Ads Header

Pages


19 April 2012

மாதுளையே... மாதுளையே... மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்

அனைத்து பழங்களையும் போலவே மாதுளைப் பழத்திலும் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளன. சுறுசுறுப்புக்கும், ஞாபக சக்திக்கும் மாதுளைப் பழங்கள் சிறந்து விளங்கியதால், புத்த மற்றும் ஜைன துறவிகள் பழங்காலத்தில் அதிகமாக சாப்பிட்டனர் என்று கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். பாலைவனப்பகுதிகளை கடந்து செல்பவர்கள் தாகத்தையும், களைப்பையும் தீர்க்க மாதுளைப் பழங்களை எடுத்துச் சென்றதாக கூறுகிறது வரலாற்று நூல் ஒன்று.

புழுவெட்டு என்பது தலை, கண்புருவம், தாடி, மீசை போன்ற பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு, முடிகொட்டும். இது ஒருவகை கிரு மித் தொற்று. வீரியமான மருந்து மாத்திரைகளால் இப்படி ஏற்படும். இதற்கு சிறந்த மருந்து மாதுளம் பழரசம். குறிப்பாக புளிப்பு மாதுளம் பழங்களின் முத்துக்களை சேகரித்து துணியில் வைத்து கசக்கி சாறு எடுத்து, அதை புழுவெட்டு பகுதிகளில் நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி காலை, மாலை தேய்த்துவர, புழுவெட்டு நீங்கி முடிகள் முளைக்கும்!

மாதுளம் பழச்சாறுடன் சமமாக தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல், களைப்பு, மயக்கம் ஆகியவை நீங்கும். குடல் மற்றும் சிறுநீரகம் நன்கு இயங்கும். அஜீரணம் மறையும்.

மாதுளம்பழம் மலிவாக கிடைக்கும் சமயத்தில் தினமும் ஒன்று சாப்பிட்டுவந்தால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

நீரிழிவு நோயாளிகள், உடல் மெலிந்த காசநோய் தாக்கியவர்கள், தீராதபசி உடையவர்கள், ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காதவர்கள், தீராதபேதி உடையவர்கள், அடிக்கடி பயணம் செய்பவர்கள், உஷ்ணமான இடங்களில் வேலை செய்பவர்கள் ஆகியோர் மாதுளம்பழச்சாறு அடிக்கடி சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி கிடைக்கும்.

அதேபோல், போதையில் மயங்கியவர்களுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மாதுளம்பழச் சாறு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை தெளிந்து விடும்.

உஷ்ண மிகுதியால் மூல நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும். இதனால் ஆசன வாயில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறு சிறு கட்டி கள் உண்டாகுதல் போன்றவற்றால் அவதிப்படுவர். இவர்கள் மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் முற்றிலுமாக நீங்கி விடும்.

சில பெண்களுக்கு கருப்பையில் பல்வேறு பிரச்சினைகளால் ரணம் உண்டாகும். ரணத்தின் காரணமாக மாதவிலக்கின் போது அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் உடலில் ரத்த சோகை உண்டாகும். இவர்கள் தினமும் மாதுளம் பழச்சாறுடன் வென்னீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

1 comments:

mukesh said...

மிக மிக நல்ல செய்திகள் மாதுளையைப்பற்றி கூறியுள்ளீர்கள் . மிக்க நன்றி.-மு.முருகேசன்

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner