Ads Header

Pages


02 May 2012

பனிக்காலத்தில் சரு மத்தை பாதுகாப்பது எப்படி ? ஹெல்த் ஸ்பெஷல்!

பனிக்காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம் கூட வறண்டு போகும். இன்னும் சிலருக்கு சருமம் வெடித்தும் விடும். அந்தள வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பனிக்காலத்திலிருந்து நம்முடைய சரு மத்தை எப்படித்தான் பாதுகாப்பது?

ஈரப்பதத்தைக் காப்பாற்றுங்கள்

பனிக்காலம் முதலில் ‘அட்டாக்’ செய்வது நம் உடலிலுள்ள ஈரப்பதத்தைத்தான். இதற்குத் தீர்வு, தரமான மாய்ஸ்ரைஸர் க்ரீமும், கோல்டு க்ரீமும்தான்! தினம் குளித்தவுடன், அல்லது முகம் கழுவியவுடன் இவற்றை உபயோகிக்க வேண்டும்!

வெள்ளரி விதை ஃபேஸ் பேக்

தினம் முழுக்க முகத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க இதோ இந்த ஃபேஸ் பேக்கூட உதவும்!

சந்தனம் மற்றும் வெள்ளரி விதைகளை நன்கு அரைத்து முகத்தில் அப்ளை பண்ணுங்கள். பத்து நிமிடம் கழித்து ‘வாஷ்’ செய்துவிடுங்கள். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வர, முகம் பாலிஷ்போட்ட குத்து விளக்கு போல் ஜொலிக்கும். சந்தனமும், வெள்ளரி விதையும் முகத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். இவையிரண்டும் குளிர்ச்சியான பொருட்கள் என்றாலும், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே அப்ளை செய்வதால் சளிப் பிடிக்காது!

பித்த வெடிப்பு

பனிக்காலத்தில் மிக சகஜமான ஒரு விஷயம் பித்த வெடிப்பு. இதற்கு மிதமான சுடுநீரில் பாதங்களை சுத்தப்படுத்திவிட்டு, ஈரம் போக நன்கு துடையுங்கள். பிறகு விளக்கெண்ணெயை பித்த வெடிப்புகளில் தடவி வாருங்கள். தொடர்ந்து இப்படிச் செய்து வர, பித்த வெடிப்புக்கு ‘குட்பை சொல்லலாம்.

உணவு மூலம் எப்படி சருமத்தின் ஈரப்பதத்தைக் காப்பாற்றலாம்?

தனியா விதை சூப்

ஒரு டீஸ்பூன் தனியா விதையை 3 டம்ளர் தண்ணீரில் போட்டு, அது ஒரு டம்ளராகும் வரை கொதிக்க விடவும். பிறகு, தேவைப்பட்டால் உப்பு, மிளகுத்தூள் சேர்க்க தனியா விதை சூப் ரெடி! இது பனிக்காலத்தில் ஏற்படும் அஜீரணத்துக்கு ஏற்ற சூப்பும் கூட!

ஓட்ஸ், தயிர் கஞ்சி

அரை கப் ஓட்ஸை பவுடராக்கி, அதை ஒன்றரை கப் தண்ணீரில் இரவே ஊற வைத்து விடுங்கள். காலையில் அதில் ஒரு சிறிய கப் தயிர், ஒரு சிட்டிகை உப்புப் போட்டு வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வாருங்கள். சருமம் சாஃப்ட்டாகவும், நல்ல நிறமாகவும் மாறும். தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால், பனிக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுப்பதோடு, சருமத்தைப் பளிச் சென்றும் மாற்றிவிடும். அதே நேரத்தில் தயிர், சளித் தொல்லையையும் ஏற்படுத்தாது.

பனிக்கால ரெசிபிகளை ஃபாலோ செய்யுங்கள். அழகாகுங்கள்!

தக்காளி சூப்

2 பெரிய தக்காளியை வேக வைத்து, தோலை உரித்துவிட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இத்துடன் உப்பு, மிளகுத்தூள் (ருசிக்கேற்ப) போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டால் தக்காளி சூப் ரெடி. உடலின் வறட்சியையும் சரும வறட்சியையும் இது நீக்கும்!

பேபி கார்ன் சூப்

மூன்று பிஞ்சு சோளங்களை குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு சோளங்களை உதிர்த்து எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதை வடிகட்டி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உயிர் சத்துக்கள் நிறைந்த பேபி கார்ன் சூப் ரெடி! இது சரும பளபளப்புக்கு உதவும்!

பனிக்கால கூந்தல் பராமரிப்பு

பனிக்காலத்தில் சருமம் போலத்தான் கூந்தலும் பாதிக்கப்படுகிறது. வறண்ட கூந்தல், எண்ணெய்ப் பசை கூந்தல், நார்மலான கூந்தல் என்று எந்த வித்தியாசமும் கிடையாது இந்தப் பனிக்காலத்தில் பொடுகு, அரிப்பு ஏற்பட்டு, முடிகொட்டி கூந்தலே நாசமாகிவிடும். இதற்கு தேங்காய் எண்ணெயுடன், 10 துளிகள் விளக்கெண்ணெய் கலந்து சூடாக்கி மண்டையோட்டில் படும்படி அழுத்தித் தடவுங்கள். பிறகு சூடான நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்து, தலையை வாஷ் செய்து விடுங்கள். பொடுகும் வராது. முடியும் கொட்டாது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner