Ads Header

Pages


26 April 2012

சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்!

அஜீரணத்திற்கு கொஞ்சம் சீரகத்தையும் ஒரு சிட்டிகை உப்பையும் கசக்கி வாயில் போட்டால் போதும் அடுத்த ஐந்தாவது நிமிடம் 1 டஜன் இட்லியைக்கூட சாப்பிடலாம்.

மலேரியா காய்ச்சல் தீர : மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவரவும்.

டைபாய்டு தீர : புன்னைப்பூவை உலர்த்தி பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை சாப்பிட குணமாகும்.

குளிர் காய்ச்சல் தீர : முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடவும்.

இதயப் படபடப்பு குறைய : மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கவும். (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்).

மாரடைப்பு : தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.

தொடர் வயிற்றுப் போக்கு : பப்பாளிப்பழம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.

நுரையீரல் பலப்பட : தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

திக்குவாய் சரியாக : இலந்தை இலைச் சாறு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் தீர : அகத்தி கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ணவேண்டும்.

ஈறு பலமடைய : மாசிக்காயை தூளாக்கி நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளித்தால் பலப்படும்.

இரத்தக்குழாயில் அடைப்பு நீங்க : தினம் ஒரு கப் தயிர் சாப்பிடவேண்டும்.

தேவையற்ற கொழுப்பு குறைய : பூண்டு, வெங்காயம் இவற்றை அடிக்கடி உணவில் அதிகமாக சேர்த்து வரலாம்.

எடை கூடாமல் தடுக்க : தேநீரில் எலுமிச்சம் பழசாறு கலந்து காலையில் குடித்துவர எடை கூடாமல் தடுக்கும்.

உதட்டில் வெடிப்பு : அத்திக்காயை உட்கொண்டால் வெடிப்பு குணமாகும்.

இதேபோல் உடல் அழகிற்கு சில இயற்கை குறிப்புகளைச் சொல்கிறேன். அவற்றையும் பார்த்து, அதன்படி செய்து பாருங்கள். கைமேல் பலன் கிடைக்கும்.

முகச்சுருக்கம் : முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவிவர மறைந்துவிடும்.

முகம் அழகுபெற : துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக் காயவிட்டு குளித்துவரவும்.

உடல் மினுமினுக்க : நீல புஷ்ப தைலம் தேய்த்துக் குளித்துவர உடல் குளிர்ச்சி பெறும். உடம்பும் மினுமினுப்படையும்.

உடல் உஷ்ணத்தைக் குறைக்க : மல்லிகைப்பூவை அதிகமாக பயன்படுத்தக்கூடாது.

முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர : கருவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர பயன் விரைவில்.

கண்கள் குளிர்ச்சியடைய : வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்.

படர்தாமரை நீங்க : சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி, ஊறிய பின் கழுவினால் விரைவில் குணமுண்டாகும்.

வழுக்கை மறைந்து முடிவளர : அல்லி இதழ்களை சந்தனத்துடன் அரைத்து வழுக்கைக்கு தடவி 2 மணி நேரம் காயவிட்டு குளிக்கவேண்டும்.

நரைமுடி கருப்பாக : தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

முடி உதிர்வது நிற்க : காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர விரைவில் குணமாகும்.

கூந்தல் மிருதுவாக : சீத்தாப்பழக் கொட்டையை காய வைத்துப் பொடியாக்கி சீயக்காய்த் தூளுடன் கலந்து தேய்த்துக் குளிக்கவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner