Ads Header

Pages

30 April 2012

தேனின் பயன்கள்!ஹெல்த் ஸ்பெஷல்!!

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சி-யால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்த-வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டு-விட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசி-யின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங் டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
Read more

ஆரோக்கிய கூந்தலுக்கு அருகம்புல் சாறு!

அழகின் ரகசியம்! அழகுக் குறிப்புகள்!!

ஆரோக்கிய கூந்தலுக்கு அருகம்புல் சாறு!

''சுருள் சுருளான தலைமுடியோட மினுமினுப்புக்குக் காரணம், தேங்காய் எண்ணெய், மிளகு, கத்தாழைச் சாறு, துளசி இதெல்லாம் கலந்த எண்ணெயை தினமும் தடவினா, முடி கருகருனு வளரும். கத்தாழை உடலுக்குக் குளிர்ச்சி தர்றதோட, நல்ல கண்டிஷனராவும் இருக்கும்.

தலையில பொடுகுத் தொல்லை. அருகம்புல்லை சாறு எடுத்து, அந்தச் சாறை தேங்காய் எண்ணெயோட கலந்து தலையில நல்லா ஊறவச்சு குளிச்சா, பொடுகு இருந்த இடம் தெரியாம போயிடும்.

வெயில்ல முகம், கை, கால்ல எல்லாம் கருமை படிஞ்சிடும். இதுக்கும் நான் ஒரு கை வைத்தியம் வச்சிருக்கேன்.

கொண்டைக் கடலையை மிஷின்ல கொடுத்து நைஸா அரைச்சுக்கணும். அந்தப் பொடியில கொஞ்சமா பால் கலந்து, பேஸ்ட் மாதிரி குழைச்சு, அப்படி கறுப்பான இடத்துல எல்லாம் பூசணும். இதைத் தொடர்ந்து செஞ்சிட்டு வந்தா, தோல் பளபளனு ஆகிடும். வெயில் காலத்துல சருமத்தைப் பாதுகாக்கறது இந்த பேஸ்ட்தான்.

சில சமயம் இந்த பேஸ்ட்டுக்கு பதிலா எலுமிச்சை சாறையும் தடவுவேன். எலுமிச்சை மட்டுமில்ல, புளிப்புத் தன்மையுள்ள எல்லா சாறும் வெயிலால ஏற்படுற சருமத்தோட கருமையை நீக்கிடும்.

எப்பவாவது முகம் ரொம்ப டல்லடிக்கிற மாதிரி தோணினா, உடனே கேரட்டை மிக்ஸியில நைஸா மசிச்சிடுவேன். இந்த பேஸ்ட்டை முகத்துல தடவி, கொஞ்ச நேரம் கழிச்சு அது காய்ஞ்சதும் கழுவிட்டா, முகம் பளபளனு டாலடிக்கும்.
Read more

அருசுவை அரசு கேள்வி-பதில் - வீட்டுக்குறிப்புக்கள்!

சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில் என்னென்ன கலந்து பிசைய வேண்டும்?

அதிக கெட்டியாகப் பிசையாமல், தண்ணீர் சற்றுத் தெளித்து கொஞ்சம் லூசாகப் பிசைந்து தேய்க்கலாம். மாவு கையில் ஒட்டாமலிருக்க வேண்டுமானால், அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசையலாம். அதேநேரம் அடுப்பில் சப்பாத்தியை தேய்த்துப் போடும் போது, கல்சூடு சரியாக இருக்கணும். அப்போதுதான் சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்பும்.

சப்பாத்தி இட்டு, முதலில் சூடான தவாவில் போட்டு, கூடவே பக்கத்து அடுப்பையும் எரிய விட்டு, அதில் இந்த சப்பாத்தியை ஃபுல்கா போல் சுட்டாலும் ‘புஸ்’ என்று எழும்பும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் கேழ்வரகுப் புட்டை எப்படிச் செய்யலாம்?

நறுக்கிய வெங்காயம், கேரட், காலி ஃப்ளவர், பட்டாணி போன்றவற்றுடன் கடுகு, உளுந்து தாளித்து, வதக்கி வேகவைத்து, அதை வேகவைத்த புட்டுமாவில் கலந்து மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

இனிப்பு விரும்பும் குழந்தைகளுக்கு கேழ்வரகு புட்டில் சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய் சேர்த்துக் கொடுக்கலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
சாம்பாரில் அல்லது குழம்பில் உப்பு சரியாக சேர்ந்து, மணமாக இருக்க, உப்பைக் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாமா?

காய்கறி வேகவைக்கும்போது அதில் கல் உப்பு சேர்த்து வேக வைத்து சாம்பாரில் சேர்க்கலாம். அல்லது புளித்தண்ணீரில் கல் உப்பு போட்டுக் கொதிக்க விட்டும் சாம்பாரில் சேர்க்கலாம்.

குழம்பில் உப்பைக் கடைசியாகச் சேர்ப்பது சரியல்ல. சாம்பாரில் மணமே இருக்காது.
---------------------------------------------------------------------------------------------------------------
நேந்திரம் பழச் சிப்ஸை வீட்டில் செய்யும்போது, கடைசியாக உப்பைத் தூவினேன். ஆனால் சிப்ஸில் உப்பு இறங்கவே இல்லை நேந்திரம் பழ சிப்ஸில் உப்பை எப்படிச் சேர்ப்பது?

நேந்திரம் பழ சிப்ஸை எண்ணெயில் பொரிக்கும் போதே, எண்ணெயில் உப்புத் தண்ணீரைத் தெளித்துச் செய்வார்கள். அப்போதுதான் சிப்ஸில் உப்பு நன்கு பிடிக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------
பிஞ்சு மக்காச்சோளத்தில் (பேபிகார்ன்) என்னென்ன ரெசிபிகள் செய்யலாம்?

பேபிகார்ன் கோஃப்தா கிரேவி, பேபிகார்ன் கிரேவி, பேபி கார்ன் பொரியல் பண்ணலாம்.

பேபிகார்ன் பொரியலுக்கு, நறுக்கிய பேபிகார்னை புளித்தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு போட்டு வேகவைத்து, வற்றல் மிளகாய், பெருங்காயத்தூள், கடுகு போட்டு வெடிக்க விட்டு, பேபிகார்ன் போட்டு வதக்கி அதில் பட்டாணியையும் வேகவைத்துச் சேர்த்துக் கொள்ளலாம். இதே டிஷ்ஷில் குடமிளகாய் சேர்த்து பொரியலும் செய்யலாம்.

பேபிகார்னை நைசாக வெட்டி, பட்டாணி சேர்த்து, பேபி கார்ன் பீஸ் கலந்த சாதமும் பண்ணலாம்.

பேபி கார்ன், பட்டாணி, குடமிளகாய், லவங்கம், பூண்டு என மசாலா அயிட்டங்களைச் சேர்த்து, புலவு சாதமும் செய்யலாம்.
---------------------------------------------------------------------------------------------------------
பூந்தி தேய்க்கும்போது குண்டு குண்டாக வருவதில்லை. அமுங்கி விடுகிறது. நன்றாக வர என்ன செய்வது?

லட்டுக்கு பூந்தி தேய்க்கும்போது, எண்ணெய் கொதி சரியாக இருந்தால் முத்து அழகாக விழும். மாவு நீர்க்க இருந்தால் முத்து முத்தாக விழாது. காராபூந்திக்குச் சிறிது அரிசி மாவு சேர்த்துக்கொள்ளலாம். எண்ணெயின் காய்ச்சல், பூந்தி தேய்த்ததும் பொரிந்து விடுவது போல் இருக்க வேண்டும்.

இரண்டு டம்ளர் கடலை மாவுடன் ஒரு டம்ளர் அரிசிமாவைச் சேர்த்துக்கொண்டால் பூந்தி எண்ணெய் குடிக்காது.
--------------------------------------------------------------------------------------------------------------
புழுங்கல் அரிசி சேர்க்காமல், பச்சரிசியில் இட்லி செய்தால் சில சமயங்களில் இட்லி ‘கல்’ போல் ஆகிவிடுகிறது. சரியான பதம் வர என்ன செய்வது?

பச்சரிசியில் இட்லி பண்ணும்போது, உளுந்தை சாதாரணமாகப் போடும் அளவைவிட சற்று அதிகம் சேர்த்துக் கொண்டால், இட்லி நன்றாக வரும்.
-------------------------------------------------------------------------------------------------------------
பெண் குழந்தைகள் புஷ்டியாக சத்துடன் இருக்க, உளுந்து களி கொடுப்பார்கள். இதை எப்படிச் செய்வது?

அந்தக் காலத்தில் உளுந்தை ஊறவைத்து, அரைத்து, அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் விட்டு, வழுவழுவென்ற அரைத்த உளுந்தைப் போட்டு அடிப்பிடிக்காமல் கிளறுவார்கள். தாராளமாய் நெய்யையும் சேர்த்துக் கிண்டி உளுந்து களி செய்வார்கள். இதற்கு நேரமும், சமயோசிதமாய் செய்யக்கூடிய ஆற்றலும் வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும் அடிப்பிடித்து வீணாகிப் போகும்.

உளுந்தை சிவக்க வறுத்து, மாவாக மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை இளம்பாகாக கொதிக்க விட்டு, இந்த மாவைக் கொட்டி, மிதமான தீயில் கோவா சேர்த்து களி மாதிரி கிளறி நெய், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும்.

காரக் களி எனில், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடிக்க விட்டு, பச்சைமிளகாய், இஞ்சி போட்டு தாளிக்கவும். அதில், வறுத்த உளுந்து மாவை பருப்பு உசிலிக்கு வேக வைப்பது போல் வேக வைத்துப் போட்டு உப்பு, சேர்த்து உப்புமா போன்றும் செய்து சாப்பிடலாம்.
Read more

முகம் அழகாக அழகுக்கு அழகு சேர்க்கும் டிப்ஸ்!

பெண்கள் தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலைக் குளியல் அழகுக்கு அழகு சேர்க்கும். தலையில் தேங்காய் எண்ணையை நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். காலின் உள்பாகத்தில் தேங்காய் எண்ணை தேய்த்தால் கண்ணுக்கு பொலிவு கிடைக்கும்.

***

கண்களுக்கு கீழே கருவளையம் விழுந்ததால் வருத்தப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். சந்தனக் கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி தடவிக் கொண்டு தூங்குங்கள். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் கருவளையம் மறையும்.

***

சில பெண்களுக்கு மீசை போன்று பூனை முடி முளைத்திருக்கும். சிலருக்கு முடி கன்னத்தின் பக்கவாட்டிலும் முளைக்கும். குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் மை போல் நன்றாக அரைத்து.... இரவில் படுக்குமுன் முடி இருக்குமிடத்தில் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து விடும்.

***

முகம் அழகாக இருக்கும், ஆனால் கழுத்துக்கு முன்னும் பின்னும் கருமையாக இருக்கும். இதை நீக்க... நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி, குளிக்கும்போது கழுத்தில் சோப் தடவி, கூட்டை வைத்து நன்றாக தேய்த்து கழுவுங்கள். நாளடைவில் கழுத்து கருமை நிறம் மாறிவிடும்.

***

குழந்தை பெற்ற பெண்கள், மூன்று மாதங்கள் கழித்து, கொள்ளு சாம்பார், கொள்ளு ரசம் அல்லது கொள்ளு ஜுஸ் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் தங்கியிருக்கும் அழுக்கு நீங்கும். பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உடல் குண்டாகும் வாய்ப்பு குறைந்து ஸ்லிம்மாக இருக்கலாம்.

***

சூரியனின் சூடு கிளம்ப ஆரம்பிச்சாச்சு... கனமான போர்வையை தண்ணீரில் நனைத்து, நன்றாக பிழிந்து வீட்டுக்குள் ஆங்காங்கே தொங்க விடுங்கள். இல்லாவிட்டால் சுற்றிலும் கட்டி விடுங்கள். டர்க்கி டவலை நனைத்து ஜன்னலில் கட்டுங்கள். இப்போது செலவில்லாத ஏ.சி. ரெடி!

***

சிலர் ஒல்லிக்குச்சியாய் இருப்பார்கள்... உடல் குண்டாவதற்காக கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். சிம்பிள் ஐடியா.... தினமும் அரைக்கீரை, பருப்பு மற்றும் நெய் சேர்த்த சாதத்தை சாப்பிட்டு வந்தால் பத்தே நாளில் உங்கள் உடலில் மாற்றம் தெரியும்!

***

சில பெண்களுக்கு இளநரை தோன்ற ஆரம்பிக்கும். இவர்கள் வீரியமான ஷாம்புகளை உபயோகிப்பதை தவிர்த்து, சீயக்காயை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கொட்டை எடுத்த நெல்லிக்காய்களுடன், எலுமிச்சம்பழச் சாறு விட்டு, நன்றாக அரைத்து, மாதம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால் இளநரை மறைந்துவிடும். முடி உதிர்வதும் கட்டுப்படும்.

***

உள்ளங்கால் பகுதி சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அப்படிப்பட்டவர்கள் காற்று படும்படியான செருப்புகளை அணியவேண்டும். ஷூக்களை அணியும் பழக்கமுள்ளவர்கள், தினமும் சாக்ஸ்களை துவைத்து அணிய வேண்டும். கை, கால்களை நீரால் துடைத்து, விரல்களுக்கு இடையிலும் பவுடர் பூசுங்கள்.
Read more

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்

9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்

15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு

16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு

18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்

24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்

30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்.
Read more

எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா? - ஹெல்த் ஸ்பெஷல்!

எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா?

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:-

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

கண்ணில் கருவளையம் மறைய...

சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

முகத்தை பாதுகாக்கும் முறை:-

ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.

உதடு உலர்ந்து விட்டதா?

உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

கழுத்தில் உள்ள கருவளையம் மறைய:-

சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல:-

இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.

காது அழகை பராமரிப்பது எப்படி?

பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்... காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.

ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.

உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.

சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.
Read more

நுரையீரல் கவசம் - ஹெல்த் ஸ்பெஷல்!

நுரையீரல் கவசம்

சித்தரத்தை-10 கிராம், ஓமம்-10 கிராம், கடுக்காய் தோல்-10 கிராம், மிளகு-10 கிராம் திப்பிலி-10 கிராம், அக்ரகாரம்-10 கிராம், தாளிசாப்பத்திரி-10 கிராம், சர்க்கரை-40 கிராம்.

செய்முறை-இவைகளை இடித்து ஒன்றாக சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு கால் டீஸ்பூன் வீதம் காலை மாலை உணவுக்குப்பின் சாப்பிட நுரையீரல் சம்பந்தமான எல்லாப்பிரச்னைகளும் விலகும். நுரையீரலுக்கு கவசமாகவும் இது விளங்கும்.
Read more

பாம் லஸ்ஸி - ஹெல்த் ஸ்பெஷல்!

தேவையான பொருட்கள்: நுங்கு 6, இஞ்சி சாறு 1 தேக்கரண்டி, கெட்டி தயிர் 2 கப், உப்பு, மிளகுத் தூள் தேவையான அளவு.


செய்முறை: நுங்கை தோல் நீக்கி, மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவும். தயிரை, நீர் விடாமல் கடைந்து, உப்பு, மிளகுத் தூள், இஞ்சிச் சாறு சேர்க்கவும். இத்துடன் நுங்கு கூழை கலந்து குளிர வைக்கவும்.
இன்னும், இன்னும் என்று கேட்டு வாங்கி சுவைப்பீர்கள்!
Read more

சில மூலிகை குறிப்புகள்...ஹெல்த் ஸ்பெஷல் !

எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய மூலிகை செடிகள் இருக்கிறது. நாங்கள் ஏதாவது ஒன்று என்றால் உடனே டாக்டரிடம் போகமாட்டோம். முடிந்தவரை எல்லாவற்றிற்கும் அந்த மூலிகையைத் தான் பயன்படுத்துவோம். எனக்கு தெரிந்த சில வியாதிகளுக்கு சில மூலிகை குறிப்புகளைச் சொல்கிறேன் அதை நீங்களும் இனி பயன்படுத்திக் கொள்ளலாம்.

எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.

நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.

அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.

மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.

இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும்.

சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.

படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும்.

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நேரம் குணமாகும்.

கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்

புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.
Read more

சில அழகு குறிப்புகள் - ஹெல்த் ஸ்பெஷல்!

எனக்கு தெரிந்த சில அழகு குறிப்புகளை சொல்கிறேன். இந்த காலத்திற்கு கெமிக்கல் இல்லாதவற்றை பயன்படுத்த வேண்டும். உடம்பிற்கு கெமிக்கல் ஒத்துக் கொள்ளாமல் நிறைய தோல் சம்மந்தமான வியாதிகள் வருகின்றன. அதற்கு தான் இயற்கையில் நமக்கு கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நம்மை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.

முகத்திற்கு காரட்டை அரைத்து தடவி ஊறிய பின் கழுவினால் முகம் வழவழப்பாக இருக்கும்.

உதடு கருப்பாக உள்ளவர்கள் பீட்ரூட் சாறு எடுத்து தடவி வந்தால் நாளடைவில் சரியாகிவிடும்.

கால் பாதங்களுக்கு பாதம் எண்ணெயை தடவி வந்தால் நாளடைவில் பாதம் வழவழப்பாக இருக்கும்.

கை, கால் முட்டிகள் கருப்பாக இருந்தால் அதற்கு ஆலிவ் ஆயில், பன்னீர் கலந்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

தலைமுடிக்கு முட்டையில் வெள்ளைகரு, மருதாணி கலந்து பூசிக் கொண்டால் தலைமுடி பளபளப்பாகவும், உதிராமலும், நீண்டும் வளரும்.

தலைமுடியில் இளம்நரையிருந்தால் அதற்கு மருதாணி, செம்பருத்தி இலை இரண்டையும் அரைத்து பூசி ஊறிய பின் சீயக்காய் போட்டு கழுவினால் சரியாகிவிடும்.
Read more

நமது இல்லம் நலமாகட்டும்! - வீட்டுக்குறிப்புக்கள்!

நமது இல்லம்
* நம்முடையதல்லாத எந்தப் பொருளின் மீதும் விருப்பம் கொள்ளக்கூடாது.
* வாரம் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
* வாரம் ஒருநாள் பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், மற்றும் சமைக்காத உணவுகளை உண்ணவும்.
* வீட்டில் இறைவனுக்காக பிரத்தியேகமான இடம் அமைக்க வேண்டும். சிந்தனை செய்ய வேண்டும்.
* அதிகாலையில் படுக்கையிலேயே காபி அல்லது தேனீர் அருந்தவேண்டாம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கக்கூடியது.
* நின்று கொண்டே சமைப்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி ஆகிய பிரச்னைகள் வருவதற்கு இது காரணமாகும்.
* இதே போன்று டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்பது பற்றியும் யோசனை செய்தல் வேண்டும். தரையின் மீது பத்மாஸனத்தில் அமர்ந்து உணவு உண்பது பற்றியும் யோசனை செய்தல் வேண்டும். தரையின் மீது பத்மாஸனத்தில் அமர்ந்து உணவு உண்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும், நமது உணவு செரிப்பதற்கும் மிகவும் நல்லது. நின்று கொண்டே உணவு உண்பது நல்லதல்ல.
* ஆண்கள் தாங்களாகவே உணவைப் பரிமாறிக் கொண்டு உண்பதை நிறுத்த வேண்டும். மற்றவர்கள் பரிமாறி நாம் உணவு உண்பதில் இருக்கும் ஆனந்தம் நாமே உணவை வைத்துக் கொண்டு உண்பதில் கிடைப்பதில்லை. எதை வேறு வழி இல்லாமல் செய்கிறோமோ அதையே தினசரி வழக்கமாக நாம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
* வீட்டுப் பாடத்தைக் குழந்தை தானாகவே செய்ய வேண்டும். குழந்தையின் வீட்டுப்பாடத்தைச் செய்திட. அம்மா முனைந்திடக்கூடாது. அம்மாவிற்கும் குழந்தைக்கும் உள்ள சம்பந்தத்தைக் குலைக்க வேண்டாம். குழந்தை தானாக முன்வந்து தாயாரிடம் கேட்டால், தெரிந்த அளவிற்கு ச் சொல்லிக் கொடுக்கலாம். நான்தான் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற மனநிலை நல்லதல்ல; தன் முயற்சி செய்ய குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
* வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் அது சரியாக, முறையாகப் பயன்படுத்தப் படுகிறதா என்பதில் குடும்பத்தினர் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
* செலவு செய்யும்போது இது அத்தியாவசியமானது தானா என்று யோசித்து செய்ய வேண்டும். அனாவசியமான செலவு யாருக்கும் கௌரவத்தை அளிப்பதில்லை. வீட்டில் மனஸ்தாபம் உருவாகி விடும்.
* குழந்தைகள் வெளி மனிதர்களிடம் பேசும்போது, பழகும் போது, தடுமாற்றம் இருக்கும். இதனை பெரிதுபடுத்தாமல் சரியான முறையில் பழகிட கற்றுத்தர வேண்டும்.
* குழந்தைகள் தினமும் அன்றைய வாரம், மாசம், வருஷம் ஆகியவற்றின் பெயர்களைச் சரியாகச் சொல்வதற்குக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு இருக்க வேண்டும். அதனை நினைவில் கொண்டுள்ளனரா என்பதை அறிய வேண்டும்.
* நமது பண்பாட்டின் வார்த்தைகளை வீட்டில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
* வீட்டிலுள்ள அனைவருக்கும் சேமிப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு ஆபத்துக் காலங்களில் பயன்படுவதற்காக ஒதுக்கப்பட்டு சேமிக்கப்பட வேண்டும். பண விஷயங்களில் கௌரவமாக நடந்து கொள்ள வேண்டியதைக் குறிப்பாகக் கவனிக்கவும்.
* தூங்கும் முன்பாக இறைவனை பிரார்த்திக்கும் பழக்கம் இருக்க வேண்டும். நாள் முழுவதம் நாம் செய்த செயல்களைப் பற்றி சுத்த சித்தத்துடன் அலசிப் பார்க்கும் பழக்கமும் ஏற்பட வேண்டும்.
*நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல மொழிகள் கற்ற ஒருவருடைய உலகம், மிகவும் விரிந்து விசாலமாக அடையும். முதலில் பேசுவதற்கும், பிறகு படிப்பது மற்றும் எழுதுவதற்கும் பயில வேண்டும்.
* நமது கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விஷயங்களையும் விரிவான கண்ணோட்டத்தை குழந்தைகளுக்கு அறிந்து கொள்ள பழக்கப்படுத்த வேண்டும்.
* குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வீட்டு முகவரி, தாய், தந்தையர் பெயர், அவர்கள் செய்யும் வேலை, வீட்டுத் தொலைபேசி எண்கள், தந்தையின் அலுவலகத் தொலைபேசி எண் முதலியன கற்றுத்தந்து நினைவில் நிறுத்த பழக்கப்படுத்த வேண்டும். ஆபத்து அவசியம் ஏற்படும்போது பயன்படுத்த சொல்லித்தர வேண்டும்.
* அறிமுகம் இல்லாத வெளியாரிடம் வீட்டு விஷயத்தையோ, தகவல்களையோ பரிமாறிக் கொள்ளக்கூடாது என்பதையும் குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும்.
* பொது இடத்தில் தனிப்பட்ட விஷயங்களை விவாதிப்பது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது தவிர்க்க குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
* கடிதமெழுதும் பழக்கம் மிகவும் உன்னதமானது. அதனால் கௌரவம் அதிகரிக்கும்.
* வீட்டில் யாராவது நோய்வாப்பட்டால் பயப்படக்கூடாது. ஆபத்துக்கால முதலுதவி சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* நோயாளிகள் மகிழ்ச்சியடையும்படி, அவர்களுக்குச் சேவை செய்வது, தேவைகளை முழுமையாகக் கவனிப்பது நலன் பேணுவது இவற்றிற்கும் பயிற்சி இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு இளைஞனும் ஆண்டிற்கு ஒன்றிரண்டு முறை இரத்த தானம் செய்ய வேண்டும்.
* இறந்த பின்பு கண்கள் தானம் செய்யப்பட வேண்டும் என்று வீட்டிலுள்ள அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* இறப்பு தவிர்க்க முடியாதது. இதனைப் புரிந்து கொண்டு மரணத்தைப் பற்றிய பயமில்லாது இருக்க வேண்டும்.
* வீட்டில் அனைவருக்கும் ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் மீது அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ள பண்புப்பதிவை ஏற்படுத்த வேண்டும்.
* பார்த்த பொருட்கள் அனைத்தையும் வாங்குவதும், அதைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதும் மேலைநாட்டு கண்ணோட்டம். நமது வீட்டில் வாங்குவது, வாங்கிய பொருளை முறையாக பயன்படுத்தும் கண்ணோட்டம் ஏற்பட வேண்டும்.
* வீட்டில் நடைபெறும் விழாக்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ஆகியவற்றைப் பற்றி விவாதித்து அதன்படி செயல்பட வேண்டி பயிற்றுவிக்கவும்.
* வரதட்சணையைப் பற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே மாதிரியான அபிப்பிராயம் உருவாக்கப்பட வேண்டும்.
* அதே போன்று பரிசுப் பொருட்கள் பற்றியும், இல்லத்தினர் அனைவருக்கும் ஒரே கருத்து நிலவ வேண்டும்.
* குழந்தைகளுக்கு எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
* எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது? தனி நபர், குடும்பம், சமுதாயம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இதைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும்.
* வீட்டில் பிராணிகள் பராமரிக்கப்பட வேண்டும். நமது வீட்டின் பழக்கத்திற்குத் தகுந்தவாறு, பசு, பூனை....
* கழிவறைகள் நமது நாட்டு வகையிலானதாக இருக்க வேண்டும். கபோடுகள் நோயாளிகளுக்கும் தான் பொருத்தமாக இருக்கும். ஆரோக்கியமான இளைஞர்களுக்கல்ல.
* வருடத்தில் ஒருமுறை குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்ல வேண்டும்.
* தானம் கொடுக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
* கை, கால், வாய் கழுவி விட்டுதான் சாப்பாடு சாப்பிட வேண்டும்.
Read more

வீட்டுக்குறிப்புக்கள்! கிச் டிப்ஸ் !

* புதிய பாத்திரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை நீக்க, எரியும் மெழுகுவர்த்தியை ஸ்டிக்கர் ஓரங்களில் படும்படி காட்டினால், அவை உரிந்து விடும்.
* பயன்படுத்தப்பட்ட எண்ணெ யை, ஸ்டிக்கர்கள் மீது தடவி வைத்தால், ஒரு மணி நேரத்தில், அவற்றை எளிதில் நீக்கி விட முடியும்.
* சிகைக்காய் பொடியால் எண் ணெய் பாத்திரங்களை தேய்த்த பிறகும், வாடை நீங்கவில்லை எனில், சிறிதளவு தயிர் ஊற்றி மீண்டும் தேய்த்தால் வாடை நீங்கி விடும். பிறகு லிக்விட் சோப் போட்டு கழுவி விடலாம்.
* முட்டை வேக வைத்த பாத்திரத்தில் வாடை நீக்க, டீத் துõள் அல்லது வினிகர் போட்டு தேய்க்கலாம்.
* பரணில் போட்டு வைக்கப் பட்ட பாத்திரங்களில் பிசுக்கு ஏறி இருந்தால், லிக்விட் பிளீச் கரைசலை தண்ணீருடன் கலந்து பாத்திரங்கள் மீது பூசி ஒரு நாள் இரவு வைக்க வேண்டும். அடுத்த நாள் பாத்திரங்கள் பளபளக்கும்.* வடை, போண்டா போன்றவற்றை எண்ணெயில் பொரிக்கும்போது, அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்க, எண்ணெய் காயும்போது சிறிது உப்பு போட்டால் போதும்.* பச்சை பட்டாணி வாடிப் போகாமல் இருக்க, உரித்த பட்டாணியை, உப்பு போட்ட கொதிநீரில் போட்டு, ஒரே ஒரு நொடியில் வெளியில் எடுத்து விட வேண்டும். வெள்ளை நிற காகிதத்திலோ, துணியிலோ பரப்பி வைத்து, தண்ணீர் காய்ந்ததும், காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைத்து விடலாம். ஆறு மாதங்கள் வரை அவை கெடாது.

* பச்சை பட்டாணியின் தோலை உரிக்காமல், ஒரு வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டி, உப்பு கலந்த கொதிநீரில் மூன்று நிமிடம் போட்டு வைத்து எடுங்கள். பிறகு, மேலே சொன்னது போல், ஈரத்தை உலர்த்தி, காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு, பிரீசரில் போட்டு வைக்கலாம். இரண்டு ஆண்டுகள் வரை இதை பயன்படுத்தலாம்.
* பாட்டில் அடியில் தங்கி விட்ட தக்காளி சாசில், ஒரு மூடி எலுமிச்சை சாறு பிழிந்து குலுக்கினால், சாஸ் எளிதில் வெளியே வரும். இந்தக் கூழை, குழம்பு, பொரியல் செய்ய பயன்படுத்தலாம்.
* பிரியாணி செய்யப் பயன்படும் பாஸ்மதி அரிசி குறைந்த அளவே இருந்தால் கவலைப்பட வேண் டாம். முதல் நாள் இரவே, பாஸ்மதி அரிசியுடன், தேவையான அளவு பச்சரிசியைக் கலந்து, சிறிதளவு "ரீபைண்டு' எண்ணெய் ஊற்றி, நன்கு கலந்து வைத்தால், பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்.
Read more

ஹெல்த் ஸ்பெஷல்! கர்ப்பிணிகள் கவனத்திற்கு...

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, கணவனிடமும், மனைவியிடமும் சிலர் மறைமுகமாக `'ஏதேனும் விசேஷம் உண்டா?'' என்று கேட்பார்கள். இந்தக் கேள்வி தம்பதிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒரு பிறவிப்பயன் மகிழ்ச்சியை அளிக்கும் என்றால் அது மிகையாகாது! கர்ப்பமாக இருந்தால் அந்த குடும்பமே அவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும். அந்தளவுக்கு கர்ப்பிணி பெண்ணை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். உடலளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை கர்ப்பிணிகள் சந்திக்க வேண்டியிருக்கும். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கர்ப்பிணிகள் என்ன செய்யவேண்டும். இதோ,

* கணவன், மனைவிக்குள் இருக்கும் உடல் தொடர்பான உறவை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பமாகிய தொடக்க நிலையில் அவசியம் தவிர்க்க வேண்டும். அதே போல், இதற்கு முன்னால் ஏற்பட்ட கர்ப்பத்தில் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

* கர்ப்பிணிகள் பெரும்பாலும் பிரயாணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் வெயிலோ அல்லது மழையோ அதிகமாக இருந்தால் உடல் தளரும். தொலைதூரப் பயணத்தை கண்டிப்பாக தவிர்க்கவும். இது சிசுவுக்கு நல்லதல்ல.

* கர்ப்பிணிகள் எப்போதும் டைட்டாக இருக்கும் ஆடைகளை அணிய வேண்டாம். நல்ல காற்றோட்டமாக இருக்கும் தளர்வான ஆடைகளை அணியுங்கள். வீட்டுக்குள்ளேயே நடந்து பழகுங்கள்.


* கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் உணவு, சுத்தமானதாகவும், சத்தான உணவாகவும் இருத்தல் அவசியம். அதிகமான உணவு, நொறுக்குத் தீனிகள் வேண்டாம்.

* பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம். அதாவது ஏற்கனவே மூலம் இருப்பவர்கள் இந்த மலச்சிக்கல் அதிக அவஸ்தையை கொடுக்கும். இவர்கள் திரவ உணவை சாப்பிடுவது நல்லது.

* பெற்றோர் செய்யும் தவறுகள் பிள்ளைகளையும் பாதிக்கும். கர்ப்பிணிகளுக்கு பால்வினை நோய் இருந்தால், அது கருச்சிதைவுகளையும், குறை மாதத்தில் பிரசவமும், சிசு கருப்பைக்குள் இறந்து விடும் அபாயம் உண்டு. அப்படியே சுகப் பிரசவத்தில் பிறந்தாலும், நோஞ்சானாய் பிறக்கும். பால்வினை நோய் இருப்பதாக தெரிந்தால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.

* கர்ப்பிணிகளுக்கு நீரழிவு நோய் தாக்கும் அபாயம் உண்டு. இதற்காக கர்ப்பிணிகள் கவலை கொள்ள வேண்டாம். பின்னர் அது மறைந்து விடும். இதை கர்ப்பகால நீரழிவு என்று கூறுவார்கள். கர்ப்பத்துக்கு முன்னரே நீரழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, கர்ப்பம் தரித்தவுடன் மேலும் அதிகமாகும்.
Read more

வீட்டுக்குறிப்புக்கள்! - 2

உப்பைக் கொட்டும்போது...
* தோசைக்கு அரைக்கும் போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.

* தோசைக்கு அரைக்கும் போது அரிசியுடன் 1 ஸ்பூன் துவரம் பருப்புபையும், 1 ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் தோசை மொறு மொறுவென்றிருக்கும்.

* தயிர் மிகவும் புளித்து விட்டால் அத்துடன் 4 பங்கு தண்ணீர் ஊற்றி அப்படியே வைத்திருக்கவும். 1/2மணி நேரம் கழித்து மேலே தெளிந்து நிற்கும் நீரை வடிகட்டி விட்டால் கீழே உள்ள தயிரில் புளிப்பு குறைந்து விடும்.

* உருளைக் கிழங்கை வேக வைக்கும்போது, தண்ணீரில் 1 ஸ்பூன் வினிகரை ஊற்றி வேகவைத்தால் கிழங்கு நல்ல வெள்ளையாக இருக்கும். விரைவில் வெந்து விடும்.

* அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.

* கீரை பசுமை மாறாமல் இருக்க அதனை செய்தித்தாளில் மடித்து வைக்கலாம்.

* பூண்டு பற்களை சிறிது நேரம் குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால் மிக எளிதாக உரிக்கலாம்.

* ஆட்டிறைச்சி அல்லது காய்கறிகளைக் கொண்டு செய்யும் கறி வகைகளில் சிறிதளவு வறுத்த பார்லி மாவைச் சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும்.


* பச்சைப் பட்டாணியை வேக வைக்கும்போது அதில் 1 ஸ்பூன் சீனியைச் சேர்த்தால் பட்டாணி நிறம் மாறாமல் இருக்கும்.

* கோதுமை மாவுடன் சம அளவு பார்லி மாவு கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும்.

* பருப்பை வேகவைக்கும் போது 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பருப்பு விரைவாக வெந்து விடும்.

* பிரெட் புதிதாக இருந்தால் துண்டுகள் போட வராது. கத்தியை நெருப்பு அனலில் லேசாக சூடுபடுத்திக் கொண்டு பிரெட்டை வெட்டினால் துண்டுகள் அழகாக வரும்.

* சப்பாத்திமாவுடன் சிறிதளவு சமையல் சோடாவைச் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

* உப்பை ஜாடியில் கொட்டும் போது 1 ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது.

* குருமாவுக்கு அரைக்கும் போது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால், குருமா குழம்புப் பதமாக வரும்.
Read more

வீட்டு வைத்தியம்!

ஆண், பெண் எல்லோருக்குமே இப்போ கண் பிராப்ளம் நிறைய..

அந்தக் காலத்தை விடவும் இப்போ கண்ணுக்கு வேலை அதிகம். கம்ப்யூட்டர் முன் உட்கார்றது, டி.வி&யில ஒரு சீரியல்கூட விடாமப் பார்க்கறது.. இப்படி ஏகப்பட்டது இருக்கு. ஏர் கண்டிஷன் ரூம்லயே உட்கார்ந்து வேலை பார்த்தாலும் கண் உறுத்தும்; நமைச்சல் எடுக்கும்; சிலருக்கு ராத்திரி தூக்கத்துலகூட ஒத்தைக் கண்ணுல இருந்து நீரா வடியும்.. இதெல்லாம் நம்ம உடம்பு உஷ்ணத்துனாலே ஏற்பட்டதுங்கறதைப் புரிஞ்சுக்கணும்.

இதுக்கு என்ன வைத்தியம்?

ராத்திரி படுக்கறதுக்கு முன்னே, கண், முகத்தை எல்லாம் சுத்தமா அலம்பிட்டு, மெல்லிசான வெள்ளைத் துணியை, விளக்கெண்ணெயில் நனைச்சு எடுத்து, ஒரு பூவன் வாழைப் பழத்தை அப்படியே பஞ்சாமிர்தத்துக்குப் பிசையற மாதிரிப் பிசைஞ்சு, அந்தத் துணியில ரெண்டு உருண்டையா வச்சு, ரெண்டு கண்களையும் மூடிட்டு, இந்தத் துணிய, பழத்தோடச் சேர்த்துக் கட்டிட்டுப் படுங்கோ.. குறைஞ்சது மூணு நாலு மணி நேரம்.. தூங்கிட்டாலும் பாதகமில்லே..

இந்தப் பூவன் பழம், விளக்கெண்ணெயோட சேர்ந்தா & அத்தனை குளிர்ச்சி. சில பேர் உருளைக்கிழங்கை வேக வச்சு, மசிய அரைச்சு, கண் மேலாக கட்டிக்கிறது உண்டு. ஆனாலும் பூவனும், விளக்கெண்ணெயும் எப்பவும் ஜோடி நம்பர் ஒன்தான்!

அது மட்டுமில்லே.. நாற்பது, அம்பது வயசுக்கு மேல, நிறைய பெண்களுக்கு மலச்சிக்கல் வரும். காரணம் சொல்ல முடியாது. டென்ஷன், வேலைப் பளு, சாப்பாட்டுல நார்ச்சத்து குறையறது.. இது மாதிரி நிறைய இருக்கும்.

இப்படிப்பட்டவங்க, தாராளமா அரை லிட்டர் விளக்கெண்ணெய அடுப்புல வச்சு, எண்ணெய் காய்ஞ்சதும் அதுல நாலைஞ்சு பூவன் பழத்தை கொஞ்சம் தடிமனான வில்லைகளா வெட்டிப் போட்டு, சிவக்கப் பொரிச்சுக்கணும். எண்ணெய் ஆறினதும், சுத்தமான பாட்டில்ல எடுத்து வச்சுக்கிட்டு, தினமும் ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னால நாலு துண்டு வாழைப்பழத்தை, அப்படியே ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயோடு முழுங்கிட்டுப் படுக்கணும்.

அப்படிப் பண்ணா, காலைல டாய்லட்ல தபஸ் பண்ண வேண்டாம். மூலம் இருந்தா ஆறிடும். வயித்துல சிலருக்குக் கீரைப் பூச்சி இருக்கும். அதனால பசி எடுக்காது. இவங்களுக்கெல்லாம் இது அருமருந்து! உஷ்ணத்துனாலே மேல் வயிறு வலிச்சாலும் தாராளமாச் சாப்பிடலாம்.

இந்த விளக்கெண்ணெய் இருக்கே.. அது ஒரு அற்புதமான மருந்துதான்!

விளக்கெண்ணெயை, உள்ளங்கால் எரிச்சலுக் கும், தொப்புளைச் சுத்தி ஏற்படற வலிக்கும்கூடத் தடவலாம். இமைகள், புருவங்கள் மேல தினமும் ஒரு சொட்டு விளக்கெண்ணையைத் தடவி வந்தா, அழகான, அடர்த்தியான புருவமும் இமைகளும் கிடைக்கும்.

வேற எதுக்காகவும் இல்லைன்னாலும், கடைசியா நான் சொல்லியிருக்கறதுக்காகவாவது, கடைக்கு ஓடுவீங்களே..

பாட்டி வைத்தியம்!

அஜீரணமா, வயிற்று வலியா, தலைவலியா, எந்த உபாதையாக இருந்தாலும், நம்மூர் பாட்டி வைத் தியத்துக்கு ஈடே இல்லை. நாம தான், கொஞ்சம் தலை வலி என்றாலும், உடனே ஆங்கில மாத்தி ரையை தேடுகிறோம்; ஆனால், அமெரிக்காவில், இப்போதெல்லாம், நம்மூர் பாட்டி வைத்தியம் தான் பிரபலமடைந்து வருகிறது. கையடக் கமான பாட்டில்களில் இஞ்சி, கற்றாழை, பூண்டு போன்றவற்றை பொடியாகவும், சாறாகவும் தயார் செய்து விற்கின்றனர்.

உடல் வலி சிகிச்சை நிபுணர் ஜாக்கப் டிடெல்பம், "1...2...3... போச் வலி' என்று, பாட்டி வைத்தியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு மருத்துவ புத்தகமே, எழுதி விட்டார்.

"அலோபதிக் (ஆங்கில) மருத்து வத்தில் இல்லாத மருந்துகளே இல்லை. அவற்றிலும் ஒரே மாதிரியான சத்துக்கள், ரசாயனங்களை செயற்கையாக வைத்துத் தான் தயாரிக்கிறோம். ஆனால், மூலிகை, தாவர பொருட்களில் இந்த சத்துக்கள், ரசாயன தன்மைகள் இயற்கையாக கிடைக்கும். அதனால், நான் இயற்கை மூலிகை மருந்துகளை என் நோயாளிகளுக்கு கொடுக்கிறேன்!' என்றார் டாக்டர்

"உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது ஐந்து இயற்கை மூலிகை பொருட்கள் தான்!' என்றும் அவர் கூறுகிறார். அவர் பார்வையில் அந்த ஐந்து மூலிகைகள்:

இஞ்சி :மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

கற்றாழை:சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடு கிறோம். அவர், "ஆயின்ட் மென்ட்' தருவார்; "ஆன்டி பயாடிக்' மாத்திரை தரு வார். ஆனால், பல ஆண்டுக்கு முன் இதெல் லாம் இருந்ததா? அப்போ தெல்லாம் கற்றாழை சாறு தான். அதைக் காயத்தில் போட் டால், அடுத்த நாளே வடுவே காணாமல் போய்விடும்.
"இப்போது பலருக்கும் இதை, "ஆலுவேரா' என்று தெரியுமே தவிர, கற்றாழை தான் அது என்று புரியாது; முகம் பளபளப்பது முதல் சரும அழகுக்கும், "ஆலு வேரா' ஆயின்ட்மென்ட், ஜெல் என்று ஏதேதோ வந்து விட்டது. கடைகளில் அழகான பாட் டில்களில் அடைத்து தரு வதை பயன்படுத்துவதை விட, நீங் களே, கற்றாழையை வளர்க் கலாம்; தேவைப்படும்போது பயன்படுத்தலாம்!' என்றும் கூறுகிறார்

மஞ்சள்:

உடலில் எந்த வீக்கமாகட்டும், வயிற்று கோளாறாகட்டும் அவற்றை நீக்கும் இயற்கை தன்மை கொண்டது மஞ் சள். சாப்பாட்டில், சிற்றுண்டியில், அன்றாடம் 900 முதல் 1800 மில்லி கிராம் வரை மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.

குங்கிலியம்: மூட்டு வலி, உடல் வலி போக்க அருமையான நிவாரணி, குங்குகிலியம் இலையின் சாறு. இஞ்சி சாறு போல, இதையும் சாப்பாட்டில் சேர்க்கலாம்; தனியாகவும் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு சாப்பாட்டிலோ, தனியாகவோ மூன்று முறை இந்த சாறை பயன்படுத்தினால், எந்த எலும்புப் பிரச்னையும் பின்னாளில் அண்டாது.

வினீகர்:

ஒரு கப் ஆப்பிள் வினீகரை குடித்து வந்தால், உடலில் எந்த வலியும் வராது. தண்ணீரிலோ, மற்ற பானங்களிலோ இரண்டு ஸ்பூன் வினீகரை போட்டு சாப்பிட்டு வரலாம். வலி உள்ள இடங்களில், கர்சீப் மூலம் வினீகரை தொட்டு தடவினால் போதும், வலி போய்விடும். காயத்தை ஆற்றும் அரிய குணம் இதற்கு உள்ளது.

என்ன... முயற்சித்துப் பார்ப்போமா?
Read more

பழங்களின் பயன்கள்! பழங்கள் பலவிதம்!

பழங்கள் பலவிதம்

விளாம்பழம்:

உடலுக்கு நல்ல இரத்தத்தைத் தரும் தன்மை கொண்டது இந்தப் பழம். வெப்பத்தைத் தணித்துத் தாகத்தையும் தீர்க்கும் தன்மையுடையது; நல்ல பசியையும் உண்டாக்கும்.

இலந்தைப் பழம்:

பித்த மயக்கத்தை நீக்கும் தன்மை இதற்கு உண்டு. பெரு விரக்தியைத் தணிக்கும். வாத நோயைக் குணப்படுத்தும். எனவே, இது சிறந்த மருந்துப் பொருளாகிறது.

வாழைப்பழம்:

உடம்பை வெளுக்க வைக்கும் சோம நோய் (சோவை நோய்) பித்த பிணிகள், மூர்ச்சையடைதல் இவை குணமாகும். செவ்வாழை, வெண் வாழை, ரஸ்தாளி, மொந்தன், அடுக்குவாழை, மலை வாழை, பச்சை வாழை, கருமை வாழை ஆக இந்த எட்டு வகையான வாழைப் பழங்களுள், செவ்வாழையிலிருந்து மொந்தன் வாழை வரை நோயாளிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். ஆனால், வாதநோய் உள்ளவர்களுக்கு இந்த எட்டு வகையான வாழைப் பழங்களும் கொடுக்கக் கூடாது.

பேயன் வாழைப்பழம்:

இது நல்ல குளிர்ச்சியைத் தரும் பழமாகும். உடல் சூடு தணியும்; வைத்தியம் தெளியும். ஆனால், வாதத்திற்கு இது பொருந்தாது. வாத நோயாளிகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது. இது அதிகக் குளிர்ச்சியுடையதாகையால் வாதத்தைப் பெருக்கும் தன்மை கொண்டதாகும்.

மொந்தன் வாழைப்பழம்:

அக்கினி மந்தம்; வாத வலி, சீதளம் இவை உண்டாகும். மனவுறுதியைக் குலைக்கிற பித்தம், காமாலை, உள்வறட்சி ஆகியவற்றைக் குணப் படுத்தும் தன்மை கொண்டதாகும்.

நாரை வாழைப்பழம்:

இந்தப் பழத்தால் மந்த அக்கினி, நமைச்சல், வாதம், கபம், கரப்பான் இவை பெருகும். எனவே, இந்தப் பழம் உடலுக்கு நல்லதல்லவாம்.

பலாப் பழத்தின் குணம்:

வாத பித்த நோய்களை இந்த இனிப்புச் சுவையுடைய பலாப் பழம் உண்டாக்கும். மேலும், இது கரப்பானையும் ஏற்படுத்தும்.

மாம்பழம்:

நல்ல இனிய சுவையுடையதாக இருந்தாலும். இது நமைச்சலையும், மார்பு எரிச்சலையும், கண் நோயையும், கருங்கரப்பானையும், கிரந்திப் புண்ணையும் அதிகரிக்கும்; பசியைப் போக்கும்.

தசை அத்திப் பழம்:

தசைப் பகுதி நிறைந்த அத்திப் பழம் இரத்தத்தை விருத்தி செய்யும்; தேகத்திற்கு நல்ல வலிமை தரும். சுர வெப்பு நீங்கும்; மலக்கட்டை அறுக்கும்.

விதை அத்திப்பழம்:

நிறைய அளவில் விதையுள்ள அத்திப் பழம் நல்ல முறையில் மலம் கழிவதற்குத் துணை செய்யும். தேக உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றல் இந்தப் பழத்திற்கு உண்டு. பித்த நோயின் வேகத்தையும் இது குறைக்கும்.

புளியம் பழம்:

புளியம் பழத்தைத் தின்றால் மந்த புத்தி ஏற்படும்; பித்த வாத, கப நோய் ஏற்படும்; சந்நிபாத சுரங்கள் ஏற்படும்; நரைதிரை இவை விரைவில் உண்டாகும். இவை தவிர வாந்தியும் பித்தமும் ஏற்படும்.

பனம்பழம்:

பனம்பழம் கிடைக்கும். காலத்தில் இதை அடிக்கடி உண்ணக் கூடாது. கரப்பான், சிரங்கு இவை ஏற்படும். பித்த நோய்கள் ஏற்படும். எனவே, இதை விரும்பிச் சாப்பிடக் கூடாது.

தேற்றான் பழம்:

தேற்றான் பழத்தால் வாதநோய்கள் குணமாகும். இருமல், சுவாசமூட்டுதல் இவை குணமாகும். மலக்கட்டை அறவே நீக்கும். வாந்தியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

நாவல் பழம்:

அக்கினி மாந்தம், உடல் நோய் இவை ஏற்படும். அதிக வெப்ப நோயும், தாகமும் தீரும்.

வெள்ளை நாவல் பழம்:

வெள்ளை நாவல் பழமானது இரத்தத்தை விருத்தி செய்வதுடன் தாதுவையும் நன்கு விருத்தி செய்யும். உடலிலுள்ள சூட்டைத் தணிக்கும் ஆற்றல் பெற்றதாகும் இது!

சம்புநாவல் பழம்:

இந்த சம்பு நாவல் பழம், காட்டில் தான் கிடைக்கும். இந்தப் பழத்தை உண்டால் வாத, பித்த நோய்கள் குணமடையும்.

முந்திரிப் பழம்:

அளவு கடந்த தாகத்தையும் உடல் வெப்பத்தையும் தணிக்கும் தன்மையுடையது. கரப்பான், சிரங்கு இவை உண்டாகும்.

தமரத்தம் பழம்:

வாத பித்தம், வாதகபம், குரல் கம்மல், கண் நோய், தாது ஒழுகுதல் ஆகிய இந்த நோய்கள் குணமடையும். சித்தப் பிரமையும் இந்தத் தமரத்தம் பழத்தை உண்ணக் குணமாகும்.

கொய்யாப் பழம்:

இது உடம்புக்கு அவ்வளவு நல்ல பயனைத் தராது. கப, வாத, பித்த நோய்களை உண்டு பண்ணும். மேலும் மந்தம், வாந்தி, வயிறு உப்பல் இவை உண்டாகும். கரப்பான் நோய் அதிகரிக்கும்.

எலுமிச்சம் பழம்:

தாகத்தைத் தீர்க்கும் தன்மை கொண்டது; நகச் சுற்றுக்கு நல்ல மருந்தாகும். பித்த நோய், கண் நோய் இவைகளுக்கும் நல்ல மருந்தாகும். காது வலி, வாந்தி இவை குணமாகும்.

நார்த்தம் பழம்:

பித்த நோய் குணமாக நார்த்தம் பழமானது பெரிதும் துணை செய்யும். தாது விருத்திக்கு இது பெரிதும் உதவுகிறது.

சாதி நாரத்தைப் பழம் - கொலுஞ்சி நாரத்தைப் பழம்

விடாத தாகத்தைத் தணிக்க நல்ல சாதி நாரத்தைப் பழம் உதவுகிறது. கொலுஞ்சி நாரத்தம் பழமானது. நாவறட்சியை விலக்கும் தன்மை கொண்டது.

சீத்தாப் பழம்:

இது உடலுக்கு நல்லதல்ல. அக்கினி மந்தமும் சித்தப் பிரமையும் இதனால் உண்டாகும். எனவே, இதை உண்ணாமல் இருப்பது நல்லதாகும்.

மாதுளம் பழம்:

மாதுளம் பழம் பல விதமான நன்மைகளைச் செய்வதாகும். வாந்தி, கபம், பித்த நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும். மலட்டுத் தன்மை நீங்கும். வாந்தி, வாயில் அடிக்கடி நீர்ச் சுரக்கும் தன்மை, விக்கல், மாந்தம், நெஞ்செரிவு, கடுமையான காய்ச்சல், காதடைப்பு இவை நீங்கும். இந்தப் பழத்தின் சாற்றுடன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.

கொமட்டி மாதுளம் பழம்:

கொமட்டி மாதுளம் பழத்தால் பித்த நோய்கள், சிலேஷ்ம தோஷம், காசநோய் இவை குணமாகும்.

பேரீச்சம் பழம்:

பித்த நோய்களை அறவே நீக்கச் செய்யும் தன்மை பேரீச்சம் பழத்திற்கு உண்டு. ரத்தம், பித்தம், நீரிழிவு போன்ற கொடிய நோய்களையும் இது குணப்படுத்துகிறது. மலக்கட்டுப்பாட்டை நீக்குகிறது.

சிற்றீச்சம் பழம்:

சிற்றீச்சம் பழம் உடலுக்கு நன்மை தருவது அல்ல. சீத பேதியையும், உழவை நோயையும் உண்டு பண்ணும். சிரங்கு, கரப்பான் இவைகளையும் உண்டு பண்ணும். இதைத் தொடர்ந்து உண்டால் அறிவு வளர்ச்சி பெறாமல் மங்கிபோகும்.

பூந்தாழம் பழம்:

மேக வெள்ளை, வாந்தி, பித்த நோய், தாகம் இவைகள் குணமாகும்; உடலுக்கு நல்ல அழகு கிடைக்கும்.

கத்திரிப் பழம்:

பித்த நோய்கள், கரப்பான், கொடிய நோயான குஷ்டநோய், உடல் வெப்பமடைதல், சுக்கிலக்குறைவு உண்டாகும்.

கண்டங்கத்திரிப் பழம்:

இருமல், மூச்சு வாங்குதல், காசம், கபம் பல்லரணை ஆகிய இவைகளை இந்தக் கண்டங்கத்திரியானது நீக்கும் தன்மை பெற்றுள்ளது.

மிளகாய்ப்பழம்:

மிளகாய்ப் பழத்தால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் ஏற்படுவதில்லை. தாது விருத்தியாகும். ஆனால், விளையும் தீமைகளே அதிகமாகும். ரத்த மூலம், ஆசனக் கடுப்பு இவை உண்டாகும். எனவே, எவ்வளவு குறைவாக மிளகாய்ப் பழத்தை உபயோகிக்க முடியுமோ அந்த அளவிற்கு உடலுக்கு நல்லதாகும்

சிறிய கொடி முந்திரிப் பழம்:

இதைத்தான் திராட்சைப்பழம் என்கிறோம். தாகத்தைத் தீர்க்கும் தன்மையும், நாட்பட்ட புண்களை ஆற்றும் தன்மையும் இது கொண்டது. பித்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேக நோயைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும் இது.

பெருங்கொடி முந்திரிப்பழம்:

பெருங்கொடி முந்திரிப் பழத்தால் சோகை நோய் குணமாகும்: செடி கொடிகளினால் ஏற்படும் நச்சுத் தன்மை முறியடிக்கப்படும்; உன்மத்தம்; மூத்திர நோய் ஆகியவை குணமாகும்.

தூதுளம் பழம்:

தூதுளம் பழம் கப நோய்களைக் குணமாக்கும் தன்மை கொண்டதாகும். கபக்கட்டு கரையும். நீர்க்கோவை நீங்கும்.

பாகல் பழம்:

நாட்பட்ட காய்ச்சல், மேக நோய்கள், காசநோய், வாத, பித்த நோய்கள், கொடிய குஷ்ட நோய் ஆகிய இவை குணம் பெறும்.

சவுரிப் பழம்:

தலைவலி, குடைச்சல் உடல் கடுப்பு ஆகியவைகளைச் சவுரிப் பழத்தினால் குணம் பெறச் செய்யலாம்.

டிப்ஸ்

பித்த நோய்களை அறவே நீக்கச் செய்யும் தன்மை பேரீச்சம்பழத்திற்கு உண்டு. ரத்தம், பித்தம், நீரிழிவு போன்ற கொடிய நோய்களையும் இது குணப்படுத்துகிறது. மலக்கட்டுப்பாட்டை நீக்குகிறது.
Read more

கொய்யாப் பழங்களின் பயன்கள்!

பழவகைகளில், கொய்யா தனிச் சிறப்புடையது. இதன் தாயகம் மத்திய ஆசியா ஆகும். போர்த்துக்கீசியர்கள் கொய்யாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். தாவர வகையில் சிறிய மரவகையைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் ‘‘பிசிடியம் கௌஜவா’’ ஆங்கிலத்தில், ‘‘கௌவா’’ (Guava) என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலப் பெயரின் அடிப்படையிலேயே, தமிழில் ‘‘கொய்யா’’ என்று பெயர் வந்தது. வருடம் முழுதும் கிடைக்கும் பழம்.

இந்தியாவில் கொய்யா 1,35,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. முக்கியமாக, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அதிகமாக சாகுபடியாகிறது.

வெப்ப நாடுகளின் ஆப்பிள்:

கொய்யா பழத்திற்கு, ‘‘வெப்ப நாடுகளின் ஆப்பிள்’’ என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. வெப்ப நாடுகளின் முக்கிய கனி என்பதாலும், சத்துக்கள் அதிகம் கொண்டதாலும் இப்பெயர். கொய்யாவை, ‘‘ஏழைகளின் பழம்’’ (Poorman’s fruit) என்றும் சொல்வார்கள்.

வகைகள்:

கொய்யாவில் பல ரகங்கள் உண்டு. பொதுவாக, சதையின் நிறம், பழத்திலுள்ள விதை அளவு, பழத்தின் உருவ அமைப்பு முதலியவைகளில் மாறுபடும். சதையின் நிறம் சிவப்பு அல்லது வெள்ளையாக இருக்கும். பெரிய அளவு கொய்யாவில் விதைகள் குறைவாக இருப்பதோடு, சுவை மிகுதியாக, நல்ல இனிப்பாக இருக்கும். இதைத்தான் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவர். விதைகள் இல்லாத, பருமனான கொய்யா வகையும் உண்டு. இது நல்ல இனிப்புள்ளது, சதை அதிகம் கொண்டது.

சத்துப் பொருள்கள்:

நாம் உண்ணும் 100 கிராம் கொய்யாப் பழத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருள்கள்: புரதம் 1 கிராம், கொழுப்பு 0.30 கிராம், நார்ப்பொருள் 5.40 கிராம், மாவுப்பொருள் 11.6 கிராம், கால்சியம் 10 மில்லிகிராம், பான் பிரஸ் 28 மி.கி. இரும்புச் சத்து 104 ;மி வைட்டமின் ‘‘சி’’ 232 மி.கி. என்ற அளவிலும், வைட்டமின் ‘‘ஏ’’, வைட்டமின் ‘‘பி’’ சத்துக்களும், பெக்டினும் கணிசமாக உள்ளன.

வைட்டமின் ‘சி’ சுரங்கம்: கொய்யாப் பழத்தில், வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தைவிட ஏழு மடங்கும்; எலுமிச்சம் பழத்தைவிட மூன்றரை மடங்கும் அதிகமாக உள்ளது. இதனால் கொய்யாப்பழத்தை வைட்டமின் ‘‘சி’’ சுரங்கம், என்று சொல்கிறார்கள்.

கொய்யா பற்றிய புது மொழிகள்:

கொய்யாவை கடித்துத்தின்னா, பலன் அதிகம் பைய்யா!

அய்யா, அய்யா, அருமை மலமிளக்கி கொய்யா!

‘‘வானவில்’’ இயற்கை அழகரங்கம், ‘‘கொய்யா’’, வைட்டமின் ‘‘சி’’ சுரங்கம்!

கொய்யா நரம்புகளை வலுப்படுத்தும் மெய்யாய்!

முக்கிய குறிப்பு:

கொய்யாப்பழத்தை நன்கு கழுவி, சுத்தம் செய்து, தோலுடன் கடித்துச் சாப்பிட்டால்தான் கொய்யாப்பழத்தின் முழுச்சத்துக்களும் நமது உடலுக்குக் கிடைக்கும். குறிப்பாக, வைட்டமின் ‘சி’ சத்து தோலில்தான் மிகுதியாக உள்ளது. சதைப் பகுதியின் உள்ளே போகப் போக வைட்டமின் ‘சி’ சத்தின் அளவு குறைகிறது என உணவியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

பொதுப்பயன்கள்:

கொய்யாப்பழத்தை பொதுவாக கடித்துச் சாப்பிடுகிறோம் அல்லது துண்டுகளாக நறுக்கிச் சாப்பிடுகிறோம். கொய்யாப் பழத்தை பக்குவம் செய்து, கூழ், ஜெல்லி, சிரப், பேஸ்ட், பாலேடு, கொய்யா முரப்பா, ஜாம், முதலியன தயாரித்து பல வழிகளில் உண்ணலாம். கொய்யாப்பழம் பல மருத்துவக் குணங்கள் கொண்டது. சளித்தொல்லை வராது காக்கும் அற்புத குணம் கொய்யாப் பழத்திற்கு முக்கியமாக உண்டு.

குடல் கோளாறுகளை நீக்கும். இரத்த விருத்தி ஏற்படுத்தும், இதயத்தைச் சீராக இயங்கச் செய்யும். தூக்கத்தைத் தூண்டும். சிறந்த சிறுநீர் பெருக்கி. ஈறு, பற்களைப் பலப்படுத்தும். நரம்புகளை வலுப்படுத்தும். உடலுக்குக் குளிர்ச்சி ஊட்டும். மலமிளக்கி. தோல் நோய்களுக்கு மாமருந்து. விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

மருத்துவப் பயன்கள்:

கொய்யாப்பழத்தில், அதிக அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால் இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சளிப் பிடிக்காது காக்கும் தன்மை உள்ளது.

சிறுகுடல், பெருங்குடல் சம்பந்தமான கோளாறு உள்ளவர்கள், கொய்யாப்பழத்தைத் தின்று வர, நன்கு குணம் கிடைக்கும். கொய்யாப்பழத்திலுள்ள பெக்டின் சத்தும், வைட்டமின் ‘சி’ சத்தும்தான் இந்தக் குணத்திற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அனீமியா என்னும் இரத்த சோகை உள்ளவர்கள், கொய்யாப்பழத்தைக் கூழ் செய்து குடித்து வர, இரத்தவிருத்தி ஏற்படும். சோகை நோய் நீங்கி, நலன் பயக்கும். இதயத்தைச் சீராக இயங்கச் செய்யும் தன்மையும் கொய்யாப்பழத்திற்கு உண்டு.

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள், தினமும் படுக்கைக்குச் செல்லுவதற்கு முன், ஒரு தம்ளர் கொய்யாப்பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து பருகினால் நன்கு தூக்கம் வரும்.

கொய்யாப்பழத்தை கடித்துத் தின்று, ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் குடித்தால், சிறுநீர் நன்கு பிரியும். சிறுநீர் தாரையிலுள்ள எரிச்சல் நீங்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு கொய்யா ஒரு இயற்கை நல் மருந்து.

விந்து உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொய்யாப் பழத்திற்கு உண்டு. செலவு மிகக் குறைவான சிக்கன மருத்துவம் இது.

கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைத் தனிக்க, கொய்யா பழக்கூழ் பருகினால் போதும்.

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கொய்யாப் பழம் நல்ல பழம். பெரியவர்களுக்கு எலும்பை வலுப்படுத்தும்.

கொய்யாப்பழத்துடன், ஒரு செவ்வாழைப்பழம் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்குபடும்.

கொய்யா பழத்தின் சதைப்பாகத்தை நன்கு பிசைந்து, காய்ச்சிய பசும் பாலில் கலந்து கொடுத்துவர, குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாகத் திகழ்வர். நன்கு சுறுசுறுப்பு தானே வரும்.

கொய்யாப்பழம், ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஈறு மற்றும் பற்களைப் வலுப்படுத்தும்.

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தொடர்ந்து கொய்யாப் பழச்சாறுடன் திராட்சைப் பழச்சாறு கலந்து பருகிவர, நரம்புகள் பலப்படும். பக்கவிளைவில்லா இயற்கை மருந்து இது.

கொய்யாப் பழக்கூழ் குடித்துவர, சொறி, சிரங்கு குணமாகும். சரும நோய் வராது பாதுகாக்கும். மேனியை பளபளப்பாக வைக்கும் தன்மை கொய்யாப் பழத்திற்கு உண்டு.

கொய்யாப் பழக்கூழுடன், எலும்மிச்சம் பழச்சாறு, இஞ்சிச் சாறு சேர்த்து பருகினால், பித்தம் விலகி நலன் பயக்கும்.

காக்கா வலிப்பு உள்ளவர்கள், கொய்யாப் பழக் கூழ் சாப்பிட்டு வர, நோயின் தன்மை கட்டுக்குள் இருக்கும்.

பசி, ருசி இல்லாதவர்கள், கொய்யாப் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடித்தால், ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்கு பசி ருசி உண்டாகும்.
Read more

ஏலக்காயின் மருத்துவப் பயன்கள் - டிப்ஸ்கள் !

சமையல் வகைகளுக்கு, குறிப்பாக இனிப்புப் பண்டங்கள், பலகாரங்கள், கேக், மிட்டாய், ரொட்டிகளுக்கு சுவையும், மணமும் அளிக்கும் ‘‘ஏலக்காய்’’, பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டில், ‘‘ஏலக்காய் மாலைகொண்டு ஏழு காதம் தொலைவிலிருந்து தாய்மாமன் வருவானே தங்கமே கண்ணுறங்கு’’ என்னும் தாலாட்டுப் பாடல் ஒன்று, ஏலக்காயின் பழமையை உணர்த்துகிறது. பூமாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை பண்டைத் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தன என்பர்.

பல்மொழிப்பெயர்கள்: ஏலக்காய்க்கு ஆங்கிலத்தில், (Cardamom) என்று பெயர். சமஸ்கிருதத்தில் கபிதா, இந்தியில் ஏலாச்சி, கன்னடத்தில் ஏரகி, தெலுங்கில் ஏலகி செட்டு, மலையாளத்தில் ஏலக்கா, வங்காளத்தில் எலைச்சி, குஜராத்தியில் எலாச்சி, மராத்தியில் வெல்சி, அசாமியில் முகா, ஒரியாவில் அலைச்சா என்று பெயர்.

சத்துப்பொருட்கள்: ஏலக்காய் விதையில் Seads,, புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி அடங்கியுள்ளன.

பொதுப்பயன்கள்: பசி தூண்டி, கபம் இளக்கி, பித்தம் அகற்றி, நரம்புத் தளர்ச்சியை நீக்கி, வலுப்படுத்தும் தன்மையது. சிறுநீர் பெருக்கி, மூத்திர அடைப்பு, குடற்பாதைக் கோளாறுகளை நீக்கும். வாய் நாற்றத்தைப் போக்கும். வலி நிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும்.

மருத்துவப் பயன்கள் :

சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

எலுமிச்சைச் சாறுடன், ஏலக்காய் பொடித்திட்டு சாப்பிட்டால் சாதாரண பித்தம் விலகும்.

ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய்ய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

ஏலக்காய், சதகுப்பை, பெருங்காயம் இவற்றுடன் சிறிது நீர்தெளித்து மைய்யாக அரைத்து, தசை வீக்கம் மீது பூசி வர, வீக்கம் வற்றி நலம் பயக்கும்.

வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.
Read more

தீராத வாய்ப்புண் மணத்தக்காளி கீரையால் பூரணமாக சரியாகும்!

தீராத வாய்ப்புண் உள்ளவர்கள், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை டம்ளர் மணத்தக்காளி ஜூஸ் சாப்பிட்டால், மாலைக்குள்ளேயே புண்வலி குறைந்து விடும்; இது போல் இரண்டு, மூன்று முறை சாப்பிட்டால் வாய்ப்புண் என்பதே வராது! வாய்ப்புண் மிகவும் அதிகமாக வந்து டாக்டர்கள் எல்லாம் வேறு ஒன்றுமே செய்ய முடியாது என்று கை விட்டு விட்ட நிலையில், பரீட்சை எழுத முடியாமல் போய் மிகவும் சிரமப்பட்டு, பின் நானே கண்டுபிடித்த வைத்தியம் இது. மணத்தக்காளி கீரையை கூட்டாக, பொரியலாக சாப்பிடுவதை விட, ஜூஸ் செய்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட உடனே, நிவாரணம் கிடைத்து விடும்.
Read more

29 April 2012

"தினம் ஒரு நெல்லிக்கனி, தீர்க்காயுளை அள்ளித்தரும்'

ழைகளின் ஆப்பிள்!


மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் இவற்றைத் தள்ளிப்போட்டு நீண்ட காம் ஆரோக்கியமாக வாழும் வழி என்ன? என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம்.

தமிழ்நாட்டுச் சித்தர்கள் சுருக்கமாக இந்த ஆராய்ச்சியை காயகல்ப ஆராய்ச்சி என்றனர். காயம் என்றால் உடம்பு; கல்பம் என்றால் உடம்பைக் கல் போன்று இறுக வைத்து நீண்ட காலம் வாழவைத்தல். ஆக, காயகல்பம் என்றால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்று அர்த்தம்.

இந்த காயகல்ப ஆராய்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டவர்கள் நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே குமரிகண்டத்தில் வாழ்ந்த அறிவர் என்ற சித்தர்கள் (சித் என்றால் அறிவு: சித்தர் என்றால் அறிவர்) 108 வகையான காயகல்ப மூலிகைகளைச் சாப்பிட்டு காயசித்தி அடைந்து நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்தனராம்.

அத்தகைய 108 காயகல்ப மூலிகைகளும் ஒன்றுதான் கருநெல்லிக்கனி. இந்தக் கருநெல்லிக்கனியைத்தான் கொல்லிமலையை ஆண்ட அதியமான், அவ்வையாருக்குப் பரிசாக அளித்து நீண்டகாலம் தமிழ்ப்பணி ஆற்றுமாறு வேண்டினார்.

நெல்லிக்கனி மூன்று வகைப்படும். ஒன்று கருநெல்லிக்கனி. இரண்டு மலைநெல்லி எனப்படும் பெருநெல்லி. மூன்று அருநெல்லி. இதில் அருநெல்லி என்பது ஊறுகாய் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் உண்பதாகும். நெருநெல்லி எனும் மலைநெல்லியைத்தான் ஏழைகளின் ஆப்பிளள் என்று குறிப்பிட்டேன்.

செழிப்பான கறுப்பான தலைமுடியை வளர்த்துக் காப்பதிலிருந்து மூளை, கண், காது, மூக்கு, தோல், பற்கள், ஈறுகள், தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், இதயம், இதயநாளங்கள். கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், கருப்பை, சிறுநீரகம், மூட்டுக்கள், பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளின் திசுக்களையும் வளர்த்து அவை சீராகச் செயல்படத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொண்டுள்ள ஒரே கனி, நெல்லிக்கனி.

நெல்லியால் நெடும்பகை போகும் என்பது அருமையான பழமொழி ஆகும். நெடும்பகை என்பது உடல் நோய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மார்க்கெட்டுக்கு வரும் நெல்லிக்கனிகளில் (பெருநெல்லி என்று குறிப்பிடுவர். அருநெல்லி என்பது சிறிய நெல்லி. இதனை மருத்துவத்துக்குப் பயன்படுத்தக்கூடாது)

5 லிட்டர் நெல்லிக்கனிகளை வாங்கி அடிபட்டது, அழுகியது, சொத்தை, கரும்புள்ளி உள்ளவற்றை நீக்கிவிட்டு வெந்நீரில் கழுவி நிழலில் உலர்த்தியபின் நீளமான, சுத்தமான பாயில் இவற்றை உலர விடவும். சூரிய ஒளியின் அனல் மட்டும் பட்டால் போதும். பகல் நேர வெயிலில் 10 முதல் 20 நாள் உலர்த்தவும்.

அளவு மெல்ல மெல்லச் சுருங்கி வற்றல் போல் ஆகிவிடும். அதன் பின் உடைத்து உள்ளிருக்கும் விதைகளை நீக்கி, வற்றல்களை மட்டும் சேகரித்துப் பொடி செய்து 1 கிலோவிற்கு 100 கிராம் மிளகு சேர்த்து பத்திரப்படுத்தவும்.

இதனை ஆண்டு முழுவதும் தினசரி அரை ஸ்பூன் (பெரியவர்களுக்கு) கால் ஸ்பூன் (சிறியவர்களுக்கு) காலையில் தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இப்படிச் சாப்பிட்ட பின் 1 மணிநேரத்திற்குத் தண்ணீர் தவிர வேறெதுவும் சாப்பிட வேண்டாம்.

நெல்லிப் பொடியை இப்படிச் சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி; துல்லியமான பார்வை; வழவழப்பான சருமம், கல்போன்ற இறுகிய தசைநார்கள்; படபடப்பற்ற இதயம்; சுறுசுறுப்பான மூளை; சளியற்ற நுரையீரல்; விறுவிறுப்பான நடை கல்லையும் கரைக்கும் கல்லீரல்; வலியற்ற மூட்டுக்கள்; அயராது உழைக்கும் கரங்கள் ஆகியவற்றுடன் சுருங்கக் கூறின் வளமான உடல் நலம் பெறலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக 50ல் முதுமை என்ற நிலையைக் குறைந்தபட்சம் 60ல் முதுமை என்ற அளவிற்குத் தள்ளிப் போடலாம்.

நெல்லிக்கனி என்பது "நல்வாழ்வுக்கனி' என்ற உண்மை. அனுபவத்திலும் அறிவியலிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதியாகியுள்ளது. இதுவே உன்னத காயகல்பம்! இதனைத் தினசரி உண்பவர்கள், கடைகளில் காயகல்ப மருந்து தேடி அலைய வேண்டாம்!

''An apple per day, keeps the doctor away'' என்பது ஆங்கிலப் பழமொழி. "தினம் ஒரு நெல்லிக்கனி, தீர்க்காயுளை அள்ளித்தரும்' என்பது அனுபவமொழி ஆகும்.
------------------------------------------------------------------------------------------------
நெகிழவைக்கும் நெல்லிக்காயின் பயன்? (Gooseberry)
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். இதைவிட நெல்லிக்காய் சாப்பிடுங்க அப்படின்னு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேறெதாவது காரணம் தேவைப்படுமா? இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், மற்ற இயற்கை உணவுகளைப்போல் இல்லாமல் நெல்லிக்காயை சமைத்து உண்டாலும் அதனுடைய சத்து சமைப்பதனால் குறைவதே கிடையாது.

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. மனிதனுடைய ஈரல் இந்த கொழுப்புச் சத்திற்கு அடிப்படையாக அமைவது. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் ‘சி’ இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்துவிடும். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

நெல்லிப்பொடி + சர்க்கரைத் தூள் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரில் கரைத்துப் பருகி வர, உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் நெல்லிப்பொடி + சர்க்கரை + பாகற்காய் பொடி 2 அல்லது 3 முறை ஒரு நாளைக்கு சாப்பிட்டு வர முன்னேற்றம் தெரியும்.

அசிடிடி உள்ளவர்களுக்கும் நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. ஏன் முடி வெள்ளையாக மாறி வருகிறது என்று கவலைப்படுபவர்கள், நெல்லிப்பொடியை ஒரு இரும்புக் கின்னத்தில் போட்டு தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்தால் ஷாம்பு + கண்டிஷனர் + ஹேர்டை தயார்!
-----------------------------------------------------------------------------------------------
நெல்லிக்கனியின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறுவதில் நான் "கொள்கை பரப்புச் செயலாளரா'கவே மாறி விட்டேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நான் நெல்லிக்காய் சாப்பிட்டு வருகிறேன். நல்லது என்ற ஒரே காரணத்தால்; மருத்துவ பலன்களை முழுவதும் அறியாமல்!

அலர்ஜி தொல்லையால் எனக்கு மூச்சிரைப்பு, அடிக்கடி பலவீனமாதல் என்று சின்ன, சின்ன தொல்லைகள் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். இதுவெல்லாம் உங்கள் கட்டுரையைப் படித்த அனைவருக்கும் தெரியும். இது போக, பெண்ணானதால் என்னால் "ஓப்பனாகச்' சொல்ல முடியாத பலன் ஒன்றும் இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ள அனைவரும் கட்டாயம் ஏதேனும் ஒரு வழியில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது மிக, மிக நல்லது - குறிப்பாக ஆண்கள்!

நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து (இரண்டு நெல்லிக்காய்) இருவர் சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், இனிப்பு சேர்க்காமல் சாப்பிடலாம் அல்லது நீராவியில் வேக வைத்து, மிகவும் பொடியாக நறுக்கி, நாட்டுச் சர்க்கரையில் சுக்கு, ஏலம் சேர்த்து நன்கு கிளறி, சுருள பதம் வந்தவுடன் இறக்கி, பிரிட்ஜில் ஆறு மாதம் வரை வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது. தினமும் ஒன்று அல்லது இரண்டு மேஜைக்கரண்டி அளவு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

நான் இதை இத்தனை அக்கறையோடு சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், நம் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின் 10 மி.கி.,க்கும் குறைவு. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில் 3-4 மி.கி., வரை கூடுவது கண் கூடாக நான் கண்ட உண்மை!
மருத்துவமனையில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் உயிருக்குப் போராடி, எமனை பார்த்து விட்டுத் திரும்பி வந்தான் என்றே கூறலாம். வரும்போது ஹீமோகுளோபின் 6 மி.கி., தான். வழக்கம்போல் மருந்து, மாத்திரைகள் மூலம் ஹீமோகுளோபினைக் கூட்ட மிகவும் முயற்சி செய்தனர். பார்க்க வந்தவர்கள் எல்லாம் ஆர்லிக்ஸ், பழங்கள் கொண்டு வர, நான் மட்டும் நெல்லிக்காய் ஜாம் கொண்டு சென்றேன்; மகிமையையும் கூறினேன்.

பதினைந்து நாட்கள் கழித்து தொலைபேசியில் என்னை அழைத்து நன்றி கூறி, "இன்னும் நெல்லிக்காய் ஜாம் செய்து தர முடியுமா? கணிசமான முன்னேற்றம் என் மகனின் உடல்நிலையில்...' என்று கூறினார் நண்பர். ஒரு மாதத்தில் ஹீமோகுளோபின் 11 மி.கி., ஆக கூடி விட்டது. குடும்பமே எனக்கு நன்றி தெரிவித்தது.

அமிர்தத்திற்கும் மேலானது நெல்லிக்கனி என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.
சர்க்கரை வியாதி உள்ள ஆண்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால், "இல்வாழ்க்கை' மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்பது தான் இக்கடிதத்தின் மிகவும் முக்கியக் குறிப்பு!
-சர்க்கரை நோயுள்ள ஆண்களின் தாம்பத்திய வாழ்வில் மீண்டும் உற்சாகத்தை அளிக்கவல்லது நெல்லிக்காய் என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டார் அந்த வாசகி.
***************************************************************************************
Read more

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி 'பேக்'

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி 'பேக்'...?

‘‘எனக்கு 35 வயதாகிறது. தலையில் கால்வாசி நரைத்துவிட்டது. டை போட விருப்பமில்லை. வீட்டிலேயே மருதாணி போட்டுக் கொள்கிறேன். இதனால், அடிக்கடி உடல் குளிர்ச்சியாகி ஜலதோஷம் பிடித்து விடுகிறது. ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கவும், சில மாதங்களுக்கு சேர்த்து மருதாணி ‘பேக்'கை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளவும் சொல்லித் தாருங்களேன்.’’

‘‘மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணி யுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.

இந்த மருதாணி பேஸ்ட்டை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம்.

மருதாணி பவுடர் & கால் கிலோ, கடுக்காய் பவுடர் & 25 கிராம், துளசி பவுடர் & 25 கிராம், நெல்லிக்காய் & 50 கிராம், டீத்தூள் டிகாஷன் & 50 கிராம், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, யூகலிப்டஸ் ஆயில் & 4 துளி, ஆலீவ் ஆயில் & 4 டீஸ்பூன்... இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள்.

இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த 'பேக்'கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

மருதாணி இலை & 250 கிராம், கொட்டை நீக்கிய கடுக்காய் & 25 கிராம், சுத்தம் செய்யப்பட்ட துளசி இலை & 25 கிராம், கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் & 25 கிராம்... இவற்றை நன்றாக நசுக்கி கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில் & 10 துளி, ஆலீவ் ஆயில் & 4 டீஸ்பூன், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, டீத்தூள் டீகாஷன் & 100 கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இந்த 'பேக்' இரண்டு மாதம் வரை கெடாது.’
Read more

'வெட்டி வேர்' பழகிய பொருள்.. அழகிய முகம்!

பழகிய பொருள்.. அழகிய முகம்!

வாட்டம் போக்கும் வெட்டி வேர்!

பெயர் என்னவோ ‘வெட்டி’ வேர்தான். ஆனால், ஒரு சதவீதம்கூட வெட்டி ஆகாமல், முழுக்க முழுக்க அழகு பலன்களை அள்ளித் தருகிற வேர் இது.

வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு எக்ஸ்பர்ட் வெட்டிவேர்!

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...

சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் \ ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கியகடுக்காய் & 1... இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!

பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும். அதற்கான நிவாரணம் இதோ...

ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.

இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத் தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி,பிழிந்துமுகத்தை ஒற்றி எடுங்கள்.

வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப் பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ‘பேக்’ இது...

வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை... இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும்பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண் களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

இந்த இரு பிரச்னை களுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.

பச்சைப் பயறு & 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் & 50 கிராம்... இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

வெட்டிவேர் & 100 கிராம், வெந்தயம் & 100 கிராம்... இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு, உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!
Read more

எலுமிச்சம் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா?உணவே மருந்து : எலுமிச்சம் பழம்

நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது.

புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது.

எலுமிச்சை பழத்தில் உள்ள ``சிட்ரிக் அமிலம்'' நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. எலுமிச்சை சாறுக்குபித்தநீரை சுரக்கும் தன்மை உண்டு. அதனால் காமாலை நோய் களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.

ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது.

உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச் சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம்.

கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் இளம் பருவத்தினர், ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 சிட்டிகை மிளகு தூள், 2 தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும். இதனால் ரத்தத்தில் காரத் தன்மை அதிகரிக்கும். அதை தொடர்ந்து கழிவுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீர்படும். முகப்பரு போன்றவைகளும் மறையும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுப்பவர்கள் பருகும் நீரில், 1 கப்புக்கு 1 தேக்கரண்டி என்ற அளவில் எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி குடித்து வந்தால், ரத்தத்தின் காரத்தன்மை அதிகரித்து நோய் பாதிப்பு விரைவில் சீராகும். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதிற்கு தெளிவும் கிடைக்கும்.

கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, சொறி, சிறங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களிலிருந்து விடுபட எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பின்பு குளிக்கவேண்டும். கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்க வேண்டும்.

எலுமிச்சையை மழை, கோடை, பனி போன்ற எல்லா காலங்களிலும் உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறை காய்கறிகளில் கலந்து சாலட் ஆக செய்யும் பொழுது, அந்த காய்கறிகளின் சத்து அதிகரிக்கிறது.
Read more

இளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

 இளநீரில் இவ்வளவுவிஷயங்களா?

இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.
மருத்துவ குணம் எப்படி?

தினமும் இளநீர் சாப்பிட்டால் அது நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறுவதுதான்.

இளநீரில் இருக்கின்ற உப்புச்சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு மட்டுமின்றி உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி சரிவர வெளியே தள்ளுகிறது. இதனால், கோடையில் வரும் அவசர வேனல் பிடிப்பு, வேனல் அயர்ச்சி போன்ற தொந்தரவுகளும் தொலைந்து போகிறது.

எப்படி சாப்பிடலாம்?

இளநீரை உடனடியாக குடித்து விடுவதுதான் நல்லது. அதை வாங்கி பிரிட்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் அதை வாங்கிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

இதில் எதையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக்கூடாது.

இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.

இளநீருக்கு மாற்று குளிர்பானமா?

குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் "கார்பனேட்டட் வாட்டரும்' காற்றும்தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரி சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனம் அடையும். குடற்புண் உண்டாகும். இவை எல்லாம் குளிர்பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.

தண்ணீர் போதுமே

தண்ணீரில் இருப்பவை: கோடையில் தண்ணீர் மிகவும் தரமான பொருள். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்பு, தண்ணீரில் தரம் குறையாமல் இருப்பவை.

மருத்துவ குணம் எப்படி?

நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை, வெப்பத் தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப் பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான். கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், "ஷிப்ட்' முறையில் பணிபுரிபவர்கள் போன்றோருக்கு உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து சோர்ந்து விடுவர். தண்ணீரைக் குடித்தால் உடன் புத்துணர்ச்சி பெற்று வேலைகளைச் செய்ய முடியும். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன. சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

எவ்வளவு குடிக்கலாம்?

கோடையில் தினசரி குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறைய நீரைக் குடிப்பதற்கு பதிலாக, சிறிது சிறிதாக தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம்.
ஒரே நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு ஒரேயடியாக நிறைய தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டுபண்ணும்.
வயிறு நிறைய தண்ணீரைக் குடிப்பதும், உடன் படுப்பதும் தவறுதான். இவை எல்லாம் தண்ணீரில் நாம் செய்யும் தலையாய தவறுகள். கோடையில் இரவில் இடைவெளிகளில் தண்ணீரைக் குடிப்பது நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலை தீர்க்கும். பெரிய "மீட்டிங்' நடக்கும்போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம் அது ஒரு "மூடு ரிலாக்சன்ட்.' மனப் பதட்டத்தைக் குறைக்கும்,
மூளையின் வேதிப் பொருளை ஒழுங்குபடுத்தும் தண்ணீர் ஒரு உயிர் நீர்.

இயற்கை பழச்சாறுகள்:

அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி போன்றவற்றில் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக எல்லா வைட்டமின்களும் உள்ளன. மற்ற எல்லா பழங்களையும் சாப்பிடலாம்.
Read more

28 April 2012

மாம்பழம் தரும் அழகுக் குறிப்புகள் இயற்கை தரும் இளமை வரம்!

முக்கனிகளில் மட்டுமல்ல.. நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் முதலிடம் மாம்பழத்துக்குத்தான். வெயிலை முந்திக் கொண்டு சந்தைக்கு வந்துவிடும் மாம்பழத்தைச் சாப்பிட்டால், சூடு பிடிக்கும் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அந்தந்த சீஸனில் வருகிற பழங்களைச் சாப்பிடும்போதுதான் அவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

இப்போது மொழுமொழு மாம்பழம் தரும் வழுவழு அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாமா..

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக் கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுது, வெண்ணெய் போல இருப்பதால் இதை 'மேங்கோ பட்டர்' என்று சொல்வார்கள். இது, தலை முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது.

சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோ பட்டர் (அ) முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.

மேங்கோ பட்டர், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்.. இந்த நான்கை யும் சம அளவில் கலந்து மிக்ஸி யில் அடித்து வெயிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பத்து போல் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, சம அளவில் வெந்தயம், பயத்தம்பருப்பை கலந்து ஊற வைத்து அரைத்த விழுதைத் தேய்த்து தலைக்கு குளித்தால், பொடுகுத்தொல்லை போயே போச்சு. பொடுகால் முடி உதிர்வது நின்று, கூந்தலும் பளபளக்கும்!

நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு பாதாம்பருப்பும் கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது ஒரு டீஸ்பூன், மேங்கோ பட்டர் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழ்ப்புறமாக பூசி, காய்ந்ததும் கழுவவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், கழுத்து சுருக்கம் நீங்கி, சங்கு போல மின்னும்!

பருக்களால் முகப்பொலிவு குறைந்து விட்டதா? கவலை வேண்டாம். தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து, டல்லடித்த முகமும் டாலடிக்கும்! இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருது-வாக்கும்.

மாம்பழ சதையுடன் அதே அளவு உலர் திராட்சையை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் டிரேயில் இட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். உதடுகள் உலர்ந்து போகும்போதெல்லாம் இந்த ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி, உதட்டின் மேல் தடவுங்கள். உதடுகள், ரோஜா இதழ் போல மின்னும்!

புருவங்களில் முடி கொட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது மாம்பழச் சாறு! ஆரஞ்சு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு எடுத்து ஃப்ரீசரில் வைக்கவும்.

புருவங்களில் விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெயை ஒரு துளி தடவி, இந்த ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கண் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள். தினமும் இரவு தூங்கும் முன் இப்படி செய்து வந்தால், புருவத்திலும் இமையிலும் முடி வளரும்.

மாம்பழக் கன்னங்கள் வேண்டுமா? நன்றாகப் பழுத்த மாம்பழச் சதை அரை டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 2 சிட்டிகை, பார்லி பவுடர் ஒரு டீஸ்பூன், வெள்ளரி பவுடர் அரை டீஸ்பூன்.. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் 'மாஸ்க்' மாதிரி தடவி, 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தோலுக்குத் தேவையான நீர் சேர்ந்து கன்னம் கொழுகொழு வென்று நிறமும் கூடும்.
Read more

வி.ஐ.பி. ஹெல்த்! எளிய உடற்பயிற்சிகள் சில...

ஹாய். எப்படி இருக்கீங்க? இப்படிப் பார்த்து நம்ம மனசு தினமும் கேக்கணும். இப்படிக் கேக்குறதுக்கு பழக்கப்படுத்திட்டீங்கன்னா உங்க உடம்பு மட்டுமல்ல சுத்தி இருக்கிற எல்லாமும் நலமா இருக்கும்.

1. பயிற்சி எல்லாம் முடிஞ்சதும் அவசர வாழ்க்கைக்குத் திரும்பிடாதீங்க. இப்படி தியானம் பண்ணப் பழகிக்குங்க. முதல்ல மனசு கேக்காது. அடக்கி ஆளுங்க. இந்த அமைதியான தியானத்தால் நீங்க முன்னாடி செஞ்ச எல்லா பயிற்சியின் பலமும் உங்கள் உடல் முழுதும் பரவி புது தெம்பைக் கொடுக்கும்2. ரொம்ப நாளா இந்தச் சுவரை தள்ளலாம்னு பார்க்கிறேன் முடியல. சும்மா ஜோக்குக்குதான் சொன்னேன். இரண்டு சாண் கை இடைவெளி விட்டுக்குங்க. கால் இரண்டும் மடக்காம நேரா இருக்கணும். முன்னுக்கும் பின்னுக்கும் நெஞ்சைக் கொண்டு போங்க. 15 தடவை மூச்சை இழுத்து விட்டு செய்யுங்க. ‘முன்னழகுப் பேரழகி’ பிறகு நீங்கதான்.3. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம். மீன் மாதிரி நழுவுற பளபளப்புப் பெற இப்படி மீன் பயிற்சி செய்ங்க. பிறகு நீங்கதான் விலாங்கு மீன்.


4 இந்தப் பயிற்சி கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா சிரமம் பார்க்காம தினமும் செஞ்சா அடி வயிறு ஒட்டி அழகா இருப்பீங்க. தினமும் 25 தடவை செஞ்சிப் பாருங்க.

5. அடிவயிற்றுக்கும் இடுப்புக்கும் சேர்த்து டூ இன் ஒன் பயிற்சி இது. பூவோட சேர்ந்து நாரும் மணக்கும் என்பாங்க. இந்தப் பயிற்சியும் அப்படித்தான்.6. அசையாம செய்யப் பாருங்க. இரத்த ஓட்டம் முழுசும் உங்க முகத்துக்குப் போகும். இதனால் உங்க முக அழகு பொலிவுறும்
7. வில்லு அம்பு ... அம்பு வில்லு ... இரண்டும் ஒண்ணுதானுங்க. கையைக் காலை ஆட்டாம இத செஞ்சிப் பாருங்க. அடுத்த ‘இஞ்சி இடுப்பழகி’ நீங்கதானுங்க.8. காலும் கையும் ஒரே அளவு இருக்குற மாதிரி பார்த்துக்குங்க. மாறி மாறி இரண்டு பக்கமும் செஞ்சிப் பாருங்க. தொடை, கை, இரும்பு மாதிரி ஆகிடும்.

9. கால் பக்கத்துல கையை கரெக்ட்டா வச்சிக்குங்க. பிறகு இடுப்ப சீராக வளைச்சிக்குங்க. ரொம்ப பென்டாகாம வளையுங்க. ஒண்ணுல இருந்து பதினஞ்சு வரைக்கும் எண்ணுன பிறகு மெதுவா நிமிருங்க. முழு உடம்பும் சும்மா கன்னுன்னு இருக்கும் பாருங்க.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner