ‘ஹெப்படைடிஸ் பி’யினால் ஈரலில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், இந்த குடிப்பழக்கம் அதை அதிகப்படுத்தி விடும்.
‘ஹெப்படைடிஸ் சி’ மற்றும் ‘ஹெப்படைடிஸ் இ’ வருவது கொஞ்சம் அரிது!
இன்னும் சில தகவல்கள்:
ஊது காமாலை வந்தால் இரும்புச் சத்தான உணவுகளைச் சாப்பிட்டாலே போதும்.
ஹெச்.ஐ.வி. நோயாளிகளுக்கு ‘ஹெப்படைடிஸ் பி’ இருக்கும்.
பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வந்தால்
பிறந்த குழந்தைகளுக்கு ரத்த அணுக்களில் ஏற்படும் மாறுபாடுகளினால் மஞ்சள் காமாலை வந்தால் இன்ஃப்ரா ரெட் (Infro Red Treatment) ட்ரீட்மெண்ட் தர வேண்டும். இந்த வகை ஷான்டிஸ§க்கு பயப்படத் தேவையில்லை.
கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை வந்தால் அது வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் என்பதால், இவர்கள் மருத்துவருடைய ஆலோசனைப்படி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வது மிகமிக முக்கியம்!
மஞ்சள் காமாலை வந்தால் சிலருக்கு மட்டும் ஏன் வியர்வையும் மஞ்சளாக வருகிறது?
ஒரு சிலருக்கு மஞ்சள் காமாலை குணமான பிறகும் வெளிர் மஞ்சளில் வியர்வை வெளியேறும். இதனால் அவர்களுடைய உள்ளாடைகளில் மஞ்சள் நிறத் திட்டுகள் ஏற்படும். இதற்குக் காரணம் என்னவென்றால், மஞ்சள் காமாலை வரும்போது பாதிக்கப்பட்டவர்களுடைய ரத்தத்தில் பிளுரூபின் (Bilurubin) அளவு அதிகரிக்கும். இது மஞ்சள் காமாலை குணமான பிறகும் கூட ஒரு சிலருக்கு குறையாமல் இருப்பதுதான். இப்படிப்பட்டவர்கள் கீழாநெல்லியை மோரில் அரைத்து சாப்பிடவேண்டும். அதோடு அவர்கள் ‘ஹெப்படைடிஸ் பி’ டெஸ்ட் செய்து கொள்வதும் நல்லது.

0 comments:
Post a Comment