Ads Header

Pages


17 April 2012

ரொம்ப நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் சில விதிமுறைகள்

ஆஸ்பத்திரி அவசியமில்லை!
அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு போகாமல் இருக்கவும், ரொம்ப நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. இதற்காக நீங்கள் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. அதேபோல், இவற்றை தினமும் மாறாமல் கடைபிடித்து வந்தால்... கண் டிப்பாக நீடுழி வாழலாம்.

தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுந்திருக்க பழகுங்கள்.

எழுந்தவுடன் பற்களை நன்றாக விளக்கிவிட்டு, உங்களால் முடிந்த அளவுக்கு தண்ணீர் குடியுங்கள்.

வீட்டிற்குள்ளேயே 5 நிமிடம் நடந்தால் நல்லது.

காலைக் கடன்களை முடிக்க வேண்டும்.

பின்னர், உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, தியானமும் நல்லது.

உடலில் வியர்வை காய்ந்த பிறகு, சுத்தமான தண்ணீரில் நன்றாக குளிக்கவும்.

காலை உணவு கண்டிப்பாக சாப்பிடவேண்டும். தவிர்ப்பது கூடாது. சாப்பிடும்போது மெது வாக... நன்றாக மென்று சாப்பிடவும்.

ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் நீராவது குடிக்கவேண்டும். அதற்கு மேலும் குடிப்பது நல்லது.

மலமோ அல்லது சிறுநீரோ அடக்கவே கூடாது.

தூங்கும் அறை நல்ல காற்றோட்டமாக இருப்பது அவசியம்.

இரவில் சீக்கிரமே தூங்கிவிடுங்கள். அப்போதுதான் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பீர்கள்.

வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பது அவசியம்.

மதுபானம், புகை பிடித்தல் கூடவே கூடாது.

காபி, டீ சாப்பிடுவதற்கு பதிலாக, மோர், பால், இளநீர், பதநீர் குடிப்பது நல்லது.

மாலையில் குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டராவது நடப்பது நல்லது.

சாப்பிடும் உணவில் அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner