Ads Header

Pages


05 May 2012

பெண்கள் என்றும் இளமையாக இருக்க சித்தா பியூட்டி டிப்ஸ்!

மணம் தரும் கோரைக் கிழங்கு! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லையா? என்று இறைவனுக்கே சந்தேகம் வந்ததற்கு காரணம் அந்தக் காலப் பெண்கள் கோரைக்கிழங்கு மாவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்ததுதானோ என்னவோ... கோரைக் கிழங்கு மாவை தலையிலும், உடலிலும் தேய்த்துக் குளித்து வந்தால் நீங்கள் இருக்கும் இடம் மணமணக்கும் போங்கள். தவிர இந்தக் கிழங்கில் உள்ள `டெர்பீன்கள்' சேர்த்து தயாரிக்கப்பட்ட வாசனை எண்ணெய் காய்ச்சலையும் போக்கக்கூடியது.
தினம் ஒரு நெல்லி!
தோல் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையுடன் வாழ, நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வாருங்கள் போதும்.
``அழகாக இருக்க விரும்பாத பெண்களே கிடையாது. அப்படிப்பட்ட அழகை எந்த சைடு எஃபெக்ட்டும் இல்லாமல், செலவும் அதிகம் ஆகாமல் பெற முடியும்''
சருமத்தில் தோழி!
சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, சொறி, சிரங்கு போன்ற எல்லா வகை சரும பிரச்னைகளுக்கும் பெஸ்ட் தோழி பறங்கிப்பட்டைதான்!
சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பறங்கிப்பட்டை சூரணத்தை 40 நாட்கள் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேலே சொன்ன சரும பிரச்னைகள் எல்லாம் தலை தெறிக்க ஓடி விடும். சருமத்திலும் நல்ல நிறம் கொடுக்க ஆரம்பிக்கும்.
முடி செழித்து வளர...
பெயரிலேயே தன் குணத்தை சொல்லும் `பொடுதலை' தான் நல்ல முடி வளர்ச்சிக்கு ஏற்ற மூலிகை. பொடுதலையின் இலைச்சாறுடன் தேங்காயெண்ணெய் கலந்து காய்ச்சவும். இதை பொடுகு உள்ளவர்கள் தலைக்குத் தேய்த்து வர பொடுகு நீங்கி தலைமுடி செழித்து வளரும். தவிர பெரும்பாலும் முக அழகும், முதுகு அழகும் கெட்டுப் போவதே பொடுகினால்தானே... ஸோ, பொடுதலையை பயன்படுத்தி கூந்தலை வாருங்கள். கூடவே முகத்தையும், முதுகையும் பொடுகு பாதிப்பில்லாமல் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.
அழகுராணி சோற்றுக் கற்றாழை!
சித்தர்களால் `குமரி' என்று செல்லமாக அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே கடவுள் பெண்களுக்குக் கொடுத்த ஒரு அழகு வரம் என்றே சொல்லலாம்... ஃபிரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
ஆஹோ ஓஹோ பச்சிலை!
ஒரு இலையை கசக்கினாலே வீடு முழுவதும் மணம் வீசும் திருநீற்றுப் பச்சிலையிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணெயை (Bascillicum oil) தொடர்ந்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் அதைக் கிள்ளினால் வரும் கரும்புள்ளிகள் எல்லாமே மறைந்துவிடும்.
செலவேயில்லாமல் ஸ்லிம்மாக்கும் அருகம்புல்!
சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இடித்து சாறு பிழிந்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலிலுள்ள நச்சு மற்றும் கெட்ட நீர் வெளியேறி விடும். ரத்தம் சுத்தமாகும். உடம்பிலுள்ள தேவையற்ற ஊளைச்சதையெல்லாம் குறைய ஆரம்பிக்கும்.
தேங்காய் எண்ணெயையும், அறுகம்புல் சாற்றையும் சமஅளவு எடுத்து தைலமாக காய்ச்சி அதை உடலெங்கும் பூசி அரைமணி நேரம் கழித்து பயற்றம் பருப்பு மாவால் தேய்த்துக் குளியுங்கள். இப்படியே தொடர்ந்து செய்து வர உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அறுகம்புல் சாற்றில்சிறிதளவு மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்த வெடிப்புகளில் தடவி வர பாதங்கள் பஞ்சு போல் `மெத்'தாகி விடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner