Ads Header

Pages


03 May 2012

மூட்டுவலிக்கு மருந்து பாட்டி வைத்தியம்!

"எனக்கு ஒரே மூட்டுவலி பாட்டி.. இருக்க இருக்க மூட்டுக்கு மூட்டு வலி அதிகமாகிக்கிட்டே இருக்கு... வீக்கமும் அதிகமாகிக்கிட்டே இருக்கு...என்ன செய்யிறதுன்னே தெரியல... நீங்க ஏதாவது மருந்து சொல்லுவீங்கன்னுதான் வந்தேன்...."
மூட்டுவலி வேதனை பற்றிய புலம்பலைக்கேட்ட பாட்டி, 'இப்ப ஒனக்கு வயசு 50.. 51 இருக்குமா...'
'ஆமா பாட்டி.. 50 முடியப்போவுது..'
"..ம்.. 48.. 50.. வயச நெருங்கினாலே உடம்புக்குள்ள எல்லா வலியும் ஒண்ணொண்ணா வர ஆரம்பிச்சிடும். ஆனா இந்த காலத்து பசங்களுக்கு சின்னவயசுலயே எல்லாம் வர ஆரம்பிச்சிருது... இப்ப ஒனக்கு மூட்டு வலி..."
'வாத நீரு கப நீரோட கலந்து மூட்டுல இறங்குறதாலதான் இந்த மூட்டுவலி வருது...'
"இந்த கோளாரு இருக்கும்போது குளிர்ந்த காத்து அடிச்சாக்கூட வலி அதிகமா தெரியும். பருவநிலை மாறுற காலத்துலயும், இந்த மூட்டுவலி அதிகமாகும்..மலச்சிக்கல் இல்லாம வயித்த சுத்தமா வச்சிக்கிறவங்களுக்கு மூட்டுவலி அதிகம் வாறதில்ல.. மாதவிடாய் ஒழுங்கா இல்லையின்னாலும் கண்டிப்பா மூட்டுவலி வரும்.
"நீ.. கற்பூரத் தைலத்த தொடந்து தேச்சிக்கிட்டே வா. அதோட ...
கருஞ்சீரகம் - 10 கிராம்
கார்கோல் - 10 கிராம்
கோஷ்டம் - 10 கிராம்
தேவதாரம் - 10 கிராம்
ராமிச்சம் - 10 கிராம் இவைகள எடுத்து பொடியாக்கி வச்சிக்கிட்டு, கற்பூரவள்ளி இலை, குப்பைமேனி இலை, வேலிப்பருத்தி இலை, அமிர்தவல்லி இலை இவைகள தனித்தனியா வகைக்கு 100 மி.லி. சாறு எடுத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெய், 1 லிட்டர் நல்லெண்ணெய் சேத்து எடுத்து வச்சிருக்குற சாறு, இடிச்சபொடியையும் போட்டு நல்லா காய்ச்சி, அடியில களி மாதிரி வரும். திரும்பவும் காச்சிக்கிட்டே இருந்தா மணல் மாதிரி வரும். அத அப்படியே இறக்கி எண்ணெய வடிகட்டி அதுல 5 கிராம் பச்சைக் கற்பூரம் போட்டு பாட்டில்ல அடச்சி வச்சிக்கிட்டு காலையிலயும், சாயந்திரமும் மூட்டுவலி இருக்குற இடத்துல பூசிக்கிட்டு வந்தா மூட்டுவலி கொறயும்.."
எளிதா செரிக்கிற சாப்பாட்ட சாப்பிடு... மூட்டு வலி நம்ம கைப் பக்குவத்திலயே வராதபடிக்கு பாத்துக்கலாம்... மலச்சிக்கல் இல்லாம பாத்துக்க. வாயுவ உண்டாக்குற பதார்த்தங்கள ஒதுக்கிடு.. ஏன்னா வயசு ஆயிக்கிட்டே இருக்குல்லயா...
பாட்டி சொன்னதைக் கேட்டுக்கொண்ட பேச்சி, லேசான ஏக்கத்துடன், தனது இளமைக்கால கதைகளைப் பேசத் தொடங்கினார்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner