Ads Header

Pages


16 May 2012

முக அழகை காக்க இயற்கையின் பங்கு!

முக அழகை காக்க முட்டையின் மஞ்சள் கருவுடன் தேனை கலந்து முகத்தில் தடவி வர வேண்டும்.

இதை தொடர்ந்து செய்து வந்தால் முக சுருக்கம் மறையும். மீதி இருக்கும் வெ‌ள்ளையை தலை‌யி‌ல் தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

அது ‌சிற‌ந்த க‌ண்டீஷனராக இரு‌க்கு‌ம். வீட்டிலிருக்கும் போது பால் ஏடுகளை முக‌த்‌தி‌‌ல் தே‌ய்‌த்து வரலாம் இதுவும் பலன் தரும். கண்களை மூடி அவற்றின் மீது மெலிதாக வெட்டிய வெள்ளரித் துண்டுகளை வைக்கவும்.

இது கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறைய உதவும். பன்னீரில் நனைத்த பஞ்சுத் துண்டை பத்து நிமிடங்களுக்கு க‌ண்களை‌ச் சு‌ற்‌றி வைத்தாலும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறையும்.

புதினா இலைகளை அரைத்து சாறெடுத்து முகத்தில் தடவிவர உலர்ந்த தன்மை மறையும். முகப்பருக்களுக்கும் படிபடியாக மறையும் சிறிதளவு ஆரஞ்சுப் பழச்சாரை முகத்திலும் கழுத்திலும் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவ உடனடியாக பளபளப்பு கிடைக்கும். மருதாணி இலையை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூசினா‌ல் ‌பி‌த்த வெடி‌ப்பு குறையு‌ம்.

மு‌ல்தா‌னிமெ‌ட்டியை பன்னீரில் குழை‌த்து முக‌த்‌‌தி‌ல் தட‌வி வர முக‌ம் மல‌ர்‌ச்‌சியடையு‌‌ம். இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர வேறு சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

குளிக்கும்போது கருப்பான இடங்களில் மட்டும் பீர்க்கங்காய் கூட்டினை வைத்து சோப்பு போட்டு தேய்த்து குளிக்கலாம். நாளடைவில் கருமை நிறம் மறையும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner