வைட்டமின் `சி'யின் பயன்பாடுகள்
நமது உடம்பில் உள்ள பெரும்பான்மையான சத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது
வைட்டமின்-`சி'. இது எந்தெந்த உணவுப் பொருட்களில் இருக்கிறது... அதன் பயன்பாடுகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்,
நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பொதுவாகவே பழவகைகளில் வைட்டமின் சி அதிகமாகவே நிறைந்திருக்கும். 100 கிராம் அளவுள்ள ஆப்பிளில் 2 மி.கிராமும், மாம்பழத்தில் 13மி.கிராமும், தக்காளியில் 27மி.கிராமும், பப்பாளிப்பழத்தில் 57மி.கிராமும், எலுமிச்சம்பழத்தில் 63மி.கிராமும் வைட்டமின் சி உள்ளது. ஆனால் நெல்லிக்கனியில் 100 கிராமுக்கு 600மி.கிராம் அளவு வைட்டமின் சி உள்ளது! இதற்கு அஸ்கார்பிக் அமிலம் என்ற வேறுபெயரும் உண்டு.
அஸ்கார்பிக் அமிலம் என்னும் வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய, ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளை நிறப் பொடியாகும். நமது உடலில் போதுமான அளவில் வைட்டமின் சத்து இல்லாவிட்டால் சொறி, கரப்பான், பல்லில் ரத்தம் வடிதல் மற்றும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உண்டாகும்.
வைட்டமின் சி இருக்கும் உணவுகளை நாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. குறிப்பாக இது உணவிலுள்ள இரும்பு சத்தை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி குறைவதால் ஜலதோஷமும் ஏற்படும்.
நம் உடலுக்கு அஸ்கார்பிக் அமிலத்தினால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக நமது உடலில் உள்ள உயிரணுக்களை ஒன்று சேர்த்து பிணைப்பதாகும். இதனால் புதிய செல்களை உற்பத்தி செய்யவும், அழிந்த செல்களை மாற்றவும் வைட்டமின் சி துணை புரிவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

0 comments:
Post a Comment