தலை முடிக்கு ஹென்னா போடும்போது, அதனுடன் வேறு ஏதேனும் கலந்து போட வேண்டுமா?
தலைக்கு ஹென்னா போடும்போது வெறும் ஹென்னாவை மட்டும் போட்டால் முடி சாஃப்ட்டாக இருக்காது.
250 கிராம் ஹென்னாவுடன், ஆம்லா பவுடர்-100 கிராம், வெந்தயப் பொடி-50 கிராம், முட்டை-1, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்-2 டீஸ்பூன், தயிர்-½ கப், டீ டிகாஷன்-4 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு-8லிருந்து 10 சொட்டுக்கள் சேர்த்து சிறிது தண்ணீரும் கலந்து முதல் நாள் இரவே ஒரு இரும்புப் பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். தலை முடியில் லேசாக எண்ணெய் தடவிய பின்னர், கலந்து வைத்த இந்த மிக்ஸை தலை முடியில் முழுவதும் பூசி, ஒரு மணி நேரம் ஊற விடவும். முடியில் கலர் வந்த பின்னர் வாஷ் பண்ணலாம். முடியில் கலர் வராவிட்டால் மேலும் அரை மணி நேரம் விட்டு கலர் வந்த பின்னர் முடியைக் கழுவலாம். இப்படிச் செய்து வந்தால் முடி சாஃப்ட்டாக அழகாக இருக்கும்.

0 comments:
Post a Comment