Ads Header

Pages


05 April 2012

கிர்ணிப் பழத்தின் அழகு, ஆரோக்கிய குறிப்புகள் இயற்கை தரும் இளமை வரம்!



கிர்ணிப் பழத்தின் அழகு, ஆரோக்கிய குறிப்புகள் இயற்கை தரும் இளமை வரம்!

தலை முதல் பாதம் வரை அழகைப் பாது காக்கும் அற்புதக் கவசம் கிர்ணிப்பழம். 'முலாம்பழம்' என்றும் அழைக்கப்படும் இந்த சுவையான பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால் கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக இருக்கிறது. கிர்ணிப் பழத்தின் அழகு, ஆரோக்கிய குறிப்புகளை இந்த இதழில் பார்ப்போமா..?

ஐம்பது வயதுக்கு மேல் தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, வறண்டு போய்விடும். இவர்கள் பியூட்டி பார்லரில் வேக்சிங் அல்லது திரெடிங் போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ் இரண் டையும் தலா ஒரு டீஸ்பூன் கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.

நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் - தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலை யில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சூப்பர் சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.

கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் தலா 100 கிராம் எடுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு வெள்ளரி ஜூஸ் சேர்த்து கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணி விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி.. முகம் டல்லடிக்கும். அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

இரண்டு டீஸ்பூன் வெள்ளரி ஜூஸூடன், இரண்டு டீஸ்பூன் கிர்ணிப்பழ விழுதைச் சேர்த்து 4 (அ) 5 துளி எலுமிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து நன்றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். எங்காவது வெளியில் போகும்போது இதை இயற்கை 'சென்ட்' ஆகப் பயன்படுத்தலாம். 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாது.. தோலையும் சேதப்படுத்தாது. விருப்பப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு, கை, கால், முகத்தில் தேவையில்லாத முடிகள் முளைக்கும். இதற்கு, கிர்ணிப்பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர், கோரைக் கிழங்கு பவுடர், ஆவாரம்பூ பவுடர் தலா 100 கிராம் எடுத்து தண்ணீரில் குழைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும்போது இந்த பேஸ்ட்டைத் தேய்த்துக் குளியுங்கள். கிர்ணிப்பழ விதை, கோரைக்கிழங்கு, ஓட்ஸ் பவுடர் மூன்றும் முகத்தில் உள்ள முடியை வலுவிழக்கச் செய்து தோலை மிருதுவாக்கும். ஆவா ரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

வயோதிகத்தின் அறிகுறி கண்களில்தான் முதலில் தெரியும். பால் பவுடர், கிர்ணிப்பழ விதை பவுடர் இரண் டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.

கடுகு எண்ணெயுடன், கிர்ணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால்.. பஞ்சு போல் பாதங்கள் மிருதுவாகும்.

புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீஷியம், இரும்புச்சத்து என சகலத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கிர்ணிப்பழம் உடல் குளிர்ச்சிக்கு உகந்தது. இத்தனை சத்துக்களை கொண்டிருப்பதால், எளிதில் இது ஜீரணமாகாமலும் போகலாம். அதனால் எப்போதும் இதனுடன் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. ¥உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழ துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். கண்கள் பிரகாசிக்கும்.

கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும்.

மலச்சிக்கலுக்கு அருமருந்து கிர்ணிப்பழம். இதன் காயை கூட்டு, குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.

சிறுநீரகத்தில் உள்ள கல்லையும் கரைய வைக்கும் வல்லமை கிர்ணிப்பழத்துக்கு உண்டு. எனவே, சீஸன் சமயங்களில் கூடுமானவரை இதைத் தவிர்க்காமல் சாப்பிட்டுவிடுங்கள்.

இரண்டு டீஸ்பூன் கிர்ணிப்பழ விழுதை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்துவர.. இளம் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

கிர்ணிப்பழத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் அண்டாது.

சின்னச் சின்ன விஷப் பூச்சிக்கடிக்கு கிர்ணிப்பழ விதை பவுடரை பூசினால் நிவாரணம் கிடைக்கும்.

கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner