Ads Header

Pages


07 May 2012

அழகே வணக்கம்! சிம்பிளான அழகு குறிப்புகள்!

அழகுக்குறிப்புகள் எக்கச்சக்கம். சாம்பிளுக்குச் சில:

பச்சைப்பயறு மாவில் தயிர் கலந்து பேஸ்ட் போலாக்கி முகத்தில் பூசுங்கள். கால் மணி நே-ரம் கழிச்சு வெதுவெதுப் பான தண்ணீரில் முகம் கழுவினால், முகம் பளிங்கு மாதிரி பளபளக்கும்.

வேகாத வெயிலில் அலைந்து திரிஞ்சு வந்தால் முகம் கறுத்து எரிச்சலா இருக்கும்ல. அப்போ ஒரு கேரட், ஒரு வெள்ளரிக்கா, கொஞ்சம் கொத்துமல்லியை மிக்ஸியில் போட்டு அடித்து சாறெடுத்து முகத்தில் பூசுங்க. ஐஸ்க்ரீம் பேக் போட்டதுமாதிரி முகம் ஜில்லிப்பாகி, கலராகிடும்.

பருத்தொல்லை நீங்குவதற்கு சுலபமான மருந்து முருங்கைக்காய்! இளம் முருங்கைப்பிஞ்சின் (வேக வைக்கத் தேவையில்லை) சதைப்பற்று, கைப்பிடி முருங்கையிலை, கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து அரைச்சு முகத்தில் ‘பேக்' போட்டு, கால் மணி நேரம் கழிச்சு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். பரு பறந்தோடிப் போகும்.

தினமும் குளிப்பதற்குமுன் பத்து வேப்பிலைகளைக் கொஞ்சம் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை மிக்ஸ் பண்ணிதான் குளிப்பேன். மிகச் சிறந்த ஆன்ட்டிசெப்டிக் லோஷன் இந்த வேப்பிலை நீர்!

தலைமுடி வலுவா உறுதியோட இருக்க என் அம்மா ஒரு ஸ்பெஷல் மிக்ஸ் தயார்செய்வார்கள். நெல்லிக் காய்பொடி, மருதாணிப்பொடி, தயிர், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு எல்லாம் கலந்து தலையில் பூசி, அரை மணி ஊறிய பிறகு சீயக்காய் போட்டு குளிச்சோம்னு வெச்சுக்கங்க.. சூப்பர் கூந்தலழகி நாமதான்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner