Ads Header

Pages


05 April 2012

வாடகைக்கு குடியிருப்போருக்கு சாதகமான சட்டங்கள்


ப்ரீதாவும், ஹரியும் ஒரு வழியாக குடியிருக்க ஒரு ஃபிளாட்டை முடிவு செய்து விட்டார் கள். வாடகையும் அவர்கள் பட்ஜெட்டிற்குள் இருந்ததால் சட்டென்று ஓ.கே. பண்ணி விட் டார்கள். ஹரி மார்க்கெட் நிலவரப்படி 10 சத வீதம் அட்வான்ஸ் கொடுக்கும் போது, ஃப்ளாட் ஓனர் ஓர் அக்ரிமெண்டடைக் கொடுத்து அவனிடம் கையெழுத்துப் போடச் சொன்னார். அதன் மேல் லேசாக கண்களை ஓட்டியபடி கையெழுத்துப் போட்டான் ஹரி. அக்ரி மெண்டை சற்று உன்னிப்பாக கவனித்த ப்ரீதா.

‘‘பதினோரு மாசம்தான் அக்ரிமெண்ட்ல எழுதி இருக்கீங்க. நாங்க குறைஞ்சது 3 வருஷமாவது இருப்போம். அக்ரி மெண்ட்டுல 3 வருஷம்னு போட்டுக் குடுங்க’’ என்றாள்.

‘‘பொதுவாக பதினோரு மாச அக்ரீமெண்ட்தான் எல்லாருமே போடுவாங்க. பதினோரு மாசத்துக்கப்புறம் மறுபடியும் இன்னொரு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம்’’ என்றார் வீட்டு ஓனர். ஆனால், ஏன் பதினோரு மாதம் மட்டும் அக்ரிமெண்ட் போட வேண்டும் என்ற ப்ரீதாவின் கேள்விக்கு, அவரால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.

ப்ரீதாவைப் போலத்தான் பலருக்கும் ஏன் இந்த ‘பதினோரு மாத அக்ரிமெண்ட் என்ற கேள்வி எழும். இதற்கு ஏதாவது முக்கியமான காரணம் இருக்கிறதா என்று பார்த்தால், சட்டப்படி ஸ்டராங்கான காரணம் உண்டு. அதாவது, வாடகையெல்லாமே ‘குத்தகை ’ என்றுதான் கருதப்படும். இந்தக் குத்தகை பதினோரு மாதங்களுக்கு மேற்பட்டால் கண்டிப்பாக ரிஜிஸ்டர் ஆஃபீஸில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் வாடகைக்கு விடும்போது. ரிஜிஸ்திரேஷன் செய்வதென்பது சாத்தியமில்லை. அதோடு இதில் நிர்வாக சிக்கல்களும் அதிகம். அதனால்தான் வாடகைக்கான அக்ரிமெண்ட் பதினோரு மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது.

‘வீட்டு வாடகை’யைப் பற்றிப் பேசும்போது நம் நினைவில் ஒரு காட்சி கண்டிப்பாக வந்து போகும். கார்ப்பரேஷன், முனிசிபாலிடி போன்ற அலுவலகங்களிலிருந்து வருடத்திற்கு ஒரு முறை ஒரு அதிகாரி வந்து, குடியிருப்பவர்களிடம், ‘வாடகை எவ்வளவு’ என்று விசாரிப்பார். குடியிருப்பவர்களும் தயக்கமே இல்லாமல் மிகக் குறைந்த தொகை ஒன்றை (உதாரணமாக 700 சதுர அடியுள்ள ஒரு வீட்டிற்கு, சென்னையில் ரூ. 1,000) சொல்லுவார்கள். விசாரித்த அதிகாரிக்குத் தெரியாதா? இவ்வளவு குறைந்த வாடகையில் குடியிருக்க முடியாது என்று. இருந்தாலும் குடியிருப்பவர்களே குறைத்துச் சொல்வதால் அவர் பேசாமல், சொன்ன வாடகையை எழுதிக் கொள்வார். பல காலங்களாக ‘வாடகை’ என்பது வீட்டு ஓனர் நிர்ணயிருப்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், அரசு நிர்ணயித்திருக்கும் வாடகை எவ்வளவு தெரியுமா? அந்த வீட்டின் மதிப்பில் 9 சதவீதம் மட்டும்தான் ஓர் ஆண்டிற்கான வாடகையே இதுவே வியாபாரத்திற்காக விடப்பட்டால் 12 சதவிகிதம்தான்.

சரியாகச் சொல்வதென்றால், ஒரு வீட்டின் விலை ரூ. 12 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வீட்டிற்கு வருட வாடகை 9 சதவீதமாகக் கணக்கிட்டால் ரூ. 10,800/_ தான். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ. 900/_ மட்டும்தான். இதைத்தவிர வீட்டின் வயதைப் பொறுத்து வருடத்திற்கு 1 சதவீதம் பில்டிங் மதிப்பில் தேய்மானமும் கணக்கிடப்படும்.

இவையெல்லாம் கணக்கிட்டால், நாம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கான வாடகையைத்தான், ஒரு மாதத்திற்குக் கொடுத்துச் கொண்டிருக்கிறோம். இன்னொரு முக்கியமான விஷயம்... அட்வான்ஸ்கூட சட்டப்படி ஒரு மாதத்திற்கு மேல் வாங்கக்கூடாது. மேலும், அடிப்படைத் தேவைகளான. தண்ணீர், மின்சாரம், டிரெயினேஜ் போன்றவைகளை வீட்டு ஓனர்கள் கண்டிப்பாக குடியிருப்பவர்களுக்கு செய்துதர வேண்டும்.

குடியிருப்போரின் விருப்பத்திற்காக, அந்த வீட்டில் சௌகரியங்கள் செய்யப்பட்டால் மட்டுமே வாடகையை ஏற்றலாம்.

இவையெல்லாம் குடியிருப்போருக்கு சாதகமான சட்டங்கள். ஆனால் சில கில்லாடி ஆசாமிகள், குடியிருக்க வீடு வேண்டும் என்று சொன்ன வாடகைக்கு வந்து விட்டு, அதை வியாபாரத்திற்காகப் பயன்படுத்துவதும், சிலர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்காக வீட்டைப் பயன்படுத்துவதும் உண்டு. அதனால் ஓனர்களுக்கு பாதுகாப்பான சட்டங்களைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner